கவிஞர் வாலி எம்.ஜி ஆரைப் பற்றி எழுதிய கவிதை. நீ இந்தியாவில் பிறந்து இலங்கைக்கு சென்ற- இராமச்சந்திரனல்ல; இலங்கையில் பிறந்து இந்தியா வந்த இராமச்சந்திரன்

 


கவிஞர் வாலி எம்.ஜி ஆரைப் பற்றி

எழுதிய கவிதை.


நீ

இந்தியாவில் பிறந்து

இலங்கைக்கு சென்ற-

இராமச்சந்திரனல்ல;

இலங்கையில் பிறந்து

இந்தியா வந்த

இராமச்சந்திரன்.!


அந்த இராமச்சந்திரன்

சூரிய குலத்தில் வந்தவன்.


நீயும்-

உதய சூரியனின்

வழித்தோன்றல்தான்.


அவனும் 

ஜானகி மணாளன்.

நீயும்

ஜானகி மணாளன்.


அவனும்

பதவி ஆசை பிடித்தவர்களால்

வெளியேற்றப்பட்டான்.

நீயும் அப்படியே.


அவனும்

நாடோடியாகத் திரிந்து

மன்னனானான்.

நீயும்-

நாடோடி மன்னன்தான்.


அவனிடத்தில்

இருந்தது போலவே

உன்னிடத்திலும்

"வில் பவர்" இருந்தது.


அந்த இராமச்சந்திரன்

தெய்வமாக இருந்து

மனிதனாக மாறியவன்.


நீ-

மனிதனாக இருந்து

தெய்வமாக மாறியவன்.

இதனால்தான் உன்னை

இதய தெய்வம் என்கிறோம்.


ஆனால் ஒன்று

அவன்

வாலியை

அம்பு கொண்டு வீழ்த்தியவன்.


நீயோ

வாலியை

அன்பு கொண்டு வாழ்த்தியவன்.🙏🌹


வாலி

Comments

Popular posts from this blog

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...