ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் என்ற ஆன்மீக ஆர்வலர் கைது செய்யப்பட்டு உள்ளார்.* *ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் அவர்களுக்கு நாம் அனைவரும் உதவி செய்ய வேண்டும்*
*ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் என்ற ஆன்மீக ஆர்வலர் கைது செய்யப்பட்டு உள்ளார்.*
*ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் அவர்களுக்கு நாம் அனைவரும் உதவி செய்ய வேண்டும்*
*பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேச வேண்டும்*
*ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் விடுதலை பெற நாம் அனைவரும் முயற்சி செய்வோம்.*
ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் கைது.
நாம் என்ன செய்ய வேண்டும்?
*1. கைது செய்யப்பட்டவர் எந்த செக்ஷன்களின் கீழ் கைது செய்யப்பட்டார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.*
*2. எந்த ஊரில், எந்த கோர்ட்டில், வழக்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.*
*3. எந்த ஊரில், எந்த சிறையில் அடைக்கப்பட்டார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.*
*4. வழக்கு உள்ள கோர்ட்டில்,ஒரே ஒரு வக்கீல் ஜாமீன் மனு விண்ணப்பிக்க வேண்டும். (ஒன்றுக்கு மேற்பட்ட வக்கீல்கள், ஒன்றுக்கு மேற்பட்ட ஜாமீன் மனு தாக்கல் செய்ய கூடாது)*
*5. நல்ல வக்கீலாக வைத்து வாதாட வேண்டும்.*
*6. வழக்கில் வெற்றி பெற்றவுடன் நிபந்தனை ஜாமீன் கிடைக்கும். இரண்டு பேர் ஜாமீன் கையெழுத்து போட வேண்டும்.*
*7. ஜாமீன் கையெழுத்து போடுபவர்கள் ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டு, மற்றும் மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வைத்திருக்க வேண்டும். நேரில் வந்து கோர்ட்டில் கையெழுத்து போட வேண்டும்*
*8. ஜாமீன் கையெழுத்து போடுபவர்களுக்கு, கைது செய்யப்பட்டவர் வீடு முகவரி, குடும்ப உறுப்பினர்கள் பெயர், மற்றும் கைது செய்யப்பட்டவர் குறித்து முழு விவரம் தெரிந்து இருக்க வேண்டும்.*
*9. ஜாமீன் ஆர்டரை வாங்கி கொண்டு, ஜெயிலுக்கு சென்று பகல் நேரத்தில் கொடுத்தால் மட்டுமே அன்றே விடுதலை ஆக வாய்ப்பு உண்டு.*
*10. கைது செய்யப்பட்டவுடன் அவரது குடும்பத்தினரை சந்தித்து அவர்களோடு இணைந்து ஜாமீன் முயற்சி செய்ய வேண்டும்.*
.................................................
கைது செய்யப்பட்டவர் குறித்து தேவை இல்லாத விமர்சனங்கள் நாம் செய்யக்கூடாது. அவர் மீது உள்ள சிறிய குறைகளை நீங்கள் பெரிது படுத்தாதீர்கள்.
ஜாமீனில் விடுதலை செய்ய முயற்சி செய்வது மட்டுமே நமது பணி.
பிராமணர்கள் யாராவது கைது செய்யப்பட்டால் யாரும் உதவி செய்ய வரமாட்டார்கள். அரசியல் கட்சிகளும் உதவி செய்ய மாட்டார்கள். பிராமணர் சங்கங்களும் உதவி செய்ய வரமாட்டார்கள். குடும்பத்தினர் மட்டுமே ஜாமீன் கிடைக்க பாடுபடுவார்கள்.
பிராமணர்கள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவு போட்டு விட்டு அடுத்த நாள் தங்களது சொந்த வேலையை பார்க்க போய் விடுவார்கள்.
உணர்வுள்ள ஒரு சில பிராமணர்கள் தற்போது உதவி செய்ய தயாராக இருக்கிறோம்.
இனிமேல் பிராமணர்கள் யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களை காப்பாற்ற நாம் முயற்சி செய்வோம்.
பிராமணர்கள் ஒற்றுமை ஓங்குக.
ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் அவர்களை தமிழக காவல்துறை கைது செய்துள்ளதாக அறிகிறேன். தாங்கள் இருவரும் பேசிய அலைபேசி உரையாடலை சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்காக ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அவர்கள் அளித்த புகாரின் மீது இந்நடவடிக்கை என சொல்லப்படுகிறது. சட்டப்படி இருவரின் அலைபேசி உரையாடலை சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியோடு பதிவு செய்ய வேண்டும் என்பதும், அவர்களுக்கிடையே நடந்த உரையாடலை சமூக ஊடகங்களில் பதிவிடுவதும் சட்டப்பிரிவு 21 ன் படி குற்றம் என்ற அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பார் என்று கருதுகிறேன்.
சட்டம் தன் கடமையை செய்யட்டும், தவறில்லை. நீதிமன்றத்தில் அவர் தன் தரப்பு வாதங்களை வைக்கட்டும். ஆனால், அவர்களுக்கிடையே நடைபெற்றதாக சொல்லப்படும் உரையாடல் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது. பொது மக்களுக்கு அந்த உரையாடலில் இருக்கும் உண்மைத்தன்மையை தெரிவிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது. மூன்று ஜீயர்களும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் இல்லத்திற்கு சென்றார்கள் என்று அந்த உரையாடலில் இடம்பெற்றுள்ளது சரியா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு வேளை, அந்த உரையாடலில் உண்மையிருப்பின், மூன்று ஜீயர்களின் முழு ஆசிர்வாதங்களும், இறைவனின் ஆசிகளும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கிடைக்க பெறட்டும்.
நாராயணன் திருப்பதி,
மாநில துணைத் தலைவர்,
பாரதிய ஜனதா கட்சி.
Comments
Post a Comment