தமிழகம் ; இரண்டரை இலட்சம் ஏக்கர் கோவில் நிலங்களை ஆட்டையை போட்ட டிவிஎஸ்., தினமலர், சிவசைலம், ராம்கோ சிமெண்ட், திருவாடுதுறை ஆதினம் உள்ளிட்ட ஐந்து கோமான்கள்- 75 வயது முதியவர் ஹரிஹரன் ஆலய பாதுகாப்பு இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு..!?
🇸🇹🇲 🇳🇪🇼🇸
*_16 DEC 2024_*
_*தமிழகம் ; இரண்டரை இலட்சம் ஏக்கர் கோவில் நிலங்களை ஆட்டையை போட்ட டிவிஎஸ்., தினமலர், சிவசைலம், ராம்கோ சிமெண்ட், திருவாடுதுறை ஆதினம் உள்ளிட்ட ஐந்து கோமான்கள்- 75 வயது முதியவர் ஹரிஹரன் ஆலய பாதுகாப்பு இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு..!?*_
*தலைமை செயலாளரே, ”இந்து அற நிலையத் துறை கோவில்கள், சமய நிறுவனங்கள் சி.ஏ.ஜி., மற்றும் டி.பி.சி., சட்டத்தின் கீழ் வராதா? இது என்ன கொடுமை.*
*கோவில் சொத்தை செல்வாக்கான தனி நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து மக்கள் வரிப்பணத்தில் இந்து சமய அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு, இத்துறையின் வழிவரும் அனைத்து ஊழியர்களுக்கும் மாத ஊதியமும் வழங்கிக் கொண்டிருக்கிறது.*
*அவ்வாறான இந்து சமய அறநிலையத்துறை இருந்தும் கூட அது தற்போது எலிப்புழுக்கை அளவிற்கு கூட பிரயோஜனம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.*
*இதை மெய்ப்பிக்கும் விதமாக, டிவிஎஸ், தினமலர், சிவசைலம், ராம்கோ சிமெண்ட், திருவாவடுதுறை ஆதீனம் போன்றவர்கள் கோயில் சொத்தான சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் நிலங்களை எப்படி ஆட்டையை போட்டனர்?*
*_மேற்கண்ட இவர்கள் எல்லாம் எம் இந்துக்களது கோயில் சொத்தை வைத்து, விற்று தொழிலதிபர்கள் ஆனார்களா? கோயில் சொத்தை அபகரிக்கவே தொழிலதிபர்கள் எனும் அவதாரம் எடுத்தார்களா?_*
_*இங்கே எம் மக்கள் வாழ வழியின்றி தெருவில் வசிக்கிறார்கள் உங்களுக்கு கோயில் சொத்தான 140 ஏக்கரில் சொகுசாய் ஆடம்பரமாய் பண்ணை வீடு ஓர் கேடா?*_
*அந்த காலத்தில் தர்ம சிந்தனையுள்ள நல்லோர்கள் தங்கள் சொத்தின் ஒரு பகுதியை கோவிலுக்கு தருவது ஒரு வழக்கமாக கடைபிடிக்கப்பட்டது.*
*அந்த வகையில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தமிழ் நாட்டில் கோவில்களுக்கு தானமாக தரப்பட்டுள்ளது.*
*அவற்றை அந்தக் கோவிலில் உள்ள அர்ச்சகர்களும், உள்ளூர் முக்கியஸ்தர்களும் அபகரித்து வந்தனர் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்ததையடுத்து இந்து அறநிலையத் துறை உருவானது.*
*அப்படி உருவான இந்து அறநிலையத்துறை ஓரளவு நில அபகரிப்பை கட்டுப்படுத்தினாலும், பெரும் செல்வாக்கு மிக்க சில செல்வாக்கான நபர்கள் கோவில் சொத்துக்களை அபகரித்ததை அரசால் மீட்கவே முடியவில்லை என்பது தான் வருத்தமான உண்மையாகும்.*
*இந்த உண்மைகள் வெளியே தெரியக் கூடாது என்பதால் தான் ”சிஏஜி, டிபிசி சட்டத்தின் கீழ் அறநிலையத் துறை வராது” என்கிறதா எனத் தெரியவில்லை.*
*முதன்மை கணக்காய்வுத் தலைவர் (தணிக்கை2) கோ.ப.ஆனந்த் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தினார்.*
*அது என்னவென்றால், ”நாங்கள் இந்து சமய அற நிலையத் துறையின் சொத்துக்களின் மேளாண்மை என்ற தலைப்பில் தணிக்கை மேற்கொள்ள முயன்றோம்.*
*இது குறித்து நாங்கள் இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகளிடம் ஆவணங்கள் கோரிய போது,*
*சி.ஏ.ஜி., தணிக்கை செய்ய அவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை. எந்த ஆவணங்களையும் வெளிப்படுத்த தயாரில்லாதவர்களாக இருந்தனர்.*
*இது குறித்து நாங்கள் தலைமை செயலாளரிடம் முறையிட்ட போது அவர், ”இந்து அற நிலையத் துறை கோவில்கள், சமய நிறுவனங்கள் சி.ஏ.ஜி., மற்றும் டி.பி.சி., சட்டத்தின் கீழ் வராது.*
*ஆகவே, நாங்கள் உடன் பட மாட்டோம் என தமிழ்நாடு அரசு மறுக்கிறது” எனக் கூறியுள்ளார்.*
*இது குறித்து திருமலைக் கொழுந்துபுரம் பிராமண மஹாஜனத்தின்(Kadayanallur Braamana Mahaajnam Manippa Kattalai) டிரஸ்டியும், ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் தலைவருமான எஸ்.ஹரிகரனிடம் (75) பேசிய போது,*
*”கோவில் சொத்துக்களை மீட்கக் கோரி பல ஆண்டுகளாக நான் நீதிமன்றப் படிகளில் ஏறி, இறங்கி வருகிறேன். காவல்துறையில் பல முறை புகார் மனுக்களை ஆதாரத்துடன் அளித்துள்ளேன்.*
*அந்த வகையில் அன்றைய டிஜிபி லத்திகாசரண், ஏடிஜிபி உமா மகேஷ்வரி ஆகியோர் நான் தந்த ஆவணங்கள்படி தீவிர விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்து அரசாங்கத்திடம் அளித்துள்ளனர்.*
*அதன் சாராம்சம் என்னவென்றால், திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டுமே சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை இந்து சமய அற நிலையத் துறையிடம் இருந்து செல்வாக்கான ஐவர் அபகரித்து ஏஜெண்ட்களை வைத்து போலி பட்டா, சிட்டாக்களை உருவாக்கி,*
*அந்த போலி ஆவணங்கள் மூலமாக கணிசமான நிலங்களை விற்றும் விட்டனர்.*
*இந்த வகையில் எங்கள் திருமலை கொழுந்துபுரம் பிராமண மகாஜன அறக்கட்டளைக்கு அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தால் வழங்கட்ட கோவில் சொத்துக்கள் பலவற்றை எங்கள் நெருங்கிய உறவினர்களான தினமலர் குழுமத்தாரே அபகரித்துள்ளது தான் என்னை அடங்கமாட்டா ஆற்றாமையில் ஆழ்த்தியுள்ளது.*
*மேலும், தினமலர் குழுமத்துடன் பாரம்பரிய தொழில் நிறுவனமான டிவிஎஸ் , சிவசைலம், ராம்கோ சிமெண்ட், திருவாவடுதுறை ஆதினம் ஆகியவை தான் இந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கோவில் நிலங்களை அபகரித்தவர்கள்.*
*இது எப்படி நிகழ்ந்தது என்றால், திருநெல்வேலியில் வைகை சுப்பிரமணிய தம்பிரான் அவர்கள் கண்காணிப்பில் இருந்த ஆலய சொத்துக்களை எங்கள் திருமலைக் கொழுந்து மகாஜன அறக்கட்டளைக்குரிய இடங்களையும் நாங்கள் பராமரிப்பு பணி மேற்கொள்கிறோம் என கேட்டு வாங்கி,*
*கூட்டுச்சதி, போலி ஆவணம் உள்ளிட்ட மோசடிகளை அரங்கேற்றி, தினமலர் வைத்தியநாத ஐயரும் , ஏ.சிவசைலமும், ராம்கோ ராமசாமி ராஜாவும், டிவிஎஸ் ஐயங்காரும், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகளும் அபகரித்துள்ளனர்.*
*இதை நான் நீதிமன்றத்திலேயே பகிரங்கமாக தெரிவித்துள்ளேன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நான் ஏறாத கோர்ட் இல்லை. பேசாத அதிகாரி இல்லை. காவல் துறையிலும், அற நிலையத் துறையிலும் தான்,*
*இதில் என் நெருங்கிய உறவினர்களான தினமலர் குழுமம் மட்டுமே 70,000 ஏக்கர் நிலங்களை அபகரித்து ஏஜெண்டுகளை வைத்து விற்றுள்ளனர்.*
*தற்போது அவர்கள் வசம் சுமார் 200 ஏக்கர் நிலங்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை விற்றுவிட்டது தினமலர் குழுமம்.*
*இவர்கள் மீது எப்.ஐ.ஆர் எல்லாம் போட்டு விசாரணைகள் நடந்து நீதிமன்றமே ஆணையிட்டும் கூட எந்த ஆட்சியாளர்களும் தினமலர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.*
*காரகுறிச்சியில் தினமலர் குடும்பத்தினர் வைத்திருக்கும் சொகுசு பண்ணை 140 ஏக்கர் நிலம் என்பது மூன்று கோவில்களுக்கு பாத்தியப்பட்டதாகும்.*
*அம்பா சமுத்திரத்தில் சிவசைலம் வசம் உள்ள ஜவுளி மில் என்பது கோவில் சொத்து தான்.*
*இந்த சிவ சைலத்திடம் வேலைக்கு சேர்ந்து அவரிடம் ஆட்டையை போட்டு நிலத்தை அபகரித்துக் கொண்டவர் இந்தியா சிமெண்ட் சீனிவாசனின் அப்பா நாராயணசாமியாகும்.*
*மதுரை இரயில்வே ஸ்டேசன் எதிரில் கோவிலுக்கு வரும் யாத்தீரீகள் தங்குவதற்காக உருவாக்கப்பட்ட மங்கம்மா சத்திரத்தை டிவிஎஸ் குழுமம் ஆட்டையை போட்டதை இன்று வரை யாராலும் மீட்க முடியவில்லை.*
*முன்னாள் தேனி மாவட்ட ஆட்சித் தலைவரும், அறநிலையத் துறை ஆணையரான க.வீ. முரளிதரன் இருந்த போது அவர் நேர்மையாக சில நடவடிக்கை எடுத்ததன் பலனாக, அவரை தூக்கிவிட்டு குமரகுருபனை போட்டு கண்ட்ரோலர் ஆப் அத்தாரிட்டி ஆக்கினார்கள்.*
*அவருக்கு ரூ.250 கோடிகள் தந்து பெரும்புள்ளிகள் சமாளித்து விட்டனர்.*
*இதை நான் பலமுறை எழுதியும், பேசியும் எந்த நடவடிக்கையும் இல்லை.*
*இதனால் என் மீது மூன்று முறை கொலை முயற்சி நடந்துள்ளன.*
*அறநிலையத் துறை கட்டிடங்கள் மற்றும் நிலங்களை அபகரித்து வைத்திருக்கும் பெரிய மனிதர்களிடம் இவர்களால் வாடகை கூட வசூலிக்க முடிவதில்லை.*
*அப்புறம் எதற்கு அரசாங்கம், அதிகாரிகள்? அவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம்? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.*
*தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி, இந்த பெரும் புள்ளிகளை நெருங்கவே முடியாத நிலையே இன்று வரை தொடர்கிறது.*
*என்னைப் போன்ற சாமானியனால் மனு ஆயுதப் போராட்டம் நடத்தி புகார்கள் மட்டுமே தர முடியும் வேறென்ன செய்ய முடியும் என புலம்பி வருகிறார்.*
*கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோயில் சொத்துக்களை மீட்க போராடும் 75 வயது பெரியவர் ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் மாநில துணை தலைவர் எஸ்.ஹரிகரன்.*
*கோயில் சொத்தை விற்று தொழிலதிபர்கள் ஆனார்களா..?*
*கோயில் சொத்துக்களை அபகரிக்கவே தொழிலதிபர்கள் அவதாரம் எடுத்தார்களா..?*
_*தேனி மாவட்ட நிருபர் & மக்கள் அதிகாரம்/சட்ட தமிழ் மாத இதழ்களின் இணை ஆசிரியர் & தமிழ்நாடு சமூகநல பத்திரிக்கையாளர் கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர்- வேப்பம்பட்டி சுகன்யா த.முரளிதரன்.*_
9597226752
6380097960
Comments
Post a Comment