வக்ஃப் சட்டம் என்ன? வக்ஃப் என்பது ஒரு ட்ரஸ்ட் என்று வைத்துக் கொள்வோம். 1913ல் முதலில் வந்தபோது, மற்ற ஏழை இஸ்லாமியர்களின் வளர்ச்சிக்காக, வாரிசுகளற்ற அல்லது விரும்பும் இஸ்லாமியர்கள் தங்கள் சொத்துக்களை, கொடுத்து, அதன் மூலம் வரும் வருவாயில் இருந்து, இஸ்லாமிய சமுதாயத்தின் வளர்ச்சிக்காக உதவ உருவாக்கப் பட்டது.
#WaqfAct
வக்ஃப் சட்டம் திருத்தப்படுவது குறித்து, இஸ்லாமியர்கள் இடையில் தவறான கருத்துகளை பரப்பிக் கொண்டு உள்ளனர். அதிலும் முக்கியமாக வக்ஃப் போர்டு சொத்துகளை, அரசு எடுத்து கொள்ளப் போவதாக பரப்பிக் கொண்டு உள்ளனர்.
இந்த பொய் செய்தியின் பிண்ணனியில், பல பண, அரசியல் அதிகாரம் படைத்த ஒரு இஸ்லாமிய கும்பல், சாதாரண ஏழை இஸ்லாமியர்கள் பெயரில், அவர்களையும் இந்த நாட்டையும் ஏமாற்றிக் கொண்டுள்ள தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன.
தயவு செய்து இஸ்லாமியர்கள் அனைவரும் இதனை படிக்கும் அளவுக்கு பரப்புங்கள். உங்கள் பதிவாக கூட பரப்புங்கள். நன்றி!
முதலில் வக்ஃப் சட்டம் என்ன?
வக்ஃப் என்பது ஒரு ட்ரஸ்ட் என்று வைத்துக் கொள்வோம்.
1913ல் முதலில் வந்தபோது, மற்ற ஏழை இஸ்லாமியர்களின் வளர்ச்சிக்காக, வாரிசுகளற்ற அல்லது விரும்பும் இஸ்லாமியர்கள் தங்கள் சொத்துக்களை, கொடுத்து, அதன் மூலம் வரும் வருவாயில் இருந்து, இஸ்லாமிய சமுதாயத்தின் வளர்ச்சிக்காக உதவ உருவாக்கப் பட்டது.
1955ல் பாகிஸ்தான் பிரிவினையின் போது, பாகிஸ்தானில் இருந்து வந்த இந்துக்களின் சொத்துகள், பாகிஸ்தான் அரசு எடுத்துக் கொண்டன. ஆனால் இந்தியா இவற்றை வக்ஃப் போர்டுக்கு கொடுக்க சட்டம் இயற்றினர்.
இவை பின்னர் படிப்படியாக 1985, 1993, 2013ல் மாற்றம் செய்யப்பட்டு, இந்தியாவில் எந்த நிலத்தையும் வக்ஃப் போர்ட் தன்னுடையதாக அறிவித்தால், அது அரசு நிலமோ, இந்துக்கள் நிலமோ, அவை வக்ஃபுடையதாகி விடும், அந்த நில உரிமையாளருக்கு இதனை தெரியப்படுத்த கூட அவசியமில்லை, இதனை எதிர்த்து எந்த நீதிமன்றத்திற்கும் போக முடியாது, வக்ஃப் ட்ரிப்யுனல் எனும் இஸ்லாமிய கோர்ட்டே முடிவு செய்யும் என மாற்றப்பட்டன.
சரி, அப்படி இதுவரை நடந்துள்ளதா?
ஆம் 1985 முதல் இன்று வரை பல வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன, இந்த சட்டத்தை எதிர்த்து பலரும், தங்கள் சொத்துகளை காப்பாற்ற சிலரும், தொடர்ந்து போராடிக் கொண்டு உள்ளனர்.
ஜின்டால் நிறுவன வழக்கு,
தமிழக்த்தில் 1500 வருட கோவிலுடன் கிராமம் முழுவதும் எனும் வழக்கு,
சூரத் முனிசிபாலிடி கட்டிட வழக்கு
கர்நாடக நட்சத்திர ஓட்டல் வழக்கு
என சுமார் 2000 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
2013ல் காங்கிரஸ் அரசு, குதுப்மினார், இந்தியா கேட் உட்பட 123 சொத்துகளை வக்ஃப் என அறிவித்துவிட்டு சென்றனர். இதனை 2014 முதல் மோடி அரசு நிராகரித்து வழக்கு நடந்து கொண்டு உள்ளன.
நீதிமன்றத்தின் நிலை என்ன?
பல்வேறு நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் இந்த சட்டமே தவறானது, உடனடியாக மாற்ற வேண்டுமென அரசுக்கு கூறியுள்ளன.
இதை தவிர வேறு என்ன பிரச்சினைகள்?
1) 9.6 லட்சம் கோடி சொத்துகளில் இருந்து ரூ200 கோடி மட்டுமே வருவாய் வருவதாக வக்ஃப் போர்டு, அவற்றை இஸ்லாமிய நலனுக்காக செலவிடுவதாக அரசிடம் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் சந்தை கணக்குப்படி பல ஆயிரம் கோடிகள் வேறு நபர்கள் கொள்ளை அடிப்பதும், இவை தீவிரவாதம், வளர்க்க, தனி நபர்கள் கொழிக்க மட்டுமே உபயோகப் படுகின்றன.
2) வக்ஃப் போர்டுக்கு சொத்துகள் என்று சொல்லப்பட்டு, பதிவுகள் தனி நபர்கள் (இஸ்லாமிய அரசியல்வாதிகள், தாதாக்கள்) தங்கள் பெயரில் ஏமாற்றி பதிவு செய்துள்ளனர்.
3) ஷரியா சட்டப்படி பெண்களுக்கு சொத்தில் உரிமையில்லை, அப்படி உள்ள குடும்ப சொத்துகள், வக்ஃப் பெயரில் தனி நபர்கள் உரிமையாளர்கள் ஆகியுள்ளனர்.
4) வக்ஃப் பெயரில் உள்ள சொத்துகளின் வாடகைகள், தனி நபர்கள் வாங்கி, அனுபவிக்கின்றனர். ஏழை இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதுவும் கிடைப்பதில்லை.
சரி, இதுவரை பாஜக அரசு தூங்கிக் கொண்டிருந்ததா? மோடி விரல் சூப்பி வேடிக்கை பார்த்தாரா?
நமக்கு இருக்கும் அறிவுக்கு இவ்வளவுதான் கேட்க முடியும். ஆனால் மோடியின் நடவடிக்கையை புரிந்து கொள்ளும் மூளை நமக்கு இல்லை.
1) 2015ல் காங்கிரஸ் கொடுத்த 123 சொத்துகளை உடனடியாக மீட்டார்.
2) Enemy Property act 2106 மூலம் பாகிஸ்தான் சென்ற இஸ்லாமியர்களின் சொத்தை, இந்திய அரசு எடுத்துக் கொள்ள சட்டத்தை திருத்தி அமைத்தார்.
3) 2016 முதல் 2020 வரை சுமார் 176 கோடி செலவிட்டு வக்ஃப் சொத்துக்களை டிஜிடல் பதிவு செய்ய வைத்துள்ளார்.
4) இதற்கு பிறகும் மபி, உபி, மகராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநில அரசுகள் மூலமும் நிதி வழங்கி, பெரும்பாலான வக்ஃப் சொத்துகள், தற்போது டிஜிடல் ஆகிவிட்டன.
5) பல நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் போன்றோரின் தீர்ப்புகள் ஆராயப்பட்டன. கடந்த 4 வருடமாக வக்ஃப் சட்டத்தில் என்னென்ன திருத்தங்கள் செய்யப் படவேண்டும் என திட்டமிடப்பட்டது.
6) 2022 முதல் பல்வேறு, நீதிபதிகள், அரசு அதிகாரிகள், வக்ஃப் போர்ட் (ஷியா, சுன்னி, தேவபந்து மற்றும் மாநில) மெம்பர்களுடன், மற்றும் சிவில் சொசைடி, இந்து அமைப்புகள், சில முக்கிய பொதுமக்கள் மற்றும் எதிர்கட்சிகளுடன், இந்த திருத்தங்கள் பற்றி விவாதிக்கப் பட்டன.
7) இவர்கள் அனைவரின் ஆலோசனைப்படி, 40 முக்கிய திருத்தங்களுடன் தற்போது வக்ஃப் சட்ட திருத்தம் 2024 தயார் நிலையில், கேபினெட் கமிட்டி மூலம் அங்கீகரிக்கபட்டு, விரைவில் தாக்கல் செய்யப் படவுள்ளது.
இதனை இஸ்லாமியர்கள் எதிர்ப்பார்களா?
போராட்டம் நடக்குமா?
மூளையுள்ள, எந்த இஸ்லாமியரும் எதிர்க்கப் போவதில்லை. ஆட்டு மந்தைகள் போல, மதவெறி பிடித்தவர்களை பற்றி, சொல்லவே வேண்டியதில்லை. எதற்கும் தயார் நிலையில் மத்திய அரசு உள்ளதாகவே தெரிகிறது.
அந்த 40 மாற்றங்கள் தான் என்ன?
உங்களை போலவே நாங்களும் ஆவலுடன் இறுதி சட்ட திருத்தம் என்ன என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
ஜெய் ஹிந்த்!
https://pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1780947
https://prsindia.org/billtrack/the-enemy-property-amendment-and-validation-bill-2016
Comments
Post a Comment