உலக ஆயுத உற்பத்தியை நிர்ணயிக்கபோகும் இன்றைய இந்திய மாணவர்கள்.. நாளைய இந்தியா..!!*
*உலக ஆயுத உற்பத்தியை நிர்ணயிக்கபோகும் இன்றைய இந்திய மாணவர்கள்.. நாளைய இந்தியா..!!*
சென்றவாரம் அமெரிக்க மண்ணிலேயே வைத்து அதன் அடாவடித்தனத்தை விமர்சித்த பத்திரிக்கை பேட்டி கொடுத்த நமது வாத்தி (வெளியுறவுத் துறை அமைச்சர்) ஜெய்சங்கரின் பேட்டி உலகில் பல நாடுகளில் பரபரப்பாக பேசப்பட்டது. நமது எதிரிகளான சீனா, பாகிஸ்தான் கூட அதை ரசித்தது என்றால் அதில் மிகையில்லை. ஆனால் நம்மில் பலருக்கு அது தெரியவில்லை என்பது கொடுமை!
அதில் ஒரு சிலவற்றை மட்டும் பகிர்கிறேன். மற்ற நாட்டின் ஜன நாயகத்தை விமர்சிக்கும் நாடுகள், பதிலுக்கு திரும்ப விமர்சித்தால் ஏன் ஏற்க முடிவதில்லை? அப்படிப்பட்ட நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்களிடம், நீங்கள் எங்கள் உள்விவகாரங்களில் தலையிட்டால், நாங்களும் திரும்ப செய்வோம் என்று நேரடியாகவே சொல்லி இருக்கிறேன் என்றார்.
அதற்கு முன்புதான் அவர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் நீண்ட பேச்சுவார்த்தையை முடித்தார் என்பதுதான் ஹைலைட்ஸ்.
பாலஸ்தீனத்தில் புகுந்த இஸ்ரேல் 120 விமான தாக்குதல் மூலம் கடுமையாக தாக்கியபோது அதற்கு ஆதரவாக இந்தியா ஆயுதம் வழங்குகிறதே ஏன் என்று சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் அதே பாலஸ்தீனத்தை நாற்பது ஆண்டுகளாக ஆதரித்த இந்தியாவிற்கு அது கொடுத்த நன்றிக்கடன் என்பது காஷ்மீரில் இந்தியா ஆக்கிரமிப்பு செய்துள்ளது, அங்கிருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்பதுதான்.
அங்குமட்டுமல்ல, இங்குள்ளவர்களில் பலர் இந்தியா, காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறும்போது, அவன் நண்பனாக இருந்தாலும், நாம் அவர்களின் நட்புக்கு மரியாதை கொடுப்பதால் அதை சாதகமாக்கி கொள்கிறார்கள். நீ இங்கிருப்பதே ஓசி என்று நாம் வெளிப்படையாக போ சொல்ல ஆரம்பித்தால் அடங்கிவிடுவார்கள்!
இப்போது இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மட்டுமல்ல, நம்மில் பலரும் வெளிப்படையாக பேச நமது நாட்டின் பொருளாதார முன்னேற்றமும், ராணுவ வலிமையும் மிக முக்கியம். அது இன்று நேற்று நடந்ததல்ல, 50 ஆண்டுகளாக நடந்த முயற்சி அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆதிக்க சக்தியால், நமது விஞ்ஞானிகளையே பிராத்தல் கேசில் புக் செய்யும் இத்தாலி பிராத்தல்களின் அரசாங்கம் அன்று நடந்தது இன்று மாறியுள்ளது, ஆனால் இன்னும் முடிவுறவில்லை, தமிழகம் போன்ற மாநிலத்தில் அதைவிட கேவலமான சக்திகள் நமமை ஆள்கிறது.
நேற்றுவரை ஒரு துப்பாக்கியை கூட நம்மால் செய்ய முடியவில்லை என்று வர்ணித்தவர்கள்தான் நம்மை ஆண்டு வந்தார்கள், கேடுகெட்ட திமுக போன்ற அவர்கள் தயவில்தான் அரசாங்கம் இருந்தது, ஆனால் எதுவும் நடக்கவில்லை என்பதைவிட அவர்கள் அதை செய்ய அனுமதிக்கவில்லை. ஆம் அவர்கள் எஜமானர்கள் கொடுத்த பிச்சைக்காசுக்கு எச்சை அரசை பின் வாசல் வழியாக நடத்தினார்கள்.
இன்று ரஷ்யாவின் AK203 (Ak47 Advanced varient) என்ற வகை துப்பாக்கியை உபியில் கூட்டு ஒப்பந்தத்தில் செய்கிறோம். இந்த வருடம் மே மாதம் 27,000 துப்பாக்கிகளும், ஜூலையில் 8000 துப்பாக்கிகளும் தயாரிக்கப்பட்டு நமது ராணுவத்திற்கு கொடுத்துள்ளது. இந்திய ராணுவத்தின் தேவை மட்டும் 6 லட்சம் துப்பாக்கிகள்.
உலக முழுவதிலும் அதற்குள்ள தேவைகள் 12 கோடி துப்பாக்கிகள். அதை உபியில் தயாரிக்கும்போது அதற்கான உபரி பாகங்களை செய்வதில் திறமை உள்ளது நமது கோயம்புத்தூர். ஆனால் இங்கே 30 வருடமாக இருக்கும் ஹுண்டாய் நிறுவனமே அரசியல் தலையீடுகளால் உபி செல்வதாக அறிவித்துள்ளது.
அதன் மூலம் 2000 நேரடி வேலை வாய்ப்புகளும் 8000 மறைமுக வேலை வாய்புகளும் பாதிக்கும் என்பது தெரியாமல் தத்தி பிடில் வாசிக்கிறார்! அவருக்கு பாத் ரூம் செல்வதற்கே வழிகாட்ட வேண்டியிருக்கும் சூழலில், அவரா நாட்டுக்கு வழிகாட்டப்போகிறார்?!
அதை மனதில் கொண்டுதான் கோவை முதல் ஓசூர் வரை ராணுவ உற்பத்தி காரிடார் என்று மத்திய அரசாங்கம் அறிவித்தது. அதற்கு எட்டுவழி சாலையின் முதல் கட்டமாக சென்னை (துறைமுகத்தை இணைக்க) முதல் சேலம் வரை எக்ஸ்பிரஸ் வழித்தடமும், அடுத்த கட்டமாக சேலம் முதல் கொச்சி (சென்னை-கொச்சி துறைமுகங்களை இணைக்கும் வழித்தடம்) எட்டு வழி எக்ஸ்பிரஸ் அமைக்க திட்டமிட்டது. ஆம், அந்த வழி மூலம் பெரிய ஆயுதங்களை உற்பத்தி செய்து இந்தியாவிற்கு உதவியும் உலகிற்கு ஏற்றுமதியும் செய்ய திட்டமிட்டது.
ஆனால் கோவையில் இருக்கும் பணக்கார பிச்சைக்காரர்கள் ₹500 பிச்சை வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டானுக. ஆனால் அந்த கோவையில்தான் மிக திறமை வாய்ந்த தொழில் அதிபர்கள் இருக்கிறார்கள், கடுமையாகவும், அறிவார்ந்தும் உழைக்கும் வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அந்த துப்பாக்கி குழாயின் வளவளப்பும், பிரிசிஷன் என்று அக்யூரசி மேம்படுத்துவதில் வல்லவர்கள். அதை வேகமாக உற்பத்தி செய்வதில் கெட்டிக்காரர்கள்.
உபியில் உற்பத்தி செய்வதிற்கு பதிலாக இவர்கள் அதே உற்பத்தியை செய்திருந்தால், AK203 அதன் உற்பத்தி மூன்று முதல் நான்கு மடங்கு வேகமாக இருந்திருக்கும் என்கிறார்கள் வல்லுனர்கள். அது மட்டுமல்ல அதில் பல மேம்பாடுகளையும் அனுபவத்தில் கிரகித்து செய்திருப்பார்கள் என்பதுதான் நம்மவர்களின் திறமை. ஆனால் அவர்கள் குவாட்டருக்கு அடிமையாகி, சாக்கடையில் வீழ்ந்து கிடக்கிறார்கள்.
அப்படி பல தொழில்நுட்பங்கள் செய்யும் திறமை நம்மிடம் இருக்கிறது, ஆனால் அது பயன்படுத்த சரியான அரசு இல்லை, அதற்கு பதிலாக சாக்கடைகளை அரியணை ஏற்றிவைத்துள்ளோம்..
நமக்கு எட்டாக்கனியாக இருக்கும் பல விஷயங்கள் இன்னும் இருக்கிறது. நாம் இன்று Tejas போர் விமானத்தை உற்பத்தி செய்கிறோம். அதற்கு உலகம் முழுவதும் நல்ல டிமாண்ட் உள்ளது. அதனால் அமெரிக்கர்களிடம் நேற்றுவரை போர் விமானங்களை வாங்கி வந்த நாடுகள் இன்று இந்தியாவிடம் சென்றால் அதை அமெரிக்கா ஏற்குமா? விட்டுவிடுமா?
அதனால் அதற்கு மிக முக்கியமான எஞ்சினை உற்பத்தி செய்யும் GE நிறுவனத்தை நிர்பந்தித்து எந்த GE 404-IN20 எஞ்சின்களை கொடுக்காமல் கால தாமத படுத்திவிட்டது. அதனால் இந்திய விமானப்படைக்கு Nov 2024 ல் கொடுக்க வேண்டிய 16 விமானங்கள் கொடுக்க முடியாமல் போய்விட்டது.
அதனால் நமது விமானப்படைக்கு தேவையான போர் விமானங்கள் இல்லாததால், பறக்கும் சவப்பெட்டி என்று வர்ணிக்கப்பட்ட மிக் 21 விமானங்களை மீண்டும் ரிப்பேர் செய்தும், கத்தாரிடம் பழைய மிராஸ் ரக (ஆனால் அது பவர்புல்லானது) விமானங்களையும் வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழல்.
காரணம் நமது விமான எஞ்சின் உற்பத்தியான காவேரி எஞ்சின் இன்னும் போதுமான Thrust மற்றும் Stability இல்லை. விமான எஞ்சின்கள் உற்பத்தி உலகில் மிகச்சிக்கலானது. அது விமானத்திற்கு சக்தியை மட்டும் கொடுக்கலாம், ஆனால் அது எரிபொருளை சிக்கனமாகவும், வெப்பம் அடையாமலும் இருந்தால்தான், அது பழுதடையாமல்.நீண்ட தூரம் சென்று தாக்கிவிட்டு திரும்ப முடியும்.
ஆம், ஒரு போர் விமானத்தில் வேகம் மட்டுமல்ல, எடை தூக்கு திறனும் அதில் மிக முக்கியம். நமது தேஜஸ் விமானங்கள் 1750 கி எடையுள்ள ஆயுதங்களை கொண்டு சென்று தாக்கும் வலிமை கொண்டது. ஆனால் அந்த தூரத்தை அடைய எஞ்சின் அதிக எரிபொருளை பயன்படுத்தினால், அதன் பெட்ரோல் டேங்குகள் கிட்டத்தட்ட 2500 லிட்டர் தேவைப்படுகிறது.
அதன் எரிபொருள் சேதமில்லாமல் முழுவதுமாக பயன்படுத்தப்பட்டால், அதன் எடையில் 20% குறைக்க முடிய அல்லது அதன் தாக்கும் எல்லையின் தொலைவை 20% கூட்ட முடியும். ஆனால் அப்படியொரு தேவை இந்தியாவிற்கு இருக்கிறது என்று உலோகவியல் (Metallurgy) படிக்கின்ற மாணவர்களுக்கும் தெரியாது, அதை சொல்லி அவர்களை ஊக்குவிக்க ஆசிரியர்களும் இல்லை.
அப்படி அதன் உற்பத்தியை கூட்டினால், எஞ்சின் அதிக வெப்பமடையும். அப்போது அதை தாங்கும் உலோகங்களால் அதன் எஞ்சின் கட்டமைக்கப்பட வேண்டும். அதே சமயம் அதனை குளிர்விக்க தேவையான உபகரணங்களும், அந்த உபரி வெப்பத்தை மீண்டும் பயன்படுத்தி சக்தியாக மாற்றும் தொழில்நுட்பமும் நமக்கு தேவை.
அதைவிட மிகவும் சேலஞ்சானது பயணிகள் விமானம், அதில் உள்ள தொழில் நுட்பங்கள், அதற்கு பயன்படுத்தும் எஞ்சின்கள். ஏனென்றால் நூற்றுக்கணக்கில் பயணிக்கும் நீண்ட தூரம் பயணிக்கும் அந்த விமானங்கள் பாதுகாப்பு தேவை மிக மிக அதிகம். இன்று அதுவாக Take-off ஆகவும், Land ஆகுமளவிற்கு ஸ்டெல்த் நுட்பங்கள் வளர்ந்துவிட்டது.
வருங்காலத்தில் இன்று ஜெர்மனின் லுப்தான்சா, சிங்கப்பூர், அமெரிக்காவின் நார்த்வெஸ்ட், சீனாவின் காத்யே பஸிபிக், மிடில் ஈஸ்ட் என்று இன்று உலகின் மிகப்பெரிய ஹப்களை கொண்ட நிறுவனங்கள, நாளை இந்தியாவின் ஏர் இந்தியா (டாடாவின்) அந்த இடத்தை எடுத்துக்கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாக பயப்படுகிறது.
அப்படியென்றால் நமக்கு எத்தனை பைலட்கள் முதல் பணிப்பெண்கள், டெக்னீஷியன்கள் தேவை? இன்று சீனாவிற்கு பெரிய பிரச்சினை அவர்களிடம் திறமையான பைலட்கள் இல்லை என்பது. ஆனால் நம்மவர்கள் அதில் வல்லவர்கள்.என்றால், வருங்காலத்தில் உலகின் 40% விமானிகள்.இந்தியர்களிகத்தான் இருப்பார்கள் என்கிறது ஏர் லைன் இண்டஸ்ட்ரியின் ஃபோர்காஸ்ட்.
அதை நம்மால் செய்ய முடியும். நம் மாணவர்களுக்கு இப்படியெல்லாம் சேலஞ்ச் இருக்கிறது என்று பள்ளியில் படிக்கும்போது மாணவர்களுக்கு சொல்லித்தர ஆசிரியர்கள் வேண்டும். அவர்களுக்கு அந்த சேலஞ்சை சிறு வயதில் மனதில் இன்று நாம் விதைத்தால் போதும், நாளை அவர்கள் சாதிப்பார்கள், நாட்டை நேசிப்பார்கள்.
ஆனால் இன்று அந்தப்பணியில் இருப்பது திராவிஷ திண்ணை தூங்கிகள். நல்ல ஆசிரியர்களை பணி செய்ய அனுமதிக்காத அரசாங்கம். . முன்பு தன் மகனைவிட ஒரு ஏழை மாணவன் நன்கு படித்தால், அவனுக்கு முன்னுரிமை கொடுத்து சொல்லித்தந்த ஆசிரிய தெய்வங்கள் எல்லாம் குறைந்து விட்டார்கள். இன்றும் அப்படிப் பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்தாலும், அப்படிப்பட்ட தெய்வங்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் அரசியல் நிர்பந்தங்களை மீறி சேவை செய்தால் அதை தடுக்க ஜாதியை பயன்படுத்தி வட்டம் கட்டும் மாமாவளவன் போன்ற அரசியல் கழிசடைகள். அதை தட்டிக்கேட்க முடியாத பெற்ற பெருஞ்சுமைகளாக நாம்.
அது மாறினால், கேடுகெட்ட அரசியல் வியாதிகளுக்கு காசுக்கு ஓட்டுப்போடுவதை நிறுத்த வேண்டும். அதற்கு, அப்படிப் பட்டவர்களுக்கு உதவி செய்யும் நம்மோடு இருக்கும் கேடு கெட்ட ஜென்மங்களுக்கு, பொட்டில் அறைந்து, இந்த பொழப்பிற்கு பழனி வாசப்படியில் போய் பிச்சை எடுத்தால் புண்ணியம் சேறும் என்று முகத்திற்கு நேராக சொல்லும் தைரியம் வேண்டும்.
அதற்கான சூழல் இந்திய அளவில் ஒரு அரசாங்கம் ஏற்பட்டுவிட்டது. இன்று விமான உற்பத்தியை Make In India மூலம் இந்தியாவில் கூட்டு உற்பத்தி மூலம் செய்ய அரசு தேவையான யுக்திகளை புகுத்தி சாதித்துக் கொண்டுள்ளது. ஆம் நாம் இன்று அமெரிக்காவின் நிர்பந்தத்தால் பாதிக்கப்பட்ட Tejas Production பிரச்சினையை சரி செய்ய, அதே G&E நிறுவனத்துடன் இந்தியாவில், அதைவிட மேம்பட்ட GE 414 உற்பத்தியை செய்யும் ஒப்பந்தம் செய்தாகிவிட்டது.
மேலும் அதை மேம்படுத்த Rolls Royce, Prey& Whitney, Safran, Honeywell, IAE,என்று பல உலக நிறுவனங்களுடன் பேசி வருகிறது அரசாங்கம். ஏற்கனபே Sukhoi, Mig போன்ற நிறுவனங்களுடன் இணைந்து எஞ்சின் பராமரிப்புகளை செய்து வருகிறோம். உலகில் இன்று பல விமானங்களுக்கு உதிரி பாகங்களையும், பராமரிப்புகளையும் செய்து வருகிறோம்.
ரஷ்யா இன்று உக்ரைனுடன் போரில் இருப்பதால், அதனால் பாகங்களை உற்பத்தி செய்ய முடியாத சூழலில் அவற்றின் பல முக்கிய பாகங்களை நாம் உற்பத்தி செய்து, பராமரிப்பு செய்வதால், உலகில் பல விமானப்படை இந்தியாவிடம் வருகிறது. அமெரிக்காவின் பெரியண்ணன் தோரணைக்கு முடிவுகட்ட BRICS Currency வந்துவிட்டது.
எனவே, இன்று ஆயிரங்களில் உற்பத்தி செய்யும் AK 203 துப்பாக்கிகள், 2026 ல் லட்சங்களாக மாறியிருக்கும். இன்று Tejas க்கு பிரச்சினைகளை கொடுக்க அமெரிக்க அரசாங்கம், 200 Tejas போர் விமானங்களை வாங்க பேச்சுவார்த்தைக்கு முன் வந்துள்ளது. ஏனென்றால் இனிமேல் அதனால் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்பதை புரிந்து கொண்டுள்ளது. அதனால் அதை பயன்படுத்திக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நம் வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்க மண்ணில் இப்படியொரு பேச்சை 10 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு எதிராக பேசிவிட்டு வந்திருந்தால், விமான விபத்தில் அவர் மரணித்திருப்பார். அல்லது அவர் இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு, இந்தியாவிற்கு பொருளாதார தடைகளை கொண்டுவந்து, நாட்டை நாசப்படுத்தி இருக்கும்.
இன்று அது நடக்கவில்லை என்றால், இந்தியாவின் வளர்ச்சி என்ன வென்று புரிந்துகொள்ளுங்கள். இதுபோன்ற விமானத்துறை மட்டுமல்ல ஆயிரமாயிரம் துறைகள் நமது குழந்தைகள் பிரகாசிக்கவும், அதற்கான திறமைகள் அவர்களிடம் உள்ளது.
அதை ஊக்குவிப்போம், நேர்மையாக சம்பாதிக்க ஆயிரம் நல்ல வழிகள் நமக்குமுன் வாய்ப்பாக மலரும்போது, திராவிஷ திருட்டு புத்தி நமக்கு வேண்டாம் என்று தூக்கி எறிந்து, உலகத்தின் அமைதியான நல்ல ஒரு எதிர்காலம் அமைய *"இந்த நவராத்திரி நன் நாளில் நமக்கெல்லாம் அருள்புரிய வேண்டும் என்று அந்த இறைவனை வேண்டுவோம்".*
*நல்லவர்கள் சேர்ந்தால் கெட்டவர்கள் வீழ்வார்கள், வீழ்த்துவாள் அந்த காளிதேவி, வீழட்டும் வஞ்சகர்கள்! செழிக்கட்டும் இந்தியா, உலகத்தில் பரவி நிலைக்கட்டும் அமைதி!*
🐶
#Indhea
Comments
Post a Comment