💃🙏🙏 🦋🦋வி ஸ் வ ரூ ப த ர் ஶ ன ம்🦋🦋🙏🙏💃🎻 அந்த பிரபலஸ்தர் ஒரு நிரீஸ்வரவாதி. கடவுள் மறுப்பாளர். மூட நம்பிக்கைகளை நம்பாதவர். இந்த கொள்கைகளைக் கொண் டவர்களுக்கு பிராமணர்கள் மீது காரணமற்ற த்வேஷம் இருப் பது சகஜம் தானே. இவருக்கும் இருந்தது.வேடிக்கை என்ன
🎻💃🙏🙏 🦋🦋வி ஸ் வ ரூ ப த ர் ஶ ன ம்🦋🦋🙏🙏💃🎻
அந்த பிரபலஸ்தர் ஒரு நிரீஸ்வரவாதி. கடவுள் மறுப்பாளர். மூட நம்பிக்கைகளை நம்பாதவர். இந்த கொள்கைகளைக் கொண்
டவர்களுக்கு பிராமணர்கள் மீது காரணமற்ற த்வேஷம் இருப்
பது சகஜம் தானே. இவருக்கும் இருந்தது.வேடிக்கை என்ன
வென்றால் இவரது மனைவி அஞ்சனா ஒரு ஆஞ்சநேய பக்தை. கொரங்குசாமி என கிண்டலடிப்பார்.ஆனால் அஞ்சனா இவரது கிண்டல்களை பொருட்படுத்துவதில்லை.
அன்று மாலை சென்னையில் ஒரு செமினார் இருந்தது. பன்னாட்டு இறை மறுப்பாளர்கள் பங்கேற்கஇருந்தனர். இவரும் அதில் பங்கேற்கவிருந்தார். அதில் மூடநம்பிக்கைகள்
என்ற தலைப்பில் உரையாற்றவிருந்தார். காலை எட்டு மணிக்கு திருச்சியிலிருந்து புறப்படும் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். ஏழரை மணிக்கு முன் விமான நிலயத்தில் செக்கிங் முடித்துக்கொள்ள வேண்டும். இவரது காரோட்டி சற்றே தாமதமாக வந்ததால் செக்கிங் கவுன்டர் அடைக்கப்பட்டு விட்டது. விமானத்தை தவற விட்டு விட்டார். சரி. காரிலேயே போய் விடுலாம் என நினைத்தார். ஐயா! போன வாரமே காரை சர்வீஸ் பண்ணியிருக்கணுங்க. சர்வீஸ் பண்ணாம வண்டி அவ்ளோ தூரம் போவாதுங்கய்யா என்றார் காரோட்டி. அவர் காலையில் லேட்டாக வந்ததற்கும் சேர்த்து செம டோஸ் விட்டார். சென்னை போய்வர ஒரு டூரிஸ்ட் கார் அனுப்பும்படி தனக்கு தெரிந்த ட்ராவல் ஏஜன்சிக்கு ஃபோன் செய்தார். அரை மணி நேரத்தில் டாக்சி வந்தது. கிளம்பும் போது மணி எட்டரை. மூணு மூணரைக்கு சென்னை போய்விடலாம் என்று கணக்கிட்
டார். கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி், வைத்தீஸ்வரன் கோவில் கடந்தாயிற்று. இரு பக்கமும் வயல்வெளி. கண்ணுக்
கெட்டிய வரை எந்த ஊரும் தென்படவில்லை. திடீரென கார் ஒரு பக்கம் இழுத்தது. வண்டியை நிப்பாட்டி ட்ரைவர் இறங்கி பார்த்தார். லெஃப்ட் சைட் பேக் வீல் பங்சர். கார் டிக்கியை திறந்து பார்த்தார். கிளம்பின அவசரத்தில் ரீட்ரெட் ஆகி வந்தி
ருந்த ஸ்டெப்னியை எடுத்துக்கொள்ள மறந்தது தெரிய வந்தது.
ட்ரைவர் கையைப்பிசைந்து கொண்டு நின்றார். நம்மவர் மிகவும் டென்ஷன் ஆனார். ஏன்….ஏன் இத்தனை தடங்கல்கள்! செமினாருக்கு நேரத்தில் போய்ச்சேர முடியுமா???
அப்போது கும்பகோணம்— கடலூர் பஸ் ஒன்று வந்தது. அதில் ஏறி கடலூர் சென்று அங்கிருந்து ஒரு ஓலா டாக்சி புக் பண்ணி சென்னை போய்விடலாம் என முடிவெடுத்தார். ஓலா டாக்சி புக் பண்ணார்.பஸ் ஏறி கடலூர் வந்தார். திருப்பாப்புலியூர் வேலன் தியேட்டர் அருகில் புக் செய்த டாக்சி காத்திருந்தது. ஐயா! பாண்டி வழியா போறது கஷ்டமுங்க. வழியில மூணு நாலு எடங்
கள்ல டைவர்ஷனுங்க. நாலஞ்சு நாளா பேஞ்ச மழைல டைவர்
ஷன் மட் ரோடுங்க அரிச்சூட்டுதுங்க. அதனால பண்ருட்டி வழியா நெய்வேலீல மெய்ன் ரோடை பிடிச்சம்னா ஸல்லுனு மெட்ராஸ் போயிடலாங்க. ஓலா ட்ரைவர் தந்த டிப்ஸ். வேற வழி!
இதுவரை கருத்திருந்த வானம் தூரல் போட ஆரம்பிச்சுது. வரகால்பட்டு,கீழ்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் மேல்பட்டாம்
பாக்கம் போகப்போக மழை வலுத்துக்கொண்டே வந்தது. மின்னலும் இடியும் பெரிய மழைக்கு கட்டியம் கூறின. பண்ருட்டி போய் நெய்வேலி ரோட்டில் திரும்பினார். ஒரே கருக்கிருட்டு. மழை கொட்டோ கொட்டென்று கொட்ட ஆரம்பித்து விட்டது. எதுர்ல ரோடு சரியா தெரியல. மின்னல் வெளிச்சத்துல ட்ரைவர் சமாளிச்சு ஓட்டினார். வழியில என்னமோ ஒரு கிராமம். பண்றகோட்டையாகவோ தெனகுத்தாகவோ இருக்கலாம். வண்டி ஏதோ ஸ்பீட் ப்ரேக்கரில் மோதியிருக்கும் போல. காரோட க்ராங்க் மேட்டில் மோதியதில் படார் என்ற சத்தம். ஷாஃப்ட் புட்டுக்கிச்சு. நல்ல வேளை. கார் கொடை சாயல.அவ்ளோதான். சென்னையாவது, செமினாராவது. எல்லாம் அம்பேல். ஏன்…..ஏன்…. இப்படியெல்
லாம் நடக்குது?
கடலூர்ல லன்ச் சாப்ட்டிருக்கலாம். சாப்டாதது தப்பு. பசி வயிற்றை கிள்ளியது. மனசும் உடம்பும் சோர்ந்து போச்சு. மின்னல் வெளிச்சத்தில் பக்கத்தில் ஒரு வீடு தெரிந்தது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் காரை விட்டிறங்கி சென்று அந்த வீட்டு கதவை தட்டினார். தோ வரேன்……வந்து கதவை திறந்தவர் ஒரு ஐயரூட்டம்மா. முப்பத்தஞ்சு வயசு இருக்கும். மடிசார் கட்டிண்டு ஏதோ பூஜைக்கு ரெடி பண்ணிக்
கொண்டிருந்திருப்பாங்க போலிருக்கு. போயும் போயும்
பாப்பானோட வீடா. மனசுக்குள் முனகிக்கொண்டார்.
அடப்பாவமே! தொப்பமா நனைஞ்சிருக்கேளே. வாசல்ல சாரல் அடிக்கறது. உள்ளுக்கு வந்துடுங்கோ. நண்ணா நனைஞ்சூட்
டேள். இருங்கோ. டவல் தரேன். ஒங்க ட்ரெஸ்ஸெல்லாம் கழட்டி போட்டூட்டு தலய ஒடம்ப ஈரம் போக தொடைச்சுக்
குங்கோ. எங்காத்துக்காரரோட வேஷ்டியும் ஷர்ட்டும் தரேன். உடுத்திக்கிங்கோ. வந்தவர் இவ்வளவு உபசாரத்தை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
கபிலவாஸ்து இளவரசன் சித்தார்த்தனுக்கு ஞானம் தந்த போதி மரத்தடி போல இந்த பாப்பானோட வீடு தனக்கும் ஞானம் தரப்
போகிறது என்றோ, தன்னுள் ஏன்…ஏன் என்று சுழன்று கொண்டி
ருக்கும் அத்தனை கேள்விகளுக்கும் இந்த பாப்பாத்திம்மா தரப்
போகிற ஒரு பதிலில் விடை கிடைக்கப்போகிறதென்றோ அப்போது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
ஒங்களைப்பார்த்தா ரொம்ப பசியோட இருக்கறாப்ல தெரியறது. உள்ள வந்து உக்காருங்கோ. முன்பசி அடங்கற
துக்கு டீயும் பிஸ்கட்டும் தரேன். நேக்கு பூஜைக்கு நேரமாச்சு. பூஜைய சீக்ரமா முடிச்சிண்டு வந்து சாப்டறதுக்கு சூடா இட்லி வார்த்து தரேன். யாரிது? யாரோ பாப்பாத்தியம்மாவா இவரோட அம்மாவேவா. உள்ளே சேரில் வந்து உட்கார்ந்து டீ, பிஸ்கட் சாப்பிட்டார். சற்று தெம்பு வந்தது. வீட்டை நோட்டம் விட்டார்.
ஏழைக்கும் நடுத்தரத்துக்கும் இடைப்பட்ட குடும்பமாக இருக்கலாம். வருமானம் வாய்க்கும் வயிற்றுக்கும் போதுமானது.
ஆஞ்சனேயம் அதிபாடலாலனம்……ஸ்லோகத்தை முணுமுணுத்
துக்கொண்டே மாமி பூஜையை ஆரம்பித்திருந்தாள். பெரிய ஆஞ்சனேயர் படம். உட்கார்ந்த வாக்கில், பின்புறம் வாலை தூக்கி நுனியில் ஒருவளைவு. ஓ! இங்கயும் கொரங்கு சாமியா!
