தமிழ் சினிமாவில் பிராமணர்கள்.. கமலஹாசன்.. தன் ஜாதியை தானே கேவலப்படுத்திக் கொள்ளும் வகையில் படம் எடுத்த பாலச்சந்தரின் சிஷ்யன். அரங்கேற்றம் படத்தில் இவரும் தானே இருந்தார். பாலச்சந்தரின் தொற்று இல்லாமலா போகும். மீண்டும் கோகிலா , மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, பம்மல் கெ சம்மந்தம், பஞ்சதந்திரம், தசாவதாரம் வரை இவர் பிராமணராக நடிப்பதற்க்கும் , பிராமண கதாபாத்தை கதையில் உபயோகிப்பதற்கும் வஞ்சனை காட்டியதே இல்லை.
தமிழ் சினிமாவில் பிராமணர்கள்..
கமலஹாசன்..
தன் ஜாதியை தானே கேவலப்படுத்திக் கொள்ளும் வகையில் படம் எடுத்த பாலச்சந்தரின் சிஷ்யன்.
அரங்கேற்றம் படத்தில் இவரும் தானே இருந்தார். பாலச்சந்தரின் தொற்று இல்லாமலா போகும். மீண்டும் கோகிலா , மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, பம்மல் கெ சம்மந்தம், பஞ்சதந்திரம், தசாவதாரம் வரை இவர் பிராமணராக நடிப்பதற்க்கும் , பிராமண கதாபாத்தை கதையில் உபயோகிப்பதற்கும் வஞ்சனை காட்டியதே இல்லை.
இவர் தயாரித்த நள தமயந்தி திரைப்படத்திலும் பிராமண பாத்திரமே முக்கிய சமையல் பாத்திரம். கேலிக்கும் காமெடிக்கும் பயன்படுத்தப்பட்டது. மகளிர் மட்டும் என்ற நகைச்சுவைப் படத்தில் ஊர்வசி வேடத்தில் பிராமண பாஷை படம் முழுக்க எல்லோரையும் சிரிக்க வைத்தது. பிராமண பாஷையை ஒரு நகைச்சுவை பாசியாக மாற்றியதில் கமல்ஹாசனுக்கு முக்கிய பங்கு உண்டு.
ஒரு துணிக்கடையில் இரண்டு மாமிகள் பிராமண பாஷையில் பேசிக் கொண்டிருந்தால் அங்கு இருக்கும் சேல்ஸ் கேர்ள்ஸ்களுக்கு பொத்துக் கொண்டு சிரிப்பு சிரிப்பாய் வருகிறது. அதற்கு எந்த காரணமும் இல்லை அவர்கள் ஒன்றும் ஜோக் அடிக்கவில்லை அந்த ரெண்டு மாமிகள் தங்கள் குடும்ப விஷயத்தை பேசிக் கொண்டே துணி எடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு ஒரு பிராமண பாஷையில் பேசிக் கொள்வதே வெறும் சிரிப்பாக இருக்கிறது அவர்களைப் பார்த்து நகைக்கிறார்கள் காமெடியாக்குகிறார்கள் என்றால் பிராமண ஜாதியினரின் வாழ்க்கையே சந்தி சிரிக்க வைக்கப்பட்டு இருக்கிறது கமலஹாசன் போன்ற சினிமாக்காரர்களால்.
அவ்வை சண்முகி , பம்மல் கெ சம்மந்தம், தசாவதாரம் ஆகிய படத்தில் எல்லா கதாநாயகிகளும் பிராமண கதாபாத்திரமே. அவர்கள் சினிமா விதிப்படி பிராமணர் இல்லாத ஹீரோவைத்தான் கல்யாணமும் செய்வர். சரி அப்படி ஏன் பிராமண கதாபாத்திரத்தையே இவர்கள் துரத்த வேண்டும். ஜாதிகள் இல்லாமல் படம் எடுக்கவே முடியாதா? அப்படி எடுத்தாலும் பிராமண ஜாதிதான் எல்லோராலும் காண்பிக்கப் பட வேண்டுமா. ஏனென்றால் அவர்களுக்கு தானே அடையாளம் இருக்கிறது. ஒரு மடிசார், ஒரு நாமம், ஒரு பாஷை. இதே அடையாளம் இன்னும் பல ஜாதியினருக்கு இருக்கிறதே! வேறு மத பெண்களுக்கு இருக்கிறதே! அட அவர்கள் எல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் பிராமணர்கள் என்றால் எதிர்க்க ஆளில்லை. எதிர்த்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். அதுனால யாரு வேண்டுமானாலும் பிராமணர்களின் அடையாளங்களை திரையில் உபயோகப்படுத்தி வேண்டுமட்டும் கேலி செய்யலாம்.
ஆனால் இத்தனையும் செய்த கமலஹாசன்...
பஞ்சதந்திரம் படத்தில் வேண்டும் என்று ஒரு பிராமண கதாபாத்திரத்தை திணித்து அந்த யூகி சேது கதாபாத்திரம் பாரில் குடித்துக்கொண்டே சிக்கன் சாப்பிடுவது போன்ற காட்சியை வலியை திணிக்க தெரிந்த மலஹாசனுக்கு தானே தயாரித்த மேஜர் முகுந்தன் சம்பந்தப்பட்ட படத்தில் அந்த மேஜர் முகுந்தனை ஒரு பூணூல் உடன் காட்டுவதற்கு மனது வரவில்லை என்பதே இவர்களது பிராமண துவேஷத்திற்கு எடுத்துக்காட்டு
கமல்ஹாசனைப் பொருத்தவரை பிராமணர்களை படத்தில் உபயோகித்து, கலப்பு திருமண சடங்கும் செய்து வைத்து பிராமண கலாச்சார அழிப்பு கூட்டத்தில் நானும் ஒருவன் என்பதை வெளிப்படுத்த தவறியதில்லை.
மேஜர் முகுந்தனே தன்னை தன் சாதியுடன் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினாரா அல்லது அவரது அப்பா அப்படி விரும்பி இருந்தாரா என்பதெல்லாம் வேறு கதை. மேஜர் முகுந்தனை நாம் போற்றுவோம்.
ஆனால் தமிழ் சினிமாவின் பிராமண விரோத போக்கை இங்கே நாம் இந்த நேரத்தில் அடையாளப்படுத்தி காட்ட வேண்டிய அவசியம் உள்ளது
பிராமண துவேஷம் என்பது தமிழ்நாட்டில் ஒரு தொற்று வியாதி.
Comments
Post a Comment