கார்பரேட் உயர்வகை முதியோர் இல்லங்கள்….! அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம் ஊருக்கு ஒன்னோ இரண்டோ அல்லது குறிப்பிட்ட பெருநகரங்களில் மட்டுமே உண்டு… ஆனால் இந்த கார்பரேட் உயர்வகை முதியோர் இல்லங்கள்… அனைத்து ஊர்களிலும் புற்றீசல்கள் போல பெருகி வருவது எத்தனை பேருக்கும் தெரியும்? இவ்வகை முதியோர் இல்லங்கள் பெருக காரணம் என்ன தெரியுமா?
கார்பரேட் உயர்வகை முதியோர் இல்லங்கள்….!
அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம் ஊருக்கு ஒன்னோ இரண்டோ அல்லது குறிப்பிட்ட பெருநகரங்களில் மட்டுமே உண்டு…
ஆனால் இந்த கார்பரேட் உயர்வகை முதியோர் இல்லங்கள்…
அனைத்து ஊர்களிலும் புற்றீசல்கள் போல பெருகி வருவது எத்தனை பேருக்கும் தெரியும்?
இவ்வகை முதியோர் இல்லங்கள் பெருக காரணம் என்ன தெரியுமா?
அவர்களேதான் அதாவது அந்த முதியோர்களேதான் காரணம்…
என்ன சொல்லவரேன்னு புரியலையா?
முதலில் இந்த முதியோர்கள் யார் யார் என்று பார்ப்போம்…
முன்னாள் மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள், தனியார் கார்பரேட் கம்பெனி உயர் அதிகாரிகள், முன்னாள் தொழில் அதிபர்கள் மற்றும் முக்கியமாக பெற்ற பிள்ளைகளை அயல்நாட்டுக்கு வேலைக்கு அனுப்பிய அபாக்கியவான்கள்.
இப்போது யாரெல்லாம் பெற்ற பிள்ளைகளை பணத்திற்காக அமெரிக்கா ஆஸ்திரேலியா போன்ற அயல்நாடு அனுப்பிவிட்டு பெருமை பீத்திகிறார்களோ….
அவர்கள் எல்லாம் இப்பவே இதுபோல தங்களுக்கு தோதான உயர்வகை முதியோர் இல்லத்தை முன் பதிவு செய்து வைத்துக்கொள்வது நல்லது.
பணத்திற்காக சொகுசு வாழ்க்கைக்காக அயல்நாடு சென்ற எந்த பிள்ளைகளும் 90 சதவீதம் திரும்பி வந்து பெற்றோரோடு இருப்பதில்லை சொந்த ஊரில் வசிப்பதில்லை.
அயல்நாட்டில் அங்கேயே செட்டிலாகிவிடுகிறார்கள்.
பிள்ளைகளின் ஆசைக்காக பணத்துக்காக அயல்நாடு அனுப்பிவிட்டு பெரும்பாலும் பெற்றோர்கள் இங்கு அனாதையாக அபார்ட்மெண்ட் வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்கள்.
தங்களை தாங்களே பார்த்துக்கொள்ள முடியாத போது உயர்வகை அனாதை ஆசிரமத்தை தேடிச் செல்கிறார்கள்.
இங்கு 5 நட்சத்திர அந்தஸ்தில் தனி தனி காட்டேஜ் அல்லது அறை அல்லது வீடு வாடகைக்கோ அல்லது சொந்தமாகவோ எடுத்து தங்கிக்கொள்ளலாம்.
உங்களின் அனைத்து தேவைகளும் பொதுவிலும் கிடைக்கும் உங்களை தேடியும் வரும்.
மாதம் மாதம் லட்சங்களில் சேவைக்கட்டணமாக கொடுக்க வேண்டியதிருக்கும்
பணம் பணம் என்று தேடி ஓடாதீர்கள்… பிள்ளைகளுக்கும் பணம்தான் வாழ்க்கை என்று அறிவுரை கூறாதீர்கள் வழி காட்டாதீர்கள்…
வாழ்க்கைக்கு பணம் தேவைதான். அது அடிப்படை வசதிக்கு மட்டுமே.
அதாவது வசிக்க ஒரு வீடு, ஒரு நான்கு சக்கர வாகனம், இரண்டு இரண்டு சக்கர வாகனம், மாதாந்திர செலவுக்கு 30 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் ரூபாய் நிரந்தரமாக வரும்படி போதுமானது.
இதுக்கு மேல நீங்க எவ்வளவு சம்பாதித்தாலும் உங்களால் அனுபவிக்க முடியாது.
அதை பாதுக்காகத்தான் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை இழந்து ஓடவேண்டியது இருக்கும்.
இதன் பின்னர் உங்கள் ஆரோக்கியத்தையும் நிம்மதியையும் காக்க உங்களுக்கு பிடித்தமானவற்றில் கவனம் செலுத்துங்கள். அது பொது சேவையாக கூட இருக்கலாம்.
சேவை செய்வதில் இருக்கும் சந்தோஷம் நிம்மதி ஆரோக்கியம் வேறு எதிலும் கிடைக்காது.
இதுதான் உங்களை இறுதிவரை சொந்தபந்தங்குடன் நட்புடன் சந்தோஷமாக கழிக்க உதவும்.
வாழ்க்கை வாழவதற்கே நொந்து நொந்து ஏங்கி சாவதற்கல்ல.
எல்லாம் இருந்தும் கடைசிகாலத்தில் ஏன் அனாதையாக வாழ ஆசைப்படுகிறீர்கள்?
உங்கள்குடும்பத்தினருடன் அக்கம்பக்கம் சொந்த காரர்கள் மற்றும் நண்பர்கர்ளுடன் சந்தோஷமாக நிம்மதியாக ஆரோக்கியமாக வாழ்ந்துதான் பாருங்களேன்.
என்றென்றும் அன்புடன்
சுந்தர்ஜி
Comments
Post a Comment