ஆரணியில் உப்பு சத்தியாகிரகத்தில் மகாத்மா காந்தியுடன் கரம்கோர்த்த தியாகி! யாரிந்த #சுப்பிரமணிய_சாஸ்திரி..!!!! ஆரணி: 78 ஆவது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு கொடுமைகளை அனுபவித்து, ஆங்கிலேயர்கள் வெளியேற காரணமாக இருந்த நிறைய தியாகிகள் மறக்கப்பட்டிக்கப்பட்டு, வெளியுலகிற்கே தெரியாத வகையில் வாழ்ந்து மறைந்தனர். சிலர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆரணியில் உப்பு சத்தியாகிரகத்தில் மகாத்மா காந்தியுடன் கரம்கோர்த்த தியாகி! யாரிந்த #சுப்பிரமணிய_சாஸ்திரி..!!!!
ஆரணி: 78 ஆவது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு கொடுமைகளை அனுபவித்து, ஆங்கிலேயர்கள் வெளியேற காரணமாக இருந்த நிறைய தியாகிகள் மறக்கப்பட்டிக்கப்பட்டு, வெளியுலகிற்கே தெரியாத வகையில் வாழ்ந்து மறைந்தனர். சிலர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவர்களில் முக்கியமானவர் ஆரணியை சேர்ந்த தியாகி சுப்பிரமணிய சாஸ்திரி. இவரின் நினைவுகளை வெளியே கொண்டு வருவதில் நமது ஒன் இந்தியா தளம் பெருமை கொள்கிறது.
சுதந்திர வேட்கையில் எத்தனையோ பேர் ஆங்கிலேயர்களின் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் சிலர் உலகளவில் போற்றப்பட்டுள்ளனர். ஆனாலும் சிலர் வரலாறுகளில் மறைக்கப்பட்டுவிட்டனர்.
இவர்களும் எந்த பலனையும் எதிர்பார்க்காமல் காலமாகிவிட்டனர். இன்னும் சிலர் 100 வயதிலும் ஆங்கிலேயர்களிடம் காட்டிய அதே விரைப்புடன் வாழ்ந்து வருகிறார்கள். சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆரணியை விட்டுவிட்ட முடியாது. அங்கு பிறந்தவர்தான் சுப்பிரமணிய சாஸ்திரி.
இவர் ஆரணியில் 1879 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் மங்களம் விஸ்வநாத சாஸ்திரி மற்றும் வெங்கம்மா. இதில் வெங்கம்மா அடையபுலம் அப்பய்ய தீட்சிதரின் குடும்பத்தை சேர்ந்தவர். சுப்பிரமணிய சாஸ்திரி சட்டம் படித்திரு்தார். அவர் தனது வழக்கறிஞர் தொழில் மூலம் நேர்மையானவராக திகழ்ந்து பணத்தையும் புகழையும் சம்பாதித்திருந்தார்.
இவர் 1904ஆம் ஆண்டு வட ஆற்காடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்தார். அது போல் இவர் 1912 ஆம் ஆண்டு மெட்ராஸ் காங்கிரஸ் கமிட்டியின் 6ஆவது அரசியல் மாநாட்டை நடத்தி வைத்தார். இந்த மாநாட்டிற்கு பிபின் சந்திரபால் தலைமையேற்றார். 1919ஆம் ஆண்டு காந்தியடிகள் சத்தியாகிரகத்தை தொடங்கிய போது சுப்பிரமணிய சாஸ்திரியும் அதில் கலந்து கொண்டார்.
அது போல் 1920 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் அறிவித்த போது, சாஸ்திரியும் நீதிமன்றத்தை புறக்கணிக்க வேண்டி தனது வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டார். மதராஸ் மாகாணமாக இருந்த போது ஒரு காங்கிரஸ் கமிட்டி உருவானது, அதன் முதல் தலைவராக சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டார்.
அது போல் 1921 ஆம் ஆண்டு ராஜாஜியுடன் வேலூரில் பொது கூட்டத்தில் கலந்து கொண்ட போது சாஸ்திர கைது செய்யப்பட்டார். இதையடுத்து ராஜாஜியும் சுப்பிரமணிய சாஸ்திரியும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சுப்பிரமணிய சாஸ்திரி வேலூரில் ஒரு பள்ளியை தொடங்கினார். அது இன்றும் செயல்பட்டு வருகிறது.
ஆரணியில் சுப்பிரமணிய சாஸ்திரியாரின் நினைவாக ஒரு உயர்நிலை, மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. அதன் பெயர் சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியாகும். இந்த பள்ளியான 1949 இல் டவுன் ஹைஸ்கூல் என்றுதான் அழைத்து வந்தார்கள். 1959 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த காமராஜர்தான், அந்த பள்ளிக்கு சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளி என பெயர் வைத்தார்.
இந்த பள்ளி இன்றளவும் அரசு உதவி பெறும் பள்ளியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆரணியில் இரு பாலருக்கான பள்ளி என்றால் அது இதுதான். இந்த பள்ளியில் படித்தவர்தான் ஏசிஎஸ் கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர் ஏ.சி.சண்முகம் ஆவார். அவரை போல் இந்த பள்ளியில் படித்த பலர் இன்று மருத்துவர்களாகவும், என்ஜினியர்களாகவும் வழக்கறிஞர்களாகவும், சாப்ட்வேர் என்ஜினியர்களாகவும் வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பணிபுரிந்து வருகிறார்கள். அது போல் சென்னையில் முகப்பேரிலும் ஆரணி தியாகி சுப்பிரமணிய சாஸ்திரி என்று தெருவுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படி காந்தியடிகளுடன் உப்பு சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட போராட்டங்களிலும் ராஜாஜியுடன் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டும் தான் விரும்பி படித்த வழக்கறிஞர் தொழிலையே விட்டுவிட்டு இந்திய சுதந்திரத்திற்காக தனது ஆயுளில் பெரும்பாலான பகுதியை சிறைகளில் கழித்தவர்களில் இந்த தியாகியும் ஒருவராவார். இவருக்கு ஆரணியில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
Comments
Post a Comment