பல ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் தரும் நகரங்கள் மோடிஜி காலத்தில் மேலும் 27 மாநகரங்கள் உருவாகிவிட்டன. இவை மக்கள் எதிர்காலத்தில் பெருநகரங்களில் நெருக்கத்தை தடுக்கவும், வேலை வாய்ப்புக்களை உருவாக்கவும், வருமானத்தை பெருக்கவும் உதவுகின்றன

 


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

பல ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் தரும் நகரங்கள்

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

நேரு முதல் ராஜீவ் வரை பம்பாய்-டெல்லி-கல்கத்தா-சென்னை என்று 4 மெட்ரோ மாநகரங்களே இருந்தன. ஆனால் அமரர் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களின் சீடராம் மோடிஜி ஆட்சி அமைந்த பிறகு நாட்டின் வருவாயை உயர்த்தவும் பாரதத்தினை உலகின் 3 ஆம் பொருளாதார சக்தியாக மாற்றவும் 10 ஆண்டுகளாக  திட்டங்கள் தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.


ஹிந்தி தெரியாது , திராவிட மீடியாக்களால் மறைக்கப்படும் தமிழக வாசகர்களுக்கு அவற்றை தமிழில் தொடராக எழுதுகிறேன்.


பெங்களூரு, ஹைதராபாத், புனே, அஹமதாபாத், கொச்சி, சண்டிகர், காந்திநகர், நோய்டா என்னும் மாநகரங்கள் மக்கள் வாழவும், வாணிகம் செய்யவும், தொழிற்சாலைகள் அமையவும் ஏற்கனவே உருவாகி விட்டன.


மோடிஜி காலத்தில் மேலும் 27 மாநகரங்கள் உருவாகிவிட்டன. இவை மக்கள் எதிர்காலத்தில் பெருநகரங்களில் நெருக்கத்தை தடுக்கவும், வேலை வாய்ப்புக்களை உருவாக்கவும், வருமானத்தை பெருக்கவும் உதவுகின்றன.


சில இன்னமும் வளர்ந்து வருகின்றன. அவையாவன


1.)டெல்லியில் நொய்டாவிற்கு அருகில் ஜேவர் பன்னாட்டு விமானநிலையம் உருவாகி வருகிறது. இது டெல்லி இந்திராகாந்து விமானநிலையத்தை விட பெரிதாக ஸ்விட்சர்லாந்து நிறுவனத்தின் உதவியுடன் அமைகிறது. இதன் அருகில் யமுனை நதி மற்றும் நோய்டாவின் கூட்டுப் பெயரில் YEIDA CITY (Yamuna Expressway Industrial Development Authority) எனும் புது நகரம்  25000 ஹெக்டேர் அளவில் அமைந்து விட்டது. நோய்டா-கிரேட்டர் நோய்டா மற்றும் யமுனா நகரமும் சேர்ந்தது. இங்கும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் அமைந்து வருகின்றன.


2.)டெல்லியின் தென்மேற்கில் குருகிராம் என்றொரு நகரம் சிங்கப்பூரைப் போல அமைந்து விட்டது. துரோணாச்சாரியரின் நினைவாக இப்பெயர் அமைந்தது. இங்கே பலநூறு ஐடி நிறுவனங்கள் செயல்படுகின்றன. டெல்லியின் எட்டு திக்குகளிலும் அல்வார், குர்காவ்ன், மீரட், நோய்டா, பானிப்பட்டு, காசியாபாத் என சுமார் 100 கிமீ தொலைவுகளை RRTS எனும் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் ரயில்போக்குவரத்து இணைக்க திட்டமிட்டு அதில் மீரட் பாதை கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது. டெல்லியில் 200 கிமீ நீளத்திற்கு மெட்ரோ ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 


3.)மும்பைக்கு அருகில் நவிமும்பை என்னும் நகரம் ஏற்கனவே அமைந்தது. அங்கே புதிதாக மும்பை விமான நிலையத்திற்கு நிகராக நவிமும்பை பன்னாட்டு விமான நிலையம் அமைந்து வருகிறது. அதன் அருகில் NAINA ஸ்மார்ட் CITY இன்னொரு மூன்றாம் மும்பை நகரம் அமைந்து வருகிறது(Navi Mumbai Airport Influence Notified Area)  600 சதுர கிமீட்டர்களில் அமைகிறது. இங்கே கடலுக்கு மேலே பாலங்களும், பல குடைவரை வழித்தடங்களும் அமைந்து வருகின்றன. இவை வழியே மெட்ரோ ரயில்களும், போக்குவரத்து பாதைகளும் ஜனநெரிசலை, போக்குவரத்து நெரிசலை குறைக்க அமைந்து வருகின்றன. மும்பைக்கும் அஹமதாபாத்திற்கும் இடையே புல்லட் ரயில் பாதையும் அமைந்து வருகிறது.


4.)குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு 90 கிமீ தொலைவில்  டோலேரா எனும் ஸ்மார்ட் நகரம் அமைந்து வருகிறது. இங்கே விமானநிலையம் அமைகிறது. தாய்வான் போல இந்தியாவிலேயே பெரிய செமிகண்டக்டர் நிறுவனமும் பல செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களும் தகவல்-தொழில்நுட்பம், ஐடி நிறுவனங்களும் அமைந்து வருகின்றன. உலகளாவிய உற்பத்தி துறையும் வணிகதுறையும் இணைந்து செயல்படும்படி அமைகிறது.


5.)குஜராத்தின் தலைநகரான காந்திநகருக்கு அருகில் GIFT CITY (Gujarat International Finance Tech City) என்று ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட் போல வணிகநகரம் உருவாகி வருகிறது. வங்கிகளும், வணிக நிறுவனங்களும், பங்குசந்தை நிறுவனங்களும், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் இங்கு அமைந்திருக்கின்றன.  இங்கே ஏற்கனவே HDFC மற்றும் JP Morgan வங்கிகள் இயங்கிவருகின்றன.


6.)சூரத்-வைரங்கள், டெக்ஸ்டைல்ஸ், அணிகலன்கள், உற்பத்தி நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் அமைந்த நகரமாக உருவாகி வருகிறது. பங்களாதேஷில் ஆட்சி கவிழ்ந்தமையால் அங்குள்ள ரெடிமேட் ஆடை கம்பெனி ஆர்டர்கள் சூரத்திற்கு குவிகின்றன.


7.)விசாகப்பட்டினம் – ஏற்கனவே மாநகரமான இது கப்பல் கட்டும் தளமாகும். சந்திரபாபு நாயுடு ஒப்பந்தப்படி ஸ்பெஷல் மாநகரமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு விட்டது. இங்கே நீர்மூழ்கி கப்பல்கள், ராணுவ போர்க்கப்பல்கள் கட்டப்படுகின்றன. உலகிலேயே கப்பல் போக்குவரத்து மட்டுமே சரக்கு போக்குவரத்தின் மிகவும் மலிவான செலவு பிடிக்கும் துறையாகும். எனவே விழிஞ்சம் துறைமுகம் மற்றும் வாத்வான் போன்ற Mother Ports செயல்படுகின்றன. இன்னொரு   Mother Port கிரேட் நிக்கோபார் எனும் தீவில் சிங்கப்பூருக்கு நிகராக 80,000 கோடி செலவில் உருவாகி வருகிறது. எனவே பலநூறு கப்பல்களை கட்டும் தொழில் விசாகபட்டினத்திற்கு கிடைக்க இருக்கிறது.


8.) KHIR CITY (Knowledge-Health-Innovation-Research) பெங்களூருக்கு 60 கிமீ தூரத்தில் அமைகிறது. ஆயினும் காங்கிரஸ் அரசு போதிய ஒத்துழைப்பு நல்குவதில்லை


9.)ஹைதராபாத்-செகந்திராபாத் எனும் இரட்டை நகரங்களுக்கு  50 கிமீ தூரத்தில் FUTURE CITY TELANGANA என அமைகிறது. இது PHARMA CITY ஆகும். மருத்துவ சிகிச்சைத்துறை மற்றும் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களும் மருத்துவமனைகளும் அமைகின்றன. Health Tour Hub, Artificial Intelligence Hub, Young India Skill Universities, Sport Universities அமைகின்றன.


10.)சென்னை திருவள்ளூர் அருகில் Knowledge City அமைகிறது. இது கல்வி சம்பந்தமான பல்கலைகழகங்கள் கொண்டது. திமுக அரசின் ஒத்துழைப்பு பொறுத்து இதன் வளர்ச்சி அமையும்.


11.)புது சண்டிகர். பஞ்சாப்பில் மொஹாலி நகருக்கு அருகே ஏற்கனவே சண்டிகர் எனும் செயற்கை நகரம் இரு மாநிலங்களுக்கு தலைநகராக அமைந்தது. இதற்கும் மொஹாலி நகருக்கும் நடுவே ECO CITY-1 மற்றும் ECO CITY-2 என  அமைகிறது. 


12.) MET CITY HARYANA-குருகிராம் நகருக்கு அருகில் முகேஷ் அம்பானி பெயரில் ரிலையன்ஸ் நிறுவனத்தினரால் கிரீன்சிட்டியாக அமைகிறது


13.)GLOBAL CITY GURUGRAM  இது ஏற்கனவே அமைந்த குருகிராம் மாநகருக்கு அருகில் அமைகிறது.


14.)அமராவதி ஸ்மார்ட் நகரம் -இது ஆந்திராவின் புதிய தலைநகரமாக அமைகிறது. இதற்கும் மத்திய அரசு ஸ்பெஷல் அந்தஸ்து அளித்துவிட்டது. இது 50,000 ஏக்கரில் அமைகிறது. ஹைதராபாத் தெலுங்கானாவின் தலைநகரமாக பிரிந்த காரணத்தால் இது பாரதத்தின் மிகப்பெரிய க்ரீன் சிட்டி-ஸ்மார்ட் சிட்டி ஆக அமைகிறது. சிங்கப்பூர் டிசைனரை வரவழைத்து நிர்மாணிக்கப்படுகிறது.


15.)AMRIT GIG CITY அஸ்ஸாம் குவஹாத்தி மாநகரத்தின் அருகே 1000 ஏக்கரில் அமைகிறது. இங்கே ஐடி, சுற்றுலா, மருத்துவம், கல்வி எனும் துறைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். வடகிழக்கு மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வசதிகள் எனும் கனவு இதனால் மேம்படும்.


16. AURIC CITY மஹாராஷ்டிரா -ஔரங்காபாத் மாநகரின் அருகே க்ரீன் சிட்டியாக தொழிற்சாலைகளுக்காக 10,000 ஏக்கரில் அமைகிறது. இங்கும் ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், எலெக்ட்றானிக்ஸ், உணவு பதப்படுத்தல் ஆகிய கம்பெனிகள் அமைக்கப்படுகின்றன.


17.KHED CITY -மஹாராஷ்டிரா புனே மாநகரின் அருகே 4200 ஏக்கரின் அமைகிறது. இங்கே 50 க்கும் அதிகமான பன்னாட்டு கம்பெனிகள் இயங்கிவருகின்றன. கல்யாணி குரூப் மற்றும் MIDC (Maharashtra Industrial Development Corporation) ஆகியவற்றின் கூட்டு முயற்சி ஆகும்.


18. ATAL Nagar Naya Raipur சத்தீஸ்கரின் தலைநகர் ராய்பூர் மாநகருக்கு அருகில் அமைந்தது. இதுவே மாநிலத்தின் தலைநகராக மாற்றம் பெறப்போகிறது. 


19. DREAM CITY குஜராத்தில் சூரத் மாநகரின் அருகில் 2000 ஏக்கரில் அமைந்தது.   இங்கே வைரத்தொழிலுக்கான தொழிற்சாலைகள், கம்பெனிகள், டெக்ஸ்டைல் கம்பெனிகள் செயல்படுகின்றன.


20. Greater SHIMLA – ஹிமாசல ப்ரதேசத்தில் அமைகிறது.


21.SAHARANPUR Smart City- உத்தராகண்ட் மாநிலத்தில் அமைகிறது


22.KERALA TECHNO PARK City -கொச்சி மாநகரின் அருகில் அமைந்தது.


23. PATALIPUTRA INDUSTRIAL AREA – பீஹார் பாட்னா மாநகருக்கு அருகில் அமைகிறது


24. AMINGAON SMART INDUSTRIAL TOWNSHIP – அஸ்ஸாமின் குவஹாத்தி மாநகருக்கு அருகில் அமைகிறது


25.BENGAL SILICON VALLEY – கொல்கத்தா நகரின் அருகே அமைந்தது. Data Center, E-Commerce, Artificial Intelligence, Information Technology Research & Development, Telecom  ஆகிய துறையின் கம்பெனிகள் இயங்குகின்றன.


26. INFO VALLEY ODISSA புவனேஸ்வர் மாநகரின் அருகில் அமைந்தது


27.INDORE SUPER CORRIDOR -மத்திய பிரதேசம் இந்தூர் மாநகரின் அருகில் அமைந்தது.


28. MAHINDRA WORLD CITY ராஜஸ்தானில் ஜெய்பூர் மாநகரின் அருகில் அமைந்தது.


மேலும் பல ஸ்மார்ட் நகரங்கள் பாரதத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல கிரின்பீல்ட் ஸ்மார்ட் நகரங்கள் திட்டமிடப்படுகின்றன.


சுபாஷ் ஸ்ரீநிவாசன்

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