இந்தியாவின் 22 வங்கிகளில் எந்த நாட்டு வங்கி வேண்டுமானாலும் முன் அனுமதி இன்றி, Special Rupee Vostro Accounts (SRVAs) கணக்குகளை இனி துவக்கலாம். ரூபாயுடன் எக்ஸ்சேஞ் நிர்ணயிக்கப்படாத கரன்சிகள் தேவைப்பட்டால், அன்றைய டாலர், யுரோ, அல்லது யென் மதிப்புடன் கம்பேர் செய்து, அவர்களுக்கு தேவைப்பட்ட கரன்சியை, வங்கிகள் கொடுக்கும்.

 


*RBI* *புதிய* *மாற்றம்* 


"நான் எப்ப என்ன செய்வேன், எப்படி செய்வேன், எதுக்காக செய்வேன் என்பதை என்னாலேயே சொல்ல முடியாது எனில், உங்களால் எப்படி சொல்ல முடியும்-"மோடி.


எல்லோரும் ஜம்மு காஷ்மீர், UCC என, குழம்பிக் கொண்டிருக்க சத்தமில்லாமல், மிகப்பெரிய சர்வதேச வர்த்தகத்தை, டீடாலரைச்ஷனை குறிவைத்து, மிகச் சாதாரணமாக RBI மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டு சாதித்துள்ளனர் மோடி அணியினர்.  சாதாரண பார்வைக்கு இதில் பெரியதாக எதுவும் தெரியாது. விஷயம் புரிந்தவர்கள் மூக்கில் விரலை வைத்து பார்க்க கூடிய ஒரு மாற்றம் இது.


காஷ்மீர், யுசிசி, ட்ரம்ப், டாரிஃப்னு அலைந்த மீடியாக்கள் கூட, இதனை கவனிக்க தவறி, 2-3 நாட்களுக்கு பிறகு, இப்போது உட்கார்ந்து தலையங்கம் எழுத ஆரம்பித்துள்ளன.


ஏற்கனவே வாஸ்ட்ரோ கணக்குகள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.  தெரியாதவர்களுக்காக சின்ன குறிப்பு, டாலர் இல்லாமல் சில நாடுகளுடன், குறிப்பாக ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய உருவாக்கப் படுபவை வாஸ்ட்ரோ கணக்குகள். 


இந்திய வங்கிகளில் இந்த கணக்கை வேறு நாட்டு வங்கிகள் துவக்கி, ரூபாய் மூலம் வர்த்தகம் செய்ய இயலும். அதற்கு இணையான, அவர்களுக்கு தேவைப்படும் கரன்சியை, இந்த வங்கிகள் கொடுக்கும்.  


சரி தற்போது என்ன மாற்றம் செய்துள்ளனர்?


இந்தியாவின் 22 வங்கிகளில் எந்த நாட்டு வங்கி வேண்டுமானாலும் முன் அனுமதி இன்றி, Special Rupee Vostro Accounts (SRVAs) கணக்குகளை இனி துவக்கலாம்.  ரூபாயுடன் எக்ஸ்சேஞ் நிர்ணயிக்கப்படாத கரன்சிகள் தேவைப்பட்டால், அன்றைய டாலர், யுரோ, அல்லது யென் மதிப்புடன் கம்பேர் செய்து, அவர்களுக்கு தேவைப்பட்ட கரன்சியை, வங்கிகள் கொடுக்கும்.


இதன் மூலம் இந்திய ரூபாயில், விலை நிர்ணயம் செய்து,  எந்த நாடு வேண்டுமானாலும், இந்திய (ஏற்றுமதி / இறக்குமதி) வர்த்தகர்களுடன் வர்த்தகம் செய்யலாம்.  அதன் பிறகு அவர்களுக்கு தேவைப்படும் கரன்சியை SRVA மூலம் பெற்றுக் கொள்ளலாம்.


சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால், பொருட்களின் விலை இனி ரூபாயில் நிர்ணயிக்கப் படும்.  இதற்கு முன்பு எல்லாமே டாலரில் நிர்ணயிக்கப் பட்டது.


இந்திய ரூபாயை சர்வதேச கரன்சியாக மாற்றும் அடுத்த மிக முக்கியமான ஸ்டெப் இது.  அமெரிக்காவில் உள்ளவனும் இனி இந்திய ரூபாயில் விலை நிர்ணயம் செய்து வாங்கலாம் விற்கலாம்.  டாலரில் விலை நிர்ணயம் செய்ய தேவையில்லை.


நண்பர் கதிரவன் தனகோடி அடிக்கடி கேட்பார், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 2030க்குள் அதிகரிக்குமா இல்லையா என.  இதோ அடிக்கல் நாட்டப் பட்டு விட்டது.


அடுத்து சில நடவடிக்கைகள், உற்பத்தியை பெருக்குவது, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது போன்றவை மளமளவென நடக்கும்.  அதற்கு முக்கியமாக இந்திய குடிமக்கள் பெரிய அளவில் மனமாற்றம் முக்கிய தேவை.  வேலை என்பதை விட புதிய தொழில் உருவாக்குவதில் கவனம் செலுத்தினால், 


***** 2030க்குள் குறைந்தபட்சம் ஒரு டாலர்=ரூ30-35 கண்டிபாக தொட்டு விடும்.


மற்றதை நம்ம மாமூ ட்ரம்ப் பார்த்துக் கொள்வார்.  மோடி ஒயிக என ராகுல் கான் பின்னால் சுற்றாமல், ஏதாவது தொழிலை தொடங்கினால், 2030க்கு பின் உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும்.  இல்லாவிட்டால், அதே ரூ 200/- குவார்ட்டர் பிரியாணியுடன் வாழ்க்கை முடிந்து விடும்.


இந்த முறை RBI சிறு கேள்வி பதிலாக அறிக்கை வெளியிட்டுள்ளது.  பாமரனுக்கும் புரியும் வகையில் பிரமாதமாக.  அதற்கு காரணம் பல்வேறு கரன்சிகள், அவற்றின் மார்க்கெட் மதிப்பு மாறுதல் காரணமாக சிறு குறு தொழில்கள் ஏற்றுமதி செய்ய பெரும் அவதிப் படுகின்றனர்.  


இனி இவர்கள் ரூபாயில்,  தங்கள் பொருட்களின் ஏற்றுமதி விலையை கூறினால் போதும், வாடிக்கையாளர்கள் SRVA மூலம் தங்கள் கரன்சியில் எவ்வளவு என முடிவு செய்துக்  கொள்வார்கள்.  தங்களுக்கு தேவைப்படும் மூலப் பொருட்களை, ரூபாய் மதிப்பில் நிர்ணயம் செய்து இறக்குமதியும் செய்ய முடியம்.


RBI Governor Snajay Malhotraவின் முதல் அடியே பலமாக உள்ளது.


UCC, Jammu State, POKவை விட மிக முக்கியமான இந்திய பொருளாதாரத்தை 3வது இடத்துக்கு நகர்த்தும் ஒரு அற்புதமான முடிவு.  எவ்வளவு பேருக்கு புரியுமோ தெரியவில்லை.


ஜெய் ஹிந்த்!


நன்றி  சுந்தரேசன் அவர்களே.


தேச நலன் கருதி படித்து பகிர்ந்தவர் 

அடியேன் ஹரி ஓம் சுந்தரேசன்

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது