நெஞ்சம் மறப்பதில்லை..... நினைவிருக்கிறதா... தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றவரை, எங்கே மக்களின் ஆதரவு இவருக்கு கிடைத்துவிடப்போகிறது என்பதற்காக... விவசாய சங்கத்தினர் போர்வையில் அந்நிய கைக்கூலிகளுக்கு விலை போன அற்பப்பதர்கள் ஒரு சிலர் ஒன்று சேர்ந்து அந்த பாலத்தின் மீது பதினைந்து நிமிடங்கள் காக்க வைத்து திருப்பி அனுப்பினரே.... நினைவிருக்கிறதா.....

 


🔥🍀 நெஞ்சம் மறப்பதில்லை.....


நினைவிருக்கிறதா...

தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றவரை, எங்கே மக்களின் ஆதரவு இவருக்கு கிடைத்துவிடப்போகிறது என்பதற்காக... விவசாய சங்கத்தினர் போர்வையில் அந்நிய கைக்கூலிகளுக்கு விலை போன அற்பப்பதர்கள் ஒரு சிலர் ஒன்று சேர்ந்து அந்த பாலத்தின் மீது பதினைந்து நிமிடங்கள் காக்க வைத்து திருப்பி அனுப்பினரே.... நினைவிருக்கிறதா.....


இந்தியா இந்த நாடகத்தை முடித்து வைக்க ஆரவாரமே இல்லாமல் களத்தில் இறங்க.... பதறி போனார்கள். சீக்கிய போர்வையில் பதுங்கியவர்களை சீக்கிரமே களை எடுக்க...... இந்திய சீக்கியர்களை பெரும்பான்மையினராக கொண்ட அந்த மாநிலத்தில்... நன்றிக் கடன் தெரிவித்தனர் தங்களின் வாக்குகள் மூலம். 


ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பெரும் மாற்றம் உலக அளவிலான அரசியலில் எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது. ஈதென்னவோ தென்னை மரத்தில் தேள் கொட்டினால்..... என்னுமாப்போலே நினைப்பவர்களுக்கு....


ஓர் வெற்றி.... அதிலும் முத்தாயிப்பான நேரத்தில் பெறும் வெற்றி என்பது மிக முக்கியமான மாற்றத்திற்கான வித்தாக அமையும் என்பர்.


இதோ நடக்க ஆரம்பித்து விட்டது.‌... இன்றைய தேதியில் அமெரிக்கா, அவர்களின் தேசத்தில் அடைக்கலம் கொடுத்து தங்க வைக்கப்பட்டுள்ள காலிஸ்தான் இயக்க பயங்கரவாதி பன்னுன்க்கு பணிவிடை செய்து வரும் நேரத்தில் நம் உளவு அமைப்பை சேர்ந்த வி*காஸ் யாதவ் என்பவரால் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு முறை தப்பியதாக..... இதன் பின்னணியில் நிச்சயமாக நம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தான் இருப்பதாகவும்., அவருக்கு எதிராக அங்கு உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இங்கு இவருக்கு சம்மன் அனுப்பும் அளவிற்கு அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருக்கிறது., அமெரிக்கா. போதாக்குறைக்கு இந்த வாரத்தில், விகாஸ் யாதவ் தேடப்படும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாக அலப்பறை எல்லாம் கொடுத்து கொண்டு இருக்கிறது.


ஆனானப்பட்ட அமெரிக்காவிற்கு இது போதாத காலம் போலிருக்கிறது. அவர்களின் அழிவை அவர்களே தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.


இது எல்லாம் போதாதென்று.... அவர்களின் கைப் பாவையான கனடாவை துணைக்கு அழைக்க.....சும்மாவே ஆடும் ஜஸ்டின் ட்ருடோ இம்முறை விபரம் இல்லாமல் தலையை கொடுக்க.... தங்கள் நாட்டில் நடந்த சீக்கிய தலை???? களின் கொலைக்கு இந்திய அரசு நிர்வாகம் தான் என கம்பு சுற்ற..... இம்முறை இறுக்கி பிடித்து நம்மவர்கள் ஆதாரங்களை கேட்க..... வெலவெலத்து போனார் ஜஸ்டின். இது குறித்து அங்கு உள்ள ஊடகங்கள் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்க.... ட்ரஸ்ட் மீ ப்ரோ என புன்னகைக்க...... இழுத்து பிடித்து அவரது கட்சியினரே மிதிக்க....... மனிதர் ஏதும் புரியாத போதையில் இருந்தது அப்போது தான் வெளி உலகிற்கு தெரிந்து போனது.தலை தலையாய் அடித்து கொண்டு இருக்கிறார்கள் அங்குள்ளவர்கள்.ஏற்கனவே நம் இந்திய தேசத்தில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள புதுடெல்லி வந்த சமயத்தில் இதே போன்ற போதை வஸ்துகளோடு புடை சூழ வந்தவரை விமான நிலையத்திலேயே நைய புடைத்து பெரும் தன்மையோடு🤣🤣 அனுப்பி வைத்த சம்பவம் எல்லாம் நடந்தது.


அநேகமாக அவரிடம் இருந்து ராஜினாமா அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


போதாக்குறைக்கு,

நம்மவர்கள் அதிரடியாக இங்கு சிற்பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்...... ஆடிப் போய் இருக்கிறது அந்த தேசம். ஏனெனில் கனடாவிற்கு தான் நாம் தேவையே தவிர நமக்கு கனடா தேவையில்லை. நம்முடைய அந்நிய செலாவணி மூலம் தான் அவர்கள் வாழ்வு பெற்று வருகிறார்கள். உதாரணமாக....... அங்கு கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் கிட்டத்தட்ட 37% நம் இந்திய மாணவர்கள் தான்.

இவர்களின் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி தற்சமயம் அவர்களுக்கு தேவை. 


ஜஸ்டின் ட்ருடோ தனது வாக்கு வங்கி அரசியலுக்காக...... அவரது தகப்பனாரை போல் அங்கு உள்ள மக்கள் தொகையில் சுமார் இரண்டே இரண்டு சதவிகிதம் இருக்கும் சீக்கிய மக்களை திருப்தி செய்ய, இங்கு உள்ள திராவிட திராட்சை போல் பல வேலைகளை முன் எடுக்க..... தற்சமயம் அவர் கட்சியில் உள்ளவர்களே அவருக்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள். இத்தனைக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா முதற்கொண்டு ஏனைய பிராந்திய நிலபுலன்கள் இன்னமும் இங்கிலாந்து அரசு வசம் தான் இருக்கிறது. இப்படியான சூழலில் இங்கிலாந்து இதனை ரசிக்கவில்லை.ஆக இவர்களும் ட்ருடோவுக்கு எதிராக நிற்கிறார்கள்.


ஏற்கனவே இங்கிலாந்திற்கும் தற்போது உள்ள அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகத்திற்கும் எட்டு பொருத்தும் அலறவிட்டுக்கொண்டு இருக்க...பல இடங்களிலும் கமலாவை கதற விட காத்துக் கொண்டு இருக்கிறார்கள் இன்று உள்ள சூழ்நிலையில்.


உக்ரைன் ரஷ்யா போரை முன்னெடுத்த வேளையில்.... தோள் கொடுத்தவர்களை எல்லாம் பெரும் நிதிச் சுமையில் தள்ளிவிட்டுயிருப்பதாக மேற்கு உலக நாடுகளில் புகைய ஆரம்பித்து இருக்கிறது.மறு பக்கத்தில் ரஷ்யா பெரும் புன்னகையுடன் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டு இருப்பதை பார்க்கும் அவர்களுக்கு, பைடன் அரசாங்கம் பயனற்றது என்கிற ரீதியில் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.


அமெரிக்கா இதனை உணராமல் இல்லை...... ரஷ்ய வளர்ச்சி இந்தியாவால் என பொருமிக் கொண்டிருக்கிறார்கள். நம்மவர்களின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தால் ரஷ்யா கொழிக்கிறது என கொதிக்கிறார்கள். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவே பல சில்லுண்டு வேலைகளை எல்லாம் தேர்தல் சமயத்திலேயே  முன்னெடுக்க... இன்று மூக்குடைத்துக்கொண்டு நிற்கிறது அந்த தேசத்தின் பைடன் அரசு நிர்வாகம்.


அடுத்த வாரத்தில் மீண்டும் ரஷ்ய பயணம் மேற்கொள்ள இருக்கும் நம் பாரதப் பிரதமரின் நிகழ்ச்சி உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் பட்சத்தில் அது அடுத்த மாதம் 5 ஆம் தேதி அன்று அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிரொலிக்கக்கூடும் என இப்போதே பதற ஆரம்பித்து இருக்கிறார்கள். தவிர கடந்த முறை போல் இந்த முறை அங்கு உள்ள அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்கு சிந்தாமல் சிதறாமல் பைடன் கட்சிக்கு செல்ல எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை என்கிறார்கள் அங்கு உள்ள ஊடகங்களில்....


இந்த சமநிலையை தவிர்க்கும் பொருட்டே இது வரைக்கும் இல்லாத வகையில் மூன்று முறை அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் மீது கொலை முயற்சி நடைபெற்றது என்பதையும் சுட்டிக் காட்டி வருகின்றனர்.


ஒரு சதவீதம் முதல் இரண்டு, மூன்று சதவீத இடைவெளி தான் இரண்டு வேட்பாளருக்குமே இதுவரையில் நிலவி வருகிறது. 


இப்படியான சூழலில் தேவையே இல்லாமல் நம் பாரதப் பிரதமர் மீதான துவேஷம் அங்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள். தவிர இன்றைய தேதியில் உக்ரைன் ரஷ்யா மோதலை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரஷ்யா மற்றும் உக்ரைன் என இரு தேசங்களுக்கு நேரிடையாக சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட முதல் மற்றும் ஒரே உலக தலைவராக மோடி திகழ்கிறார்.


இந்த நடவடிக்கைக்கு பலன் கிடைத்ததா என்பதை விட...... இவரின் முயற்சிக்கு பிறகு அமெரிக்கா..... முற்றிலும் உக்ரைனை நம்பாமல் இழுத்து அடிக்க...... கிடைத்த இடைவெளியில் இஸ்ரேல் உள்ளே நுழைந்து விட்டது. வேறு வழியின்றி பைடனும் நெதன்யாஹூவுக்கு ஒத்து ஊத.... அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக வெளி தேசம் ஒன்று அவர்களை வைத்து வேலை வாங்குகிறது என்கிற இடத்திற்கு சென்றிருக்கிறது அமெரிக்கா.


ஆம்....... நெதன்யாஹூ வெச்சு செய்து கொண்டு இருக்கிறார் அமெரிக்காவை. எப்படி....???

உளவு தகவல் முதற்கொண்டு எதனையும் அவர் பைடன் நிர்வாகத்தோடு பகிர்ந்து கொள்வதில்லை.... அதேசமயம் அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் அமெரிக்கா சென்று கொண்டு இருக்கும் நிலையில் அதனை வைத்து வேலை வாங்கி கொண்டு இருக்கிறார். இன்று மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பேச்சு பொருளாக இருப்பதே இந்த சமாச்சாரம் தான்.


கடந்த அக்டோபர் மாதத்தில் யாக்கியா சின்வார் மூலம் ஆரம்பிக்கப்பட்ட போர்.... இன்று அவரை கொன்று அவரோடு முடித்து வைக்கப்பட்டதாக இஸ்ரேல் அறிவிக்கும் அளவிற்கு சென்றுள்ளது‌. இதில் எந்த ஒரு தகவலையும் இம்முறை அமெரிக்காவோடு முன் கூட்டியே பகிர்ந்து கொள்ளவேயில்லை. நகைமுரணாக அமெரிக்கர்கள் தான் தங்களின் உளவு தகவலும் இஸ்ரேலிய வெற்றியில் அடங்கும் என முச்சந்தியில் கத்தாத குறையாக கூவிக்கொண்டு இருக்கிறார்கள்.


என்ன......காது கொடுத்து கேட்பதற்கு தான் அங்கு உள்ள அமெரிக்க ஊடகங்களே தயாராக இல்லை என்பது தான் தமாஷே.


இதில் உள்ள பெரிய விஷயம் என்னவென்றால்..... யாக்கியா சின்வாரை பயங்கரவாதி... தீவிரவாதி...என தேடிப் பிடித்து கொன்றதற்காக மார் தட்டும் அமெரிக்கா தான்.., இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட.... அறியப்பட்ட காலிஸ்தான் இயக்க பயங்கரவாதிகளை அடைக்கலம் கொடுத்து பாதுகாக்கிறது.


அவர்கள் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ???? இல்லாமல் ஆக்கும் போது பதறுகிறது. போனால் போகட்டும் என்கிற பெருந்தன்மை காரணமாகவே.... பழி பாவம் தமது நட்பு தேசங்களுக்கு கூடாது என்பதற்காகவே அவர்கள் இன்னமும் மர்ம நபர்களாக இருக்கிறார்கள். இல்லை என்றால்..... நடப்பதே வேறு.


இந்த அடிப்படை உண்மையை கூட உணர்ந்து கொள்ளாமல், நம்மவர்களை மடக்கி பிடித்து அடிக்கி ஆண்டு விடலாம் என நினைக்கும் இந்த அற்ப பதர்கள் எல்லாம் வல்லரசுவை வழி நடத்தும்... 


☘️தன் தேசமே பெரிது.... அதன் மாண்பே பெரியது என்பதற்காக தங்கள் அடையாளத்தையே இழக்க துணிந்தவர்களையே மிகப் பெரிய சைதன்யமாக கொண்ட தேசத்திற்கு எத்துனை பெரிய மாட்சிமை இருக்கும். உணர்ந்து கொள்வார்களா இந்த மடையர்கள்....?????

இவர்கள் உணர்ந்து கொள்ளும் அந்த நாளில் பல வல்லரசுகளை கட்டி ஆளும் பேரரசாக நம் பாரதம் நிச்சயம் இருக்கும்.நம் காலத்திலேயே அதனை பார்க்கத்தான் போகிறோம். தயாராக இருங்கள்.


💓 ஜெய் ஹிந்த்.

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