அந்த சிறுவன் தான், தற்போது உலகெங்கிலும் உள்ள *ஶ்ரீ இராமகிருஷ்ண மடத்தை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தர்
*நாளை மரமாக வளரக்கூடிய இளைய தலைமுறையின் உயரம்.
150 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு குதிரை வண்டியில் ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்வது வழக்கம். ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு ஒவ்வொரு மாணவரும் வக்கீல், ஆசிரியர், மருத்துவர் என சொல்லி கொண்டே வந்தனர்.
அப்போது ஒரு மாணவன் கூறினான் “நான் குதிரை வண்டிக்காரனாவேன் சுற்றியிருந்த மாணவர்கள் எல்லாம் சிரித்தனர், ஆசிரியரும் அவனை கேலி செய்து உட்கார சொன்னார்.
அந்த சிறுவன் வீட்டிற்கு சோகமாக வந்ததை பார்த்து தாய் என்னவென்று கேட்க, நடந்ததை கூறினான் அந்த சிறுவன். அதை கேட்ட அந்த தாய் மகன் மீது கோபம் கொள்ள வில்லை, அந்த தாய் கேட்டார் நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம்
அந்த சிறுவன் கூறினான் தினமும் பள்ளிக்கு செல்லும் போது குதிரை வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதை பார்ப்பேன், அவர் குதிரை ஓட்டுவது அழகாக இருக்கும். எனக்கும் அதுபோல் குதிரை வண்டி ஓட்ட வேண்டும் என்று ஆசை, அதனால் தான் அப்படி கூறினேன்
இதை கேட்ட தாய் வீட்டினுள் சென்று ஒரு மகாபாரத படத்தை எடுத்து வந்தார், அதை மகனிடம் காட்டி நீ குதிரை வண்டிக்காரனாக வேண்டும் என்று சொன்னது தவறில்லை, ஆனால் நீ எப்படிப்பட்ட குதிரை வண்டி ஓட்டுபவனாக இருக்க வேண்டும் தெரியுமா – மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு தேர் ஓட்டினானே கிருஷ்ணன், அந்த கிருஷ்ண் போன்ற தேர் ஓட்டியாக இருக்க வேண்டும் என்றார்.
அந்த சிறுவன் தான், தற்போது உலகெங்கிலும் உள்ள *ஶ்ரீ இராமகிருஷ்ண மடத்தை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தர்.*
நாம் செய்வதை தான் வரும் தலைமுறை கவனித்து வளர்கிறது.
கவனமாக இருந்தால் தான் நல்ல தலைமுறையை உருவாக்க முடியும்.
பிள்ளைகளின் எதிர்காலம் வேறு எங்கும் இல்லை நம் கைகளில் தான் இருக்கிறது.
(நல்ல பிள்ளையாக, புள்ளைங்களாக) வருவதற்கும் நம்மை சுற்றியுள்ள சூழ்நிலையே காரணமாக அமைகிறது.
உயர்ந்த எண்ணங்களே உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது. ஆனால் பெரும்பான்மை மக்கள் என்ன நினைக்கிறார்கள் உயர்ந்த எண்ணங்களால் என்ன பயன்? உயர்ந்த எண்ணங்களால் என்ன கிடைக்கும்? ஊரார் என்ன நினைப்பார்கள்? இவற்றை எல்லாம் கருதி உயர்ந்த எண்ணங்களை (அறம்) சமரசம் செய்து கொள்கிறோம். ஆனால் நம் எண்ணங்கள் நம்மோடு முடிவதில்லை. நம் எண்ணங்கள் தான் நாளைய தலைமுறைக்கான விதைகள்.
நம் எண்ணங்கள் மீதான நம்முடைய நம்பிக்கையின் உயரம் தான் நாளை மரமாக வளரக்கூடிய இளைய தலைமுறையின் உயரம்.
Comments
Post a Comment