கல்வியறிவை போதிக்க எந்த ஒரு பொருளையும் ஈடாக பெறக்கூடாது என்பது வேதங்களும் உபநிஷத்தக்களும் உணர்த்தும் உண்மை.

 


கல்வியறிவை போதிக்க எந்த ஒரு பொருளையும் ஈடாக பெறக்கூடாது என்பது வேதங்களும் உபநிஷத்தக்களும் உணர்த்தும் உண்மை. 


https://youtu.be/5g5EPeR0gTY?si=BF8EDajibos6LK-o


கல்வியறிவை பெறுபவர் அகக் கண்னை திறந்து வைத்த குருவுக்கு தட்சனை வழங்காமல் அவர் பெற்ற ஞானத்தை உலகுக்கு உபயோகப்படுத்த இயலாது. 


https://youtu.be/o1dz2W4GVVg?si=8qGEuFv4SjCHObTV


மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு திரைஅரங்கில் நேற்று நான் கண்ட திரைப்படம் மேலே கூறிய உட்கருத்தை மையப்படுத்தி உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சூழ்நிலை அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க நேர்மையும் திறமையும் செயலாற்றலும் கொண்ட ஒரு காவல் அதிகாரியிடம் உண்மைகளை கண்டறியும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் சிந்தித்து சீரமைக்க வேண்டிய விஷயம் காவல் அதிகாரியிடம் வந்து சேர்வது விதி. மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கையில் அப்பாவிகளும் தண்டிக்கப்படுகிறார்கள். காவல் அதிகாரிக்கு தண்டிக்கும் உரிமை இல்லை என்ற ரீதியில் கதை சற்று வளைந்து பயணிக்கிறது. முடிவில் காவல் துறை தண்டிப்பதற்காக அல்ல மக்களை காப்பாற்றுவதற்காக என்று கதை முடிகிறது. 


கல்வி இலவசம் ஆனால் கல்வி பெற்றவர் அந்த ஞானத்தை அவர் பொருளீட்டவதற்கான பயிற்சி நிர்வாகரீதியான பாடம். அது இலவசமல்ல. பெருவாரியான பயிற்சி மையங்கள் இந்த நிர்வாகத்தை போதிக்க பெரும் பொருளை ஈடாக கேட்கிறார்கள். இரண்டுக்கும் உள்ள வித்யாசம் சரியாக புரியவில்லை என்றால் தர்மசங்கடங்கள் ஒருவரை சூழும். இது திரைப்படத்தில் சில புரிந்துகொள்ளக்கூடிய காரணங்களால் கோடிட்டு காட்டப்படவில்லை.


மேற்கூறிய விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும்,  S....U.....P....E...R  என்ற எழுத்துகள் திரையில் மின்ன ஆரம்பித்ததும் முதியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை எழுப்பிய கரகோஷம் அரங்கத்தை அதிரவைத்து ரசிகர்களின் மன உற்சாகத்தை பல மடங்கு உயர்தியது. கதையை நகர்த்தி சென்றவரின் வசீகரம் அது.

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது