சோமநாதர் ஆலய அழிப்பும்..... புணர் நிர்மாணமும் குஜராத்தின் சோமநாதபுரி ஆலயம் எனும் சிவாலயம்

 







சோமநாதர் ஆலய அழிப்பும்..... புணர் நிர்மாணமும்


குஜராத்தின் சோமநாதபுரி ஆலயம் எனும் சிவாலயம்


சாதுராஷ்ட்ரம் எனும் சவுராஷ்ட்ரா பகுதியின் மாபெரும் கலை பொக்கிஷமாய் அது இருந்தது


அன்றைய சாதுராஷ்ரம் என்ற குஜராத்தின் கடல் வணிகமும் அவர்கள் கொட்டிய செல்வமும் பெரும் நதிகளின் வளமும் அந்த சோமநாதபுரியினை சொர்க்கபுரியாக ஆக்கியிருந்தன, அந்த ஆலயம் மாபெரும் செல்வத்தின் அடையாளமாய் இருந்தது


இன்றைய பத்மநாபபுரம் அளவினை விட அதிக தங்கம் அங்கே இருந்தது , அதைவிட பெரும் அதிசயம் ஒன்றும் இருந்தது


சிவலிங்கம் அங்கே அமரவில்லை மாறாக அந்தரத்தில் நின்றது


சுற்றிலும் 4 காந்த கல்களை பதித்து , விஷேஷமான இரும்பு கல்லால் ஆன சிவலிங்கம் அதன் ஈர்ப்பு விசை தத்துபடி நடுவில் நிறுத்தபட்டது, அந்தரத்தில் லிங்கம் மிதந்தது


நவரத்தினமும் வைரமும் பதிக்கபட்டு மின்னிய அந்த லிங்கம் சோமன் எனும் நிலவு போலவே மின்னியது


அந்த அதிசயம் ஒன்றுக்காக மாபெரும் காணிக்கையும் பக்தர் எண்ணிக்கையும் அங்கு குவிந்தது கோவிலின் குறைந்த பட்ச உலோகம் தங்கம் எனும் அளவு அது ஜொலித்தது


இந்த கோவிலின் கோபுரம் உள்ளிட்டவை தங்க தகடுகளால் மூடபட்டிருந்தன‌


அதிகாலையிலும் மாலையிலும் பவுர்ணமி நிலவிலும் புதுபுது ஜாலங்களை காட்டி கொண்டிருந்தது அந்த ஆலயம், இன்னும் எவ்வளவோ அதிசயங்கள் இருந்தன, பாரத கண்டத்தின் மாபெரும் அதிசயமாய் அது மின்னியது


அதன் பிரமாண்ட கதவுகள் சந்தணமரங்களால் செய்யபட்டு வைரமும் வைடூரியமும் பதிக்கபட்டிருந்தன‌


அந்த ஆலயத்தின் செல்வத்தை குறிவைத்து 800ம் ஆண்டுகளில் வந்த ஆபத்தையெல்லாம் பாப்பா ராவ் போன்ற மன்னர்கள் முறியடித்து வெற்றி பெற்றனர்


ஸ்பெயின் வரை வென்ற அரேபிய கலிபாக்களால் அருகில் இருந்த இந்தியாவுக்குள் நுழைய முடியவில்லை இங்குள்ள அரசுகள் வலுவாய் இருந்தன‌


ஆப்கனில் முகமது எனும் மன்னன் கஜினி பிராந்திய மன்னனாக இருந்தபொழுது இந்த ஆலயத்தின் செல்வம் அவன் கண்களை உறுத்திற்று, அதை கொள்ளையடிக்க அவன் படை திரட்டவில்லை காரணம் நேருக்கு நேர் மோதினால் வெல்லமுடியாது என்பது அவன் அறிந்தது


இதனால் வஞ்சக திட்டமிட்டான்


குதிரை வியாபாரிகள், ரத்ன வியாபாரிகள் என அவன் ஆட்கள் சூரத் வழியாகவும் கைபர் போலன் வழியாகவும் ஊடுருவினர். எல்லா நாட்டு வியாபாரிகளும் புழங்கிய இடம் என்பதால் யாரும் அதை கண்டு கொள்ளவில்லை


அப்படி ஒவ்வொருவராக குழுவாக வந்த பலர் இங்கு ரகசியமாக நிலையெடுத்தனர் இந்நாட்டின் கண்களுக்கு அது புரியவில்லை


குறிப்பிட்ட நாளில் கஜினி சிறு படையோடு வந்தபொழுது இவர்கள் அவனோடு இணைந்தபொழுதுதான் ஆபத்து புரிந்தது


கஜினி இந்தியாவினை கொள்ளையிடவோ இல்லை ஆளவோ விரும்பியவன் அல்ல, மாறாக அந்த ஆலய செல்வத்தை கொள்ளையிடுவதே அவன் நோக்கமாய் இருந்தது


இப்படி மின்னல் வேக கொள்ளையடித்து அவன் திரும்புவதும், அவன் வந்துவிட்டு சென்றபின்பும் அவன் கைகூலிகள் ஆங்காங்கு பதுங்கி இருந்து எங்களுக்கும் கஜினிக்கும் சம்பந்தமில்லை என கதறுவதும் நடந்தது


இந்தியா அவனை ஒரு கொள்ளையனாக கருதிற்று, அக்காலத்தில் ஏகபட்ட கொள்ளையர் இப்படி வந்து கொள்ளையிடுவது உண்டு


பாரதகண்டம் ஒருவித பெருந்தன்மையில் அவனை மிகபெரும் ஆபத்தாக கருதா நிலையில் அவன் படுபயங்கர திட்டமிட்டான்


சுமார் 6 முறை அவன் கொள்ளை முயற்சி வெற்றிபெற்ற நிலையில் 10 முறை தடுக்கவும் செய்யபட்டது, அவன் ஓட அடிபட்ட காலமும் உண்டு


அடிக்கடி கொள்ளையிட முடியாது என்பதை உணர்ந்த அவன் கடைசியில் பெரும் பாய்ச்சலாக பாய்ந்தான்


அந்த பாலை நிலத்தில் கொள்ளை என்பது தர்மம், ஒன்றுமே விளையாத அந்நிலம் கொள்ளை ஒன்றாலேதான் வாழ்ந்தது, அதை இந்த வளமான நாட்டில் தயக்கமின்றி செய்தான் கஜினி முகமது


பாலை நிலத்தை செழிக்க வைக்கத்தான், அதற்கு செல்வம் வேண்டித்தான் அந்த கோவிலை இடித்தான், அந்தரத்தில் மிதக்கும் லிங்கத்தை காலால் இழுத்து உடைத்தான்


கோவிலை தோண்டியெல்லாம் கொள்ளையடித்து, அதன் தங்க தகடுகளையெல்லாம் கழற்றி அதை மொத்தமாக பாழ்படுத்தி மொத்த செல்வத்துடன் தப்பி சென்றான்


அது யாரும் எதிர்பாரா தாக்குதல், கோவில் முழுமையாக அழிந்தது


அந்த செல்வத்துடன் கஜினி நகரை புதுப்பித்தான் அணை கட்டினான் அமிர் குஸ்ரூ எனும் புலவனை தன்னை பற்றி பாட சொல்லி கேட்டு கொண்டிருந்தான்


அந்த மிதக்கும் லிங்கத்தை துண்டு துண்டாக உடைத்து பல இஸ்லாமிய மன்னருக்கும் அனுப்பி இந்துக்களின் மிக பெரும் நம்பிக்கை ஒன்றை தான் தகர்த்ததாக பெருமைபட்டு கொண்டான்


ஆப்கனில் இருந்து எப்படி தன் கைகூலிகள் வழி இந்தியாவினை கொள்ளை அடிக்க வேண்டும் என்பதை முதலில் சொன்னவன் அவனே


வியாபர உளவு, பயணிகள் உளவு, இன்னும் பலவேட உளவாளிகளாக வந்து கானகத்தில் பதுங்கி இன்னும் எங்கெல்லாமோ பதுங்கி உத்தரவு வந்ததும் ஒன்றாக கிளர்ந்தெழும் அபாய வழியினை அவன் சொல்லியிருந்தான்


சோமநாதபுரியினை அவன் கொள்ளையடித்து சென்ற கொஞ்ச காலத்தில் அவன் செத்துவிட கவுரி அல்லது கோரி என்பவனுக்கு இந்தியாவினை கொள்ளையிடும் ஆசை வந்தது


