முக்தார் அன்சாரி என்ற மிருகம் வீழ்ந்தது! யோகி ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் கிழக்கு உத்தரபிரதேசம் போகவேண்டும், வேலைப்பளு அதிகம் இருந்ததால், அந்த பயணம் இரவில் செல்ல திட்டமிடுகிறார்.. ஆனால் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பில்லை என்பதால் இரவில் செல்ல முடியாது என்கிறார்கள்!

 

முக்தார் அன்சாரி என்ற மிருகம் வீழ்ந்தது!


யோகி ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் கிழக்கு உத்தரபிரதேசம் போகவேண்டும், வேலைப்பளு அதிகம் இருந்ததால், அந்த பயணம் இரவில் செல்ல திட்டமிடுகிறார்.. ஆனால் காவல்துறை  அதிகாரிகள் பாதுகாப்பில்லை என்பதால் இரவில் செல்ல முடியாது என்கிறார்கள்!


காரணம் அந்த வழி மிகவும் ஆபத்தான  வழி பயணம் செல்ல வேண்டும். பகலிலே  அந்த வழியாக பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது.. இரவில் பயணம் அது உங்களின் உயிருக்கு ஆபத்தானது என்று சொல்கிறார்கள். 


ஒரு முதல்வரே போக முடியவில்லை என்றால், மக்கள் எப்படி பாதுகாப்பாக வாழ முடியும் என்று கேட்கிறார் யோகி 


அதற்கு யார் காரணம் என்ற போது, பலர் இருந்தாலும், அங்கே முக்தார் அன்சாரி ஒரு தனி அரசாங்கமே நடத்துகிறான் என்பதை தயக்கத்தோடு சொல்கிறார்கள். 


ஏனெனில் அப்படி அவனை பற்றி சொன்னால், அவன் உயிரோடு இருக்க முடியுமா என்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்கிறார்கள் 


அவன் ஒரு கல்யாணத்திற்கு வாழ்த்த வந்தால் கூட, அவனை சுற்றி ஒரு ஐம்பது ரௌடிகள் வருவார்கள். அவர்கள் கையில் போலீஸில் கூட இல்லாத Light Machine Gun உடன் அவர்கள் வருவார்கள். அவனை எதிர் கேள்வி கேட்டால் குருவியை சுடுவது போல சுட்டுக் கொல்வான். 


அவன் மீது 60 க்கும் மேற்பட்ட வழக்குகள். அதில் ஒன்று பாஜக MLA ஒருவரை கொன்ற வழக்கு. அவன் பல முறை MLA ஆக சமாஜ்வாடியில் இருந்தவன்.  அவனை எதிர்த்து யாரும் போட்டியிட முடியாது. அப்படி போட்டியிட்டால் அவர்கள் வெல்லப்படுவார்கள், பின்பு கொல்லப்படுவார்கள்.


அவன் தம்பிக்கு எதிராக போட்டியிட்டு வென்றதால், பாஜக MLA ஒருவரையும், அவருடன் சென்ற 7 பேரையும் பட்டப்பகலில் சுட்டு கொன்றான் முக்தார் அன்சாரி. 


அந்த வழக்குகள் எல்லாம் தூங்கி கொண்டு இருந்தது. அதைத்தட்டி கேட்க வேண்டிய நீதிமன்றம், உயிருக்கு பயந்து உறங்கி கொண்டு இருந்தது. அவனை கைது செய்யும் துணிச்சல் எல்லாம் அகிலேஷ் யாதவுக்கு என்ன, அவங்க அப்பனுக்கே இருந்ததில்லை.


அவனுக்கு எதிராக வழக்கு பதிவதற்கு யாரும் முன்வர மாட்டார்கள். அபடியே வந்தாலும், போலீஸ் வழக்கை எடுத்துக் கொள்ளாது. அதையும் மீறி செய்தால், வழக்கு பதிவு செய்த போலிஸும், வழக்கை பதிவு செய்தவனும் பரலோகம் சென்று விடுவார்கள்.


அப்போது சைலேந்திர பாபு என்ற அதிகாரி, அவன் மீது பாகிஸ்தானில் இருந்து தருவிக்கப்பட்ட LMG க்கள் பல அவனிடம் இருந்தது என்பதற்காக, ஆளும் கட்சியினரையும், மற்ற அதிகாரிகளின் எதிர்ப்பை மீறி  POTA வழக்கில் பதிவு செய்தார். 


ஆனால் அன்று இரவே, போலீஸ் அதிகாரிகளால் அவர் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டு, நடு ராத்திரியில் அன்சாரி ஆட்களால் தரதரவென இழுத்து வரப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் ராஜினாமா செய்து விட்டு, குடும்பத்துடன் வெளி மாநிலத்தின் குடியேறினார். 


அவன் கீழ் 12+ MLA க்கள் இருந்தார்கள். அவனுக்கு என்று ஒரு குட்டி ராணுவமே பாதுகாப்பாக இருந்தது.


 அப்படிப்பட்டவன் ராஜ்யத்தை தாண்டித்தான் போக வேண்டும், அது ஆபத்தானது என்று தடுத்தார்கள் போலீஸ் அதிகாரிகள்.


அடுத்த நாள் சட்டசபை கூட்டத்தில் சட்டம் ஒழுங்கின் மிக மோசமான நிலையை விளக்கி பேசினார் யோகி. கோபத்தின் உச்சிக்கு சென்றவர், ரவுடிகள் ஒன்று ஜெயிலுக்குள் இருக்க வேண்டும் அல்லது மேலுலகிற்கு அனுப்ப வேண்டும் என்று கடுமையான உத்தரவு பிறப்பித்தார். அந்த பேச்சு, உபியின் அரசியல் சரித்திரத்தின் சுதந்திர பிரகடனம் என்றே சொல்லலாம்!


அவனுக்கு வெண்சாமரம் வீசிய  போலீஸில் இருந்த பல அதிகாரிகள் ஓரம் கட்டப்பட்டனர். வேட்டை ஆரம்பமாகியது. கிட்டத்தட்ட 150 க்கு மேற்பட்ட ரவுடிகள் என்கவுண்டரில் மேலுலகிற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார்கள். மீதம் இருப்பவர்கள் உயிருக்கு பயந்து தாங்களாக முன்வந்து போலீஸில் சரண்டர் ஆனார்கள்.


 ரவுடிகளின் சொத்துக்களும், தவறு செய்கிறவர்களின் வீடுகளும் புல்டோஸரால் இடித்து தரைமட்டமாகியது!


அப்படி உறங்கிக்கொண்டு இருந்த வழக்குகள் உயிர் பெற்று, போலீசாரால் கைது செய்யப்பட்டு, இருந்த பல வழக்கில் இவன் தண்டனை பெற்றான். 


அதன் படி MLA கொல்லப்பட்ட வழக்கில் 10 ஆண்டு காலம் (மட்டும் ? ஆம் அவன் மீதுள்ள பயம்!) சிறை தண்டனை வழங்கப்பட்டு ஜெயிலில் இருந்தவன், இரு தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்து போனான்.


இவன் ஸ்லோ பாய்ஸனிங்கில் கொல்லப்பட்டதாக அவன் குடும்பம் அழ, அதை அரசியல் ஆக்க நினைத்து சமாஜ்வாடி. காங்கிரஸ் போன்ற கட்சிகள அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தை அறிவித்தது. அதற்கு போதுமான ஆதரவு இல்லை. 


போராட்டத்திற்க்கு இந்துக்கள் தான் ஆதரவு தரவில்லை என்று நீங்கள் நினைத்தால் தவறு. இஸ்லாமியர்கள் பலரும் அதை எதிர்க்க, போராட்டம் பிசுபிசுத்தது. 


அது மட்டுமல்ல, அவன் இறந்த செய்தி கேட்டு, அவன் ஊரில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். பல ஆண்டுகள் மாநிலத்தை விட்டு வெளியேறிய அந்த போலீஸ் அதிகாரி சைலேந்திர பாபு மீண்டும் உத்திபிரதேசம் திரும்பியுள்ளார். 


இன்று உபியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உயர்ந்த நிலையில் உள்ளது. ஆனால் இங்கே ஒரு வாட்ச்மெனுக்கு கூட தகுதி இல்லாதவன் ஆள்வதால், தமிழகம் பழைய உபி போல ஜங்கிள் ராஜாக மாறி கொண்டுள்ளது. 


இதை அறியாமல் வாக்கு போட்டால் உபியில் நேற்று நடந்தது, நாளை தமிழகத்தில் நடக்கும். இன்று எங்கும் போதை பொருட்கள் கிடைக்கிறது.  


தமிழகம்.வாழ்வதும், வீழ்வதும் உங்கள் ஒரு விரல் சுதந்திரத்தில் தான் உள்ளது!


🐶

#indhea

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்