சவக்குழிக்கு போயிருக்க வேண்டிய தன்னுடைய தாயிடம் இருந்து அதிர்ஷ்டவசத்தால் கருவில் திருவாகி இவ்வுலகில் அவதரித்து இன்று உலகை ஆட்டிப்படைக்கும் சக்திகளில் ஒருவராக திகழ்கிறார் .

 

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி  கிளின்டன் 

"HARD CHOICES" என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.

அதில் அவர் ஒரு ஆச்சரியமான விபரத்தை தெரிவித்துள்ளார்.


இரண்டாவது உலகப் போர் ஆரம்பித்து சில வாரங்களுக்கு பிறகு 


ஒரு ரஷ்ய வீரருக்கு வீட்டுக்கு செல்ல விடுமுறை கிடைக்கிறது. 

விடுமுறையை கழிக்க ஊருக்குச் சென்ற வீரருக்கு..

ஊருக்குள் நுழையும் போதே அதிர்ச்சி காத்திருக்கிறது.


அவரது ஊர் எதிரிகளால் குண்டு வீசப்பட்டு..

பிணங்கள் குவியலாக ராணுவ வண்டியில் கிடத்தப்பட்டு இருந்தது.


பல நூற்றுக் கணக்கில் கிடந்த சடலங்கள்..

கூட்டுக் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையில் இருந்தன.


சடலங்களின் முன்னால் அந்த ராணுவ வீரர் சிறிது நேரம் நின்றார்.


ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த காலணிகளை அவர் திடீரென கவனித்தார்.


முன்பொருநாள் தனது மனைவிக்காக வாங்கி வந்த காலணிகள் போல தெரிந்தன.

உடனே வீட்டுக்கு ஓடினார்.


வீட்டில் யாரும் இல்லை 

வேகமாக திரும்பி வந்து வாகனத்தில் இருந்த அந்த உடலை பரிசோதித்தார்.

 

அது அவரது மனைவியே தான் 

அதிர்ச்சி அடைந்த அவர் பொதுக் கல்லறையில்

மனைவியை புதைக்க விரும்பவில்லை என்றும்


தனிக் கல்லறையில் புதைக்க விரும்புவதாகக்  கூறி...

உடலை தன்னிடம் தருமாறு வேண்டினார்.

அனுமதி கிடைத்தது.


வாகனத்திலிருந்து உடலை வெகு சிரமத்துடன் வெளியே எடுக்கும் போது..


மனைவி இன்னும் உயிருடன் இருப்பதை பார்த்து அதிர்ந்தார்.


உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்..!

அங்கு தேவையான சிகிச்சை மேற்கொள்ளப் பட்டு..


மீண்டும் உயிர் பெற்றாள் அந்த வீரரின் மனைவி.


இந்த விபத்து நடந்த சில வருடங்களுக்குப் பிறகு....

கிட்டத்தட்ட உயிருடன் புதைக்கப்பட இருந்த அந்த மனைவி..கர்ப்பமுற்றாள்.

ஆண் குழந்தை பிறந்தது.


பிரசவம் பார்த்தவர்கள் பையனுக்கு பெயர் சூட்டினர்.

பெயர் என்ன தெரியுமா..?


 "விளாடிமிர் புடின்"


எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதா..? 

இந்தப் பெயர்..?

இவர்தான் தற்போதைய ரஷ்ய அதிபர் .


சவக்குழிக்கு போயிருக்க வேண்டிய தன்னுடைய தாயிடம் இருந்து 

அதிர்ஷ்டவசத்தால் 


கருவில் திருவாகி 

இவ்வுலகில் அவதரித்து

இன்று உலகை ஆட்டிப்படைக்கும் சக்திகளில் ஒருவராக திகழ்கிறார் .


இந்த சேதியை 

விதி என்று எண்ணுவதா.?

அல்லது இதற்கு வேறு ஏதேனும் பெயர் சூட்டுவதா..?

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது