இன்று ஆர்எஸ்எஸ் விருட்சமாய் பரவி நிற்பதில் பெரிய ஆச்சர்யம் இல்லை. ஆனால் ஆர்எஸ்எஸ் ஒரு தீவிரவாத இயக்கம் என்பது போல ஒரு பிம்பம் கட்டமைக்கப் பட்ட காலத்தில் ஒரு ஆர்எஸ்எஸ் பிரமுக் என்று வெளியே சொல்லி கொள்ளவே பயந்த கால கட்டத்தில் ஷாகா நடத்தி ஆர்எஸ்எஸ் என்னும் விருட்சத்திற்கு விதை ஊன்றியவர்கள் சிலர். அவர்களில் ஒருவர் ஐயா கேப்டன் எஸ். பி. குட்டி அவர்கள்...
இன்று ஆர்எஸ்எஸ் விருட்சமாய் பரவி நிற்பதில் பெரிய ஆச்சர்யம் இல்லை.
ஆனால் ஆர்எஸ்எஸ் ஒரு தீவிரவாத இயக்கம் என்பது போல ஒரு பிம்பம் கட்டமைக்கப் பட்ட காலத்தில் ஒரு ஆர்எஸ்எஸ் பிரமுக் என்று வெளியே சொல்லி கொள்ளவே பயந்த கால கட்டத்தில் ஷாகா நடத்தி ஆர்எஸ்எஸ் என்னும் விருட்சத்திற்கு விதை ஊன்றியவர்கள் சிலர்.
அவர்களில் ஒருவர் ஐயா கேப்டன் எஸ். பி. குட்டி அவர்கள்...
அவரை போன்றவர்கள் ஊன்றிய விதையினால்தான் இன்று அண்ணாமலை சிங்கமாக கர்ஜித்து கொண்டிருக்கிறார்.
ஆர்எஸ்எஸ்க்கும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.
எங்கெல்லாம் இந்துக்கள் மாற்று மத சக்திகளால் அளவிற்கு அதிகமாக பாதிக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் ஆர்எஸ்எஸ் தீவிர வளர்ச்சி அடைந்தது.
வடமாநிலங்களில் ஆர்எஸ்எஸ் விழிப்புடன் இருக்க அதுவே காரணம். அதேபோல் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில், மத மாற்ற சக்திகளால் இந்துக்களும், இந்து மதமும் அதிகம் பாதிப்பிற்கு உள்ளானதால் அங்கும் ஆர்எஸ்எஸ் பரவலாக இருந்தது.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையிலும் துணிச்சலுடன் தங்கள் சொந்த வாழ்க்கை, சொத்துக்கள் என அனைத்தையும் சங்கத்திற்கு தாரை வார்த்தவர்கள் பலர்.
எம்.ஆர்.காந்தியும் அப்படியானவர். ஆனால் எம்.ஆர்.காந்தியை தெரிந்த அளவிற்கு எஸ்.பி. குட்டி என்பவரை தெரிந்திருக்க நியாயமில்லை.
கேப்டன் எஸ்.பி. குட்டி என்று அன்போடு அழைக்கபட்ட இவரின் பெயர் ராமன். முன்னாள் ராணுவ அதிகாரி.
எழுத்திலும் பேச்சிலும் சிறந்தவர். பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்துக்களின் படுகொலை, அரசியல்வாதிகளின் கயவாளித்தனம் என அத்தனையையும் அவர் நூல்களில் புட்டு புட்டு வைத்திருப்பார்.
இவரின் எழுத்துக்கள்தான் எனக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். பத்தாம் வகுப்பில் அறிமுகமாகியது இவரது புத்தகங்கள். ஒரு முறை ஆர்எஸ்எஸ் கேம்ப் போய்ட்டு வரும்போது அப்பா வாங்கி வந்த சில புத்தகங்களில் அவரின் சில புத்தகங்களும் அடக்கம் .
அந்த அட்டை படங்களே ஆயிரம் கதை சொல்லும். மறக்குமோ அந்த மாபாதகம் படித்தால் பல நாள் தூக்கம் கெட்டு விடும், அவ்வளவு வீரியம் மிக்க எழுத்துக்கள்.
"என்று காண்போம் எங்கள் சிந்துவை " ரத்த கண்ணீர் சிந்த வைக்கும்.
வாரமலர், தேவி, மங்கையர் மலர் என்ற வாசிப்பு பழக்கத்தை தேசியம் குறித்த எழுத்துகள் மீது திருப்பியது அவரது புத்தகங்கள்தான் .
அன்னார் இன்று இப்பூவுலகை விட்டு இறைவன் பாதம் சரணடைந்துள்ளார். இது போன்ற மனிதர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, சரித்திர தலைவர்கள்.
அவர்களால் தான் இன்று ஏதோ கொஞ்சமாவது ஹிந்து எழுச்சி மக்களிடம் இருக்கிறது.
அதற்கு முதல் படி எடுத்து வைத்ததவர்களில் கேப்டன் எஸ்பி குட்டி முதன்மையானவர்.
அவரது நூல்கள் மட்டுமல்ல, அவரது வாழ்வும் பெரும் சரித்திரம். ஒவ்வொரு இந்து இளைஞனும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
அன்னாரின் ஆன்மா இறைவன் பாதத்தில் இளைப்பாறட்டும். அவரின் ஆசை கனவு லட்சியம் மற்றும் எல்லாமுமான அகண்ட பாரதம் விரைவில் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்...
ஓம் ஷாந்தி...
பாரத் மாதாகி ஜெய்...
Comments
Post a Comment