இரயில் கட்டணம் ஒரு பத்து பைசா உயர்ந்தால் எதிர்ப்பு குரல் கொடுக்கும் எந்த தகுதியும் இல்லாத ஆளும் மாநில அரசு உடல் உழைப்பின் மூலம் ஈட்டும் பணத்தை கொண்டு கிராமத்தில் வீடு கட்டும் ஏழை எளிய மக்களுக்கு மாநில அரசாங்கம் கொடுக்கும் டார்ச்சரை அநியாய கட்டண தொல்லையை எந்த கட்சிகளும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லையே ஏன்?
இந்த அநியாயம் அக்கிரமத்தை கேட்க நாதியில்லையா?
மாநகராட்சி நகராட்சிகளில் வீடு கட்ட வரைபட அப்ரூவல் வாங்க வேண்டும் என்று தான் 2021 வரை நடைமுறை இருந்தது...
கிராமத்தில் வீடு கட்டுபவர்கள் ப்ளான் அப்ரூவல் வாங்க எந்த கட்டாயமும் கிடையாது
கிராமத்தில் வங்கி கடன் வாங்கி வீடு கட்டுபவர்கள் மட்டுமே ப்ளான் அப்ரூவல் வாங்குவார்கள்
அதற்கு சதரடிக்கு 5ரூபாய் தான் கட்டணமாக 2021வரை இருந்தது..
இப்ப படிப்படியாக ப்ளான் அப்ரூவல் வாங்க மாற்றம் கொண்டு வந்தனர்
ஒரு வருடம் முன்பு self approval என்று அறிமுகம் செய்து இனி அப்ரூவல் வாங்க எந்த அலுவலகத்திலும் எந்த அலுவலர்களிடம் அப்ரூவல் வாங்க அலைய வேண்டாம் 2500சதுரடி வரை self approval போதும்... அப்ரூவல் தேவையில்லை என்றனர் ஓகோ 2500சதுரடி வரை அப்ரூவல் கட்டணம் கிடையாது என்று யூகித்தோம்...
ஆனால் கதை அப்படியல்ல
1) லே - அவுட் மனை ( DTCP) அப்ரூவல் பெற்ற இடங்களில்...
2) 2500 சதுரடிக்குள் உள்ள இடத்தின் பரப்பளவு இருக்க வேண்டும்
3) இரண்டு அடுக்கு 23அடி உயரத்திற்குள் இருக்க வேண்டும்
4)வீட்டின் அளவு 3500சதுரடி பரப்பளவுக்குள் உள்ள
வீடு கட்ட மட்டுமே self approval திட்டம்
இந்த self approval திட்டத்தில் கட்டணம் ஒரு சதுரடிக்கு 37ரூபாய்
ஊராட்சி அலுவலகம் ஆய்வு கட்டம் 1500 ரூபாய்
இது மட்டுமல்ல தனியாக இன்ஜினியர் கட்டணம் 5500 ரூபாய் இன்ஜினியரை பொருத்து இந்த கட்டணம் இன்னும் கூடுதலாக கூட கேட்கலாம்
ஆக ஒரு 1000ம் சதுரடியில் வீடு கட்ட குறைந்தபட்சம் 45"ஆயிரம் இந்த self approval திட்டத்தில் செலவை அரசு கட்டாயம் ஆக்கிவிட்டது
இதில் இன்னொரு விசயம் கிராமத்தில் உள்ள மனைகள் பெரும்பாலும் லே-அவுட் போட்டு ( DTCP) அப்ரூவல் பெற்ற மனைகளாக இருக்காது... தன் சொந்த பூர்வீக இடத்தில்தான் வீடு கட்டுவார்கள் அந்த பூர்வீக இடம் 2500 சதுரடிக்கு மேல் தான் இருக்கும், அப்படி 2500 சதரடிக்கு மேல் மனையில் வீடு கட்டினால் self approval திட்டம் பொருந்தாது
நீங்கள் கிராமத்தில் வீடு கட்டும் மனை அளவு 2500 சதுரடிக்கு மேல் போனால் ஒரு சதுரடிக்கு 47ரூபாய் இதொடு ஊராட்சி ஆய்வு கட்டணம் 1500,
இன்ஜினியர் கட்டணம் 5500 மற்றும் இதர செலவுகளோடு எல்லாம் சேர்த்தால் 1000 சதுரடிக்கு வீடு கட்ட 60 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்சம் அரசுக்கு கட்ட வேண்டும்...DTCP அப்ரூவல் பெற்ற மனைகளாக இல்லாத நிலையில் அதற்குறிய கட்டணம் கூடுதலாக 20ஆயிரம் வரை ஆகலாம்
இப்ப மாநில அரசு ஊராட்சி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையை படிக்கும் போது அதிர்ச்சியாக உள்ளது
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் வீடு கட்ட எந்த அப்ரூவலும் வாங்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை எந்த கட்டணமும் செலுத்த வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை என்ற நிலைமாறி அப்ரூவல் வாங்க 80ஆயிரம் ரூபாய் இருந்தால் தான் வீடு கட்ட ஆரம்பிக்க முடியும் என்று அரசு கிராமத்தில் உள்ள மக்களை கட்டாயம் செய்துவிட்டது
அதோடு கதை வேற லெவலுக்கு போய் விட்டது ஆம் இனி அப்ரூவல் கட்டணம் செலுத்தாமல் வீடு கட்டினால் சீல் வைக்க போறாங்களாம்
மாநகராட்சி நகராட்சியில் போல் கிராமத்தில் வீடு கட்டுபவர்களை இப்படி டார்ச்சர் செய்வது அநியாயம் அக்கிரமம்
இரயில் கட்டணம் ஒரு பத்து பைசா உயர்ந்தால் எதிர்ப்பு குரல் கொடுக்கும் எந்த தகுதியும் இல்லாத ஆளும் மாநில அரசு உடல் உழைப்பின் மூலம் ஈட்டும் பணத்தை கொண்டு
கிராமத்தில் வீடு கட்டும் ஏழை எளிய மக்களுக்கு மாநில அரசாங்கம் கொடுக்கும் டார்ச்சரை அநியாய கட்டண தொல்லையை எந்த கட்சிகளும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லையே ஏன்?
மேடைப்பேச்சுக்கு மட்டும் மக்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் நாங்கள் முதல் ஆளாக போராடுவோம் என்று பம்மாத்து காட்டும் கூட்டணி கட்சிகள்
*திமுக அரசு ஆட்சி செய்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் ஏழை மக்கள் பாதிப்பு அடையும் இது போன்ற எண்ணற்ற விலைவாசி உயர்வுகள் இவற்றையெல்லாம் சொல்லி உங்களுடன் ஸ்டாலின் என்ற தேர்தல் முன்னோடி விளம்பரத்திற்கு வலு சேர்க்க ஸ்டாலின் அரசுக்கு தைரியம் உள்ளதா*?
Comments
Post a Comment