தீப ஒளி திருநாள். தமிழ்நாட்டில் மெஜாரிட்டியான மக்கள் இந்த திருநாளை கொண்டாடுகிறார்கள். இந்த ஒரு திருவிழாவில் மட்டும் பல ஆயிரம் கோடிகளுக்கு வர்த்தகம் நடக்கிறது. இருப்பவர்கள், இல்லாதவர்கள், அதிகம் இருப்பவர்கள் அவரவர்கள் சக்திக்கு ஏற்ப பட்டாசு வெடித்து அனைவரிடமும் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.
0
🎊🎊🎉🎉🎉🪄🪄தீப ஒளி திருநாள். தமிழ்நாட்டில் மெஜாரிட்l llol loopடியான மக்கள் இந்த திருநாளை கொண்டாடுகிறார்கள். இந்த ஒரு திருவிழாவில் மட்டும் பல ஆயிரம் கோடிகளுக்கு வர்த்தகம் நடக்கிறது. இருப்பவர்கள், இல்லாதவர்கள், அதிகம் இருப்பவர்கள் அவரவர்கள் சக்திக்கு ஏற்ப பட்டாசு வெடித்து அனைவரிடமும் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில் இருப்பவர்கள் யாருமே இந்துக்கள் இல்லை, அவர்கள் தமிழர்கள் என்று பகுத்தறிவாதிகள் பலர் ஆராய்ச்சிகளை செய்து அறிக்கை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
என்ன இது முரண்பாடு. பகுத்தறிவு என்று வந்துவிட்டால் அங்கே முரண்பாட்டுக்கு இடம் இருக்கக் கூடாது. தமிழ்நாட்டில் இந்துக்களே இல்லை என்று சொன்னால் எதற்காக தீப ஒளி திருவிழாவை கொண்டாட வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. ஒருவேளை இந்த திருவிழா தமிழர்களுக்கானது என்று சொன்னால் அதை அனைத்து தமிழர்களும் நாங்களும் தமிழர்கள்தான் என்று சொல்லிக்கொள்பவர்கள் ஏன் கொண்டாடுவதில்லை.
தமிழ்நாட்டில் இந்துக்களே இல்லை இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது, அதை அழித்து விடுவோம் என்று சூளுரைக்கும் ஆட்சியாளர்களால் தீப ஒளித் திருவிழாவிற்கு எதற்காக விடுமுறை வழங்கப்படுகிறது.
தைரியம் இருந்தால் தீப ஒளி திருவிழாவிற்கு விடுமுறை கிடையாது என்று சொல்வது தானே பகுத்தறிவின் அடையாளம். அப்போது தானே முரண்பாடு இல்லாத கொள்கை வாதிகளாக இவர்களை ஏற்றுக் கொள்ள முடியும்.
அவர்களோடு சேர்ந்து நாமும் முரண்பாடுகளுடனேயே தீப ஒளி திருவிழாவை கொண்டாடுவது சரியான செயல் இல்லை.
இந்துக்கள் இல்லாதவர்கள் நமது பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதை நாம் உளமாற ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், இந்து என்ற ஒன்றே கிடையாது இவர்கள் யாருமே இந்துக்கள் இல்லை என்று சொல்பவர்கள், சொல்பவர்களை ஆதரிப்பவர்கள் சொல்லும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்களை நாம் ஏற்றுக் கொள்ளவே முடியாது. அது பச்சோந்திக்கு ஈடானது.
எனவே, நாம் ஒரு தீர்க்கமான முடிவோடு நான் இந்து, தீப ஒளி திருவிழா இந்துக்கள் பண்டிகை, இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அரசியலிலும், ஆட்சியிலும் அமர்வதற்கு தகுதி இல்லாதவர்கள் என்ற தீர்க்கமான முடிவுடன் இந்த தீப ஒளி திருவிழாவை தெளிவான பார்வையுடன் கொண்டாடுவோம்.
நான் இந்து என்ற அடையாளத்துடன் நமது பண்டிகையான தீப ஒளித் திருவிழா வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். 🪄🪄🪄🎉🎉🎊🎊
ப்ரசாத் செல்லப்பா
Comments
Post a Comment