ஜெய்ஹிந்த் பாரத் அகடமி நடத்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் தின விழா, மகாகவி பாரதியார் நினைவுநாள் அஞ்சலி மற்றும் பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலெட்சுமி அவர்களின் பிறந்தநாள் விழாவும் சிறப்பாக நடைபெற்றது,
சான்றோர்களுக்கு வணக்கம், நமது ஜெய்ஹிந்த் பாரத் அகடமி நடத்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் தின விழா, மகாகவி பாரதியார் நினைவுநாள் அஞ்சலி மற்றும் பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலெட்சுமி அவர்களின் பிறந்தநாள் விழாவும் சிறப்பாக நடைபெற்றது,
விழாவில் தலைமை விருந்தினராக தமிழ்த்திரு அர்ஜூன் சம்பத் அவர்கள்,தலைவர் இந்து மக்கள் கட்சி, கலைமாமணி உடையார் பாளையம் ஆர்.ஸ்ரீனிவாசன் அவர்கள், கலைமாமணி கிரிஜா இராமசாமி அவர்கள் முன்னாள் முதல்வர் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, சென்னை, திரு.பெப்சி சிவா அவர்கள், தலைவர் இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மாநில தலைவர் பாஜக கலை கலாசார பிரிவு, மற்றும் டாக்டர் பிரபா குருமூர்த்தி அவர்கள், பழம்பெரும் நடிகர் மற்றும் பாடகர் டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் வாரிசு பங்கேற்றார்கள் மேலும் ஜ.ஜ.டி பேராசிரியர் டாக்டர் எஸ்.வி.மணி அவர்கள், சங்கீத கலாநிதி டாக்டர் கே.என்.ரெங்கநாத சர்மா, முன்னாள் முதல்வர் எஸ்.எஸ்.எஸ்.வி இசைக் கல்லூரி, மதுரை, சாதகபறவைகள் சங்கர் அவர்கள், தமிழ்நாடு அரசவைக்கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களின் புத்திரர் மற்றும் பழம்பெரும் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் மருமகன் மற்றும் நாட்டிய கலா ரத்னா டாக்டர் தாரணி இராமகிருஷ்ணா அவர்கள் முன்னிலையில் வகித்தார்கள் மற்றும் பல மிக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று விழா சிறப்பாக நடைபெற்றது, சமூக சேவைகள் மற்றும் இசை & கலைத்துறையில் சிறந்த பணியாற்றிய சாதனையாளர்களை கௌரவித்து போற்றி வாழ்த்தி வணங்கி மகிழ்ந்தோம், அவர்களுக்கு மகாகவி பாரதியார் விருதும் மற்றும் பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலெட்சுமி அவர்கள் விருதும் முறையே வழங்கப்பட்டது, நிகழ்வில் கலைமாமணி கிரிஜா இராமசாமி அவர்கள், திருமதி லலிதா மகேஷ் அவர்கள் மற்றும் திருவாசக தென்றல் சிவ நிர்மலா ரவி அகியோரின் பாட்டும் மேலும் திருமதி அர்ச்சனா கார்த்திக் மற்றும் அவர்கள் மாணவர்கள் நடனமும் மற்றும் நாட்டிய ரத்னா, கலாசேஷ்த்திரா ஆசிரியை லாவண்யா ஜெயபாலன் அவர்கள் நடனமும், மிக சிறப்பாக அரங்கேறியது, விழாவில் முக்கிய பெருந்தகைகளின் சிறப்புரையும் சாதனையாளர்களின் ஏற்புரையும் மனதை நெகிழ வைத்தது, விழாவில் பங்கேற்ற பெருந்தகைகளுக்கும் மற்றும் விழாவின் வெற்றிக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி...🙏🙏 அன்புடன் சாமி சந்திரசேகர், நிறுவனர், ஜெய்ஹிந்த் பாரத் அகடமி (நீட், ஜெஇஇ, +1 & +2 தேர்வு பயிலகம், ஆதரவற்ற மாணவர்களுக்கு முற்றிலும் இலவசம்) அசோக் நகர், சென்னை 83 தொலைபேசி 9841036568.
Comments
Post a Comment