இந்தியாவில் ஒரு சிங்கப்பூர்! உலக வர்த்தகத்தின் ஒரு மையப்புள்ளி அல்லது இணைப்பு பாதை என்றால் சிங்கப்பூர் அதில் மிக முக்கியமானது. அது ஒது சிறு நாடு கூட அல்ல வெறும் நகரம் என்றுதான் சொல்லவேண்டும்.

 





இந்தியாவில் ஒரு சிங்கப்பூர்!


உலக வர்த்தகத்தின் ஒரு மையப்புள்ளி அல்லது இணைப்பு பாதை என்றால் சிங்கப்பூர் அதில் மிக முக்கியமானது. அது ஒது சிறு நாடு கூட அல்ல வெறும் நகரம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அது இருக்கும் இடம் அவ்வளவு முக்கியமானது. அதன் பூகோள அமைப்பில் பசிப்பிக் பெருங்கடலையும், இந்திய பெருங்கடலையும் இணைக்கும் பகுதியாகவும், அது மிகமுக்கிய ட்ரேட் ரூட்டாக மட்டுமல்ல ஒரு சரியான நிர்வாக்த்திறன் கொண்ட ஒரு நாடும் அதுவே. 




அந்த நாட்டின் முக்கியத்துவத்துக்கு காரணம் அதன் துறைமுகம் என்பதுதான் அதன் ஆரம்பம். இன்றுகூட இந்தியாவிற்கு Deep Sea Port என்பது இல்லை, அதனால் பெரிய கப்பல்கள் சிங்கப்பூரில் கண்டெய்னர்களை இறக்கி வைக்கும். இந்தியாவின் சிறிய கப்பல்கள் பின்னர் அதை எடுத்து வரும். அப்படி அந்த கண்டெய்னர்கள் அங்கே இருக்கும்போது ஒரு நாளைக்கு $18 கட்டணமாக செலுத்தப்படுகிறது. 


இந்தியா மட்டுமல்ல, முன்பு சீனா போன்ற நாடுகளுக்கே முன்பு அதுதான் Deep  Sea Port ஆக இருந்து கிழக்கு-மேற்கு உலகத்தை இணைத்தது. அதனால் உலகம் முழுவதும் விற்பனை செய்ய வேண்டுமெனில் ஒரு நிறுவனத்திற்கு சிங்கப்பூரில் ஒரு அலுவலகம் இல்லாவிட்டால் அது எளிதல்ல என்ற நிலை தோன்றியது. அதனால் சிங்கப்பூர் உலகின் வர்த்தக மையப்புள்ளியானது.


அதனால் கிழக்கையும் மேற்கையும் கப்பல் போக்குவரத்தை இணைத்ததாலும், உலத்தின் வர்த்தக மையமாகவும், ட்ரான்ஸ் சிப்மெண்ட் போர்டாகவும் இருந்தது. அதை பிரதமர் லீ குவான் மிக சாதுர்யமாக, திறமையாக,நேர்மையாக நிர்வகித்து உலகத்தின் மையப் புள்ளியாக மாற்றினார்.  


அதற்கு லீ குவான் கொண்டுவந்த கண்டிப்பான சட்டங்கள் மூலம் தவறு செய்பவர்களை  கடுமையாக தண்டித்ததால், தவறு செய்யும் வாய்ப்பை குறைத்தது. அதனால் சிங்கப்பூர் ஒரு உலகின் நம்பகத்தன்மை கொண்ட ட்ரான்ஸிப்மெண்டாக மாறி, உலகைப் மிகப்பெரிய துறைமுகமானது. 


அதனால் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக அதன் கட்டமைப்பு பலமானதாகவும், நம்பிக்கையானதாகவும் இருந்தது என்பதால் அதை சார்ந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்பது உலகத்தின் மிகப்பெரிய விமான நிறுவனமாகவும் உலகை இணைக்கும் மையப்புள்ளியாகவும் உயர்ந்தது என்றால் ஆச்சரியமில்லை.


ஆனால் அந்த நாட்டுக்கு நிலப்பரப்பு மிக குறைவானதாக இருந்ததும், பெரும்பாலான மக்கள் வெளி நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த அறிவாளிகள் என்பதும் முக்கியம். அங்கே கடும் உழைப்புக்கு சீனர்களும் அறிவுக்கு தமிழர்கள் என்று இனம் பிரித்து பயன்படுத்தி வளமானது அந்த நாடு. 


எந்த குடும்பமுமே மூன்று தலைமுறைக்கு (3x20=60) மேல் வளமானதாக வாழ்ந்திருப்பதில்லை. அதற்கு காரணம், மூன்றாம் தலைமுறைக்கு, முதன் தலைமுறை செய்த கடின உழைப்பின் வலி தெரியாது என்று சொல்வார்கள். அது நாட்டுக்கும் பொருந்தும். சிங்கப்பூரும் அந்த 60 ஆண்டை கடந்துவிட்டது. லீ குவான் இறந்தபின்னர் சிங்கப்பூரின் நம்பகத்தன்மை கொஞ்சம் பிசுபிசுக்க தொடங்கிவிட்டது. 


அந்த நிலையில் உலகின் மிகப்பெரிய வர்த்தகம் செய்த, அடுத்த பொருளாதார வல்லரசாக மாறிவரும் இந்தியா, ஏற்கனவே விழிஞ்சம்  துறைமுகத்தை கட்டி முடித்துள்ளது. அதனால் அது இதுவரை சார்ந்திருந்த சிங்கப்பூர், கொழும்பு, துபாய், ஓமன் துறைமுகத்தின் முக்கியத்துவம் குறையும். அது மட்டுமல்ல அடுத்த பெரிய துறைமுகமான 76000 கோடியில் வாதவன் துறைமுகத்தையும் மும்பைக்கு அருகில் கட்ட தொடங்கிவிட்டது. இன்னொரு துறைமுகமாக கிழக்கு கடற்கரைக்கு, ஆந்திராவில் அல்லது ஒரிஸ்ஸாவில் ஒரு துறைமுகம்.அமையும் என்ற சூழலில், சிங்கப்பூரில் இந்தியாவின் சார்பு வெகுவாக குறையும். 


அதிலும் சீனாவிடம் இருந்து ஆசிய நாடுகள் செய்யும் இறக்குமதி, பெரும்பாலும் இந்த சிங்கப்பூர் வழியாகத்தான் நடந்தது என்றே சொல்லலாம். அந்த நிலையில் சீனாவின் பொருளாதார ஆதிக்கமும் வீழத்தொடங்கியது என்பதும் சிங்கப்பூருக்கு ஒரு சரிவை கொடுக்க தொடங்கியது.


இந்த நிலையில் 74,000 கோடி செலவில் அந்தமானில் இந்தியா ஒரு ட்ரான்ஸிப்மெண்ட் துறைமுகத்தை கட்ட தொடங்கி இருக்கிறது. இதுவும் சிங்கப்பூருக்கு ஒரு மாற்றாக இருக்கும் என்று கருத்து இருக்கிறது. அதுமட்டுமல்ல, சீனாவின் 70% வாணிப போக்குவரத்து நடப்பது இந்த மலாக்கா ஸ்ட்ரெய்ட் வழியாகத்தான். அது வெறும் வாணிபத்தை மட்டுமல்ல, அதன் போர்க்கப்பல்களும், உளவு பார்க்கின்ற கப்பல்களும் கடந்து செல்வது இந்த சந்திப்பில்தான். 


எனவே அங்கே இருக்கும் இந்தியாவின் கப்பற்படையை மிக வலிமையாக்கி, கண்காணித்து, சீனாவை கட்டுப்படுத்த இந்த துறைமுகம் அதி முக்கியமானது. இந்த துறைமுகத்தை அடுத்த ஐந்தாண்டுகளில் முதல்கட்ட பணியை முடிக்க திட்டமிட்டுள்ளது இந்தியா.


நம்  தமிழ்நாட்டை சிங்கப்பூராக மற்றுவதாக சொல்லி, சிங்கப்பூரில் நம் நாட்டை அடகு வைத்தவர்கள் ஆயிரம் பேர். ஆனால் இந்தியாவில் ஒரு சிங்கப்பூரை உருவாக்குகிறார் மோடி. அது சிங்கப்பூரை விட பெரியது, உலகின் முக்கிய Trans-Shipment  ஆகப்போகும் துறைமுகம். அது இந்தியாவிற்கு வருடம் 15000 கோடியை சேமிக்கும். அது மட்டுமில்லாமல் மற்ற நாடுகளுக்கு வர்த்தகத்தில் இணைப்பு பாலமாக மாறி பெரும் வருமானத்தையும் ஈட்டும்.


இந்த துறைமுகம் அமைந்தால் சிங்கப்பூர், மற்றும் கொழும்பு துறைமுகம் மட்டுமல்ல, சீனா இலங்கையிடம் லீசுக்கு வாங்கிய ஹம்பந்தோட்டாவில், சுண்டல் பொறிகடலைதான் விற்க வேண்டும். 


சிங்கப்பூர் போல விண்ணை தொடும் கட்டிடங்கள், புதிய டெக்ன்லாஜியால் வேயப்படும் ரோடுகள், போக்குவரத்து, மனதை அள்ளும் 500+ மேற்பட்ட தீவுகள் என்று எல்லாமே அங்கே அமையப்போகிறது. 


அங்கே அருங்காட்சியகம் முதல், உயிரியல் பூங்கா வரை ஒவ்வென்றாக வரப்போகிறது. அப்படியெனில் அங்கே உலக தரம் வாய்ந்த விமான நிலையம் அமையாமலா? ஆம் அங்கே Green Field Airport ஒன்றும் அமையப்போகிறது.


அதனால் இது ஒரு வெறும் துறைமுகமாக அமையாமல், உலகின் மிகச்சிறந்த சுற்றுலா தளமாகவும், டூரிஸ்ட் பயணிகளின் உலக சந்தையாகவும் உருவெடுக்கிறது.  அங்கே இந்தியாவின் முக்கிய விமான நிலையமும் அமைவதால் சிங்கப்பூர் போல, கிழக்கு மேற்கை இணைக்க, அந்தமான் ஒரு வான்வெளி இணைப்பு பாலமாகவும், சிங்கப்பூர் போல சுற்றுலா தளமாகமாவும் மாறுகிறது.


இப்போது நீங்கள் ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் 840 புதிய விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. அப்படியென்றால் அதுவெல்லாம் திட்டமிடாமல் இல்லை, இது போன்ற நீண்டகால திட்டங்களை முன் வைத்துத்தான் அவ்வளவு பெரிய ஆர்டர்களை டாடா கொடுத்துள்ளது. அப்படியெனில் அடுத்த 10 ஆண்டுகளில் ஏர்-இந்தியா நிறுவனம் உலகின் பெரிய நிறுவனங்களில்.ஒன்றாக மாறலாம். 


அது மட்டுமல்ல, அங்கே பாதுகாப்பை உறுதி செய்ய, இந்தியாவின் முக்கிய கப்பற்படை தளமாகவும் மாறுவதால், அதன் பாதுகாப்பு மிக உயரிய அளவில் இருக்கும்.  சோலார் மூலம் கிரீன் எனர்ஜி மூலம் மின்சாரமும் கிடைக்கும்!


இவையெல்லாம் அமைவது அந்தமான், நிகோபார் தீவில், தென்பகுதியில், சிங்கப்பூருக்கு அருகில் கிரேட் நிகோபாரில் அமையப்போகிறது. 


சரி, இதைவிட ஆச்சரியம் ஒன்று உண்டு. அது இந்தியாவின் இரண்டாவது பெரிய Trans-Shipment Port என்றால், முதல் ஒன்று எங்கே?


அது விளிஞ்சல் (கொளச்சல் அருகில்) அமையப்போகும் துறைமுகமே. அது உலகின் மிகப்பெரிய TS ஆக இருக்கும். அது தென் தமிழகத்திலும், கேரளாவிலும் வேலை வாய்ப்புகளை பெருமளவில் கொண்டுவரக்கூடியது. அது முடியும் தருவாயில் உள்ளது. 


ஆனால் மும்பைக்கு அருகில் உள்ள வாதவன் துறைமுகம்தான் பெரிய துறைமுகமாக அமையப்போகிறது என்று முன்பு சொன்னோமே?


ஆம், இந்தியாவின் நேரடி ஏற்றுமதிக்கு வாதவன், மற்றும் ஆந்திரா அல்லது ஒரிஸ்ஸாவில் அமையும் துறைமுகமும், விளிஞ்சம் மற்றும் அந்தமான் துறைமுகம் சிங்கப்பூர் போல உலக நாடுகளின்Trans Shipment துறைமுகமாகவும் அமையும்.


அப்படியானால் சீனா அதை அனுமதிக்குமா? சீனாவின் கொத்தடிமைகளான கம்யூனிஸ்ட்கள் அட்ரஸ் இங்கே இல்லாமல் போனதால், அதற்கு பதிலாக சீனாவின் போர்ப்படைகளாக மாறிய காங்கிரஸ், திமுக போன்ற தேச விரோத கொத்தடிமை சக்திகளை சீனா பயன்படுத்தி அதனை தடுக்க முயற்சிக்கிறது. அதை ஏற்கனவே ராகுல்கான், அங்கே இருக்கும் பழங்குடியினருக்கு ஆபத்து என்று தொடங்கி விட்டான் என்பதை நம்மில் பலர் இன்னும் அறியவில்லை. 


எனவே அவனும், இங்கே இருக்கும் தேசவிரோத திமுகவும் அதை ஆரம்பிக்கும் முன், நாம் விழித்துக்கொண்டு மக்களுக்கு இதை கொண்டு சேர்க்க வேண்டும். குறிப்பாக பள்ளி, கல்லூரி மணவர்களுக்கு இதை கொண்டு சேர்க்க வேண்டும். எனெனில் தமிழகத்திற்கு வரவேண்டிய குளச்சல் துறைமுகம் நம் கைவிட்டு போனதற்கு இந்த நாசகார அரசியல் சக்திகள் காரணம் என்பதால், மீண்டும் ஒரு தவறை இந்திய மக்கள் அனுமதித்து விடக்கூடாது. 


இது இந்திய தேசமிது, உலகை நேசிக்கும் வாசமிது!  


🐶

#Indhea

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது