பாகிஸ்தானின் பலுசிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கியதில் 102 பாகிஸ்தானிய ராணுவத்தினர் கொல்லபட்டுள்ளனர், பாகிஸ்தான் ராணுவம் கதி கலங்கி நிற்கின்றது முன்னதாக அங்கு பல வன்முறைகள் நடந்தன 22 பேர் பலியான நிலையில் ராணுவம் சென்றபோது இந்த தாக்குதல் நடந்திருக்கின்றது

 


பாகிஸ்தானின் பலுசிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கியதில் 102 பாகிஸ்தானிய ராணுவத்தினர் கொல்லபட்டுள்ளனர், பாகிஸ்தான் ராணுவம் கதி கலங்கி நிற்கின்றது


முன்னதாக அங்கு பல வன்முறைகள் நடந்தன 22 பேர் பலியான நிலையில் ராணுவம் சென்றபோது இந்த தாக்குதல் நடந்திருக்கின்றது


ராணுவத்தை உள்ளே இழுத்து அடித்த அடி இது, பாகிஸ்தான் ராணுவம் தன் வினை தன்னை சுடும் என்பது போல் திகைத்து நிற்கின்றது


பாகிஸ்தானில் குண்டுவெடிப்பும் சாவும் பழனிச்சாமியின் அரசியல் அறிக்கை போல அல்லது ராகுலின் உளறல் போல இயல்பானவை என்றாலும் இம்முறை அடி அதிகம்


பாகிஸ்தான் வேண்டும் என மொத்த இஸ்லாமிய மக்களும் கோரவில்லை அன்றைய இந்தியாவின் பலுசிஸ்தான் போன்ற பிரதேசங்கள் பிரிவினையினை எதிர்த்தன‌


கான் அப்ல்துல் கபார்கான் போன்றவர்கள் அங்கிருந்து கதறினார்கள், இந்தியாவினை விட்டு போகமாட்டோம் பாகிஸ்தான் அவசியமில்லை என கெஞ்சினார்கள்


இரு பாகிஸ்தான் இருப்பது போல இரு இந்தியா இருக்கட்டும், வடக்கில் ஒரு இந்தியா பலுஸிஸ்தானில் இருக்கட்டும் என அழுதார்கள்


"காந்தி, இந்த ஓநாய்களிடம் நாங்கள் வாழமுடியாது, எங்களை கைவிடாதீர்கள்" என எல்லை காந்தி கபார்கான் கதறியபோது காந்தி அமைதியாக ஆட்டுப்பால் குடித்துகொண்டிருந்தார்


தலையினை குல்லாவால் மூடும் நேரு அப்போது காதையும் மூடிகொண்டு எட்வினாவிடம் ஆங்கிலம் கற்று கொண்டிருந்தார்


அவர்கள் அப்போதே பிரிவினையினை விரும்பினார்கள், ஆனால் அன்றைய பாகிஸ்தானும் அப்பக்கம் ஆப்கனும் அவர்களை நெருக்கின‌


சோவியத்தின் தலையீடு ஆப்கனிலும் , அமெரிக்க தலையீடு பாகிஸ்தானிலும் வந்த காலங்களில் இவர்கள் குரல் அடங்கி போனது


ஆனாலும் அவ்வப்போது தாக்குதல் உண்டு, அடங்கமாட்டோம் எனும் எதிர்குரல் உண்டு, பேரணிகள் உள்ளிட்ட எல்லாமும் உண்டு


எனினும் நிலமை கட்டுக்குள் இருந்தது


மோடி வந்தபின் எல்லா சமநிலையும் மாறின, பாகிஸ்தான் அதுவரை அமெரிக்காவின் செல்லபிள்ளையாக இருந்தது,மோடி இந்தியாவின் கொள்கைகளை மாற்றியபின் "இனி இவர்கள் எதற்கு?" என பாகிஸ்தானை கீழே போட்டது அமெரிக்கா


அவர்கள் 1960ல் விரும்பியது இதைத்தான், நேரு கெடுத்ததை மோடி 21014ல் சரி செய்தார்


இந்த பலுசிஸ்தான் பிரதேசத்தை அன்மித்து சீன சாலை செல்வதாலும் இன்னும் இந்தியாவில் பாகிஸ்தான் பல குழப்பங்களை செய்வதால் பதிலடி கொடுக்கவும் பலுசிஸ்தானை மீண்டும் தொட்டது இந்தியா


இந்தியாவோடு சில நாடுகளும் இணைந்தன, பாகிஸ்தான் பலவீனமான நிலையில் இப்போது பலுசிஸ்தான் பிரிவினை தீவிரமாகின்றது


இந்தியாவின் மத்திய அரசில் காங்கிரஸ் இருந்தவரை  இந்தியாவினை பாகிஸ்தான் படாதபாடுபடுத்திற்று ஆனால் பாகிஸ்தானுக்குள் குழப்பம் விளைவித்து பதிலுக்கு பதில் செய்ய குறைந்தபட்சம் அவலத்தை திருப்பி கொடுக்க காங்கிரஸ் சிந்தித்ததே இல்லை


மாறாக இந்தியாவின் ரூபாய் அச்சடிக்கும் எந்திரத்தை கொடுத்து மகிழ்ந்தது


மோடி அரசுதான் இந்தியாவுக்குள் நீங்கள் வந்தால் உங்கள் நாட்டுக்குள் நாங்கள் வருவோம் என அசரடித்தது


சில வாரங்களாக காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அட்டகாசம் செய்து இந்திய படையினர் சிலர் உயிரிழந்த நிலையில் பலுசிஸ்தானில் இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்கின்றன‌


இங்கே பலுசிஸ்தான் வாசிகளுக்கு உதவும் இன்னொரு சக்தி யார் தெரியுமா?


நம்பமாட்டீர்கள் அவர்கள் தாலிபான்கள்


என்னதான் அதிதீவிர இஸ்லாமிய இயக்கம் என்றாலும் இந்தியாவின் உதவி அவர்களுக்கு அவசியம் அதே நேரம் பாகிஸ்தானின் துரோகமும் அவர்களுக்கு கடும் ஆத்திரம்


இந்தியா இந்துக்கள் நாடு ஆனால் சொந்த இஸ்லாம் என சொல்லி பாகிஸ்தான் தங்களை விரட்டி அடித்த கொடுமையினை அவர்கள் வன்மமாக கொண்டிருக்கின்றார்கள்


இந்தியா, தாலிபான்கள் இன்னும் சில சக்திகள் இணைந்து பாகிஸ்தானை பந்தாட தொடங்கியிருக்கின்றன, இது சீன பாகிஸ்தானிய கூட்டணிக்கு பெரும் அடி


இலங்கை மாலத்தீவு வங்கதேசம் என தன் பிடியினை இறுக்கும் இந்தியா இப்போது பாகிஸ்தானின் கழுத்தை இறுக்கி கொண்டிருக்கின்றது


எதிர்காலத்தில் இந்தியா உலகின் மூன்றாம் பொருளாதார சக்தியாக மலரும்போது பாகிஸ்தான் துண்டு துண்டாக உடைந்திருக்கும், இதோ உடைய தொடங்கிவிட்டது🤨🤔🤷‍♂️

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது