இன்றைய விஜய்யை விட அன்றைய ரஜினிக்கு மிகப்பெரும் மக்கள் சக்தி ஆதரவு இருந்தது உண்மை... ஆனால் காலம் தந்த அருமையான வாய்ப்பை ரஜினி பயன்படுத்திக்கொள்ளவில்லை... கலைஞர் மீதான மதிப்பினாலும், சோ அவர்களின் இன்புளூயன்சாலும் ரஜினி அன்றைக்கு அந்த முடிவை எடுத்தார்... ரஜினி வந்திருந்தால் 1996ல் வந்திருக்க வேண்டும்... வந்திருந்தால் நிச்சயமாக முதலமைச்சர்...
புரியாத சிலருக்கும்... ஆற்றாமையில் பொங்கும் பலருக்கும்...👇
1996ல் சோஷியல் மீடியா என்ற எதுவுமே இல்லாத காலம்... டிவி கூட தெருவுக்கு ஓரிரு வீடுகளில் மட்டுமே இருக்கும்... கேபிள்டிவி என்றாலே சன்டிவி மட்டுமே... மீதியுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு மறுநாள் காலை தினத்தந்தி பேப்பர் மூலமாக தான் எந்தவொரு நிகழ்வும் தெரியவரும்...
அப்படிப்பட்ட காலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பாக ஒரு மாலை நேரத்தில் சரியாக 6 மணிக்கு ரஜினிகாந்த் பேசிய ஒரு 15 நிமிட பேச்சு சன்டிவியில் ஒளிபரப்பப்பட்டது... ஒட்டுமொத்த தமிழ்நாடும் டிவிக்கு முன்னால் அமர்ந்து இமைகொட்டாமல் பார்த்தது... பெரும்பாலான வீடுகளில் டிவியை எடுத்து வீட்டுக்கு வெளியே வைத்து தெருமக்கள் பார்ப்பதற்கு உதவினர்.. சாலைகளில் நடமாட்டமே இல்லாமல் மொத்த தமிழகமும் டிவி முன்னால் இருந்தது...
அந்த 15 நிமிட பேச்சு அதற்கடுத்த கால்நூற்றாண்டு கால தமிழ்நாட்டு அரசியலின் தலையெழுத்தையே தலைகீழாக திருப்பி போட்டது...
அசுர பலத்தோடு அசைக்க முடியாத ஆட்சியில் அமர்ந்திருந்த ஜெ படுதோல்வி அடைந்தார்... அதற்கு பின்னரான அவரது 20 வருட வாழ்க்கையில் தனது படாடோப வாழ்க்கையை மாற்றி மக்களுக்காகவே வாழும் தவ வாழ்வை மேற்கொள்ள அந்த தோல்வியே முழு முதற்காரணமாக அமைந்தது...
வைகோ ஏற்படுத்திய செங்குத்து பிளவினால் பலவீனப்பட்டு இனி எழவே முடியாது என்றிருந்த கலைஞருக்கு 1996ல் தனிப்பெரும்பான்மை ஆட்சியும், 2006ல் மைனாரிட்டி ஆட்சியும் கிடைக்க வழி ஏற்பட்டது...
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் , மிகப்பெரும் இளைஞர் கூட்டத்தின் ஆதரவுடன் களமிறங்கிய திராவிட இயக்க போர்வாள் வைகோ படுதோல்வியுடன் சரிவை சந்திக்க நேர்ந்தது...
இத்தனைக்கும் காரணகர்த்தாவான ரஜினிகாந்த் தனக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதைப்போல... தாமரை இலை தண்ணீரைப்போல இமயமலையில் தியானம் செய்து கொண்டிருந்தார்...
1996ன் களம் முற்றிலும் வேறானது... அன்றைக்கு ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல... மிகப் பெரும்பாலான மக்களும் ரஜினி நேரடி அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்பினார்கள்... ஜெ, கலைஞருக்கு இணையான தலைவராகவே ரஜினியை மக்கள் பார்த்தனர்..
1996ல் ரஜினி களம் கண்டிருந்தால் நிச்சயமாக முதலமைச்சர்... என்பதே அன்றைய யதார்த்த நிலை... மூப்பனாரின் பல பேட்டிகள் இதற்கு சாட்சி.. நம்பிக்கை இல்லாதவர்கள் ப.சிதம்பரம் , திருநாவுக்கரசர், கராத்தே தியாகராஜன் , சைதை துரைசாமி உள்ளிட்டோரை கேட்டு தெரிந்து கொள்ளலாம்...
அன்றைக்கு ரஜினி ஒரு பொதுக்கூட்டம் போட்டிருந்தாலே நேற்றைய விஜய் கூட்டத்தை விட பெரிய கூட்டம் கூடியிருக்கும்...
