அமரன் திரைப்படம் ! இது அந்த திரைப்படம் பற்றிய பதிவு அல்ல. அது காட்டி நமக்குள் நடக்கும் சின்ன சலசலப்பு குறித்த பதிவு ! நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான ஆத்மார்த்தமான தேச பக்தி படம் தமிழில் வந்திருக்கிறது. அதை தமிழ் சமூகம் கொண்டாடித்தீர்த்திருக்கிறது.






அமரன் திரைப்படம் ! 


இது அந்த திரைப்படம் பற்றிய பதிவு அல்ல. அது காட்டி நமக்குள் நடக்கும் சின்ன சலசலப்பு குறித்த பதிவு ! 


நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான ஆத்மார்த்தமான தேச பக்தி படம் தமிழில் வந்திருக்கிறது. அதை தமிழ் சமூகம் கொண்டாடித்தீர்த்திருக்கிறது. 

இதுபோன்ற நல்ல திரைப்படங்கள் இனி அதிகமான அளவில் வெளிவர இது தூண்டும். 


நான் இன்னும் அந்தப் படத்தை பார்க்கவில்லை. என் மகனை அழைத்து செல்வதாய் வாக்கு கொடுத்திருக்கிறேன். நிற்க.


இந்திய தேசத்தின் முதல் சுதந்திரப்பிரகடமான ஜம்பு தீவு பிரகடனம் தொடங்கி, நம் தேசத்தின் முதல் சுதேசி இயக்கம் வ உ சி யில் தடம் பதித்து , வெள்ளையர் மீதான முதல் துப்பாக்கி சூடு வீரன் வாஞ்சியில் நீண்டு, நம் தேசத்தின் முதல் ஆயுதம் ஏந்திய சுதந்திர குழு நீலகண்ட பிரம்மச்சாரி, சுதந்திர அக்னியை ஏற்றி வைத்த பாரதி என 

இந்திய சுதந்திர தாகத்துக்கு வித்திட்ட தமிழக மண்ணின் தேச பக்தி இன்னும் செத்துவிடவில்லை என இந்த கொண்டாட்டங்கள் காட்டுகின்றன. 


அதில் என்ன சலசலப்பு , அதுவும் சங்கிகளுக்குள் ! 


தேச பக்தி என வந்துவிட்டால் கொண்டாடி தீர்ப்பவர்கள் தானே சங்கிகள் ! 


ஒப்பற்ற மாவீரன் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்கள் ஒரு பிராமணர் என்பதை பதிவு செய்யவில்லையே என்கிறது ஒரு தரப்பு ! 


சாதி கடந்து இந்துவாய் இணைவோம் என்பதுதானே இந்துத்துவத்தின் அடிநாதம்! 

அதில் இதென்ன இடைச்செருகல் ! என்கிறது ஒரு தரப்பு. 


இரண்டுமே ஒரு வகையில் நியாம்தான் என்றாலும் இரு தரப்பும் சிந்திக்க வேண்டிய சில இருக்கிறது. 


தன் சமூகம் அடையாளப்படுத்தப்படவில்லை என்பதல்ல அந்த தரப்பின் ஆதங்கம். மாறாக, இரண்டு தலைமுறைகளாக வன்மம் தன் தலையில் கொட்டப்பட்ட வலியே அதன் காரணம்!  “பார்ப்பான் விவசாயம் செய்வதில்லை , பார்ப்பான் ராணுவத்திற்கு போவதில்லை” என திராவிட கொடுக்குகளால் கொத்தப்பட்ட அவதூறு விஷத்திற்கு விடையாய் இருந்திருக்குமே என்பதே அவர்கள் ஆதங்கம். ‘சூரைரை போற்று’ போன்ற கயவானித்தனங்களினால் ஏற்பட்ட வலி அது.


அதேபோல மறுதரப்பின் நோக்கமும் அறவோர் என்று வள்ளுவனால் அழைக்கப்பட்ட அந்தணர் சமூகத்தை அவமானப்படுத்துவதல்ல, நீண்ட நாள் திராவிட இருளால் இருண்டு கிடந்த தமிழ் திரையுலகம் ‘தேசியம்’ எனும் தெய்வீக ஒளியால் புகழ்பெரும் நேரம் சங்கடம் எதற்கு? என்பதுவே காரணம் . 


இரு தரப்பும் மறுதரப்பின் நியாயம் பற்றி சிந்தித்தால் நன்மை பிறக்கும். 


மேஜர் முகுந்த் வரதராஜன் போன்ற மாவீரனை சொந்தம் கொண்டாடி மனம் மகிழும் அந்த பெரும்சமூகம் , கமலஹாசன் போன்றோரை சொந்தம் கொண்டாடி மகிழவில்லையே! 


தேசம்தான் தெய்வம் என்ற புரிதலே இதற்கு காரணம் ! தேச பக்தி பாதையில் சென்ற மகாத்மாக்கள் அந்தந்த சமூகத்தின் பெருமையாய் இருப்பது அருமை தானே?! 


தேவர் சமூகம் பசும்பொன் தேவரை கொண்டாடுவது போல , அஞ்சலை அம்மாளையும் அர்த்தநாரீச வர்மா ஐயாவையும் வன்னியர் சமூகம் கொண்டாடுவதை போல , 

வ உ சி் அவர்களை பிள்ளை சமூகம் கொண்டாடுவது போல , அண்ணலை பட்டியல் சமூகம் கொண்டாடுவது போல , 

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது