ஆத்மநிர்பார் ஆப்ரேஷன்... ஏறு தழுவும் பாரதப் பிரதமர். ராஜதந்திர ராஜாங்கத்தில் நம்மவர்களை அடித்துக் கொள்ள ஆளேயில்லை. கடந்த மாத இறுதியில் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் நீண்ட மௌனத்திற்கு பிறகு இம்மாதம் 8 ஆம் தேதி போர் ஒத்திகை நடந்த தேசமெங்கும் உஷார் படுத்தப்பட்டியிருந்த நிலையில் .... ஏழாம் தேதி நள்ளிரவே.... அதாவது எட்டாம் தேதி அதிகாலையில் ஒன்பது இடங்களை தேர்வு செய்து தாக்குதல் நடத்தியது நம் இந்திய தேசம்.

 



🔥🍀 ஆத்மநிர்பார் ஆப்ரேஷன்...

ஏறு தழுவும் பாரதப் பிரதமர்.


ராஜதந்திர ராஜாங்கத்தில் நம்மவர்களை அடித்துக் கொள்ள ஆளேயில்லை.


கடந்த மாத இறுதியில் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் நீண்ட மௌனத்திற்கு பிறகு இம்மாதம் 8 ஆம் தேதி போர் ஒத்திகை நடந்த தேசமெங்கும் உஷார் படுத்தப்பட்டியிருந்த நிலையில் .... ஏழாம் தேதி நள்ளிரவே.... அதாவது எட்டாம் தேதி அதிகாலையில் ஒன்பது இடங்களை தேர்வு செய்து தாக்குதல் நடத்தியது நம் இந்திய தேசம்.


ஆடிப் போனது உலகம்.


ஏனெனில் எல்லை தாண்டாத இந்த தாக்குதலில் ஏகப்பட்ட நுணுக்கமான விஷயங்களை முன்னெடுத்து இருந்தது இந்தியா.


புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக...... பாகிஸ்தானும் இதேபோல பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டு அன்று இரவே ட்ரோன்களை கொண்டு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட..... ஒன்றே ஒன்று கூட இலக்கை தாக்கவில்லை. அப்படி ஒரு அட்டகாசமான வான் பாதுகாப்பு வலையமைப்பை நம் இந்திய தேசம் கொண்டிருந்த சமாச்சாரம் உலகை பேராச்சரயப்படுத்தியது.


ஆகாஷ் அற்புதமாக வேலை செய்திருந்தது. உலகம் மிரண்டு நின்ற தருணங்களில் இதுவும் ஒன்றாகிப்போனது.


இவையெல்லாம் பெரிய சமாச்சாரங்களே இல்லை.இதன் பின்னணியில் இருந்தவைகளை குறித்தே சமாச்சாரம்.


அமெரிக்கா தான் இலக்கு.


பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு உளவு துறை விசாரணையில் பாகிஸ்தான் இருப்பதும்....நன்கு திட்டமிட்டு செய்திருப்பது புரிந்தும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் இதனை கொண்டு பகடி செய்ய முயன்றது நம்மவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஏனெனில் இம்முறை ஆட்சி அதிகாரப் பொறுப்பை ஏற்றிருந்தது மோடியின் நண்பர் என அறியப் பட்ட டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம்.


ஆனால் அவரோ...... பிஸினஸ் பேச விரும்பினார்.விருந்தோம்பலில் அல்ல.....


இது அவரது பதவியேற்பு விழாவிலேயே வெளிப்பட்டது. காலிஸ்தான் இயக்க பயங்கரவாதி பண்ணுன் கலந்து கொண்டதை நம்மவர்கள் ரசிக்கவில்லை. இந்த விழாவில் பங்கேற்ற சென்ற நம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு சுப்பிரமணியன் ஜெய்சங்கர் அனைவரும் எழுந்து நின்று ஸ்டாண்டில் ஓவேஷன் கொடுத்தபோது இவர் மாத்திரமே இருக்கை விட்டு அசரவில்லை. இத்தனைக்கும் இவருக்கு முதல் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டிருந்தது. மனிதர் அட்டகாசமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தார். இவர் மட்டும் தான் இப்படி அமர்ந்து இருந்தார்.... இவர் மாத்திரமே இருக்கையிலேயே அமர்ந்து வண்ணம் இருந்தார்.


வரலாற்றில் இது முதல் முறை.


டொனால்ட் ட்ரம்ப் ஏகப்பட்ட கிடுக்கிப்பிடி போட்டு கிராக்கி பண்ண..... போய் வா கிராதகா எனப் பலரும் நடையை கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் தற்சமயம். இதில் முதல் நாடு கனடா. இவர் பதவிக்கு வந்த புதிதில் ஜஸ்டின் ட்ருடோ இவரை பார்க்க வந்த சமயத்தில் கனடாவை தனது 51 வது மாகாணமாக சேர்த்து விட கேட்டது பல கனேடியர்களை கொந்தளிக்க செய்தது.


இதை தொடர்ந்து ஏகப்பட்ட களேபரங்கள். தேர்தல் நடைபெற்றது அங்கு .முன்னரே எதிர்பார்த்தது போல் மார்க் கியானி என்பவர் பதவிக்கு வந்திருக்கிறார். ஓசை படாமல் வரி விலக்கு அளித்து ஒதுங்கி கொண்டது ட்ரம்ப் நிர்வாகம். அவர்களுக்கு வேறு வழி இல்லை.இதே போல் கடைசி கட்டத்தில் அதாவது ஏப்ரல் மாத தொடக்கத்தில் இந்தியா மீதான வரி விதிப்பை ஒத்திப்போடார்.


இந்த சமயத்தில் தான் மேற்படி பஹல்காம் சம்பவம் நடைபெற்றது.

இதை வைத்து பூச்சாண்டி காட்ட திட்டமிட்டார் ட்ரம்ப்.


பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்வினை என்ன என்பது ஆராயாமல்.....இது ஆயிரம் காலத்து பயிர்...... ஆயிரம் ஆண்டுகளுக்கான சண்டை என ஏதேதோ பேசி சிண்டு முடிய ஆரம்பித்தார்.


அசரவில்லை இந்தியா.

இம்முறை இவருக்கும் சேர்த்து ஒரு பாடம் நடத்த கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்க்க ஆரம்பித்தார்கள்.


உலக நாடுகளின் தலைவர்களுக்கு தகவல் தந்தனர். பதில் நடவடிக்கைகள் கடுமையான விதத்தில் இருக்கும் என அறிவிப்பு வெளியிட்டு அதிரடித்திருந்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தானை உஷார் படுத்தியது.தவிர அணு ஆயுதங்களுக்கு காவல் இருக்க ஆரம்பித்தது.


குறிப்பெடுத்து கொண்டனர் நம்மவர்கள். 


சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட அட்ராசிட்டி செய்து கொண்டு இருந்தது பாகிஸ்தான். ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தி விட்டதாக.... உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தி அதகளம் பண்ணியதாக கதை விட்டதோடு AI தொழில்நுட்ப பண்புகள் கொண்டு பிம்மிளிக்கி பிளாப்பி வேலைகளில் கவனம் செலுத்தியதோடு எட்டாம் தேதி அதிகாலையில் நடைபெற்ற நம்மவர்களின் துல்லியமான தாக்குதலில் பலியான தீவிரவாதிகளுக்கு அரசு மரியாதையுடன் சவ அடக்கம் செய்வதில் கவனம் செலுத்தினர்.


இதற்கு தான் காத்துக் கொண்டு இருந்தார்கள் நம்மவர்கள்.


அட்சரம் பிசங்காமல் போட்டு வைத்த திட்டத்தில் வம்படியாக வந்து மாட்டினார்கள். உலகம் முழுவதும் தீவிரவாத அமைப்புகளுக்கு பதியம் போட்டு வளர்த்த விடும் பாகிஸ்தானை கட்டம் கட்டி காண்பித்து கொடுத்தனர். இப்போதாவது முழித்து கொண்டு இருக்க வேண்டும் அமெரிக்கா.


அதற்கெல்லாம் எங்கே நேரம் அவர்களுக்கு......


இந்த உலகில் யாருமே செய்ய துணியாத ஒன்றை செய்ய நம்மவர்கள் முன்னெடுத்தனர்.


அணு ஆயுத போர்....