ஆனால் அவனை ஓட அடித்தான் மாவீரன் பிருத்திவிராஜன்


ஆனால் பிருத்வி ராஜனுக்கும் அவன் மாமனுக்கும் முரண்பாடு வந்த காலத்தில் உள்ளே வந்து வஞ்சகமாக பிருத்வியினை பிடித்து குருடாக்கினான் கோரி


கோரியும் சில நாட்களில் அதே வஞ்சகத்தில் கொல்லபட்டான், அவனை கொன்றது பிரித்த்வி எனவும் இந்திய வீரர்கள் எனவும் பல செய்தி உண்டு, எப்படியாயினும் கோரி இந்தியாவினை தாண்டும் முன் செத்தான் என்பதே வரலாறு


கோரி தன் அடிமை ஒருவனை டெல்லி சுல்தானாக நியமித்தான், டெல்லியில் சுல்தான் ஆட்சி அப்படி வந்ததே


அந்த அடிமை வம்சத்தை கில்ஜி தூக்கி எறிந்து சுல்தான் என்றானான், அவன் குறியும் சோமநாதபுரியில் விழுந்தது


ஆம் கஜினியால் நொறுக்கபட்ட ஆலயத்தை இந்துக்கள் தேனி போல் உழைத்து மறுபடி உருவாக்கி வைத்திருந்தனர், அதை கொள்ளையிட்டான் கில்ஜி


இந்துக்கள் அவ்வாலயத்தை மறுபடி மறுபடி உருவாக்குவதும் ஆப்கானிய கொள்ளையர் கொள்ளையிடுவதுமாக இருந்தனர்


கில்ஜி துக்ளக் ஆகியோர் திருச்சி, மதுரை வரையில் இப்படி கொள்ளை அடித்து அப்படியே ஆள அமர்ந்ததும் உண்டு


இங்கே விஜயநகர பேரரசும் வடக்கே ராஜபுத்திரரும் அவர்களை கட்டுபடுத்தி காவலை இந்துக்களுக்கு வழங்கினார்கள்


துக்ளக் காலம் முடிந்து பாபர் வந்து அக்பர் கொஞ்சம் நிதானமாக ஆண்டபொழுது சோமநாதபுரி ஆலயம் மறுபடி கட்டபட்டு ஜொலித்தது


ஆனால் அவுரங்கசீப் அந்த ஆலயம் எழுவது பொறுக்காமல் அதை இடித்து அதன் கோபுரத்தை மசூதி போல் ஆக்கி வைத்திருந்தான்


(அதாவது அவன் அக்கோவிலை மசூதியாக்கும் வேலையினை செய்து கொண்டிருந்தபொழுது சிவாஜி அவனை விரட்டி அடித்தார், கோவில் முழுவதும் மசூதியாகாமல் தப்பித்தது


ஏன் அதை ஆப்கானிய மன்னர்கள் குறிவைத்தார்கள் என்றால் யூத கோவிலை ரோமர் ஒழித்த கதைதான், இது இருப்பதால்தானே ஒன்று கூடி சண்டையிட்டு என்கோவில் என் நாடு என் இனம் என்கின்றார்கள்? மொத்தமாக ஒழித்துவிட்டால் சும்மா இருப்பார்கள், அதுவும் மசூதி கட்டிவைத்தால் மெல்ல மெல்ல மதம்மாற போகின்றாகள், அவ்வளவு போதும்


ஒரு நாட்டின் அடையாளத்தையே மாற்றி அடிமையாக்கும் முயற்சி அது)


பின் மராத்தியர் காலத்தில் சிங்கம் வீரசிவஜியால் அவுரங்கசீப் ஒடுக்கபட்டு கோவில் வேலை தொடங்கும் திட்டம் இருந்தாலும் ஓயா போர்கள் அதை முடிக்க முடியவில்லை


இடிபட்ட கோவில் அப்படியே இருந்தது, அவுரங்கசீப் கட்டி வைத்த மசூதிவடிவ கூரையுடனே இருந்தது


பின் வெள்ளையன் வந்து அந்த ஆலயம் ஜூனாகத் சுல்தானின் ஆட்சிக்குள் சிக்கியது


அந்த ஆலயம் இந்தியாவின் அடையாளம் என்பதிலும் பாரம்பரியம் மிக்கது என்பதிலும் இந்துக்கள் திரும்ப கட்ட துடித்தார்கள், ஆனால் ஜூனாகத் சுல்தான் அனுமதி வழங்கவில்லை


