சமீபத்தில் நடந்து முடிந்த ஆனந்த் அம்பானி - ராதிகா மர்சன்ட் திருமணம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் கூட ஒரு பேச்சு பொருள் ஆனது அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆனந்த் அம்பானி - ராதிகா மர்சன்ட் திருமணம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் கூட ஒரு பேச்சு பொருள் ஆனது அனைவரும் அறிந்ததே.
அந்த திருமணத்தை மிக விமரிசையாக உலகமே வியக்கும் வகையில் முகேஷ் அம்பானி அவர்கள் ஏற்பாடு செய்தார் என்பதால் பலரும் பல விதமான விமர்சனங்களை வைத்தனர்.
தேநீர் விடுதி முதல், முகநூல். பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் வரை இது ஒரு மிகப்பெரிய விவாதப்பொருள் ஆகிவிட்டது.
போதாக்குறைக்கு ஜியோ நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வழக்கமான சேவைகளுக்கு கட்டணத்தை சற்று உயர்ந்துவிட்டது.
உடனே பொங்கி எழுந்த மக்கள் தன் மகனின் கல்யாண செலவுக்காக தான் முகேஷ் அம்பானி இவ்வாறு கட்டண உயர்வை செய்துள்ளார் என்று அவரை கருத்து கொட்டுகின்றனர்.
எனக்கு சில கேள்விகள் உள்ளது மக்களிடம்.
யாரும் தவறாக எடுத்து கொண்டாலும் பரவாயில்லை, என் மனதில் பட்டதை நான் கேட்டு விடுகிறேன்.
உங்களில் எத்தனைபேர் உங்கள் வீட்டு விஷேசங்களின்போது உங்களிபோலவே அக்கம் பக்கம் உள்ளவர்கள், உறவினர்கள். நண்பர்கள் என வசதி குறைவானவர்கள் யாராவது நம் கொண்டாட்டங்களை கண்டு வருத்தம்/ ஏக்கம் கொள்வார்களோ என்று யோசித்து உள்ளீர்கள்? 🤔
எத்தனைபேர் உங்களை போலவே அவர்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று உங்கள் கொண்டாட்டங்களில் அவர்களை இணைத்து கொள்கிறீர்கள்? 🤔
அடுத்தவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு போனால் எதோ கடனுக்கு அவர்கள் நமக்கு செய்ததை திருப்பி செய்வோம் மொய் என்ற பெயரில், அல்லது நமக்கு அவர்கள் கொடுத்த பரிசை போலவே நானும் ஒன்றை அவர்களுக்கு தருவோம்..!
நான் இன்று இதனை செய்தால் நாளை அவர்கள் எனக்கு திருப்பின்செய்யனும் என்ற எதிர்பார்ப்பில் தான் பலர் இதுபோல மொய் வைபதும், பரிசு கொடுப்பதும் உள்ளது என்பது பெரும்பாலும் நிகழும் உண்மை.
ஆனால் அம்பானி வீட்டு திருமணம் வெறும் வெற்று கொண்டாட்டங்களும் பிரம்மாண்டமாக நடந்த நிகழ்வு மட்டுமல்ல.. அதே மேடையில் 50 ஜோடி ஏழைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர் முகேஷ் அம்பானி குடும்பத்தார்.
பெண்ணுக்கும் மாப்பில்லைகும் சீராக தலா 1 லட்சம் ரூபாய் ரொக்கமும், வீட்டுக்கு தேவையான அத்தனை உபகரணங்கள் முதல் ஒரு வருடத்திற்கான மளிகை பொருட்கள் கொடுத்து அத்தனை குடும்பங்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளனர்.
அது போக தன் திருமண விருந்தை மக்கள் பலர் உண்டு மகிழ வேண்டும் என்ற எண்ணத்தில் 40 நாட்கள் "பண்டாரா" எனும் தொடர் விருந்து நிகழ்வுகள் பொதுமக்களுக்கு விமரிசையாக நடக்கிறது.
தினமும் சுமார் 9000 பேருக்கும் மேல தொடர்ந்து மூன்று வேளையும் 40 நாட்கள் இந்த திருமண விருந்து வழங்கப்பட்டு வருகிறது என்பது எத்தனை சிறப்பு.!
கேலியும் கிண்டலும், வன்மாமான விமர்சனங்களும் அள்ளி வீசும் மக்களே இதுபோன்ற நல்ல செயல்களை பாராட்ட ஏனோ உங்களுக்கு மனம் வருவதில்லை...
ஒரு 4 கிராம் தங்கத்தில் தாலி செய்து, உறவினர்கள் நண்பர்கள் என 100 பெரை அழைத்து, நல்ல உணவு அளித்து திருமணம் நடத்த வசதி இல்லாத ஏழைகளுக்கு மிக பிரம்மாண்டமாக இத்தனை சீர்வரிசைகள் தந்து விமரிசையாக நட்சத்திர பட்டலங்களின் புடை சூழ, கனவிலும் நினைக்கத் பிரபலங்களை நேரில் கண்டு அவர்களின் ஆசிகளோடு திருமணம் நடைபெறுவது என்பது அவர்களின் வாழ்நாள் பரிசு அல்லவா.
யாரையும் விமர்சனம் செய்யும் போது சற்று நிதானமாக சிந்தியுங்கள், உண்மை தன்மையை அறிந்து அதன் பொருளுணர்ந்து பேசுங்கள் நண்பர்களே.
கேட்டது செஞ்சா திட்டுறது தப்பே இல்லை.. ஆனா நல்லது செய்றப்போ கொஞ்சம் அதை பாராட்டி பேச முயற்சி செய்யுங்க..
Comments
Post a Comment