அவனே இந்துஸ்தான விடுதலையின் முதல் குரலை சொன்னான் படை இல்லை, அரசன் இல்லை, நமக்கென பிரிட்டிசாரை எதிர்க்கும் வல்லமை இல்லை என இந்துஸ்தானம் உடைந்துபோன நாட்களில் "ஏ இந்துஸ்தானமே உன் போராட்டம் அலெக்ஸாண்டர் காலத்தில் இருந்து நீடிக்கின்றது மாபெரும் மன்னரகளை சக்கரவர்த்திகளை எல்லாம் அசைத்துபோட்டவர்கள் நாம் ஆனானபட்ட மொகலாயத்தையே பிடுங்கி வீசியவர்கள் நாம், அப்படிபட்டவர்கள் ஒரு சிறிய தீவின் கூட்டத்தின் ஆட்சிக்கு அஞ்சலாமா? நம்மிடம் என்ன இல்லை, எல்லாம் நம்மிடம் உண்டு, நம் ஆன்மா இந்துஸ்தானம் அந்த இந்துஸ்தான உணர்வு ஆயிரமாயிரம் சேனைகளை உருவாக்கும், அந்த உணர்வுதான் நம் பலம் , அந்த உணர்ச்சிதான் நம் வாழ்வு

 





மன்னர்களும் சுல்தான்களும் ஆட்சி செய்த இந்தியாவினை பிரிட்டிஷார் துப்பாக்கி முனையில் பிடித்தனர், இனி இந்தியருக்கு மன்னர்கள் இல்லை, ராணுவம் இல்லை , இனி இந்தியர் சுதந்திரம் பெற வழியே இல்லை என இறுமாந்திருந்தனர் பிரிட்டிசார்


தென் அமெரிக்க,  கண்டம் போல  ஆப்ரிக்க கண்டம் போல இனி கால காலத்துக்கும் தங்கள் ஆட்சி என சிந்தித்த அவர்களுக்கு உற்சாகம் கூடியிருந்தது


இனி தங்களுக்கு இந்துஸ்தானம் கால காலத்துக்கு அடிமை என அவர்கள் கருதிய நிலையில்தான் இந்தியர்களின் பலம் மன்னர்கள் அல்ல, ராணுவம் அல்ல, அதன் பலம் ஆட்சியாளர்கள் அல்ல‌


இந்துஸ்தானின் ஒரே பலம் அதன் மதம், அதன் கலாச்சாரம், அது காலம் காலமாக கொண்டிருக்கும் ஆழ்ந்த பாரம்பரீயம், இந்துஸ்தானின் ஆன்மா அதன் கலாச்சாரத்தில் இருக்கின்றது, மதத்தில் இருக்கின்றது அது கொடுக்கும் ஒற்றுமையில் இருக்கின்றது என சிலிர்த்தெழுந்தான் ஒரு தலைவன்


அவனே இந்துஸ்தான விடுதலையின் முதல் குரலை சொன்னான்


படை இல்லை, அரசன் இல்லை, நமக்கென பிரிட்டிசாரை எதிர்க்கும் வல்லமை இல்லை என இந்துஸ்தானம் உடைந்துபோன நாட்களில் "ஏ இந்துஸ்தானமே உன் போராட்டம் அலெக்ஸாண்டர் காலத்தில் இருந்து நீடிக்கின்றது மாபெரும் மன்னரகளை சக்கரவர்த்திகளை எல்லாம் அசைத்துபோட்டவர்கள் நாம்

ஆனானபட்ட மொகலாயத்தையே பிடுங்கி வீசியவர்கள் நாம், அப்படிபட்டவர்கள் ஒரு சிறிய தீவின் கூட்டத்தின் ஆட்சிக்கு அஞ்சலாமா?