இச்சிக்கலை வைத்து வெள்ளையன் அரசியல் செய்தானே அன்றி ஆலயம் பாழ்பட்டே கிடந்தது


1947ல் சுதந்திரம் வாங்கியதும் பட்டேல் அதை கட்ட விரும்பினார், ஆனால் ஆபத்து ஜூனாகத் மன்னன் வடிவில் வந்தது அவன் பாகிஸ்தானோடு இணைய விரும்பினான்


ஆனால் மக்கள் எழுச்சியில் அந்த பகுதி இந்தியாவோடு இணைய சோமநாதபட்டணம் இந்திய பகுதியானது


அதை கட்ட வேண்டும் என கே.கே முன்சி என்பவர் முதலில் முயல நேரு ஒரு தடைகல்லானார், காந்திக்கு அதில் விருப்பமுமில்லை தடையுமில்லை


இந்த இடத்தில்தான் விவகாரம் பட்டேல் கைக்கு சென்றது, அவர் நேருவினை பகிரங்கமாக எதிர்த்தபின் நேருவுக்கு வேறு வழி தெரியவில்லை


பட்டேல் தீவிரமாக ஆலய வேலையில் இறங்க , நேருவோ மதசார்பற்ற நாட்டில் இதற்கு அனுமதி இல்லை என்றார்


ஆனால் இந்துக்கள் நாடெல்லாம் கையேந்தி அதை கட்டி முடித்தனர்


இடையில் எவ்வளவோ எதிர்ப்புகள் வந்தன, இந்து ஆலயம் மீள கூடாது என கங்கணம் கட்டி பல சதிகள் நடந்தன‌


காஷ்மீர் போர், நாட்டின் கலவரம் என எவ்வளவோ இடைஞ்சல்கள்


உச்சமாக காந்தி கொலை நடந்தபின் எழுந்த ஒப்பாரியில் இந்த பணி நிறுத்தபடவேண்டும் என்ற குரலெல்லா எழுந்தன‌


ஆனால் நடக்க வேண்டிய பணிகள் அமைதியாக நடந்து நல்லபடியாக முடிந்தது


(அது மத அடையாளம் என்ற நேருவுக்கு பின்னர் ஹூமாயுன் சமாதி முதல் பல தேவாலயம் மசூதிகள் அரசு சார்பில் பழுதுபார்க்கப் பட்டபொழுது கண்கள் மூடிகொண்டன )


மாபெரும் வரலாறு அன்று திரும்பியது, சுமார் ஆயிரம் ஆண்டு கால போராட்டத்தின் பின் அக்கோவில் மறுபடி இந்துக்களால் திறக்கபட்டது


உண்மையில் இந்திய வரலாற்றின் மாபெரும் ஆச்சரியம் அது


ஆயிரம் ஆண்டுகளாக ஒரு ஆலயம் அழிக்கபடுவதும் விழ விழ எழுவதும் எத்தனை நூற்றாண்டுகளாக இஸ்லாமிய ஆட்சியில் இருந்தும் அது பின்பு மீள கட்டபட்டதும் வரலாறு


 அன்றைய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத்தை அழைத்து அந்த ஆலயம் திறக்கபட்டது, 1951ல் அந்த ஆலயம் திறக்கபட்டபொழுது பட்டேல் உயிரோடு இல்லை


அக்கோவில் மீள எழ காரணமான பட்டேல் அந்த கோவிலின் வேலை முடியும் முன் தன் காலத்தை முடித்திருந்தார்


1951லும் நேரு என்பவர் அப்பக்கமே வரவில்லை, வர அவருக்கு மனமில்லை


ஆம், 1951ல் இதே நாளில் அந்த சோமநாதபுரி ஆலயம் மறுபடி திறக்கபட்டு தன் வரலாற்றை மீட்டு கொண்டது


உலகின் எந்த நாட்டு ஆலயத்துக்கும் இல்லா பெருமை சோமநாதபுரி ஆலயத்துக்கு உண்டு, எந்த இனங்களுக்கும் இல்லா பெருமை இந்துக்களுக்கு உண்டு


ஒவ்வொரு இந்துவும் கொண்டாடி தீர்க்க வேண்டிய நாள் இது


அக்கோவில் ஏன் கட்டபட வேண்டும் என 1947களில் சாதுக்கள் மற்றும் பக்தர்கள் கூட்டத்தில் பட்டேல் சொன்ன வார்த்தை சரியானது


"இந்த ஆலயம் இந்துக்களின் பெருமை மட்டுமல்ல, இந்தியாவின் பெருமையும் கூட‌


இது ஜொலிக்கும் பொழுதெல்லாம் இந்தியா உலகில் சக்தியும் செல்வமும் கொண்ட நாடாய் இருந்தது, இது இந்தியாவின் மாபெரும் அடையாளம்


புதிய இந்தியா இந்த ஆலயத்தில் இருந்தே எழட்டும், மாபெரும் இடத்தை அது அடையட்டும்"


அது சர்வ நிச்சயமானது, அதிலிருந்துதான் ஒவ்வொரு ஆலயமாக துலங்க துலங்க தேசமும் வளர்ந்து இன்று தேசமும் வலுவாகி ராமர்கோவிலும் கிடைத்தாயிற்று


அந்த சோமநாதபுரி ஆலயத்தில் முதலில் பறக்க தொடங்கிய காவி கொடிதான் இன்று நாடெங்கும் பறந்து தமிழகத்திலும் இப்பொழுது பறக்க தொடங்கியிருக்கின்றது


முதன் முதலில் வீழ்ந்த அந்த ஆலயம் எழும்பித்தான் இன்று எல்லா மற்ற ஆலயங்களும் எழ தொடங்கியிருக்கின்றன‌


உண்மையில் இந்தியாவின் அதிசயம் தாஜ்மகால் அல்ல, அந்த சோமநாதபுரி ஆலயமே


பட்டேலுக்கு மாபெரும் சிலை ஏன் வைக்கபட்டது என்றால் நாட்டுக்காக ஆற்றிய சேவை மட்டுமல்ல, ஆயிரமாண்டு அடையாளத்தை அன்றைய நேரு எனும் சக்திவாய்ந்த‌ மனிதனை மீறி அவர் மீட்டு கொடுத்தார் என்பதற்காக‌


இன்று அந்த சோமநாதபுரி ஆலயம் ஆயிரம் ஆண்டு கடந்து மீண்டு கம்பீரமாக நிற்கின்றது, அதன் உச்சியில் காவி கொடி பறக்கின்றது


அது மறுபடி உருவாக காரணமான பட்டேல் மாபெரும் சிலையாக நிற்கின்றார்


அதே குஜராத்தில் இருந்து உருவான காவி சிங்கங்கள் டெல்லியில் இருந்து வறண்ட ஆப்கனுக்கு உதவிகளை செய்கின்றது


இதெல்லாம் காலம் போட்டு வைத்த கணக்கு, பரம்பொருள் போட்டு வைத்த தர்ம கணக்கு, மானிட கண்முன் மாபெரும் நாடகம் ஆடி சிரிக்கும் சோமநாதரின் கணக்கு


வரலாற்றில் மறைக்கபட்ட இந்நாளை ஒவ்வொரு இந்துவும் இந்து எழுச்சி நாளாக கொண்டாடட்டும், ஒவ்வொரு ஆலயமும் அப்படி மீட்கபட்டு பொலிவு பெற்று மிளிர உறுதி ஏற்கும் நாளாகவும் இது அமையட்டும்


(சோமநாதபுரி ஆலயத்தின் சொத்துக்களை கொண்டு சென்று உருவாக்கபட்ட ஆப்கன் இன்று சீரழிந்து கிடப்பதும், எவ்வளவோ முறை சொத்துக்களை பறிகொடுத்த குஜராத் ஆலயத்தையும் மீட்டு மிகபெரிய வளமான பகுதியாய் எழுந்து நிற்பதும் சிவனின் திருவிளையாடல் அன்றி வேறென்ன‌


ஒருநாள்  அமைதியான நாள் என்றோ, ஒருநாள் இரத்தம் சிந்தா நாள் என்றோ ஆப்கானில் உண்டா? இல்லை.


சிவன் சொத்து குலநாசம் என அர்த்தமில்லாமலா சொன்னார்கள்)

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது