இன்னொரு விசித்திர வழக்கு 1969 ல் ஸ்தாபன காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திரா தனி அணி அமைத்து வென்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சம்யுக்தா சோசலிஸ்ட் பார்ட்டியின் ராஜ்நாராயணனை 110000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் . பிரதமராகவும் ஆனார் .
இன்னொரு விசித்திர வழக்கு
1969 ல் ஸ்தாபன காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திரா தனி அணி அமைத்து வென்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட சம்யுக்தா சோசலிஸ்ட் பார்ட்டியின் ராஜ்நாராயணனை 110000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் .
பிரதமராகவும் ஆனார் .
ஆனால் ராஜ்நாராயணன் மக்கள் பிரதி நித்துவ சட்டத்தின் படி இந்திராவின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் .
அவர் சாட்டிய குற்றங்கள் :
1.அரசு அதிகாரி ஒருவரை இந்திரா தன் தேர்தல் ஏஜெண்டாக நியமித்திருந்தார் .
2.அவருக்கு ஒட்டு போடுபவர்களுக்கு வாக்குசாவடி வரை செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்தார்.
3.அவருக்கு ஒட்டு போடுவதற்காக வாக்காளர்களுக்கு கம்பளி , பணம் , மது கொடுக்கப்பட்டது .
4.அவர் கலந்துகொண்ட கூட்டங்களுக்கு அரசாங்க செலவில் மேடை உட்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது
5.தேர்தல் விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட தொகையைவிட அதிகமாக செலவழித்தார்
6.அவருக்கு கொடுக்கப்பட்ட தேர்தல் சின்னமே சட்டத்தை மீறியது .
7.இந்திய ஆயுதப்படை கூட அவருக்காக வேலை செய்தது .
அலகாபாத் நீதிப்பதி #ஜக்_மோகன்_லால்_சின்ஹா இந்திரா குற்றவாளி என்று தீர்ப்பளித்து, அவரது எம்பி பதவியை பறித்ததுடன், இன்னும் ஆறு வருடங்களுக்கு அவர் தேர்தலில் போட்டியிட தடை விதித்தார் .
இந்த குற்றங்களை மறைக்க இந்திரா ஏக தில்லாலங்கடி வேலைகள் செய்தார் .அதில் முக்கியமான ஓன்று அவருக்கு தேர்தல் பணிசெய்த அந்த அதிகாரி முன்பே வேலையை ராஜினாமா செய்ததாக ஆவணங்களை உருவாக்கினார் .
உண்மையில் அந்த அதிகாரி இந்திரா வென்றபின்தான் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார் .அதாவது இந்திரா ஜெயிக்காவிட்டால் பணியில் தொடர்வது அவரது உண்மையான நோக்கம் .
இந்த நாடகம் தெரியவர அதுவே மற்ற குற்றங்களுக்கு ஆதாரம் போல ஆகியது .
இந்திரா தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகினார்
உச்ச நீதிமன்றம் விசித்திரமான ஒரு தீர்ப்பு கொடுத்தது.
அதாவது இந்திரா எம்பி பதவி ரத்து சரியானதுதான். அதற்கு தடை கொடுக்க முடியாது.அவர் எம்பிகளுக்கான ஊதியம் பெற முடியாது .
ஆனால்
அவர் பிரதமராக தொடரலாம் . பணி செய்யலாம் என்றது
பாதி பத்தினி என்பார்களே அப்படி இல்லை ?
எம்பியாக இருக்க முடியாது.
அடுத்த ஆறு வருடங்களுக்கு போட்டியிட முடியாது .
அதுசரிதானாம் .ஆனால் பிரதமராக தொடரலாமாம் ...
இந்திராவை கண்டு அத்தனை பயம் நீதிபதிகளுக்கு
ஆனால் இந்திரா இந்த சலுகையை கண்டு மயங்கிவிடவில்லை .
அவசர நிலையை கொண்டு வந்து, நீதிமன்ற தீர்ப்புகளை ரத்து செய்து, நீதிபதிகளை அடக்கி, நாட்டின் ஜனநாயகத்தின் குரள்வளையை நெறித்தார் .
குளியலைறையில் இருந்த ஜனாதிபதியை வெளியே அழைத்து அத்தனை உத்திரவுகளிலும் கையெழுத்து வாங்கியதாக செய்தி வந்தது .
கொதித்து எழுந்திருக்க வேண்டிய
ஜனாதிபதி பக்ருதீன் அலி அஹமத்
ஏ என் ராய் என்ற இந்திராவால் விதிகளை மீறி நியமிக்கப்பட்ட தலைமை நீதிபதி அமைதி காத்தனர் .
அதன்பின் நடந்ததெல்லாம் அனைவருக்கும் தெரிந்த சரித்திரம் .
இதை இப்போது ஏன் எழுதுகிறேனென்றால்
" காங்கிரஸ் நீதிமன்றங்களை மதித்தது . காங்கிரஸ் காலத்தில் நீதிமன்றம் பிரதமரையே பதவி நீக்கம் செய்யவில்லையா? " என்று பொங்கினார் ஒரு உடன் பிறப்பு .
இதில் கவனிக்கவேண்டிய நுட்பம் அலகாபாத்தின் அந்த நீதிபதி பிரதமரை விசாரிக்க வில்லை..பிரதமரை பதவி நீக்கம் செய்யவில்லை .
அவர் எம்பி ஆகுமுன்னே செய்த தவறுகளை Representation of peoples act ன் படி விசாரித்தார்.
உதாரணம் சொல்ல வேண்டுமானால் ஒருவர் நீதிபதியாகும் முன் ஒரு கொலை செய்திருந்து ஆதாரங்கள் கொடுக்கப்பட்டால் அவர் மேல் வழக்கு தொடுக்க முடியாதா? இல்லை அவர் கொலை செய்யலாம் என்ற உரிமையை பெற்று விடுவாரா ?
அதுதான் இந்திரா வழக்கில் நடந்தது -அதுவும் தேர்தல் கமிஷன் விதிகளை மீறிய எளிய விவகாரத்துக்காக ..
அந்த நியாமான வழக்கு/ தீர்ப்புக்காக நாட்டையே படுகுழியில் தள்ளிய காங்கிரஸ் நரிகள் இன்று நீதித்துறையை மதிக்கவேண்டும் என்று துணை ஜானாதிபதிக்கு அறிவுரை சொல்கிறார்கள்
அதுவும் தமிழகத்தை சேர்ந்த ஒரு முன்னாள் வங்கி கடைநிலை ஊழியர்
இப்போது சாக்கடை சப்ளையார்
சொல்கிறார் ...
என்ன சொல்ல ...
நாளை துணை ஜனாதிபதியின் கர்ச்சனை , பிரமிக்க வைக்கும் அவரது பின்னணி சொல்கிறேன்.
அதை படித்தால் அந்த பெருந்தகைக்கு அவர் பெயரை சொல்லக்கூட அருகதை இல்லை என்று நீங்களே சொல்வீர்கள்
Comments
Post a Comment