அணு ஆயுத தாக்குதல் நடத்தி விடும் பாகிஸ்தான் என பூச்சாண்டி காட்டியவர்களுக்கும் சேர்த்து... நம்மவர்கள் பாடம் நடத்த ஆரம்பித்தனர். இம்முறை ட்ரோன் தாக்குதலுக்கு பதில் நடவடிக்கைகள் போலும் பகல் நேரத்தில் உள்நுழைந்து தாக்குதல் நடத்தி விட்டு இரவில் அணு ஆயுத கிடங்கை நேரிடையாக தாக்குதல் நடத்தி கதிகலங்க செய்தது இந்தியா.


அணு ஆயுத கிடங்கு பாகிஸ்தான் பகுதியில் ஐந்து இடங்களில் இருக்க.... இதில் தரைவழி தாக்குதல் நடத்தும் இடங்களை தவிர்த்துவிட்டு... விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதற்கு தோதான ரகசிய இடத்தில் பராமரிக்கப்படும் ...... அமெரிக்க உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள தளத்தின் மீது தாக்குதல் நடத்தி அதிர்ச்சி அளித்திருக்கிறார்கள்.


ஆக இலக்கென்னவோ பாகிஸ்தான் தான் ஆனால் நோக்கம் அமெரிக்கா தான் என்பது தற்போது தெள்ளத் தெளிவாக தெரியவந்துள்ளது.


ஏன்......?!?!


அதில் தான் ஏகப்பட்ட விஷயங்கள் வருகின்றன.


அமெரிக்கா மேலுக்கு நட்பு பாராட்டி வந்தாலும் இந்திய வளர்ச்சி அதற்கு ஏற்புடையதாக இல்லை.


அவர்களுக்கு சீனாவின் வல்லாதிக்க கனவுகளை கலங்கடிக்க... எதிர்கொள்ள ஒரு இடம் தேவை.... அதற்கு தோதாக நம் இந்திய தேசத்தை வளைக்க.... வளர்க்க பார்க்கிறார்கள். இதனை ஜோபைடன் நேரிடையாக செய்தார்.... டொனால்ட் ட்ரம்ப் நட்பு பாராட்டி செய்ய நினைக்கிறார்.


இது இரண்டிற்கும் நம்மவர்கள் மசியப்போவதில்லை‌


இது எது வரையில் செல்லும் என்கிற ஆருடம் உலகம் முழுவதும் உண்டு.


அதற்கு நம்மவர்கள் அட்டகாசமாக பதில் சொல்லி இருக்கிறார்கள்..... நேரிடையாக மற்றும் களத்திலும்....


உலகின் எல்லை வரை சென்று தாக்குவோம் என்பது நேரான பதில்.

களத்தில் அணு ஆயுத எடுப்போம் என்றதற்கு கிடங்கு விட்டு வெளியே வந்தால் தானே...... என தங்கள் செய்கையால் கேள்வி கேட்டு இருக்கிறார்கள்.


கிடங்கு ரகசியமாக பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் அதில் நேரிடையாக தாக்குதல் நடத்தி வைத்திருக்கிறார்கள். வரும் வழியை அடைத்து விட்டார்கள். ஆக.... தற்சமயம் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து வெளியாகும்..... அல்லது வெளியாகக்கூடும் என அவதானிக்கப்படும்  அணு கசிவை தடுக்க அந்த இடத்திற்கு உடனடியாக சரி செய்ய சென்று விட முடியாது. வெளியே இருந்து விமானத்தில் இருந்தே தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். 


ஆக இது உலகம் முழுவதும் தெரிந்து விடும். தவிர அங்கு அமெரிக்காவை சேர்ந்த கண்காணிப்பு குழுவினர் உள்ளே மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.


இதனை அமெரிக்காவால் சொல்லவும் முடியவில்லை...... அதேசமயம் நகர்ந்து விடவும் முடியாது. ஏனெனில் இது அவர்களின் மேற்பார்வையில் கட்டப் பட்டுள்ளது. அவர்களின் பராமரிப்பில் உள்ளது.


அமெரிக்கா தான் சமாதானம் செய்து வைத்ததாக சொன்ன ட்ரம்ப்..... நேற்று சமாதானம் செய்ய முயன்றோம்.... இந்தியா ஒத்துழைக்க வில்லை என போட்டுடைத்து மீண்டும் முகத்தில் கரியை பூசிக்கொண்டார். கூடவே ஆப்பிள் ஐபோன் தயாரிப்பை இந்தியாவில் மேற்கொள்ள கூடாது தான் விரும்புவதாக போட்டுடைத்தார். 


நம்மவர்களோ மேற்கொண்டு வரி விதிப்பை தீவிரப் படுத்த வேலை பார்த்து அதிரடித்து வருகிறார்கள்.நம் இந்திய மருந்து கம்பனியின் மருந்து தான் பல அமெரிக்கர்களை காபந்து செய்து வருகிறது.... இல்லை என்றால் காப்பீடு செய்தே திவாலாகி விடுவார்கள் அவர்கள்.


டிம், ஆப்பிள் நிறுவன தலைவர்.... உங்கள் சண்டைக்கு ஏன் எங்களை இழுக்கிறீர்கள் என பாய்ந்து பிரண்ட ஆரம்பித்து இருக்கிறார். சீனா கூடவே கூடாது என்றீர்கள் இந்தியா சரி என்று நீங்கள் தான் சொன்னீர்கள்..... எல்லாவற்றையும் வாரிக்கொண்டு இந்தியா வந்த இந்த சமயத்தில் இப்போது அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்தால் என்ன என்கிறீர்கள்..... நீங்கள் சொல்வது போல் செய்தால் மூன்று மடங்கு விலை வரும்...... யார் வாங்க முன்வருவார்கள்..... அப்படியே நடைமுறை படுத்தினாலும் மூன்று ஆண்டுகள் பிடிக்குமே.... அதற்கடுத்த ஆறு மாதத்தில் நீங்களே அதிபர் இல்லை பிறகு எதற்கு எங்களை பாடாய் படுத்துகிறீர்கள் என ஏகத்திற்கும் அவர் வாரியிருக்கிறார் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்....


இது ஒரு புறம் இருக்க.......

பெருமை மிகுந்த அமெரிக்காவின் கடைசி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் என ஏகப்பட்ட பேர் தற்சமயமே அமெரிக்காவில் பகடி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது தனிக் கதை.


தீவிரவாதிகளுக்கு துணை போகிறீர்களா.... இந்திய துணைக்கண்டத்தில் இருந்தே வெளியேறப்போகிறீர்களா..... என கேட்காமல் கேள்வி கேட்டு இருக்கிறார்கள் நம்மவர்கள். விழி பிதுங்கி நிற்கிறது ஆனானப்பட்ட அமெரிக்கா.


நம் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு.அன்று இதற்கு தடைவிதிக்க ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபட்டு வந்தனர் பீட்டா அமைப்பு பெயரில்.... பின்னணியில் அமெரிக்கா இருந்தது அனைவருக்கும் நன்கு தெரிந்தது. அவர்களின் தேசிய விலங்கு காட்டு மாடு என சொல்லப்படும் பைசன். நம்மூர் ஊடகங்களில் இவற்றை காட்டெருமை என்றே எழுதிக் கொண்டு வருகிறார்கள்.... எருமை இனம் இதுவல்ல என இந்த எருமைகளுக்கு எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை என்பது வேறு கதை.ஆனால் நம் உணர்வுகளை புரிந்து அன்று ஜல்லிக்கட்டு நடத்த துணை நின்றது இந்திய மத்திய அரசு தான்.


ஆனால் இங்கு..... விடாமல் ஜல்லி அடித்து கொண்டு இருந்தனர் என்னமோ தாங்கள் தான் காரணம் என்று. அது தவிர வேடிக்கை பார்க்க சென்ற இடத்திலும் ஏகப்பட்ட அலப்பறை அழிச்சாட்டியம்.... காண சகிக்கவில்லை.....


ஆனால் களத்தில்.....

தற்போதைய நம் பாரதப் பிரதமர் செய்கிறாரே..... அது மகத்தான வீரம். ஆனானப்பட்ட அமெரிக்காவையே மூக்கு உடைத்து அனுப்பி வைத்திருக்கிறார். என்னமோ ஒன்னும் இல்லாத தேசம் பாகிஸ்தானை அடிக்க இத்தனை ஆர்ப்பாட்டமா என இங்கு உள்ள பதர்களுக்கு இந்த விஷயம் எல்லாம் என்னவென்றாவது புரியுமா.... பதம் பார்த்தது பாகிஸ்தானை அல்ல ..... அதன் பின்னால் இருந்த அமெரிக்காவை என்று.


பொறுத்திருந்து பாருங்கள்....

இவையெல்லாம் பிள்ளையார் சுழி தான்.


💗 ஜெய் ஹிந்த்.

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது