வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு விட்டது - இப்படிப் பல குரல்கள் கேட்கின்றன. அரசாங்கத்தில் நிறைய வாய்ப்புகள் தருகிறார்கள். வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் தொடர்பாக சனி, ஞாயிறு என்று இரு தினங்கள் சிறப்பு முகாம்கள் பல மையங்களில் நடத்துகிறார்கள். இவை ஏதோ ஒருவாரம் அல்ல - சுமார் 3 அல்லது 4 வாரங்கள் சனி, ஞாயிறுகளில் நடத்துகிறார்கள்.
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு விட்டது - இப்படிப் பல குரல்கள் கேட்கின்றன.
அரசாங்கத்தில் நிறைய வாய்ப்புகள் தருகிறார்கள். வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் தொடர்பாக சனி, ஞாயிறு என்று இரு தினங்கள் சிறப்பு முகாம்கள் பல மையங்களில் நடத்துகிறார்கள்.
இவை ஏதோ ஒருவாரம் அல்ல - சுமார் 3 அல்லது 4 வாரங்கள் சனி, ஞாயிறுகளில் நடத்துகிறார்கள்.
அது போக சரிபார்ப்பு பணியும் நடைபெறுகிறது. வீடு வீடாகவே வந்து அரசு அலுவலர்கள் பட்டியலை சரி பார்க்கிறார்கள். இந்த வேலை எல்லாம் சுமார் 6 மாதம் முன்பாகவே நடந்து முடிந்து விட்டது.
நாம் தான் நமது பெயர் மற்றும் குடும்பத்தார் பெயர்கள் ஆகியவை பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
மேலும் ஆன் லைன் மூலமும் தேர்தல் கமிஷன் வெப் சைட்டில் நமது வாக்காளர் அட்டை அடையாள எண்ணைக் குறிப்பிட்டு உறுதி செய்து கொள்ள முடியும்!
இது போக...
பாஜக பூத் கமிட்டி என்ன செய்தது என்பதே கேள்வி.
BLA2 லெவலில் இருப்பவர்கள் தாங்களே மாவட்ட தேர்தல் அதிகாரி லெவலில் - அந்தத் தொகுதிக்கு பொறுப்பு அலுவலர் எவரோ தொடர்பு கொண்டு பெயர்களை இணைக்க / நீக்க செய்ய முடியும்.
போலியாக எவரேனும் சேர்க்கப்பட்டாலோ அல்லது அசல் வாக்காளர் விடுபட்டிருந்தாலோ புகார் தர முடியும்.
ஒவ்வொரு கட்சிக்கும் யார் இந்த பூத் லெவலுக்கு BLA 2 (BOOTH LEVEL AGENT 2nd LEVEL) என்று அரசு கேட்கிறது.
அந்தப் பகுதியின் கட்சிப் பொறுப்பாளர் யாரை BLA 2 என்று குறிப்பிடுகிறாரோ - அவர் பெயர், ஆதார் போன்ற ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப் பட்டு அவரை அக்கட்சியின் BLA 2 என்று அறிவிக்கிறார்கள். (BLA 1 என்பவர் தேர்தல் நாளன்று பூத்தில் உட்கார்பவர்)
BLA 2 லெவலில் இருப்பவருக்கு நேரடியாக அந்தத் தொகுதியின் பொறுப்பு அதிகாரி எவரோ அவருடன் தொடர்பு கொள்ளும் வகையில் மொபைல் எண், இ-மெயில் முகவரி எல்லாமே தரப் படுகின்றன.
வாக்காளர் பட்டியல் - அந்த பூத்துக்கு உரியது - ஒரு பிரதி, தரப்படுகிறது.
இந்த விஷயத்தில் திமுககாரனின் களப்பணி - சுறுசுறுப்பை மிஞ்ச முடியாது.
அவனுக்கு வார்டு வாரியாக, தெரு வாரியாக, வீடு வாரியாக எங்கெல்லாம் ஆதரவு வோட்டு இருக்கிறது என்பது தெரியும்.
முதலில் தங்கள் ஆதரவாளர்கள் வோட்டு சிந்தாமல் சிதறாமல் இருக்கும்படி கவனமாக பார்த்துக் கொள்வார்கள்.
பிறகு எதிர்க்கட்சிகளின் வாக்காளர்கள் அந்தத் தெருவில் குடியிருந்தவர்கள் வேறு ஊருக்கு / வேறு பகுதிக்கு குடி மாறிப் போனார்களா? இறந்து போனார்களா? இப்படி விரல் நுனியில் தகவல்களை வைத்துக் கொண்டு அவர்கள் பெயர்களை நீக்க நடவடிக்கை எடுப்பான் திமுககாரன்.
அவன் தீயா வேலை செய்வான் ஜி!
நம்ம ஆளுங்க என்ன பண்றாங்க ஜி?
வெள்ளை வெளேர்னு மடிப்புக் கலையாத சட்டை, பாக்கெட்டில் வெளியே தெரியற மாதிரி அண்ணாமலை/ மோடி படம், ஏதோ ஒரு பகுதியில் கட்சியில் ஒரு பதவி... சந்தோஷமாக வலம் வருபவர்கள் பலர்!
வெறுமனே ஜெய்ய்ய்... ஸ்ரீ ...ராம்னு மட்டும் முழங்கிப் பயனில்லை! அது உனது தெய்வீகப் பற்றைக் காட்டியது - மெத்த மகிழ்ச்சி!
ஆனால் களப்பணி? முன்யோசனை எங்கே போயிற்று? வார்டு வாரியாக அந்தந்த ஏரியா பொறுப்பாளர்களுக்கு தெருவாரியாக அந்த பூத்தில் எத்தனை தெரு வருகிறது? அந்தத் தெருக்களில் எத்தனை வீடுகள் உள்ளன? அதில் நமது ஆதரவாளர்களாக எத்தனை பேர் சுமாராக இருக்கக் கூடும்? அவர்களுடைய பெயர்கள் எல்லாம் பட்டியலில் இருக்கிறதா? ஏதேனும் விடுபட்டுள்ளதா?
இதெல்லாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய - செய்ய வேண்டிய வேலை!
MICRO LEVEL MANAGEMENT என்பது தனிக்கலை!
எப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் அறிவித்தார்களோ அன்று முதல் இதே நினைப்போடு ஒரே முனைப்போடு செய்ய வேண்டிய வேலை!
திமுககாரன் செய்கிறான்! செய்வான்! ரிடையர் ஆன அரசு ஊழியர், ஆசிரியர் என்று தாமாக முன்வந்து துவஜம் கட்டிக் கொண்டு அலைகிறான் அவன்!
கோவையில் ஒரு லட்சம் பெயர்கள் காணவில்லை என்கிறார் அண்ணாமலை!
அந்த லட்சணத்தில் நமது பூத் கமிட்டி வேலை செய்திருக்கிறது.
எல்லாவற்றுக்கும் அண்ணாமலைதான் வரணும் - இவனுக்காகத் தோன்றி சுயமாக எதுவுமே முன்னெடுக்க மாட்டான்! PRO ACTIVE THINKING என்பதே இல்லாத மெத்தன ஆசாமிகள்! எதுவும் நடந்த பிறகு REACT பண்ணிக் கொள்ளலாம்!
அண்ணாமலை இருக்கார்! அமீத்ஷா இருக்கார்! மோடி இருக்கார்! எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க!
அப்ப நாம எதற்கு இருக்கோம்? - 😡
Comments
Post a Comment