தமிழ்நாடு முழுக்க பிராமணன் பேசறது ஒரே தமிழ்தான் அது சுத்தத் தமிழ்- பிராமணர்கள் வித்தியாசமான ஒரு தமிழைப் பேசுகிறார்களே ஏன்? அந்த மொழி வழக்கின் மூலம் என்ன? இங்கே நான் தமிழ் பிராமணர்கள் என்று குறிக்கையில் 'மிகவும் பெரும்பான்மையான தமிழ் பிராமணர்கள்' என்கிற பொருளில் எடுத்துக்கொள்ளுங்கள்

 


உண்மையிலயே, ஆரிய வந்தேறி பார்பணர்கள் பேசறது சுத்தமான தமிழா?-


இல்ல, இந்த கருப்பர் கூட்டம் புள்ளிங்கோ பேசறது சுத்தத் தமிழா?-


உதாரணமா பிராமணன் அகத்துத்து அழைச்சுண்டு வாங்கோன்னு சொல்லுவான் -


நம்ப புள்ளிங்கோ எப்படி சொல்லுவான்?-

வீட்டுக்கு இஸ்துகினு வான்னுவான்-


இதுல எது உண்மையான தமிழ்?-


இது சென்னைத் தமிழ் அப்படித்தான் இரிக்கும்னு சொல்றவங்களுக்காக-


சென்னைத் தமிழ், மதுரைத்தமிழ், நெல்லைத் தமிழ், கொங்குத் தமிழ்னு ஆயிரம் தமிழ் இருந்தாலும் -


தமிழ்நாடு முழுக்க பிராமணன் பேசறது ஒரே தமிழ்தான் அது சுத்தத் தமிழ்-


பிராமணர்கள் வித்தியாசமான ஒரு தமிழைப் பேசுகிறார்களே ஏன்? அந்த மொழி வழக்கின் மூலம் என்ன?

இங்கே நான் தமிழ் பிராமணர்கள் என்று குறிக்கையில் 'மிகவும் பெரும்பான்மையான தமிழ் பிராமணர்கள்' என்கிற பொருளில் எடுத்துக்கொள்ளுங்கள். (எங்குமே விதி விலக்குகள் உண்டு) -


பிராமணர்கள் பேசும் தமிழ், மற்றவர்கள் பேசும் தமிழை விட சுத்தமாகவும், உச்சரிப்புத் தெளிவுடனும் இருக்கும் அவர்களுக்கே உரிய சில கொச்சை மொழிகளும் உண்டு -

(எப்படி கொங்குத் தமிழ், நெல்லைத் தமிழ், சென்னைத் தமிழ் என்றெல்லாம் வட்டார வழக்குகளில் அவரவர்க்குள்ள கொச்சைகள் உண்டோ அது போல)-


பிராமணர்கள், ழ-ல-ள க்களைத் தெளிவாகவும், சரியாவும் உபயோகிப்பார்கள். தம் பிள்ளைகள், பள்ளி நண்பர்களுடன் -

பேசிப் பழகுவதால் ழ, ல, ள சரியாக உச்சரிக்கவில்லை என்றால் கண்டித்துத் திருத்துவார்கள்-


வீட்டில் பேசும் தமிழில், அவர்கள் வாழும் ஊரின் வட்டார வழக்குக் கொச்சைகளும், வட்டார 'ராகங்களும்' (அதாவது ஏற்ற இறக்கங்கள்) வராமல், முடிந்தவரை பிராமண குடும்பங்களில் புழக்கத்தில் உள்ள பேச்சு வழக்கில் பேசுவதையே கைக்கொள்ளுவார்கள்-


நான் அறிந்தவரை, தமிழ் நாட்டிலேயே மரியாதை கெட்ட, மகா மோசமான வட்டாரத் தமிழ் என்றால் அது சென்னைத் தமிழ்தான்-

சென்னை வாழ் பிராமணர்கள் வீட்டில் வேடிக்கை விளையாட்டாக அந்தத் தமிழில் எப்போதாவது பேசலாமே தவிர, அதையே சகஜமான பேச்சுத் தமிழாகப் பேச பிராமணர்கள் அனுமதிக்கவே மாட்டார்கள்-

பிராமணர்கள் பேசும் தமிழ் கூடுதல் சுத்தமாக இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்-


தமிழ் மொழியின் வளர்ச்சி, இலக்கியம், பேணல் இவற்றில் பிராமணர்கள் பெரும் பங்கு வகித்ததற்கு அவர்களின் இந்தக் குடும்ப கலாசாரம் ஒரு முக்கியமான காரணி. (தனித் தமிழ் இயக்கத்துக்கு ஒரு முன்னோடியாகக் கருதப்பட்ட பரிதிமாற் கலைஞர் கூட ஒரு பிராமணரே)-


ஆனால், தற்கால மேல் தட்டு பிராமணர்கள், அதிகம் ஆங்கிலக் கலப்புடன் பேசுவது உண்மையே - ஆனாலும், தமிழைக் கொச்சைப் படுத்திப் பேசமாட்டார்கள்-


சாமானிய பொது மக்களின் பேச்சில் கலந்து விளையாடக்கூடிய கெட்ட வார்த்தைகளை நண்பர்கள் மூலம் அறிந்து, தவறிப் போய் வீட்டில் பேசிவிட்டால் கண்டிப்பாக அடி, திட்டு விழும். ஒழுக்கக் கேடான பேச்சுக்கு வீட்டில் இடம் கிடையாது-


இக்கால பிராமணர்கள் பலரும் சம்ஸ்கிருதம் அறியாதவர்கள் -

ஆனால், பாரம்பரியத்தில் பல தலைமுறைகளுக்கு முன்னர் வேதம் படித்தவர்கள், சம்ஸ்கிருதம் படித்தவர்கள் உண்டாதலால், காலம் காலமாக சில சம்ஸ்கிருத சொற்கள் பிராமணர்களின் பேச்சுத் தமிழில் கலந்திருக்கும்.

-


பிராமணர் பேச்சில் பரவலாக இருக்கும் சம்ஸ்கிருத /சம்ஸ்கிருதம் தமிழோடு கலந்த சொற்கள் சில:-


தீர்த்தம் (கொச்சையாக தேர்த்தம், தூத்தம் என்றும் சிலர் சொல்வார்கள்) , ஜலம் (நீர்), அக்னி, வாசி (படி), மத்யான்னம் (நடுப் பகல்), சாஸ்வதம் (நிரந்தரம்), சதா (எப்போதும்), ஸ்னானம் (குளித்தல்), பக்ஷணம் (தின்பண்டம்), ப்ராப்தி (கொடுப்பினை), ஸ்வாசம் (மூச்சு), அன்ன ஆகாரம் (சாப்பாடு), ஆராதனை (வழிபாடு), ரோதனை (அழுதல்/ புலம்பல்), ப்ராணன் (உயிர் மூச்சு), அல்பாயுஸு (குறைந்த வயதில் சாவது), பர்யந்தம் (வரை), பார்யை (மனைவி), புருஷன் (ஆண்/கணவன்), சௌக்யம், க்ஷேமம், நமஸ்காரம், தேவரீர் (நீங்கள்), தாஸன், மஹானுபாவன் (மிக நல்லவர்), எதேஷ்டம் (ஏராளம்), மனுஷாள் (மனிதர்கள்), ஸ்ரேஷ்டம் (சிறப்பு), த்ராபை (கனமில்லாமல் இருப்பது) இப்படிப் பல-


அதுமட்டுமல்ல. சிறப்பான தூய தமிழ்சொற்களும் பிராமணர் (குறிப்பாக வைணவர்கள்) இடையே புழக்கத்தில் உண்டு -


பிராமணர்கள் உபயோகிக்கும் அப்படிப்பட்ட நல்ல தமிழ்சொற்கள் -


ஆம் (அகம் - வீடு), உடப்பிறந்தான் (சகோதரன் -- கூடப் பிறந்தவன் என்பதன் திரிபு), மன்னி (மதனி), அம்மாஞ்சி (அம்மான் சேய் -- மாமன் மகன்), அத்தங்கா (அத்தை அங்காள்), அத்திம்பேர்(அத்தை அன்பர் - அத்தையின் கணவன், அக்காளின் கணவன்), சித்யா (சித்தியின் ஐயா (கணவன்)), சாத்தமுது (சாத அமுது - ரசம்/ சாற்றமுது = சாறு+அமுது), அக்காரவடிசல் (அக்கார அடிசில்), ஏளப்பண்ணுதல் (எழுந்தருளப் பண்ணுதல்), அமிசிச்சாச்சா? (அமுது செய்தாயிற்றா - சாப்பிட்டாயிற்றா), கரமேது (கறி அமுது), திருக்கண்ணமுது (பாயசம்), ஏனம் (பாத்திரம்), அடுக்களை (சமையற்கட்டு), தளிப்பண்ற உள் (தளிகை பண்ணும் உள் - சமையல் அறை), கோவிலாழ்வார் (பூஜைப் படம் வைக்கும் மரத்தாலான பீடம்), திருத்துழாய் (துளசி), அடியேன் (நான்) -


பிராமணர்களின் கொச்சை மொழிகள் (பிற கொச்சைகளோடு ஒப்பிட்டு)- (சரியான தமிழ்) -


வாங்கோ, போங்கோ (வாங்க, போங்க)- (வாருங்கள், போங்கள்)

நோக்கு, நேக்கு (உனக்கு, எனக்கு)

சொன்னேளா (சொன்னீங்களா), கேட்டேளா (கேட்டீங்களா)

சொன்னேள், கேட்டேள் (சொன்னீங்க, கேட்டீங்க)-(சொன்னீர்கள், கேட்டீர்கள்)

அவா, இவா (அவுங்க, அவின்கிய, இவுங்க, இவிங்கிய)-(அவர்கள், இவர்கள்)

வந்தா, போனா (வந்தாங்க, போனான்ங்க)வந்துடு (வந்துவிடு), வந்துடுத்தூ (வந்திடிச்சி) - (வந்துவிட்டது) -


வந்துது, போச்சு (வந்திச்சு, போயிடுச்சு)-(வந்தது போனது)

சொன்னா ( சொன்னாங்க)-(சொன்னாள், சொன்னார்கள்)

வாடாப்பா (வயதில் சிறிவர்களை விளிப்பது) (வாப்பா)

வாடீம்மா (வயதில் சிறிய பெண்ணை விளிப்பது (வாம்மா)

ஆம்படயான், ஆம்படயாள் (அகம் உடையான், அகம் உடையாள் அதாவது கணவன், மனைவி)

தோப்பனார் (தகப்பனார்), ப்ராதா (தம்பி), மச்சினி (மைத்துனி) -


ஆத்துக்காரர், ஆத்துக்காரி (வூட்டுகாரர், வூட்டுக்காரி)

தேர்த்தாமாடியாச்சா? (குளிச்சிட்டியா) - தீர்த்தம் ஆடியாயிற்றா -


ஆப்டுடுத்தா (அகப்பட்டு விட்டதா, மாட்டிக்கிச்சா)

ஆப்டுண்டான் (மாட்டிக்கிட்டான்)

இருக்கப்டாதா? (இருக்கக் கூடாதா?)

ஏன்னா (ஏனுங்க -- மனைவி, கணவனை விளிப்பது)

ஆம்படையா ஆத்திலே இல்லை (மனைவி மாதவிலக்கு)

உனக்கு நாளா? (உனக்கு மாதவிலக்கு சமயமா?)-


ஆச்சா? (ஆயிடுச்சா) - (ஆயிற்றா)

சித்தப்பண்ணு (சுத்தம் பண்ணு அல்லது சித்தம்<தயார்> பண்ணு)

செத்த (சற்று), அகஸ்மாத்தா (எதேச்சையாக)

எல வடாம் எழுது (இலை வடகம் உண்டாக்கு) -


பிராமணர்களின் சில திட்டு வார்த்தைகள்(!) -


தத்தி (ததி-சம்ஸ்கிருதத்தில் தயிர் என்று அர்த்தம்)

பேக்கு (பேவகூஃப்), லூசு, கழண்ட கேசு, பித்துக்குளி

அசமஞ்சம் (மந்த புத்திக் காரன்)

பிரும்மஹத்தி (பிராமணனைக் கொன்றவன்)

அபிஷ்டு (அபீஷ்டம் என்றால் அதிகப்படி ஆசை)

சனியன், பீடை, விளக்குமாறு, கடங்காரா, மூதேவி

நாசமாப் போக (சில பெரியவர்கள் அதைத் தவிர்க்க 'நாசமத்துப் போக' என்று மங்கலமாய்த் திட்டுவார்கள்)

படவா (படுவாய்) ராஸ்கல்

அசத்து (சத்தில்லாதவன்)-


பிராமணர்களின் சில குழந்தை மொழிகள்(!)


மம்மு (சாதம்), தச்சி (தயிர்), கக்கு (இனிப்பு), பப்பு மம்மு (பருப்பு சாதம்), மூச்சா போ (ஒன்றுக்குப் போ), ஆய் போ (மலம் கழி), உம்மாச்சி (கடவுள் - 'உமாமகேசன்' என்பதன் திரிபு), ஜோஜோ (குளி), தாச்சிக்கோ (படுத்துக்கோ), தொப்பை ரொம்பியாச்சா (வயிறு நிறைந்ததா) -


பிராமணர்களின் சில சகஜங்கள்-


சகோதர சகோதரிகள் வயது வித்தியாசமில்லாமல் ஒருவரை ஒருவர் வாடா, போடா, வாடி, போடி என்று சொல்வது. பெரியவர்கள், சிறிய பெண்களை வாடி, போடி என்பது-


சில பல குடும்பங்களில் பெற்றோர், தாத்தா பாட்டி, நெருங்கிப் பழகும் சித்தி, அத்தை, மாமா, சித்தப்பா இவர்களை குழந்தைகள் உரிமையில் வா, போ என்றே அழைத்துப் பேசுவார்கள்! அதைப் பெரியவர்களும் பெரிதாகக் கண்டிக்க மாட்டார்கள். உறவின் நெருக்கம் என்று விட்டுவிடுவார்கள்-


ஆனால், மனைவி கணவனை "வா, போ' என்று எல்லார் முன்னிலும் பேசினால் முறைப்பார்கள், முகம் சுளிப்பார்கள்-


சரி, இப்பொழுது கூறுங்கள்-


உண்மையிலேயே இங்கே தமிழ் வளர்ப்பவர்கள் திராவிட புள்ளிங்கோங்களா அல்லது இவர்கள் கூறுவது போல ஆரிய பார்ப்பண வந்தேறிகளா?-


இறுதியாக தமிழ் தாத்தா உ.வே.சா அவர்களே ஒரு தமிழ் பிராமணர் என்பதைக் கூறிக் கொண்டு......


தேசப்பணியில் என்றும் -

ந.முத்துராமலிங்கம் -

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.