அன்றைக்கு இப்படியெல்லாம் விளம்பரம் செய்யவோ பில்டப் செய்து காட்டவோ சோஷியல்மீடியாக்கள் இல்லை...
இன்றைய விஜய்யை விட அன்றைய ரஜினிக்கு மிகப்பெரும் மக்கள் சக்தி ஆதரவு இருந்தது உண்மை...
ஆனால் காலம் தந்த அருமையான வாய்ப்பை ரஜினி பயன்படுத்திக்கொள்ளவில்லை... கலைஞர் மீதான மதிப்பினாலும், சோ அவர்களின் இன்புளூயன்சாலும் ரஜினி அன்றைக்கு அந்த முடிவை எடுத்தார்...
ரஜினி வந்திருந்தால் 1996ல் வந்திருக்க வேண்டும்... வந்திருந்தால் நிச்சயமாக முதலமைச்சர்...
கலைஞர், ஜெ மறைவுக்கு பிந்தைய 2021 களத்திற்கு அவர் வருகிறேன் என்று சொன்ன போது... வெற்றிடம் இருந்தது உண்மை... ஆனால் அதை நிரப்பும் அளவு அரசியல் அத்தனை சுலபமானதாக இருக்கவில்லை... (I.e. ரஜினியின் லீலாபேலஸ் உரை) 1996ல் தீவிரமாக இயங்கிய பல ரஜினி ரசிகர்களே இடைப்பட்ட 20 ஆண்டுகளில் பல்வேறு கட்சிகளில் பல பொறுப்புகளில் இருந்தனர்... 2020ல் பொதுக்கூட்டம போட்டிருந்தால் கூட்டம் கூடியிருக்கும்.. ஆனால் 1996 அளவுக்கு கூடியிருக்காது என்பதே யதார்த்தம்... ஒரு தலைமுறையே மாறிவிட்டது... பூத் கமிட்டிக்கு ஆட்கள் போடுவதே எவ்வளவு சிரமமாக இருந்தது என்பதை 2019-20ல் ரஜினி மக்கள் மன்றத்துக்காக பூத்கமிட்டி பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் தெரியும்... மக்களும் இந்த கட்சிக்கு வந்தால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்று நேரடியாகவே கேட்கும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தனர்...
விஜய் , சினிமாவில் ரஜினி தொட்ட உச்சத்தை தொடவில்லை..g 30 ஆண்டுகால திரையுலக வாழ்வில் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரேயொரு இன்டஸ்ட்ரீஹிட் (கில்லி 2004) மட்டுமே கொடுத்துவிட்டு திரையுலகில் இருந்து விலகுகிறார்... அரசியலில் 1996ல் ரஜினிக்கு கிடைத்த உச்சம் இன்றுவரை விஜய்க்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை.. நாளை நடப்பதை காலம் முடிவு செய்யும்...
ஆகவே விஜய் அரசியலை வைத்து ரஜினியை ஒப்பிடுவதோ , குத்திக்காட்டுவதோ, வேதனைப்படுவதோ சரியானதல்ல..
ரஜினி 45 வயதில் செய்யாமல் விட்டதை விஜய் 50 வயதில் செய்கிறார்.. ரிசல்ட் என்னவென்று இப்போதே சொல்ல முடியாது...
ஒருவேளை அவர் வெற்றிபெற்றால் அவரது ரசிகர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கலாம்.. ஒருவேளை தோற்றுப்போனால் வைகோ, ரஜினி, விஜயகாந்த், சீமான், அண்ணாமலை ஆகியோருக்காக செலவு செய்து கடனாளி ஆகி காணாமல் போனவர்களை விட அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் வாழ்க்கையை தொலைத்து காணாமல் போவார்கள்... அது நடந்தால் இன்றைக்கு ரஜினியை குத்திக்காட்டும் அதே வாய்கள் " ரஜினி பரவாயில்லப்பா.. தன்னுடைய ரசிகர்களை இந்த மாதிரி சிக்கலில் இழுத்து விடவில்லை" என்று பேசும்...
ஆகவே... நம்மால் முடியாமல் போனதை.. நாம் செய்யாத ஒன்றை இன்னொருத்தர் செய்ய வந்திருக்கிறார்... மனமிருந்தால் அவரை வாழ்த்தலாம்.. அது பெருந்தன்மை... இல்லையென்றால் அமைதியாக விலகிச்செல்லலாம்.. அது நல்ல மனிதனுக்கான இலக்கணம்...
வீணாக புலம்பிக்கொண்டிருப்பதையோ, ஆற்றாமையில் புகைந்து கொண்டிருப்பதையோ தவிர்ப்பது எல்லாருக்கும் நன்று...
✍தஞ்சைராஜேஷ்
Comments
Post a Comment