புத்திர்பபலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம்…….ஸ்லோகம் தொடர்ந்தது. துளசி அர்ச்சனை. துளி வெண்ணையில் குங்கு
மத்தை குழைத்து வலது கை மோதிரவிரலில் ஒற்றி எடுத்து ஆஞ்சனேயர் வாலின் நுனியில் பொட்டு வைத்தாள். இனியும் பொட்டு வைக்க வாலில் இடமில்லை. அருகிலிருந்த எவர்
சில்வர் சம்படத்தை திறந்து அதிலிருந்த வடைமாலையை எடுத்தாள்.நேர்த்தியான மிளகுவடை. ஆஞ்சனேயர் படத்துக்கு சார்த்தினாள். கற்பூரத்தட்டில் ஒரு பெரிய கட்டி கற்பூரத்தை வைத்து ஏற்றி, மனோஜவம் மாருத துல்ய வேகம்….. ஸ்லோகத்
தை சற்று உரக்கவே சொல்லிக்கொண்டு ஆஞ்சனேயருக்கு கற்பூர ஹாரத்தி எடுத்தாள். ஹார்த்தியை உயரத்தூக்கி ஆஞ்சனேயர் முகத்தருகில் காட்டியபோது கற்பூர ஒளியில் ஆஞ்சனேயர் முகமும் மாமியின் முகமும் ஜாஜ்வல்யமாக ஜொலி
த்தன. தனக்குள் ஏதோ ரஸவாதம் நிகழ்வதை வந்தவர் உணர்ந்
தார். மூன்று சுற்றுகளும் ஸ்லோகமும் முடிந்தன. தட்டை கீழே வைத்து, சில துளசி தளங்களை எடுத்து தட்டை சுற்றி அவற்றை ஆஞ்சனேயர் பாதங்களில் வைத்தாள். மூன்று முறை நமஸ்கரித்
தாள். கற்பூர ஒளியில் கையைக்காட்டி கண்களில் ஒற்றிக்கொ
ண்டாள். கற்பூரத்தட்டை எடுத்து வந்து வந்திருந்தவரிடம் நீட்டி
னாள். என்ன அதிசயம்! சித்தார்த்தனுக்கு ஞானம் கிட்டி விட்டது. எழுந்து நின்று கற்பூர ஒளியில் கைகளை காட்டி கண்களில் ஒற்றிக்கொண்டார்.
சரி. நாழி ஆய்டுத்து. நான் போய் உங்களுக்கு இட்லி வார்க்கறேன். அம்மா! கொஞ்சம் உட்காருங்க. பேசுவம். அப்புறமா இட்லி சுட்டுக்கலாம்.(இட்லி சுட்டுக்கலாமா! அப்டீன்னா இவர் நம்படவா இல்லை. யாரா இருந்தா என்ன தவிச்ச வாய்க்கு ஆகாரம் தரணும்) பேசுவமே. என்ன பேசணும்?
இருவரும் எதிர் எதிரே தரையில் அமர்ந்தனர். ஏம்மா இந்த சாமிய கும்பிடறீங்க? எங்களுக்கு ஒரு பெரிய கொறை இருக்கு. ஆஞ்சனேயரை வேண்டிண்டு ஒரு மண்டலம் அவரோட வாலுல பொட்டு வைச்சா கொறை தீரும்னு ஒரு ஸ்வாமிகள் சொன்னார். அதனால தான். இன்னியோட ஒரு மண்டலம் முடிஞ்
சூடுத்து. இப்படி செஞ்சா உங்க குறை நீங்கீடுமாம்மா. நீங்க
ணும். நம்பிக்கை இருக்கு. அதென்னம்மா வாலுல பொட்டு வைக்கறது? வாலுக்கு என்ன அவ்ளோ முக்கியத்துவம்? ஆஞ்ச
னேயரோட ஒடம்பு பரமேஸ்வர ஸ்வரூபம். வால் பார்வதி ஸ்வரூபம். பார்வதிக்கு தான் சக்தி அதிகம். அதனால தான் அவங்க பராசக்தி. சக்தி மிகுந்த வாலுக்கு பொட்டு வைக்கறது பராசக்தியை பூஜிக்கற மாதிரி. அப்படியாம்மா! ஒங்க கொறை என்ன? ஒங்க வேண்டுதல் என்னங்கம்மா?
எங்களுக்கு அஞ்சு வயசுல ஒரு ஆம்பள கொழந்தை இருக்கான்
அவனுக்கு ஒடம்புதான் வளந்திருக்கே தவிர ஹார்ட் வளரல. ரொம்ப பலஹீனமா இருக்கு. எவ்வளவோ வைத்யம் பார்த்தாச்சு.
சரியாகல. யாரோ ஒரு பெரிய கார்டியாலஜி்ஸ்ட் இருக்காராம். அவர்ட்ட காட்டினா சரியாய்டுமாம். எங்களுக்கு அவர்ட்ட போக வசதி இல்ல. எனக்கு மஞ்சக்காணியா வந்த நெலத்தை வித்தூட்டு, கெடைக்கிற பணத்தில் அவர்ட்ட போகலாம்னு இருக்கோம். விக்கறதுக்கு தான் என் ஹஸ்பண்ட் போயிரு க்கார்.அப்படியாம்மா. யாரும்மா அந்த கைராசி டாக்டர்? அவரோட பேரு என்னம்மா? அவரோட பேரு………….
வெளியே மின்னல் வெட்டியது. இவரது மனத்திலும் ஒரு மின்னல். அந்த வெளிச்சத்தில் அங்கிருந்த ஆஞ்சனேயர் உயர்ந்து உயர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்குமாய் விஸ்வரூபம்
எடுத்தார். சரேலென எழுந்தவர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தார். உடனே மாமியையும் நமஸ்கரித்தார்.
அபச்சாரம்….அபச்சாரம்…பெரியவர் என்னை நமஸ்காரம் பண்ணலாமோ! பண்ணினதுல தப்பே இல்லம்மா. உங்களால எனக்கு ஆஞ்சனேயரோட விஸ்வரூப தரிசனம் கெடைச்சுது. அதைக்காட்டின நீங்க எனக்கு பராசக்தி போலவே நிஜரூப தரிசனம் தந்திருக்கீங்கம்மா. என்னென்னமோ சொல்றேள். நேக்கு ஒண்ணுமே புரியலையே. புரியற மாதிரி சொல்றேன்.
நீங்க சொன்னீங்களே அந்த டாக்டர். அறிவொளி MBBS.MS (Cordialogy) அவன் நல்லவனா இல்லம்மா.
வனா இல்லம்மா. சுத்த சுனா மனா. சாமி இல்ல. சாமிய கும்பிட
றது முட்டாள்தனம். சாமிய வேண்டினா நல்லது கெடைக்கும்ங்
கறது மூட நம்பிக்கைன்னு எல்லாம் சொல்லிக்கிட்டு திரிஞ்சவன்மா. அவன் ஒரு பிராமணத்துவேஷி. அவன் இப்போ இல்லம்மா. அப்டின்னா அவரை ஒங்களுக்கு தெரியுமா? அவர் இப்போ இல்லேங்கறேளே. என்ன ஆனார்? அந்த அறிவொளி உங்க வீட்டுக்கு வந்தப்புறம் தரோவா மாறிட்டான்மா. என்ன சொல்றேள்? அந்த டாக்டர் எங்காத்துக்கு வந்தாரா? எப்போ வந்தார்? இப்பதாம்மா வந்திருக்கான்.
ஆமாம்மா. நான்தாம்மா அந்த அறிவொளி. சுத்தமா மாறிப்
போன அறிவொளி. நான் காலையில் திருச்சீலேர்ந்து கெளம்பி
னது முதல் எக்கச்சக்க தடங்கல். ஏன்….ஏன்…..இவ்ளோ தடங்
கல்னு நெனைச்சேன். இங்க வந்தப்பறம் தான்தெரிஞ்சுது. இங்க ஒரு பிராமண தங்கச்சி எங்கிட்ட வர வழி பண்ணுவார்ங்
கற நம்பிக்கையோட ஆஞ்சனேயர் வாலுக்கு கடைசி பொட்டு வச்சேம்மா. அந்த நம்பிக்கை வீண் போகலைம்மா. என்னோட நெவ்யூவை ஒன் ஸிஸ்டர் ஏன் அந்த டாக்டர் கிட்ட அழைச்சி
ண்டு வரணும். நீயே அவங்க வீட்டுக்குப்போன்னு நீ நம்பிக்கை வச்சிருந்த அந்த ஆஞ்சனேயர் என்னை இங்கே அழைச்சுண்டு
வந்தூட்டார்மா. உன் மகனை சொஸ்தமாக்கறது என்னோட கடமைம்மா. ஆக்கிடுவேன்மா.
Comments
Post a Comment