இப்படி ஒரு மனிதனா என்று யாரையாவது பார்த்து வியந்தது உண்டா? இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..! சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை .. ஒரே ராணுவவீரன் தனி ஆளாக 300 சீன ராணுவ வீரர்களை கொன்று குவித்த வீர வரலாறு தெரியுமா... சீன ராணுவம் வெண்கலத்தில் இவருக்கு சிலை செய்து இவன்தான்யா உண்மையான மாவீரன் என்று அதில் பொரித்து அருணாச்சல பிரதேசத்தில் நிறுவினார்கள்... இது கதை அல்ல பாஸ் நிஜம்..

 



இப்படி ஒரு மனிதனா என்று யாரையாவது பார்த்து வியந்தது உண்டா?


இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..! சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை ..


ஒரே ராணுவவீரன் தனி ஆளாக 300 சீன ராணுவ வீரர்களை கொன்று குவித்த வீர வரலாறு தெரியுமா... சீன ராணுவம் வெண்கலத்தில் இவருக்கு சிலை செய்து இவன்தான்யா உண்மையான மாவீரன் என்று அதில் பொரித்து அருணாச்சல பிரதேசத்தில் நிறுவினார்கள்... இது கதை அல்ல பாஸ் நிஜம்..


17 நவம்பர் 1962 நட்பு நாடாக இருந்த சீன இந்தியாவின்மீது திடீர் போர் அறிவித்து இந்தியா ராணுவத்தின் மீது கடும் தாக்குதல் நடத்துகிறது... அருணாச்சல பிரதேசத்தில் கர்வால் படை பிரிவு சீனர்களுக்கு கடும் சவாலாக சீனர்களை உள்ளே வரவிடாமல் போராடுகிறார்கள் .. ஒரு கட்டத்தில் போரிடுவதார்த்க்கு தேவையான வெடிபொருட்கள், தோட்டாக்கள் எல்லாம் தீர்ந்து விடுகிறது..


ராணுவ தளவாடங்களை அனுப்புங்கள் என்று செய்தி அனுப்புகிறார்கள் தலைமையகத்திற்கு.. அனால் தலைமையகமோ இப்பொழுதுள்ள சூழ்நிலையில் உங்களுக்கு உதவ முடியாது உடனே பின்வாங்குங்கள் என்று கட்டளை வந்தது....


அங்கிருந்த ராணுவமும் பின்வாங்கியது.. ஆனால் மூன்று மாவீரர்கள் மட்டும் பின்வாங்கவில்லை அவர்களுக்கு வேறு ஒரு திட்டம் இருந்தது... உயிர் உள்ளவரை இங்கேயே போரிட்டு எல்லைகளை காப்போம் இல்லை செத்து மடிவோம் ஆனால் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் என்று சபதமிட்டார்கள்..


அவர்கள் இந்திய ராணுவ வீரர்கள் ஜஸ்வந்த் சிங், திரிலோக் சிங், கோபால் சிங். சரி போரிட வேண்டும் என்றல் ஆயுதம் வேண்டுமே என்ன பண்ணுவது என்று யோசித்தார்கள்.. இரவோடு இரவாக இந்தியா ராணுவம் விட்டு சென்ற ஆயுதங்கள், வெடிகுண்டுகள், பீரங்கிகளை ஒன்று சேர்த்தார்கள்.. வெகு நாட்களுக்கு போரிடவேண்டும் என்றால் இன்னும் நிறைய ஆயுதங்கள் தேவை படுமே என்ன செய்வது என்று யோசித்தவர்கள்..சீன ராணுவ ஆயுத கிடங்கை கைப்பற்றி ஆயுதங்களை எடுத்துவர தீர்மானித்தார்கள்..


மூன்று வீரர்களும் ஊர்ந்து ஊர்ந்து சீன ராணுவ பட்டாலியனுக்குள் சென்று அங்கே காவல் இருக்கும் சீன வீரர்களை ஒருவர் பின் ஒருவராக தங்கள் கையில் வைத்திருந்த குக்கிரி கத்தியை வைத்து அவர்களை சாய்தார்கள்... விடிவதற்கு இன்னும் நான்கு மணிநேரம் இருக்கிறது.. ஆயுத கிடங்கிலிருந்து எவ்வளவு ஆயுதங்கள் வெடிமருந்துகள் எடுக்கமுடியுமோ அவைகளை எடுத்து இந்திய எல்லையில் சேர்த்துவிடவேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள், அதன் படி அருகிலிருந்த கைவண்டியில் சத்தமில்லாமல் எம்,எம்.ஜி துப்பாகிகள், கிரெனெடுகள், வெடிகுண்டுகளை ஏற்றி இந்திய எல்லைக்கு எடுத்து வந்து சேர்த்துவிட்டு மீண்டும் செல்கிறார்கள்..


நான்காவது முறை சென்று வரும்போது இனி விடிந்துவிடும் போதுமான அளவு ஆயுதங்கள் எடுத்தாகிவிட்டது என்று எண்ணிய வீரர்கள் சற்று தொலைவு இந்திய எல்லையை நோக்கி ஊர்ந்து சென்று பின்பு கையெறிகுண்டுகளை ஆயுதக்கிடங்கின் மீது வீசுகிறார்கள் அதிகாலை திடீர் தாக்குதல் என்பதால் சீன ராணுவத்திற்கு என்ன நடக்கிறது என்று புரிய சற்று நேரமாகிவிட்டது .


மூன்று ராணுவவீரர்களும் ஆயுதங்களை எடுத்துவரும் வழியில் சீனர்களின் கடும் தாக்குதல் நடத்தினார்கள் .. திரிலோக சிங் மற்றும் கோபால் சிங் போரிட்டு வீரமரணம் அடைகிறார்கள்.. ஜஸ்வந்த் சிங் தனியொரு ஆளாக போரிட ஆயத்தமானார்.. நமது ராணுவ வீரர்கள் விட்டு சென்ற ஆயுதங்கள், சீனர்களிடமிருந்து பறித்து வந்த எம். எம்.ஜி ரக துப்பாக்கிகளை நான்கு திசைகளிலும் வரிசையா பொருத்தி தனி ஒரு ஆளாக நான்கு திசைகளிலும் சீன ராணுவத்தை முன்னேறவிடாமல் சுட ஆரம்பிக்கிறார்..


தற்செயலாக அங்கே ஆடுமேய்க்க வந்த நூறா மற்றும் சிலா என்ற இப்பெண்கள் இவர் போரிடுவதை பார்த்து, உதவ முன்வருகிறார்கள்.. அவர்களுக்கு துப்பாக்கியை சுடுவது பற்றி சொல்லி கொடுத்து அவர்களையும் போரிட வைக்கிறார்.. 2000 வீரர்களை கொண்ட பெரும் சீன பாட்டாளியனை ஒருமணி நேரம், இரண்டு மணி நேரமல்ல, 72 மணி நேரம் தனியொருவனாக எதிர்த்து நின்று போரிடுகிறார் .. 300 சீன வீரர்களை தனி ஆளாக சுட்டு வீழ்த்துகிறார்..


கடேசியாக இவர்களுக்கு உணவு கொண்டு சென்ற இரு பெண்களின் தந்தையை பிடித்து சித்திரவதை செய்து விசாரிக்கிறார்கள் அவர் அங்கே இருந்து போரிடுவது ஒரு ராணுவ வீரனும், எனது இரண்டு மகள்களும் மட்டுமே என்று உண்மையை சொல்லிவிடுகிறார். நுரா உயிருடன் பிடிபட்டு கொள்ள படுகிறாரால்.. சிலா மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கிறாள்.. ஜஸ்வந்த் இனி போராடி பயனில்லை சீனனிடம் பிடிபட்டு விடக்கூடாது என்று தான் வைத்திருந்த பிஸ்டலின் குண்டை சுவைக்கிறார்..


சீனர்கள் இந்த 21 வயது பொடிப்பயலா நம்மை இந்த ஆட்டம் காட்டினான் என்று கடும்கோபமுற்று அவரது உயிரற்ற உடலை சிதைக்கிறார்கள், தலையை துண்டித்து தங்களது பட்டாலியனுக்கு எடுத்து சென்றுவிட்டார்கள்... போர் ஓய்ந்தது..


சீன ராணுவம் ஜஸ்வந்த் சிங் ராவதின் வீரத்தை பாராட்டி அவருக்கு வெண்கல சிலை செய்து இந்திய அருணாச்சல எல்லையில் நிறுவியது.. இந்திய ராணுவ தளபதிக்கு சீன தளபதி ஜெஸ்வந்தின் வீரத்தை பாராட்டி கடிதமெழுதினார்.. இந்திய ராணுவம் அவர் போரிட்டு வீரமரணமடைந்த இடத்தில கோவில் காட்டியது, அந்த இடம் 10,000 அடி உயரத்தில், நூறா நாங் மாவட்டத்தில், தவாங் நகரத்திலிருந்து 25 கி.மி. தூரத்தில் இந்திய சீன எல்லையில் அமைந்துள்ளது... இன்றும் அவர் ராணுவ சேவையில் இருப்பது போலவே அணைத்து ஏற்பாடுகளும் நடகும்.. அங்குள்ள மக்களுக்கு இவரே காவல் தெய்வம், அங்கு பணிபுரியும் ராணுவ வீரர்கள் இவரது நினைவிடத்திற்கு மரியாதையை செலுத்திய பின்பே கடந்து செல்வார்கள்.. அங்கு அவர் ராணுவ பணியிலேயிருப்பதாகவே எண்ணி அவருக்கு பணிவிடைகள் செய்யப்படும். இவருடன் போரிட்ட இரண்டு பெண்களின் நினைவாக அவர்கள் போரிட்டு வீரமரணமடைந்த மலை பகுதியை அவர்களது நினைவாக நுறா போஸ்ட் மற்றும் சிலா போஸ்ட் என்றே அழைக்கிறார்கள்.. இந்த மாவீரனின் கதையை 72 hours என்று திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். தன்னலமற்று தேசநலன் கருதி எதிரியுடன் வீரத்துடன் போரிட்டு உயிர்நீத்த எத்தனையோ ராணுவ வீரர்களின் வீர வரலாறுகள் மக்களுக்கு தெரியாமலே போய்விடுகிறது.

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது