பாலஸ்தீன ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியே என்பவரை எப்படி இஸ்ரேல் ஈரானுக்குள்ளே போட்டு தள்ளியது எனும் தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன‌

 


பாலஸ்தீன ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியே என்பவரை எப்படி இஸ்ரேல் ஈரானுக்குள்ளே போட்டு தள்ளியது எனும் தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன‌


ஈரானை மிகுந்த மன உளைச்சலுக்குள்ளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொருவரும் மரண பயத்தில் இருக்கும்படியும் அது அடித்து காயபோட்டிருக்கின்றது, ஈரான் குழம்பி நிற்கின்றது


ஈரான் இஸ்ரேலுக்குள் தாக்க அதை சுற்றி ஏகபட்ட தீவிரவாத குழுக்களை உருவாக்கியபோதே அதாவது சுமார் 30 ஆண்டுகள் இந்த முயற்சியில் இருந்தபோதே மொசாட் ரகசியமாக ஈரானுக்குள் ஊடுருவிவிட்டது


ஈரான் இதை கோட்டைவிட்டுவிட்டு தன் வீட்டுக்குள் இஸ்ரேல் புகுந்தது தெரியாமல் அங்கே பெரும் மிரட்டலையும் தொல்லைகளையும் செய்து தன்னை பெரியண்ணனாக காட்டிகொண்டது


இஸ்ரேல் தான் ஊடுருவிய காட்சிகளை ஈரானிய அணுவிஞ்ஞானிகளை ஈரானுக்குள்ளே போட்டு தள்ளி காட்டியது,கடும் காவலும் சுமார் 15 அடி தடிமனும் கொண்டகதவால் மூடபட்ட ஈரானிய அணுவுலைக்குள் புகுந்து முக்கிய ஆவணங்களை அடித்து வந்தது மொசாட்


அப்பொதும் ஈரான் பெரிதாக அசரவில்லை


இஸ்ரேல் ஈரானிய தளபதிகளை லெபனான் சிரியாவிலும் உச்ச தளபதி சலைமானியினை ஈராக்கிலும் தூக்கும் போது ஈரானுக்கு செய்தி சொன்னது அப்போதும் ஈரான் திருந்தவில்லை


இப்போது தாங்கள் எந்த அளவு உள்ளே இருக்கின்றோம் என்பதை காட்டிவிட்டார்கள்


நடந்தது இதுதான்


மிக மிக தேர்ந்த திட்டம் இது, அடிக்கடி ஹனியே  ஈரான் வருவதை அறிந்து அவர் எங்கே தங்குகின்றார் எப்படியான் பாதுகாப்பில் தங்குகின்றார் என்பதை அலசிய மொசாட், அதற்கான வாய்ப்பை உருவாக்கியது


ஆம் விபத்தில் ஈரானிய அதிபர் ரைசி கொல்லபட்டார் அதிலே நிறைய மர்மம் உண்டு


அப்படி அவர் கொல்லபட்டபோது ஹனியே அஞ்சலிக்கு சென்றார் இஸ்ரேலின் குறியே அதுதான் அப்படி அவரை வரவைத்து அவரை தீர்த்துகட்டும் திட்டத்தின் உச்சிக்கு சென்றது


அதன்படி ஈரானில் இருக்கும் இஸ்ரேலிய உளவாளிகள் அவர் அறைக்குள்ளே வெடிகுண்டை பொருத்தினார்கள்


அது மின்விசிறியா, ஏசி மெஷினா இல்லை கட்டிலின் உபகரணமா எது என தெரியவில்லை ஆனால் சக்திவாய்ந்த வெடிகுண்டு அவர் தங்குவார் என கணிக்கபட்ட 3 இடங்களில் வைக்கபட்டது


ஆனால் அப்போது குண்டுவெடித்தால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கும், நம் இலக்கு இருவர்தான் என உணர்ந்த மொசாட் அப்போது அவரை விட்டுவிட்டது


கடந்த மேமாதமே ஹனியே கொல்லபட்டிருக்க வேண்டும், ஆனால் மொசாட் அனுமதிக்கவில்லை


மிக குறைந்த மக்கள் சேதத்தில் முக்கிய இலக்கு என்பது அவர்கள் கொள்கைகளில்  ஒன்று இதனால் தாமதித்தார்கள்


இதனால் இரையினை கண்காணிக்கும் புலி போல அவனை கண்காணித்தார்கள்


பழைய அதிபர் சாவுக்கு வந்த ஹமாஸ் தலைவர் பின் புதிய தலைவர் பதவியேற்புக்கு வந்தார், அந்த விழாவுக்கு வந்தவரை சரியான நேரம் பார்த்து அதிகாலை இரண்டு மணிக்கு தூக்கியிருக்கின்றார்கள்


அந்த குண்டும் சக்திவாந்த குண்டு அல்ல, ஆனால் அது ஒருவரை பலத்த அதிர்வால் இதயம் வரை தாக்கி கொல்லும் நூதனமான குண்டு


அந்த அதிர்வில் ஹனியே  இறந்தார்


இது ஒரு தொழிநுட்பம், அதிக சத்ததம் அதிக நேருப்பு எல்லோரையும் துண்டு துண்டாக்கி கொல்வதெல்லாம் பழைய காலம், இது அப்படி அல்ல ஒரு குண்டு வெடிக்கும் அது ஒருவிதமான அதிர்வுகளை ஏற்படுத்தும் அதனால் அருகிருக்கும் நபருக்கு இதயம் பாதிக்கபடும் மூக்கில் ரத்தம் வழிய இறந்துகிடப்பார்


இலங்கையில் புலிகள் இயக்க தலைவர்களில் ஒருவரான தமிழ்செல்வன் மேல் இவ்வகை ஆயுதம் பிரயோகிக்கபட்டது


அதேசாயல்தான் இங்கும்


இப்படி குண்டு வெடித்து ஹஸ்னியே இறந்ததும் ஈரான் அவசரமாக குற்றவாளிகளை தேடியிருக்கின்றது, அப்போது குற்றவாளிகளை சிசிடிவி காட்சியிலும் கண்டுபிடித்து அவசரமாக தேடியிருக்கின்றார்கள்


ஆனால் அவர்கள் குண்டுவெடித்த அரைமணி நேரத்தில் தன் குடும்பத்தோடு ஈராக்குக்கு தப்பி சென்றுவிட்டார்கள்


குற்றவாளிகள் யார் என்றால் ஈரானிய ராணுவத்தின் ஆட்கள், ராணுவ சேவகர்கள் அவர்களை உளவாளிகளாக மாற்றி காரியம் சாதித்தது மொசாத்


இந்த சம்பவத்தில் பல சுவாரஸ்யங்கள் உண்டு


முதலாவது ஈரான் பாதுகாப்பற்ற நாடு என்பது ஈரானிய மக்களுக்கும் அரசுக்கும் புரிந்துவிட்டது , எந்த வீட்டில்  எந்த மொசாட் உளவாளி இருப்பானொ என அஞ்சி கொண்டிருக்கின்றார்கள்


இந்த அச்சம் ஈரானிய உச்ச கோமேனி முதல் ஒவ்வொரு தளபதிக்கும் வந்துவிட்டது எல்லோரும் பதற்றத்தில் இருக்கின்றார்கள்


எங்கும் நம்பிக்கையின்மை குழப்பம் , அவநம்பிக்கை சந்தேகம் யாரை நம்ப யாரை சந்தேகிக்க என குழம்பி மனநலம் பாதிக்கும் அளவுக்கு சென்றுவிட்டார்கள்


எதிரியினை எதிர்த்து அடிப்பது ஒரு வழி, அவனை குழப்பி குழப்பி திசை  திருப்பி சக்தியற்று போக வைப்ப்பது இரண்டாம் வழி


அப்படி இரண்டாம் வழியில் போட்டு சாத்தியிருகின்றது இஸ்ரேல்


பாலஸ்தீன இயக்கங்களுக்கு எந்த ஈரானில் இருந்து கட்டளை வந்ததோ,அக்டோபர் மாதம் எந்த ஈரான் உத்தரவில் இஸ்ரேலை ஹமாஸ் தாக்கியதோ, அந்த ஹமாஸை ஈரானில் அவர்கள் கண்முன்னே கொன்று போட்டிருக்கின்றது மொசாத்


அதிர்ந்து குழம்பி மரண பயத்தில் இருக்கின்றது ஈரான்


இன்னொரு விசித்திரம் என்னவென்றால் ஹமாஸ் தலைவரின் பக்கத்து அறையில்தான் இன்னொரு பாலஸ்தீன இயக்க தலைவரும் தங்கியிருக்கின்றார்


அவர் உயிர்தப்பியிருக்கின்றார், இனி அவர் மனநிலை எப்படியிருக்கும் எப்படியான செய்தியினை மொசாத் சொன்னது என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்


ஈரானுக்குள் பெரும் வலைபின்னலை வைத்திருக்கும் மொசாட்டை மீறி இனி இஸ்ரேலை தொட்டுபார்க்க வாய்ப்பில்லை என அஞ்சிகொண்டிருக்கின்றது ஈரான்


எங்கள் எல்லைக்கு நீங்கள் வந்தால் உங்கள் நாட்டுக்குள்ளே உங்கள் வீட்டுக்குள்ளே வருவோம் என மொசாட் காட்டிவிட்டது


ஈரான் இப்ப்போது போர்மிரட்டல் பழிவாங்கல் என மிரட்டினாலும் அங்கே யார் என்ன செய்வார் என்பதே தெரியவில்லை


ஈரனைன் "புரட்சிகர படை" முழுக்க மொசாத்தின் ஆட்கள் இறங்கிவிட்டார்கள், ஆக மொசாத் தான் புரட்சி செய்திருக்கின்றது


தன் 75 ஆண்டு கால வரலாற்றில் எத்தனையோ சாதனைகளை செய்திருக்கும் மொசாத், ஈரானிய உத்தரவுபடி தங்களை தாக்கிய ஹமாஸின் தலைவரை மிகுந்த காவலுக்கு இடையில் ஈரானில் போட்டு தள்ளி அடுத்த சாதனையினை பதிவு செய்து கொண்டது


உலகின் மிக மிக பலமான உளவு அமைப்பு, எந்த வலிமையான இடத்திலும் ஊடுருவி தாக்கும் கில்லாடிகள் என்பதை மீண்டும் உலகுக்கு சொல்லிவிட்டது மொசாட்


"சாவு பயத்த காட்டிட்டான் பரமா" என்பது சாதாரண வார்த்தை அல்ல, தற்கொலைக்கு ஒருமுறை முயன்றவர்கள் கூட மறுமுறை முயலமாட்டார்கள்


அப்படியான பயம் அது


எல்லா தைரியமும் போர்முழக்கமும் எச்சரிக்கையும் எங்கோ போர் நடக்கும்போதும் யாரோ சாகும் போதுதான் அது கண்முன்னால் அதுவும் மிகுந்த காவலுக்குள் இருக்கும் தன்முன்னால் நடக்கும்போது யாராய் இருந்தாலும் மனதால் உடைவார்கள்


இரானை அப்படி நொறுக்கி போட்டிருக்கின்றது மொசாட்


மிக பெரிய அளவில் போர் நடத்தி காலம், பனம் எல்லாம் செலவழிப்பதை விட இப்படி இன்னொரு கோணத்தில் அடிக்கவேண்டிய இடத்தில் அடித்தால் சுலபம்


போரில் மனோவியல் மிக முக்கியம், ஆயுத பலத்தைவிட மனோபலம் இழந்தால் எதிரி செத்தேவிடுவான் அதை மிக நுணுக்கமாக செய்கின்றது இஸ்ரேல்


ஈரான் பக்கம் கனத்த மவுனம் நிலவுகின்றது, இஸ்லாமிய புரட்சி என சொல்லி கொண்டிருந்தவர்கள் அடுத்து என்ன புரட்சி செய்ய என தெரியாமல் ஒருவரை ஒருவர் சந்தேகத்தோடு பார்த்து கொண்டிருக்கின்றார்கள்


இஸ்ரேல் அதன்போக்கில் இருக்கின்றது, காரணம் இந்த கொலையினை செய்தது யார் என உலகமே சொல்லும் போது அவர்கள் வாய்திறக்க அவசியமில்லை


ஈரான் என்ன செய்வது என குழம்பியிருக்க்கும் நேரம் அமெரிக்க போர்கப்பல்கள் கூடுதல் பாதுகாப்புக்காக செங்கடலுக்கு விரைகின்றன‌


இனி ஹெஸ்புல்லா கட்டம் கட்டபடலாம், 1983ல் 253 அமெரிக்க வீரர்களை கொன்றது, அமெரிக்க தூதரை கொன்றது என ஹெஸ்புல்லாவுக்கும் அமெரிக்காவுக்கும் பழைய கணக்கு உண்டு


அது இனி தீர்க்கபடலாம்


அக்டோபர் மாதம் இஸ்ரேல் தாக்கபட்டபோது "தாய் பாம்பின் தலையினை நசுக்குவோம்" என்றது இஸ்ரேல், அப்படி அவர்கள் சொன்ன தாய் நாகமான ஈரானின் புற்றுக்குள்ளே சென்று குட்டிகளை கொன்றுகொண்டிருக்கின்றார்கள்


நாகம் அலறிகொண்டிருக்கின்றது, 


அலற அலற எதிரியினை ஒவ்வொரு நொடியும்  சாவு பயம் குழப்பத்திலே வைப்பது ஆக பெரிய  பழிவாங்கல், அதை சுத்தமாக செய்கின்றது இஸ்ரேல்

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