மோடிக்கெதிராக மிகப்பெரிய சதி நடப்பது புரிந்தது, அதையும் அன்று பதிவிட்டிருக்கிறேன்-
இது ஒரு எச்சரிக்கைப் பதிவு சம்பந்தப்பட்டவர்கள் காதுகளுக்குச் செல்லும்வரை பகிருங்கள் -
சின்ன விஷயம் கூட எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியாமல் மத்திய அரசு பல வருடங்களாக ஒரு தவறைச் செய்து வருகிறது. சத்தமில்லாமல் இந்தியா முழுவதும் மோடிக்கெதிரான மிகப்பெரிய கூட்டம் உருவாகி வருகிறது -
நான் எனது உயிரே போனாலும் மோடி ஒழிக சொல்லமாட்டேன் ஆனால், எனக்கு நடந்த இதே மோசமான அனுபவம் வேறு பலருக்கும் தினமும் நடந்துகொண்டுதான் இருக்கும் அவர்கள் நிச்சயமாக மோடி ஒழிகதான் சொல்லுவார்கள் இது நிச்சசயமாக நமது வாக்குவங்கிவைத்தான் பாதிக்கும், பாதித்திருக்கும்-
முதலில் எனக்கு நடந்ததை இங்கு தெரிவிக்கிறேன். எனது மகனின் கல்லூரி அட்மிஷன் விஷயமாக நான் இன்று சென்னை செல்வதாக இருந்தேன் அது இந்த மோடி அரசின் ஒரு சிறு தவறால் முடியாமல் போனது-
ஆம் மூன்று நாட்களுக்கு வங்கியில் வாங்கிய நகைக்கடன் தொகை இன்னும் கைக்கு வந்து சேரவில்லை-
விளக்கமாகக் கூறுகிறேன், வத்தலக்குண்டு City Union Bank -ல் எனது மனைவியின் ஜன்தன் வங்கிக் கணக்கு உள்ளது. உங்களுக்கெல்லாம் தெரியுமா எனக்குத் தெரியாது ஜன்தன் கணக்குகளுக்கு Tranctation Limit என்பது மாதம் 10000 மட்டுமே அதற்கும் மேல் உங்கள் கணக்கில் பணம் இருந்தாலும் எடுக்க முடியாது, ஏற்கனவே பலமுறை அனுபவப்பட்டு வங்கியில் சண்டையெல்லாம் போட்டிருக்கிறேன், அப்பொழுதெல்லாம் வங்கி ஊழியர்கள் முதல் உயரதிகாரிகள் ஏன் Call Centre - ல் வேலை செய்யும் Dog வரை கூறிய ஒரே பதில் ஏன் மோடி அக்கவுண்ட்ட வெச்சிக்கிட்டுக் கஷ்டப்படறீங்க? சாதா அக்கவுண்ட்டா மாத்திடுங்க என்பதுதான். நான் அவர்களிடமெல்லாம் கடுமையாகச் சண்டையிட்டிருக்கிறேன் எல்லாவற்றையும் ரெக்கார்ட் செய்தும் வைத்திருக்கிறேன். ஒருமுறை அந்த வங்கிக் கணக்கிற்கு வழங்கப்பட்ட ஒரு செக்கை மாற்ற 3 மாதங்கள் அலைந்தேன்-
இந்த அனுபவங்கள் இருந்ததால் அந்த வங்கிப் பக்கமே தலைவைத்துப் படுக்காமல் இருந்தோம், அங்கே நகைக்கடனுக்கு வட்டி குறைவென்றும், தேவையான நேரத்தில் திருப்பிவிடலாம் என்று யாரோ கூறினார்கள் என்று மூன்று நாட்களுக்கு முன்பு அங்கே சென்று மேனேஜரிடம் பலமுறை விசாரித்துதான் நகையை அடமானம் வைத்திருக்கிறார் எனது மனைவி, ஒரு கையெழுத்து மட்டும் போட்டுட்டுப் போங்க மேடம் உங்களோட Axis Bank அக்கவுண்டுக்கு பணம் மாறிடும்னு சொல்லியிருக்காங்க, இவங்களும் பழனி வந்துட்டாங்க , ஆனா பணம் மாறவேயில்ல Call பண்ணிக் கேட்டா மேடம் உங்க கையெத்து மாறியிருக்கு அதனால நீங்க திரும்பவும் வந்து கையெழுத்துப்போடனும்னு சொன்னாங்கன்னு நேத்து மறுபடியும் போய் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டு வந்துட்டாங்க எனக்கும் NEFT ஆகிட்டிருக்குன்னு மெஸேஜ் வந்திடிச்சி அதனால அவங்களக் கிளம்பி வரச்சொல்லிட்டேன், ஆனா Axis Bank ல இருந்து எந்த மெஸேஜும் வரல சிலசமயம் NEFT லேட்டாதான் ஆகும்ன்றதால அப்பப்போ Balance மட்டும் செக் பண்ணிக்கிட்டேயிருந்தேன் வரவேயில்லை-
இன்னைக்கிக் காலைல எழுந்திரிச்சி செக் பண்ணா பணம் Axis Bank அக்கவுண்ட்கு வரல ஆனா City Union Bank அக்கவுண்ட்லயும் இல்ல, திரும்பவும் வத்தலக்குண்டு போயிருக்காங்க Result மதியம்தான் தெரியும் -
52 கோடி ஜன்தன் அக்கவுண்ட் இருப்பதாக நாம்தான் பீற்றிக்கொள்கிறோம் ஆனால் நாடு முழுவதும் வங்கிகளால் நமக்கெதிராகப் பிரச்சாரம் செய்ய இவை உதவுகின்றன என்ற அறிவு துளிகூட மத்திய அரசுக்கு இல்லை, நான் ஏற்கனவே நிதி அமைச்சருக்கு இதை எழுதியிருக்கிறேன். பதிவும் இட்டிருக்கிறேன்-
அதாவது EWS- இடஒதுக்கீட்டிற்கு வருடம் 8- லட்சத்திற்குக் கீழ் சம்பளம் பெருபவர்களை வறுமைக்கோட்டிற்குக் கீழ் என்று வரையறுக்கும் மத்திய அரசு எப்படி ஜன்தன் கணக்குகளுக்கு மட்டும் மாதம் 10,000 என்று நிர்ணயம் செய்யலாம், இதனால் தினமும் எத்தனை கோடி மக்கள் நமக்கெதிராக ஆத்திரத்துடன் இருப்பார்கள் சிந்தியுங்கள் -
இதே போன்று ஒருமுறை எனது மாமியாரின் ஜன்தன் கணக்கில் பிரச்சினை வந்தபொழுது SBI-ன் E-சேவை மையத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் ஏராளமான ATM கார்டுகளை எடுத்து டேபிளில் போட்டு பாருங்க இத்தனை பேரு மோடி அக்கவுண்ட் வேண்டாம்னு தூக்கிப்போட்டுட்டு போனவங்க என்று கூறும்பொழுதுதான் மோடிக்கெதிராக மிகப்பெரிய சதி நடப்பது புரிந்தது, அதையும் அன்று பதிவிட்டிருக்கிறேன்-
ஏனென்றால் பொதுவாக அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் எல்லாம் கம்யூனிஸ தொழிற்ச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மோடி அரசு இதைச் சரிசெய்யாவிட்டால் அடுத்த தேர்தலுக்குள் கோடிக்கணக்கான மக்களை எதிராகத் திருப்பிவிடுவார்கள்-
ஜன்தன் சம்பந்தமான இன்னும் சில விஷயங்களை அடுத்த பதிவில் தருகிறேன் -
தேசப்பணியில் என்றும்-
ந.முத்துராமலிங்கம் -
Comments
Post a Comment