வக்ஃப் வாரிய சட்டத்தின் மூலம் இந்தியர்களை ஏமாற்றியது காங்கிரஸ்- மோடி 3•0 மிக வலிமையாக இருக்கும் என்பதற்கான அடையாளம் தான் வக்ஃப் வாரிய சட்டத்தில் 40 மாற்றங்களை கொண்டு வந்து புதிய வக்ஃப் வாரிய சட்ட ம் 2024 நிறைவேற இருக்கிறது.

 


வக்ஃப் வாரிய சட்டத்தின் மூலம்

இந்தியர்களை ஏமாற்றியது காங்கிரஸ்-


மோடி 3•0 மிக வலிமையாக இருக்கும் என்பதற்கான அடையாளம் தான் வக்ஃப் வாரிய சட்டத்தில் 40 மாற்றங்களை கொண்டு வந்து புதிய வக்ஃப் வாரிய சட்ட ம் 2024 நிறைவேற இருக்கிறது.


கடந்த ஆட்சியிலேயே இதற்கான முயற்சிகள் ஆரம்பித்து விட்டது. இந்த ஆட்சியில் நிறைவேறி விடும்.

.

இந்த பாராளுமன்ற கூட்டத்

தொடரில்  வக்ஃப் வாரியங்களுக்கு ஆப்பு வைக்கிற அளவிற்கு

சட்டம் கொண்டு வர இருக்கிறார்கள். நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சிகளில் வக்ஃப் வாரியங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை வைத்து இப்பொழுது விவாதங்கள் கிளம்பி விட்டது.


காங்கிரஸ் திருட்டு கூட்டம். முஸ்லிம்களின்  ஒட்டுக்களுக்காக இந்தியாவை எந்த அளவிற்கு வக்ஃப் வாரியங்களுக்கு விற்று இருக்கிறார்கள் என்பதை வக்ஃப்

போர்டு  வாரிய சட்டத்தின் மூலம் ஒரு சராசரி இந்தியன் புரிந்து

கொள்ளும் அளவிற்கு வக்ஃப்

போர்டு வாரிய திருத்த சட்டத்தை கொண்டு வர இருக்கிறார்கள்.


இந்தியாவின் வக்ஃப் போர்டு வாரிய மேலாண்மை அமைப்பின் தரவுகளின்படி, தற்போது  மொத்தம் சுமார் 9 லட்சம் சொத்துக்களுடன் வக்ப் வாரியங்கள் 8 லட்சத்திற்கும் அதிகமான  ஏக்கர் நிலங்களை வைத்து இருக்கிறது.


இந்திய ராணுவம் மற்றும் ரயில்வேக்கு அடுத்தபடியாக இந்தி யாவில் பெரும்பாலான நிலங்கள் வக்ஃப் வாரியத்திடம் தான் உள்ளது. அதாவது வக்ஃப் வாரியம் தான் இந்தியாவின் 3 வது

நில உரிமையாளராக இருக்கிறது.


இந்த வக்ப் வாரிய சட்டம் எதற்காக உருவானது என்று பார்ப்போம். 


இந்தியர்களை எந்த அளவிற்கு காங்கிரஸ் திருட்டு கூட்டம் ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதை நினைத்தால் கேவலமாக இருக்கிறது


இந்தியா பாகிஸ்தான் பிரிவுக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து

உயிர் பிழைக்க இந்தியாவுக்கு இந்துக்கள் வந்து விட்டார்கள். பாகிஸ்தானில் உள்ள அவர்களது சொத்துக்கள் முஸ்லிம்களாலும், பாகிஸ்தான் அரசாங்கத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டன.


ஆனால் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற முஸ்லிம்களின் நிலத்தை இந்திய அரசு முஸ்லிம் மக்களுக்கு கொடுக்க நினைத்து அதற்காக உருவாக்கப்பட்டது தான் வக்பு வாரியம் என்கிற அமைப்பு.


இந்த வக்பு வாரியங்களுக்காக  1954 ம் ஆண்டு வக்ப் வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. 


அந்த சட்டத்தின்படி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற முஸ்லிம்களின் சொத்துகளை வக்ஃப் வாரியத்திற்கு கொடுத்தார்கள்


வக்ப் வாரிய சட்டம் என்பது முதன் முதலில் 1954 ல் பாராளுமன்றத்தால் நி்றை வேற்றப்பட்டது. பின்னர் அது ரத்து செய்யப்பட்டு 1995 ல் புதி்ய வக்ப் வாரிய சட்டம் நிறைவேற்றப்பட்டது, 


1995 ல் காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேறிய இந்த புதிய வக்ஃப் சட்டம் தான் மிக மோசமானது.


1995 ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் நடைமுறைக்கு வந்த வக்ஃப் வாரிய சட்டம்  நாடு முழுவதும் உள்ள வக்ஃப் வாரியத்திற்கு எந்தவொரு சொத்தின் மீதும் உரிமை கோர உரிமையை வழங்குகிறது, 


மேலும் பாதிக்கப் பட்ட தரப்பினர் இதை எதிர்த்து நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியாது


இந்த 1995 வக்ப் வாரிய சட்டத்திற்கு பிறகு தான் வக்ப் வாரியத்தின் சொத்துக்கள் அதிகரித்தன 


2014 ல், மக்களவைத் தேர்தல் தொடங்குவதற்கு முன்பு மார்ச் மாதம் இந்த சட்டத்தைப்பயன்

படுத்தி டெல்லியில் உள்ள 123 பிரதான சொத்துக்களை டெல்லி வக்ஃப் வாரியத்திற்கு காங்கிரஸ் ஆட்சி அன்பளிப்பாக வழங்கியது


இந்த 1995 வக்ஃப் சட்டம்  வக்ஃப் வாரியங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளது. 


2013 ல் இந்தச் சட்டம் மறுபடியும் திரத்தப்பட்டு யாருடைய சொத்தை யும் அபகரிக்க, வக்ப் வாரியங்களுக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கி இருக்கிறது. இதை எந்த நீதிமன்றத்திலும் கேள்வி கேட்க முடியாது.


இந்தக் கறுப்புச் சட்டத்தால் இது வரை நாட்டில் இந்துக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. 


சமீபத்தில் தமிழ்நாடு வக்பு வாரியம் 1500 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் உட்பட 6 தமிழ்நாட்டு கிராமங்களை வக்ஃப் சொத்தாக அறிவித்துள்ளது.


2009ம் ஆண்டு வக்பு வாரியத்தின் சொத்துகள் நான்கு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பரவியது. இது தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதேசமயம் நாட்டில் நிலம் முன்பு இருந்ததை போலவே உள்ளது. அப்படி யென்றால், வக்பு வாரியத்தின் நிலம் எப்படி அதிகரிக்கிறது?


வக்பு வாரியம் நாட்டில் எங்கெல்லாம் மயானத்தின் எல்லைச் சுவரை நிர்ணயம் செய்தாலும், அதைச்சுற்றியுள்ள நிலத்தை அது தனது சொத்தாகக் கருதுகிறது.


சட்டவிரோதமாக கட்டப்பட்ட  வழிபாட்டுத் தலங்கள் படிப்படியாக வக்ப் வாரியத்தால் அவர்களது சொத்தாக அறிவிக்கப்படுகிறது. எளிமையான மொழியில், மக்கள் இதை ஆக்கிரமிப்பு என்று அழைக்கிறார்கள், 


இந்த ஆக் கிரமிப்புக்கு வக்ப் வாரியங்களுக்கு காங்கிரஸ் திருட்டு கூட்டம் ஒட்டு அரசியலுக்காக இந்த ஆக்கிரமிப்பு உரிமையை  வழங்கி இருக்கிறது.


வக்ஃப் சட்டம், 1995 இன் பிரிவு 3, ல் ஒரு நிலம் ஒரு முஸ்லிம்க்கு சொந்தமானது என்று வக்ப் நினைத்தால், அது வக்ப்க்கு சொந்தமானது என்று கூறுகிறது. 


உங்கள் சொத்து உங்களுடையது அல்ல, வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானது என்று வக்ஃப் ஏற்றுக்கொண்டால், நீங்கள் நீதிமன்றத்திற்கு கூட செல்ல

முடியாது. இதற்கு வக்ப் வாரிய த்திற்கு எந்த ஆதாரமும் தேவை யில்லை என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.நீங்கள் வக்ஃப் தீர்ப்பாயத்தை மட்டுமே அணுக

முடியும்.

 

வக்ஃப் சட்டத்தின் 85வது பிரிவின்படி, வக்ஃப் வாரிய தீர்ப்பாயத்தில் இது உங்கள் சொந்த நிலம் என்று திருப்திப்படுத்த முடியாவிட்டால், அந்த நிலத்தை காலி செய்ய உத்தரவிடப்படும் என்று கூறுகிறது. தீர்ப்பாயத்தின் முடிவே இறுதியானது.


வக்ஃப் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எந்த நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கூட மாற்ற முடியாது.


வக்ஃப் சட்டத்தின் பிரிவு 40, வக்பு வாரியம் ஒரு நபரின் நிலத்தின் மீது உரிமை கோரும் போது, ​​நிலத்தின் மீதான உரிமையை நிரூபிப்பது வக்ஃப் வாரியத்தின் வேலை அல்ல.


ஆனால் நிலத்தின் உண்மையான உரிமையாளர் அதை நிரூபிக்க வேண்டும். இதனை வக்ஃப் வாரியம் ஏற்று கொண்டால் மட் டுமே அந்த  நிலத்தின் உரிமை நிலத்த்தின் உரிமையாளருக்கு  கிடைக்கும்.


அதாவது, வக்ஃப் வாரியம் எந்த நிலத்துக்கும் உரிமை கோரினால், அந்த நிலத்தின் உரிமையாளராக வக்ப் வாரியம் மாறி விட்டது என்பதற்கு அதிகாரம் அளிக்கும் அளவிற்கு காங்கிரஸ் திருட்டு கூட்டம் 1995 மற்றும் 2013 ஆண்டுகளில் வக்ஃப் வாரிய திருத்த சட்டங்களை கொண்டு வந்து இருக்கிறது.


இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில் வக்ஃப் சட்டம் போன்ற ஒரு மதச் சட்டம் எவ்வாறு பொருந்தும்? இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு ஏன் அத்தகைய சட்டம் இல்லை ? முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன்? இதுவா மதசார்பின்மை நாட்டி ன் அடையாளம்?


இது போன்ற சட்டங்கள் இந்தியாவில் மட்டும் தான் உள்ளது, எந்த ஒரு முஸ்லீம் நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல் லை.


துருக்கி, லிபியா, எகிபது, சூடான், லெபனான், சிரியா, ஜோர்டான் மற்றும் ஈராக் போன் ற முஸ்லிம் நாடுகளில் வக்ஃப் வாரியமோ, வக்ஃப் சட்டமோ இல்லை. 


காங்கிரஸ் ஆட்சிகளில் உருவாக்கப்பட்ட  வக்ப் சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது என்பதால், அதை மத்திய அரசு நீக்கி புதிய  சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்பது தான் இந்தியர்களின் ஆசை.


அதை மோடி 3•0 ஆட்சியில் நடை

பெறும் என்கிற நம்பிக்கை இந் தியர்களுக்கு இருக்கிறது.


Vijayakumar Arunagiri

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்