இனிமேல்* *வரும் காலங்களில்* *மரணங்கள் இப்படித்தான் இருக்கும்*....😟. *சென்னை பெசண்ட் நகரில்* *அமைந்திருந்தது அந்த பங்களா*...! *காலை 8மணி* *என்பதால்* *சாலை வழக்கப்படி பரபரப்பாக இருந்தது*..! *சரியாக 8.15க்கு அந்த வீட்டின் முன்*
*இனிமேல்*
*வரும் காலங்களில்*
*மரணங்கள் இப்படித்தான் இருக்கும்*....😟.
*சென்னை பெசண்ட் நகரில்* *அமைந்திருந்தது அந்த பங்களா*...!
*காலை 8மணி* *என்பதால்*
*சாலை வழக்கப்படி பரபரப்பாக இருந்தது*..!
*சரியாக 8.15க்கு அந்த வீட்டின் முன்*
*நகரின் பிரபலமான மருத்துவமனைக்கு*
*சொந்தமான ஆம்புலன்ஸ் வந்து நின்றது*..!
*அதிலிருந்து ஐஸ்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த* *உடலை* *மருத்துவமனை ஊழியர்கள் இறக்கி வீட்டிற்குள் வைத்துவிட்டு பணத்தைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டனர்*....!
*ஆம்*...!!
*அநத குடும்பத்தலைவர் சுப்பிரமணிதான் நேற்றிரவு மாஸிவ் அட்டாக்கில் உயிர் விட்டிருந்தார்*...
*பிணத்தின் கால்மாட்டில் வந்து நின்ற அவர் மனைவி மாலா கணவரின் முகத்தைப்பார்த்து கண் கலங்கினாள்*..,.!
*மணி 8.45*-
*நகரின் பிரபலமான பிரௌசிங் சென்டரிலிருந்து* *வந்த இரு நபர்கள் கேமிராவை பொருததி வீடியோ கான்பரன்சில்*
*அவரது உடல் உலகெங்கும் தெரிய*
*செய்துவிட்டு*
*சென்றனர்*...!!
*பக்கத்துவீட்டு*
*ராவ் வந்து துக்கம் விசாரித்துவிட்டு*
*சென்றார்*....!
*ஆஸ்திரேலியா*-
*சிட்னியில் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்த அநத வீட்டின் வீடியோ கான்பரன்சிங்கில்* *தெரிந்த தன் தந்தையின்* *உடலைப்பார்த்து விசும்பினாள்* *சுப்பிரமணியத்தின் மகள் மஞ்சு*..!
*மதியம் 1மணிக்கு வீட்டுக்கு சாப்பிட வந்த அவள் கணவன்* *ஈஸ்வரன்* *என்ன? Body தெரியறதா*?
*சரிசரி, எனக்கு சாப்பாடு போடு*.
*நான் அர்ஜெண்டா போகணும்*"
*என்று கூறிய படியே சாப்பாடு மேஜையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்*...
*சிங்கப்பூர் நகரின் சற்றே ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருந்தது கோபாலன் வீடு*....!
*சுப்பிரமணியத்தின் இரணடாவது புத்திரன்*..!!
*ஏண்டி! நாம ஒரு எட்டு போய்ட்டு வந்திருக்கலாமோ*..?" *என்றான் கோபாலன்*,
*சற்றே கவலையுடன்*..!
*சும்மா இருங்க*.!
*போன வருஷம்தானே போய்ட்டு வந்தோம்*..? *நாம போனா மட்டும் போன உயிர் வந்திடவா போகுது*..?
*பேசாம நெட்லயே பார்த்துக்கங்க*..!"
*என அழகாகப்பேசினாள் அவனது சகதர்மினி பாமா*..
*கோபாலன் மௌனமானான்*...!!
*USAவில் லாஸ்ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள* *ஏஞ்சல்ஸ் அபார்ட்மெண்டில்*
*45 வது மாடியில்* *இருந்தான் சீனிவாசன்*..!
*சுப்ரமணியத்தின் ஜேஷ்ட குமாரன்*..!!
*காலை செய்தியை கேட்டபோதிருந்தே* *கலங்கி போயிருந்தான்*.!
*கிருஷ்ணனின் மனைவி லிண்டா அவன் அருகே வந்து நின்று*
*அவனது கையைப்பிடித்து*
*கொண்டாள்*..
*Don't worry dear*
*You know, we can't do anything against the nature!!*" என்று *ஆறுதல் கூறினாள்*..!
*அவளைத்திருமணம் செய்துகொண்டதால்தான்*
*இன்று அவன் கிரீன்கார்டு சிட்டிசனாக அங்கே நிரந்தரமாகி இருக்கிறான்*...!!
*why are you looking sad dad*?
*Is anything going wrong*? " என்று *அவனைப்பார்த்து பாசத்துடன் கேட்டாள்* *அவனது 5வயது மகள் ரோஸலின்*..!
*அவனது கண்கள் மானிட்டர் மீதே நிலைத்திருந்தது*.......!!
*சென்னையில் காலை 10.30*..!
*பெசண்ட் நகரில் சுப்பிரமணியம் உடல் மீது*
*ஒரு பெரிய மாலையை*
*கொண்டுவந்து* *போட்டார் ராவ்*..!
*வெளியே யாரோ வரும் அரவம் கேட்டது*..!
*தான் போனவாரம் புதிதாய் வாங்கிய*
*BMW ல் சம்பந்தி சாந்தமூர்த்தியுடன்*
(*யெஸ், தட் பாமாவின் அப்பா*) *வந்து இறங்கினார் நீலகண்ட சாஸ்திரிகள்*....!
*அவரது கையில் லேப்டாப்பும்*
*சிலபல எலக்ட்ரானிக் டிவைஸ்களும் இருந்தன*....!
*சுப்பிரமணியத்தின் உடலைப்பார்த்ததும்* *கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்* *அவர் தன்னிடம் கூறியது சாஸ்திரிகள் நினைவுக்கு வந்தது*. *எப்படியாவது என் பெரிய மகன் கையால எனக்கு கொள்ளி வைக்கணும்* ! *அதுதான் எனக்கு கடைசி ஆசை சாஸ்திரிகளே*!" என்று *தம்மிடம் கூறியதை நினைவு கூர்ந்து நீண்ட பெருமூச்சு விட்டார்*..!...
*நேரம் பிற்பகல்*
*3..மணியை*
*தாண்டியது*.!
*இறுதி ஊர்வலத்திற்கு சாஸ்திரிகள் ஏற்பாடு செய்தபடி*
*அட்வான்ஸ் டெக்னாலஜியுடன் கூடிய*
*தனியார் வாகனம் வந்து நின்றது*.
*காரியங்கள் மளமளவென நடந்தன*.!
*ஓரிரு சடங்குகளை செய்தபின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது*..!
*BMWகாரில் வந்திருந்த நான்கைந்து உறவினர்கள்* *ஏறிக்கொள்ள அடுத்த பத்தாவது நிமிடம் சடலம் சுடுகாட்டை அடைந்தது*...
*மணி 4.30*
*சுடுகாட்டில் இருந்த உதவியாளன்*
*என்ன சாமி, இந்தக்காலத்துல யாருமே விறகு வெச்சி பொணத்தை எரிக்கறதே இல்ல*..! *கரண்ட்லயும்*
*gasலயும் தான்* *எரிக்கறாங்க* ...
*நீங்க என்னடான்னா வெறகே வேணும்னு கேக்கறீங்க*!" *என்றான் சாஸ்திரிகளிடம்*..!
*நீ தொணதொணன்னு பேசாம வேலையை பாருப்பா*!" என்றார் *சாஸ்திரிகள்*.
*விறகுக்கட்டைகள் அடுக்கப்பட்டு* *அதன்மீது சுப்பிரமணியம் உடல் வைக்கப்பட்டது*..
*சிலபல எலக்ட்ரானிக் வேலைகளை செய்தபிறகு*
*தனது லேப்டாப்பை ஆன் செய்து* *யாருடனோ வீடியோவில் பேசினார்*....
*உடலைச்சுற்றி பெட்ரோல் ஊற்றினார்*.
*பெட்ரோல் மீது பட்டாசு போன்ற ஒரு டிவைசை வைத்தார்*...
*வீடியோ காமிராவில்* *சில மந்திரங்களை சொல்லியபடி*
*சரி சீனிவாசன்*,
*நீ இக்னிட்டரை ஆன் பண்ணு*...!" *என்றார்*.
*திரையில் தெரிந்த* *அமெரிக்காவிலிருந்த சீனிவாசன் தன் கையிலிருந்த கேஸ் அடுப்பின் லைட்டர் போன்ற ஒரு வஸ்துவை*
*கம்ப்யூட்டர் மானிட்டரை நோக்கி* *கண்களில் கண்ணீருடன் அழுத்த*
*அடுத்த கணம் சென்னை பெசண்ட் நகரில் சுடுகாட்டில் கிடத்தப்பட்டிருந்த சுப்பிரமணியத்தின் உடலின் மீது ஊற்றியிருந்த பெட்ரோல் குபுக்கென பற்றியது*..!
ஒரு இரண்டு நிமிடம் அமைதியாக நின்றிருந்த அனைவரும்*
*பின் ஒவ்வொருவராக கலைந்தனர்கொள்ளி வைத்த சீனிவாசன் தன் தந்தையின் மீது பாசம் மேலிட அமெரிக்காவில் குமுறிக்குமுறி அழுதான்*...
இண்டர்நெட்டில் அப்பாவின் முகம் பல பழைய நினைவுகளை அவன் கண் முன் கொண்டு வந்தது*...!
சுப்பிரமணியத்தின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மனநிறைவுடன்* *தானும் வீட்டுக்கு கிளம்பினார் சாஸ்திரிகள்படித்தேன் பகிர்ந்தேன்* 😭😭😭😭😭😭😭😭😭😭
Comments
Post a Comment