ராஜீவ் உட்பட 18 தமிழர்கள் படுகொலையும் திராவிடர் கழகமும்...
ராஜீவ் உட்பட 18 தமிழர்கள் படுகொலையும் திராவிடர் கழகமும்...
காந்தியை சுட்டுக் கொல்வதற்கு
பல வருடங்களுக்கு முன்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தார் கோட்சே என்ற ஒரே காரணத்திற்காக இன்றுவரை மகாத்மா காந்தி கொலைப்பழி ஆர்எஸ்எஸ் மீது சுமத்தப்படுகிறது ...
காந்தி படுகொலையை அடுத்து ஆர்எஸ்எஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது ஆனால் அந்தத் தடை நீதிமன்றத்தில் நிற்கவில்லை தடை விலகியது...
ஆனால் , ராஜீவ் காந்தி கொலைச் சதியில் நேரடி தொடர்புடைய இயக்கம் திராவிடர் கழகம்... ராஜீவ் கொலைக்கும் சரி...அதற்கு முன்பாக சென்னையில் நடந்த பத்மநாபா படுகொலைக்கும் சரி... திராவிடர்கழக உறுப்பினர்களோடு நேரடி தொடர்பு நிறையவே உண்டு ...
அதுமட்டுமல்ல... 80 களின் ஆரம்பம் முதல் ராஜீவ் கொலையை அடுத்து தமிழகத்தில் தடை செய்யப்படும் வரை விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழகத்தில் நடத்திய அத்தனை அராஜகங்களுக்கும் திராவிடர் கழகத்தோடு நேரடியான தொடர்பு உண்டு ...ராஜீவ் கொலையை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை பலரும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ...அவர்கள் பலருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை காலம் முடிந்து விடுதலையானார்கள்... இதோ இன்று வரை ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் அறிவு என்கிற பேரறிவாளன் கைது செய்யப்பட்டது பெரியார் திடலில் வைத்துத்தான் ...
பேரறிவாளன் மட்டுமல்ல அவன் தந்தை குயில்தாசன் இன்று அப்பாவி போல சீன் போடும் சூனியக்கிழவி அற்புதம் ஆகிய அனைவரும் திராவிடர் கழகத்தின் தீவிர உறுப்பினர்கள்...
பேரறிவாளன் இலங்கை சென்று பிரபாகரனை சந்தித்து , இந்திய அமைதிப்படைக்கு எதிராக " சாத்தானின் படைகள் " என்ற புத்தகத்தை அச்சிட்டு வெளியிட உதவி செய்ததும் திராவிடர் கழகம் தான் ...
அதுமட்டுமல்ல ....ராஜீவ் கொலையை அடுத்து சிவராசன் , சுபா உள்ளிட்ட கும்பல் பெங்களூர் தப்பிச் செல்ல உதவி செய்த கொளத்தூர் மணி திராவிடர் கழகத்தின் நிர்வாகிகளில் ஒருவர் .... ராஜீவ் கொலையின் பரந்துபட்ட சதி அம்சங்களைப் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் மேற்படி படு கொலைச் சதியில் திராவிடர் கழகத்தின் பங்கை அக்குவேறு ஆணிவேராக பிரித்து போட்டது ... ராஜிவ் கொலை செய்ய தூண்டியவர்களே கருணாநிதி மற்றும் வைகோ என விசாணை அதிகாரிகளே வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் துரோகிகள் மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவர்கள் தமிழரல்லாத திராவிடர்கள். தமிழரை அழிக்க வந்தவர்கள்.
நியாயமாகப் பார்த்தால் ராஜீவ்காந்தி கொலையை அடுத்து திராவிடர் கழகம் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும்... .
அதன் உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு திராவிடர் கழகத்தின் சொத்துக்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டிருக்கவேண்டும் ....
ஆனால் , அப்படி எதுவுமே நடக்கவில்லை. இத்தனைக்கும் அன்றைக்கு இப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருந்தால் மக்கள் மத்தியில் ஒரு சிறு முணுமுணுப்பு கூட இருந்திருக்காது ..அந்த அளவுக்கு புலிகள் மீதும் , அவர்களுடைய ஆதரவாளர்கள் மீதும் , தமிழக மக்கள் கொலைவெறியில் இருந்தார்கள் ..ஆனால் அப்படிக் கிடைத்த ஒரு அற்புதமான வாய்ப்பைத் தவறவிட்டார் அன்றைய முதல்வர்ஜெயலலிதா.
காரணம் , ஜெயலலிதாவின் அருகிலேயே இருந்த சசிகலாவின் கணவர் எம். நடராஜன் தான்.... நடராஜனுக்கு சகலவிதமான தேசவிரோதிகளோடும் , தமிழ்ப் பிரிவினைவாத கும்பல்களோடும் , எல்.டி.டி. இ இயக்கத்தோடும் நேரடி தொடர்பு உண்டு ...
ராஜீவ் கொலையை அடுத்து தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டார்கள் ....அவர்களில் மிக முக்கியமான ஒரு குழு வேலூர் சிறையிலிருந்து தப்பிச் சென்றது... அவர்கள் சுரங்கம் தோண்டி , தப்பிச்சென்றதாக போலீசார் தெரிவித்தார்கள்...அது மிகப் பெரிய காமெடி... அவர்கள் சென்றதாக போலீஸ் சுட்டிக்காட்டிய சுரங்கத்தின் வழியாக ஒரு பெரிய சைஸ் பூனை கூட தப்பிக்க முடியாது ...உண்மையில் புலிகள் ரைட் ராயலாக சிறைக் கதவை திறந்து கொண்டு தப்பிச் சென்றார்கள் ....அந்த அளவுக்கு நடராஜனின் ஆதிக்கம் தமிழக காவல்துறை முழுக்க நிலவியது..
அதுமட்டுமல்ல தமிழகத்தைச் சேர்ந்த பல தமிழ் தேசியவாதிகள் நடராஜனின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள் தான் ...அதனால்தான் ஜெயலலிதா அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை..
இன்றுவரை கௌதமன் , சீமான் , கொளத்தூர் மணி , திருமுருகன் காந்தி போன்ற பிரிவினைவாதிகள் யார் மீது அரசு வழக்கு தொடுத்தாலும் அது நீதிமன்றத்தில் நிற்காமல் தள்ளுபடி ஆவதற்கு அன்று நடராஜன் காவல்துறை , நீதித்துறை என்று சகல இடங்களிலும் விதைத்த தமிழ் தேசியவாதிகள் தான் மிக முக்கியமான காரணம்.... நடராஜனின் நெட்வொர்க் அந்த அளவுக்கு மிகப் பெரியது ...
புலிகளின் கொலைப் பட்டியலில் தானும் இருந்ததால் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள புலிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகளை தன் முதல் ஆட்சிக் காலத்தில் எடுத்தார் ஜெயலலிதா ....ஆனால் அவை எதுவுமே முழுமையாக அமையவில்லை... அதற்குக் காரணம் நடராஜன் தான் ...
சில வருடங்களுக்கு முன்பாக எம் . நடராஜன் ஆசிரியராக இருந்த புதிய பார்வை என்ற ஒரு பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது .
ராஜீவ்காந்தி இன்னின்ன தவறுகள் செய்தார்... அதனால் அவர் கொல்லப்பட வேண்டியவர் தான் என்று ஒரு கவர் ஸ்டோரி வெளியாகியிருந்தது ...அந்த இதழ் வெளிவந்தது ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ....இந்த லட்சணத்தில்தான் தீவிரவாதிகள் , பிரிவினைவாதிகள் மீதான ஜெயலலிதாவின் நடவடிக்கை இருந்தது...
அதனால்தான் ஜெயலலிதா தீவிரவாதிகளை மிகக் கடுமையாக எதிர்த்தார்....கடும் நடவடிக்கை எடுப்பார் என்று யாராவது சொன்னால் நான் ஒரு மெல்லிய சிரிப்போடு கடந்து சென்று விடுவேன்..ஜெயலலிதாவின் மூக்குக்கு கீழே தான் இத்தனையும் நடந்து கொண்டிருந்தன ..இதை எதையும் தடுக்கவோ அல்லது ஒழிக்கவோ , ஜெயலலிதாவால் கடைசிவரை முடியவில்லை ...
தங்கள் இயக்கத்தை தடை செய்து , தன்னையும் கைது செய்து சிறையில் அடைத்து பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை அரசுடமையாக்காமல் தவிர்த்த ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் தான் பின்னாளில் வீரமணி ஜெயலலிதாவுக்கு " சமூகநீதி காத்த வீராங்கனை " என்ற பட்டம் கொடுத்து மகிழ்ந்தார் ...
அன்று முதல் இன்றுவரை அதிமுகவுக்கு திராவிடர் கழகத்தோடு சுமுகமான உறவு உண்டு.. சமீபத்தில் நடைபெற்ற பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வீரமணியை கூப்பிட்டு முதல் வரிசையில் உட்கார வைத்து இருந்ததற்கு இதுதான் காரணம் ...
இந்தியாவில் இருந்து கொண்டு , இந்திய பிரதமரை படுகொலை செய்த சதியில் முக்கியப்பங்கு வகித்துவிட்டு ( இன்று பரோலில் வெளிவந்துள்ள நளினியை தன் வீட்டில் தங்க வைத்துள்ளவனும் ஒரு தி.க பிரமுகர்தான்.. ) தேசியத்துக்கு எதிராகவே மிக தைரியமாக , வெளிப்படையாக செயல்படும் ஒரு இயக்கத்தை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் , சொல்லப்போனால் , அரசின் ஒவ்வொரு அசைவையும் அவர்களிடம் கேட்டுக் கொண்டு செய்யும் அளவுக்குத் தான் தமிழகத்தில் ஆட்சியும் நிர்வாகங்களும் இருக்கின்றன....
வாஞ்சிநாதன் , வ.உ.சி , சுப்ரமணிய சிவா , பாரதியார், பசும்பொன் தேவர் , ராஜாஜி , காமராஜ் போன்ற தேசத்தின் தலைசிறந்த தேசியவாதிகள் தோன்றிய தமிழகத்தை 1967 ல் பிடித்த பீடை இன்றும் விலகவில்லை...
தமிழகம் இந்திய தேசியத்தை விட்டு விலகி வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறது ...மீட்சி எப்போது என்று தான் தெரியவில்லை...
நன்றி Saravana Kumar
Comments
Post a Comment