அனைவரும் தயவு கூர்ந்து படிக்கவும்.: யார் இந்த கிருஷ்ணதேவராயர்???? ஹிந்து மதத்தை பேணி பாதுகாத்தவர் விஜயநகர பேரரசின் மாமன்னர் கிருஷ்ண தேவராயர்,ஆனால் மராட்டிய மன்னர் சிவாஜி அவர்களை பற்றி தெரிந்த அளவு கூட,மாமன்னர் கிருஷ்ண தேவராயரைப் பற்றி யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.

 





அனைவரும் தயவு கூர்ந்து படிக்கவும்.:


யார் இந்த கிருஷ்ணதேவராயர்????

ஹிந்து மதத்தை பேணி பாதுகாத்தவர் விஜயநகர பேரரசின் மாமன்னர் கிருஷ்ண தேவராயர்,ஆனால் மராட்டிய மன்னர் சிவாஜி அவர்களை பற்றி தெரிந்த அளவு கூட,மாமன்னர் கிருஷ்ண தேவராயரைப் பற்றி யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.


மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியை ஹிந்து மத பாதுகாவலனாக அனைவராலும் போற்றப்படுகிறார், ஆனால் மன்னர் சத்ரபதி சிவாஜி விட ஆயிரம் மடங்கு வலிமை வாய்ந்தவர் ஹிந்து மத பாதுகாவலர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் ...


மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிடம் இருந்தது ஒரு லட்சம் படை வீரர்கள். ஆனால் டில்லி சுல்தான் அவுரங்கசீப்டம் இருந்தது பத்து லட்சம் படைவீரர்கள். ஒரு மராட்டிய வீரன் மூன்று டெல்லி சுல்தான் படைவீரர்களுக்கு சமம், ஏனென்றால் மராட்டிய வீரர்கள் மிகவும் வலிமை வாய்ந்தவர்கள்.அப்படி பார்த்தோமென்றால் மராட்டிய படை வீரர்கள்,3 லட்சம் டெல்லி சுல்தான் படைவீரர்களை சமாளிப்பார்கள்.

ஆனால் மீதி டெல்லி சுல்தானின் 7 லட்சம் படை?.மராட்டிய படை டெல்லி சுல்தான் உடன் நேரடியாக யுத்தம் செய்வது தோல்வியே என்று மன்னர் சத்ரபதி சிவாஜி நன்கு உணர்ந்திருந்தார்.


ஆதலால் மராட்டியர்கள் எப்போதும் கொரில்லா போர் முறையை பின்பற்றினார்கள்.

அதாவது டெல்லி சுல்தான் படை வீரர்கள் தங்கியிருக்கும் முகாமின் மீது உடனடியாக கொரில்லா போர் முறையில் தாக்குதல் நடத்த வேண்டியது,பின்பு பின்வாங்கி மலை இடுக்குகளில் ஓடுவது,மராட்டியர்கள் வீரர்களை பின்தொடர்ந்து டெல்லி சுல்தான் படைவீரர்கள் போரிட செல்வார்கள்,அங்கு ஏற்கனவே மரத்தின் மீதும் மலை இடுக்குகளிலும் ஒளிந்திருக்கும் மராட்டிய படைவீரர்கள் டெல்லி சுல்தான் படைவீரர்களை வேட்டையாடுவார்கள்..


இப்போது நாம் விஜயநகரப் பேரரசர் மாமன்னர் கிருஷ்ணதேவராயர் பற்றி பார்ப்போம்::

இவரது தந்தையின் பெயர் நரச நாயக்கர்.

அரசர் நடுத்தரமான உயரம் உடையவர், நல்ல சிவப்பு நிறம் கொண்டவர், உடல்கட்டு மிக்கவர்,அவருக்கு முகத்தில் அம்மைத் தழும்புகள் இருந்தனர்.நல்ல உடல் வலிமை பெற்றிருந்தார்,தினசரி உடற்பயிற்சியை முறையாக செய்வார்,உடல் பயிற்சி முடிந்த பின் குதிரை ஏற்றம்,வாள் சண்டை, மல்யுத்த பயிற்சி மேற்கொள்வார்.மக்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டவர் மதிக்கப்பட்டவர்,தானே படைகளுக்கு முன்னே செல்வார், படைவீரர்களுக்கு கட்டளையிடுவார்,

எல்லா விஷயங்களிலும் மிகச் சிறந்த பண்பாளர் என்றும் இவரைப் பற்றி அயல்நாட்டுப் பயணியும் போர்ச்சுகீசிய தூதுவரும் டோமின்கோஸ் பெயஸ்(domingospaes) என்பவரும் போ்னாவோ நூனிஜ்(fernao nuniz) என்பவரும் இவ்வாறு கூறுகிறார்கள். இந்த அயல் நாட்டுப் பயணிகள் இவரை சந்தித்தும் இவரிடம் பேசியுள்ளனர்.


கிருஷ்ணதேவராயருக்கு தோல்வி என்பதே கிடையாது தானே போர்க்களத்தில் போர் புரிவார்,வீரர்களை உற்சாகப்படுத்துவார்.


விஜயநகர பேரரசில் மொத்தம்

படை பிரிவுகள்:

10 லட்சம் காலாட்படை

600 யானைப்படை

30,000 குதிரைப்படை

பீரங்கிப்படை

வில் படை

காவல் சிறப்பு படை

கொரில்லா படை

தற்கொலைப்படை.


கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்காலத்தில் பல போர்கள் நடந்தது. இவர் பீஜப்பூர் சுல்தான் மீது படை எடுத்தார்.போர் மிகவும் உக்கிரமாகவே நடைபெற்றது போரின் முடிவில் விஜயநகரப் படை வெற்றி பெற்றது. பீஜப்பூர் சுல்தான் படை சின்னாபின்னமானது.அனைவரும் போர்க்களத்தில் கொல்லப்பட்டனர். பீஜப்பூர் சுல்தானின் மன்னர் முகமது அடில் ஷா,யானைமீது ஏறி தப்பி ஓடினான்.


அடுத்தது கோல்கொண்டா சுல்தான் மீது படையெடுத்தார் இதிலும் வெற்றி பெற்றார்.அடுத்த படையெடுப்பு பிடார் சுல்தான் மீது இதிலும் விஜயநகர படை வெற்றி பெற்றது.பின் ஒரிசா மீது படையெடுத்தார், இதிலும் வெற்றி. அனைத்துப் போர்களிலும் கிருஷ்ணதேவராயரே முன்னின்று வழி நடத்தி செல்வார்,ஒவ்வொரு படையெடுப்பிலும் வெற்றி அல்லது வீர மரணம் என்று கோஷமிட்டு வீரர்களை உற்சாகப்படுத்துவார்,

இவரே போர்க்களத்தில் போர் செய்வார். ஒவ்வொரு போர் முடிவுற்ற உடன் காயமுற்ற வீரர்களை பார்த்து ஆறுதல் கூறுவார்,உடனடியாக மருத்துவ உதவிகள் செய்யப்படும். இதனால் விஜயநகரப் படைவீரர்களால் மிகவும் நேசிக்கப்பட்டா் மதிக்கப்பட்டார்.

தனது முத்திரை மோதிரத்தை விரல்களில் இருந்து கழற்றி தனது பாதுகாவலன் ஒருவரிடம் வழங்கி தான் போரில் வீரமரணம் அடைந்து விட்டால் அதனை தன் பட்டத்து அரசியாாிடம் சோ்பித்து விடும்படி கூறி,அப்படி சேர்க்கும்போது அரசிகளும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வர் என்று கோரி மோதிரங்களை தந்து அனுப்புவாா்.கிருஷ்ணதேவராயர் ஒற்றர் படையும் வைத்திருந்தார், விஜயநகரப் பேரரசின் ஒற்றர்கள் இந்திய தேசம் எங்கும் பரவியிருந்தன.

விஜயநகரத்தில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

விழாவில் ராணுவ அணிவகுப்பு நடைபெறும்(இந்தியா குடியரசு தினவிழாவில் இந்திய ராணுவம் அணிவகுத்து செல்லும் அதுபோல).அயல்நாட்டு தூதுவர்கள் சிறப்பு அழைப்பாளராக அழைக்கபட்டனர்.


கிருஷ்ணதேவராயர் நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் மேம்படுத்தினார்,

அணைகளை கட்டினார். நாட்டின் நிர்வாகத்தில் இவருக்கு ஈடு இணை யாரும் இல்லை.இவரது ஆட்சிக் காலமே பொற்கால ஆட்சி.இவர் தங்க நாணயத்தையும் வெளியிட்டார்.

தென்னிந்திய மக்கள் அனைவருமே செல்வ செழிப்புடன் மிக்க வழமையாக வாழ்ந்தனர்.இவரது ஆட்சி காலத்தில் வறுமை என்பதே கிடையாது.இவரது ஆட்சிக்காலத்தில் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களும் புரன்மைக்கப்பட்டன. புதிய கோயில்கள் கட்டப்பட்டன. கிருஷ்ணதேவராயர் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் தங்க நகைகள்,வைர வைடூரியங்களை இறைவனுக்கு வழங்கினார்.

குறிப்பாக கிருஷ்ணதேவராயர் திருப்பதி கோயிலுக்கு விஜயம் செய்து வெங்கடேச பெருமாளுக்கு பல ஆபரணங்கள்,சிறிய கிரீடங்கள்,

உற்சவ மூர்த்தி சிலையை வழங்கினார், திருப்பதி கோயிலுக்கு ஐந்து கிராமங்களை தானமாக வழங்கினார். இப்போது நாம் திருப்பதி திருமலைக்கு சென்றோம் என்றால் வெங்கடேசப்பெருமாள் அணிந்திருக்கும் அனைத்து நகைகளும் கிருஷ்ணதேவராயர் வழங்கியதே. திருவெங்கட நாதருக்கு கனகமாலை,30,000வராகன் பொன் மற்றும் மூலவர் விமானத்தில் மீது தங்கத்தகடு போர்த்த ஏற்பாடு செய்தாா். இவர் தமிழகம் விஜயம் செய்த போது பல கோயிலுக்கு சென்றார்.

கும்பகோணம் மகாமகம் திருவிழாவிலும் கலந்துகொண்டார்,

சிதம்பரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தங்க ஆபரணங்களை வழங்கி,பின் ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை வழிபட்டு பின்பு அங்கிருந்து ராமேஸ்வரம் சென்று அங்குள்ள கடலில் நீராடி, தன் ரத்தம் தோய்ந்த போர்வாளை கடல் நீரில் சுத்தம் செய்து பின்பு ராமேஸ்வரம் கோயிலில் உள்ள அனைத்து தீர்த்தத்திலும் நீராடி இறைவனை வழிபட்டார்.

கிருஷ்ணதேவராயர் கவிதை ஆற்றுவதில் வல்லவர் புலமை மிக்கவர். இவர் ஆண்டாள் பெருமாள் சரித்திரம் (அமுக்த மல்யத) என்ற மாபெரும் காவியத்தைப் படைத்தார்.


விஜயநகரப் பேரரசை மாமன்னர் கிருஷ்ண தேவராயர் ஆட்சி செய்த அதே காலத்தில் டெல்லியை ஆட்சி செய்தவன் பாபர், இவன் குஜராத்தி மீது படையெடுத்தான்,பின்பு ராஜஸ்தான் ரஜபுத்திர மன்னர்கள் மீது படையெடுத்தான்,காசி மீது படையெடுத்தான் அங்கு உள்ள காசி விஸ்வநாதா் ஆலயத்தை இடித்தான். பஞ்சாப் மீது படையெடுத்தான்.

வட இந்தியா முழுவதும் அவன் கட்டுப்பாட்டில் வந்தது.பாபரால் தென்னிந்தியா மீது படை எடுக்க முடியவில்லை,

ஏனென்றால் தென்னிந்தியாவை ஆட்சி செய்தவர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர்.பாபர் நன்கு அறிந்திருந்தான் தென் இந்தியா மீது படை எடுப்பது தோல்வியை தரும் என்று.விஜயநகர படையுடன் போர் செய்வது கற்பாறை மீது மோதுவதற்கு சமம் என்று பாபர் உணர்ந்திருந்தான்.

பீஜப்பூர் சுல்தானும் கோல்கொண்டா

சுல்தான்களும், பிடாா் சுல்தான்களும் தமிழகத்துக்குள் புகுந்து இங்குள்ள கோயில்களில் உள்ள நகைகளை கொள்ளை அடிக்க வேண்டும் என்றும்,தமிழ் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்றும் எண்ணினர்.ஆனால் விஜய நகர எல்லைக்குள் அவர்களால் நுழைய முடியவில்லை, விஜயநகரப் பேரரசு இமயமலை போல் தென் தென்னிந்தியாவை பாதுகாத்தது. விஜயநகரப் படை, எல்லையில் முகாம் அமைத்து ஒரு ஈ காக்கா கூட உள்ளே புகாத வண்ணம் பாதுகாத்தனர்.ஆதார நூல்கள்::

1)வெற்றித்திருநகர் (விஜயநகர சாம்ராஜ்ய வரலாறு) நூலின் ஆசிரியர் முனைவர்.குரு.ஜெகநாதன்.

2) A FORGOTTEN EMPIRE(vijayanagar)author robert sewell.

3) வெற்றித் திருநகர் நாவல்.ஆசிரியர் அகிலன்.

4)THE VIJAYANAGAR EMPIRE CHRONICLES OF PAES AND NUNIZ.போர்ச்சுகீசிய அயல்நாட்டு பயணிகளின் குறிப்பு.

5)கிருஷ்ணதேவராயர்.ஆசிரியர் ஆர்.சி.சம்பத்

6)A HISTORY OF SOUTH INDIA. author nilakanda sastri.

7)HISTORY OF TAMIL NADU.author.N.subrahmanian...

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*