நம்மிடம் என்ன இல்லை, எல்லாம் நம்மிடம் உண்டு, நம் ஆன்மா இந்துஸ்தானம் அந்த இந்துஸ்தான உணர்வு ஆயிரமாயிரம் சேனைகளை உருவாக்கும், அந்த உணர்வுதான் நம் பலம் , அந்த உணர்ச்சிதான் நம் வாழ்வு

எழு, விழித்தெழு போராடு, சுயராஜ்யம் நம் பிறப்புரிமை அதை அடைந்தே தீருவோம்" என முழங்கினான் ஆந்த உன்னத தலைவன்


ஆம், இந்திய சுதந்திரத்தின் அவசியத்தை முதன் முதலில் கம்பீரமாக கேட்ட ஜனநாயக தலைவர் அவர்தான், ஆயுத முனையில் இந்தியாவினை அடக்கிவிட்டு இன்னும் ஏகபட்ட குழப்பங்களை "புரட்சி" சமூக நீதி "சாதி ஒழிப்பு" "சமத்துவம்" என  பிரிட்டிசார் விதைத்துவிட்டு இந்த குழப்பங்களிலே இனி இந்தியாவினை ஆளலாம் என ஓரளவு நிம்மதி கொண்டிருந்த நேரமது


பிரிட்டிஷார்  இந்தியாவினை நல்வழியில் உயர்த்துவான் அவன் வராவிட்டால் இந்தியரெல்லாம் காட்டுமிராண்டிகள், பிரிட்டிஷார் ன் சென்றுவிட்டால் நாம் வாழமுடியாது எனும் விபரீத அடிமை எண்ணங்கள் விதைக்கபட்டு வளர்ந்த காலம் அது


அப்பொழுதுதான் அந்த மனிதன் மகராஷ்டிரம் ரத்னகிரியில் 1856ல் பிறந்து வளர்ந்தார், அது கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பிரிட்டிஷ் அரசு நேரடியாக இந்தியாவினை பெற்றிருந்த காலங்கள்


அப்பொழுது பள்ளியில் கணித பிரிவில் முதல் மாணவனாக வந்திருந்தான் அந்த சிறுவன், அவன் கணித மேதையாக பெரும் பொறியாளராக வரும் வாய்ப்பு இருந்தது, ஆசிரியர் அதைத்தான் வற்புறுத்தினார்கள் அவனோ சட்டத்தை தேர்ந்தெடுத்தான்


ஏன் என எல்லோரும் கேட்க அச்சிறிய வயதிலே சொன்னான் "நம் நாட்டில் சுதந்திர போராட்டம் நடக்கின்றது, நம் தலைவர்கள் கைதுசெய்யபடுகின்றார்கள், அவர்களை விடுவிக்க சட்டம் அவசியம் அந்த படிப்பு அவசியம்"

மிக சிறிய வயதிலே இப்படி நேசித்த அந்த சிறுவன் பின் பால கங்காதர திலகராக சட்டம் பயின்ற வழக்கறிஞராக காங்கிரசில் சேர்ந்தார்


அதுவரை காங்கிரஸ் இயக்கம் பிரிட்டிஷாரை விரட்ட முடியாது என்றே நம்பிகொண்டிருந்தது, உலக யதார்த்தபடி அதற்கு வழி இல்லாமலும் இருந்தது


பிரிட்டிஷாரை எஜமானர்கள் என நம்பி உரிமை கேட்ட காங்கிரசில் முதன் முதலில் அவர்கள் அந்நியர்கள் என சொல்லி ஒரு குரல் ஒலித்தது அது பெரும் கலகத்தையும் ஏற்படுத்தியது


மிக தைரியமாக அக்குரலை எழுப்பி பெரும் எழுச்சிக்கு வித்திட்டவர் பால கங்காதிர திலகர், அவரின் எழுச்சியே தேசத்தில் ஒரு அணலை எழுப்பியது, அது பின்னாளில் விடுதலையாக விடிந்தது


தன் சட்டபடிப்பின் மூலம் அவர் ஒரு வேலி போட்டுகொண்டு பேசிய பேச்சும் எழுதிய எழுத்துமே அவரை லோகமான்யா எனும் அளவுக்கு உயர்த்தியது 


லோகமான்யா என்றால் மக்களின் பெரும் தலைவன் என பொருள்


(இந்த லோகமான்யா எனும் பெயரை முறியடிக்கவே மகாத்மா எனும் பெயர் பின்னாளில் உருவாக்கபட்டது)


காங்கிரஸ் போராட்டம் தவிர வேறு வழிதெரியாத திலகருக்கு ஞானபார்வை கொடுத்தவர் விவேகானந்தர், புனேவுக்கு வந்த விவேகானந்தர் சுமார் 10 நாட்கள் திலகரோடு தங்கியிருந்த காலமே இந்திய வரலாற்றின் புதிய பாதையினை திருப்பியது


விவேகானந்தருடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு இந்துமத எழுச்சியே இத்தேசத்தின் விடிவு என்பதை ஆத்மார்தமாக நம்ப வைத்தது.


மொழி, இனம் என பிரிந்து கிடந்த இந்தியாவினை இணைக்கும் ஒரே விஷயம் இந்துமதம், அது ஒன்றால் மட்டுமே இத்தேசம் பிணைக்கபட்டது


நாடு முழுக்க மொழியாலும், இனத்தாலும் விடுதலை உணர்ச்சியினை எழுப்ப சிரமமான நிலையில் மதத்தால் அது எளிது என்பது திலகருக்கு புரிந்தது, மதத்தை விடுதலைக்கான ஆயுதமாக பயன்படுத்தினார்


அரசியல் கட்சிக்கு தடை, அரசியல் பேச தடை என்றிருந்த காலங்களில் மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்க பிரிட்டிசார் யோசித்தபொழுது அதுவரை சாதாரண நிகழ்வாக இருந்த பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தை இந்திய எழுச்சி ஊர்வலமாக சாதுர்யமாக நடத்தினார் திலகர்


இந்திய சுதந்திரத்திற்காக இந்து மதம் எனும் சக்தியினை கையில் எடுத்தாரே தவிர, ஒருகாலமும் மற்ற மதங்களை அவர் பழித்தாரில்லை, வரலாறு அதை சொல்கின்றது


கேசரி எனும் பத்திரிகையும் மராட்டா எனும் பத்திரிகையினையும் அவர் நடத்தினார், அதில் மராட்டா பத்திரிகை இந்தியா முழுக்க தனி செல்வாக்கை கொடுத்தது அதை தாண்டி ஐரோப்பாவிலும் அது கொண்டாடபட்டது


வங்கத்து குதிராம் போஸ் வங்க பிரிவினையினை எதிர்த்து குண்டு வீசிய நேரம் அதை ஆதரித்து தன் இதழில் மிக தைரியமாக எழுதினார் திலகர்


குதிராம் போஸுக்கு தூக்குவிதிக்கபட்டபொழுதும் அதை கண்டித்த ஒரே தலைவர் திலகர்தான்


யாருக்கும் இல்லாத தைரியம் அவருக்கு இருந்தது, இதனால் திலகருக்கு ஆதரவு பெருகிற்று

இதனை கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் அரசு அவரை சிறையில் அடைக்தது அதுவும் பர்மாவில் உள்ள தனி சிறையில் அடைத்தது, அப்பொழுது அவரின் உடல் நலமும் பாதிக்கபட்டது


உலகமே பிரிட்டனை கண்டித்தது. குறிப்பாக ஜெர்மனியின் மார்க்ஸ் முல்லர் பிரிட்டன் ராணிக்கே அதனை கண்டித்து கடிதம் எழுதினார், அம்மாதிரி அளவில் கண்டனம் பெருக பெருக‌ திலகருக்கு விடுதலை கிட்டியது


திலகரின் வழியில் லாலா லஜபதிராய், வ.உ சிதம்பரனார் என மாபெரும் தியாகிகள் எல்லாம் உருவானார்கள், ஏராளமான தியாக தீபங்களை ஏற்றியவர் திலகர்


உண்மையில் திலகரின் வழியில் வந்தவர்களே இத்தேசத்தின் மாபெரும் தியாகிகள் வரிசையில் நிற்கின்றனர் என்பதுதான் வரலாறு, அவரின் தியாகத்தால் எழுந்த எழுச்சி அப்படி இருந்திருக்கின்றது


காந்தியின் வருகைக்கு பின் திலகர் தீவிரவாதி என முத்திரைகுத்தபட்டாலும் திலகருக்கான அபிமானம் இத்தேசத்தில் குறையவில்லை


கிராமம் கிராமமாக சென்று மக்களை திரட்டினார், பிரிட்டிஷாரை இந்திய மக்கள் தூக்கி எறியமுடியும் என்ற நம்பிக்கையினை விதைத்தார்


இந்தியர் மேல் அபிமானம் கொண்டிருந்த , இந்தியரின் நியாயத்தை ஓரளவு பேசிய பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியுடன் தொடர்பில் இருந்தார், அவர்களை சந்திக்க அவர் லண்டன் சென்ற வேளையில்தான் 

ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது


அதை தொடர்ந்து இந்தியா திரும்பினார், அதன் பின் உடல்நலம் பாதிக்கபட நோயுற்று இறந்தார்

பின்னாளில் லேபர் கட்சியின் அட்லி இங்கிலாந்தில் பிரதமரான போழுதே இந்திய சுதந்திரம் கிடைத்தது, திலகர் இறந்து 27 வருடமான பின்பு அது நடந்தாலும் லேபர் கட்சி எனும் தொழிலாளர் கட்சியே இந்திய விடுதலையினை கொடுக்கும் என்ற திலகரின் தீர்க்க தரிசனம் தப்பவில்லை


இந்நாட்டில் மாபெரும் சுதந்திர எழுச்சியினை ஏற்படுத்தியவர் என்ற முறையிலும், “சுதந்திரம் எமது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவோம்” என முழங்கி நின்ற சுதந்திர போராளி என்ற வகையிலும் திலகர் இந்நாட்டின் தலைமகன்


சட்டம் படித்து நாட்டுக்கு போராட வந்து தன் வாழ்வின் ஒவ்வொரு மூச்சையும் தேசத்துக்காக அர்பணித்த மகான் அவர், ஏற்கனவே பர்மா சிறைவாசத்தால் நோயுற்ற அவர் ஜாலியன் வாலாபாக் படுகொலையின் பாதிப்பில் அஞ்சலி செலுத்தி "இம்மக்களின் தியாகம் வீணாகாது" என சொல்லி மறைந்தார்


அந்த தலைமகனுக்கு இன்று பிறந்த‌ நாள், தேசம் அந்த மாபெரும் தலைவனுக்கு அஞ்சலி செலுத்துகின்றது

திலகருக்கு இந்தியாவில் பிடித்த மாகாணங்களில் சென்னை தமிழகமும் ஒன்று, சென்னை வரும்பொழுதெல்லாம் அவரும் பாரதியாரும் வ உ சியும் சென்னை கடற்கரையிலே உரையாடுவார்கள் பொது கூட்டம் நடத்துவார்கள்


அதனால் அந்த இடம் "திலகர் திடல்" என்றானது


(திலகர் திடலை முடக்கும் அலல்து மறைக்கும் விதமாக என்னென்ன திடல்கள் உருவாயின என்பதெல்லாம் எல்லோரும் அறிந்தது)


தேசபற்று மிக்க அந்த இடத்தின் பெருமையினை மறைத்து தேசபக்தியினை குலைக்கும் விதமாகத்தான் திராவிட கல்லறைகள் அப்பக்கம் பின்னாளில் எழும்பி இன்று திலகர் திடல் சுருக்கபட்டிருக்கின்றது, சிலருக்கு அப்படி ஒரு இடம் அங்கு இருப்பதே தெரியாது


அந்த திடலில் திலகருக்கு வ.உ.சி பாரதியுட பிரமாண்ட சிலை வைக்கபட வேண்டும், அதன் அடியில் "சுதந்திரம் எம் பிறப்புரிமை அதை அடைந்தே தீருவோம்" எனும் அந்த வீரமான முழக்கங்கள் சென்னை கடற்கரையின் எப்பக்கத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும்படி வழிவகை செய்து வைக்கபடல் வேண்டும்

காலம் அதை ஒருநாள் நிச்சயம், செய்யும்


பிரிட்டிஷாரிடம் அடிமையாய் இருந்து அவன் தரும் உரிமைகளை பெற்று வாழ்வதை தவிர வேறு வழியே இந்தியாவுக்கு இல்லை என காங்கிரஸ் சொல்லிகொண்டிருந்த காலங்களில் , "சுதந்திரம் எம் உரிமை" என முதலில் முழங்கிய அம்மகானை தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் இந்நாளில் வணங்கி கொண்டிருக்கின்றார்கள்


திலகர் கனவுகண்ட அந்த சுந்தந்திர இந்தியா இப்பொழுதுதான் உருவாகி கொண்டிருக்கின்றது எனும் வகையிலும் 75ம் ஆண்டு சுதந்திர கொண்டாட்டங்களிலும் அம்மகானின் வழிகாட்டலும் நினைவுகளும் எக்காலமும் இங்கு நிலைத்திருக்கும்


சென்னை கடற்கரையில் அவசிய தேவை அந்த சமாதிகள் அல்ல, அந்த மாபெரும் பேனா சிலை அல்ல‌

அங்கு தேவை அந்த திலகரின் சிலை


பாரதி, வ.உ.சி, சுப்பிரமணிய சிவா என மாபெரும் தியாக சுடர்கள் நடுவில், பாரதியின் "ஜெயபேரிகை கொட்டடா கொட்டடா" பாடல் முழங்க "சுதந்திரம் எமது பிறப்புரிமை" என  முழங்கிய அந்த திலகருக்கு பெரும் சிலை


வடக்கே அந்த பட்டேலுக்கு உள்ளது போல மாபெரும் சிலை


அதை ஒருகாலத்தில் சென்னை கடற்கரை அமைக்கும், எங்கே அவன் மக்களை திரட்டி இந்த தேசத்தின் விடுதலைக்கான அவசியத்தினை முழங்கினானோ, அந்த கடற்கரையில் அந்த திடலில் அவனுக்கான மாபெரும் சிலையினை காலம் அமைக்கும்


பாரதம் அதை செய்யும், அந்த சிலை முன் நின்று அவன் கனவுகண்ட சுதந்திரத்தை அடைந்துவிட்டோம் என சென்னை கடற்கரையில் அலைகளோடு இந்த தேசம் ஒருநாள் ஆர்பரிக்கும் அது நடக்கும்


சார்வாக்கரின் அந்தமான் சிறைபோல திலகரின் பர்மா சிறைவாழ்வும் மாபெரும் தியாகம், ஆறு ஆண்டுகள் அந்த தனி சிறையில் அவர் அடைந்த துயரம் கொஞ்சமல்ல‌


காந்தி நேருவினை மாளிகையில் சிறை என வைத்த பிரிட்டிசார் சாவர்க்கர் திலகரையெல்லாம் ஏன் கடல் கடந்து கொண்டு சென்று வதைத்தார்கள்?, ஏன் அவர்களுக்கு நேர்ந்த தண்டனை காந்திக்கும் நேருவுக்கும் கிடைக்கவில்லை என்பதெல்லாம் வரலாற்றின் விடையில்லா கேள்விகள்


எம்பிரான் பாரதி அந்த திலகரை கொண்டாடினான், தலைக்கு மேல் வைத்து கொண்டாடினான், தேசத்தின் மீட்பனாக அவனை கருதி பாடினான்


அப்பாடலை பாடி அந்த தியாக தலைவனுக்கு, உணர்ச்சி நெருப்பை பற்றவைத்த மாவீரனுக்கு அந்த கடற்கரையில் அவன் கால்பட்ட மண்ணில் கண்ணீரால் நனையும்படி நன்றி சொல்லி அப்பாடலை பாடலாம்


" நாம கட்குப் பெருந்தொண் டியற்றிப்பல்

நாட்டி னோர்தம் கலையிலும் அவ்வவர்

தாம கத்து வியப்பப் பயின்றொரு

சாத்தி ரக்கடலென விளங்குவோன்,

மாம கட்குப் பிறப்பிட மாகமுன்

வாழ்ந்திந் நாளில் வறண்டயர் பாரதப்

பூம கட்கு மனந்துடித் தேயிவள்

புன்மை போக்குவல் என்ற விரதமே.


நெஞ்ச கத்தோர் கணத்திலும் நீங்கிலான்

நீத மேயோர் உருவெனத் தோன்றினோன்,

வஞ்ச கத்தைப் பகையெனக் கொண்டதை

மாய்க்கு மாறு மனத்திற் கொதிக்கின்றோன்,

துஞ்சு மட்டுமிப் பாரத நாட்டிற்கே

தொண்டிழைக்கத் துணிந்தவர் யாவரும்

அஞ்செ ழுத்தினைச் சைவர் மொழிதல்போல்

அன்பொ டோ தும் பெயருடை யாவரின்.


வீர மிக்க மராட்டியர் ஆதரம்

மேவிப் பாரத தேவி திருநுதல்

ஆர வைத்த திலகமெனத் திகழ்

ஐயன் நல்லிசைப் பாலகங் காதரன்,

சேர லர்க்கு நினைக்கவுந் தீயென

நின்ற எங்கள் திலக முனிவர்கோன்

சீர டிக்கம லத்தினை வாழ்த்துவேன்

சிந்தை தூய்மை பெறுகெனச் சிந்தித்தே."

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது