தண்ணீரில் அடுப்பெரிக்கும் இயந்திரம் விற்பனைக்கு வந்தது

 




தண்ணீரில் அடுப்பெரிக்கும்  இயந்திரம் விற்பனைக்கு வந்தது


்எங்களது HONC Gas Pvt. Ltd. நிறுவனத்தின் சார்பில் எங்கள் நிறுவனத்தின் ஆலையில் HONC Gas Generator குறித்து நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், உலகிலேயே முதல் முறையாக, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இருந்து நேரடியாக எரியூட்டக் கூடிய பசுமை ஹைட்ரஜன் எரிவாயு உற்பத்தி செய்யும் HONC Gas நிறுவனத்தின் புதிய மாற்றத்திற்கு வித்திடும் செயல்திறன் குறித்து மிகச் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மேம்பட்ட Gyroid Electrolytic Medium (GEM) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி HONC Gas Generator மூலமாக தனித்துவமான ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி செய்வது எப்படி என்று செயல்விளக்கத்தின் போது விளக்கிக் காட்டினோம். மரபு ரீதியான புதைவடிவ எரிபொருள்கள் அல்லது LPG போல அல்லாமல் HONC Gas எரிபொருளை நமக்கான தேவையின்போது உற்பத்தி செய்து கொள்ள முடியும், இதை சேமித்து வைக்க சிலிண்டர்கள் தேவையில்லை மற்றும் எரிவாயு கசிவு அல்லது வெடிக்கும் ஆபத்து போன்றவை முற்றிலுமாக தவிர்க்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.


இந்த நிகழ்ச்சியில், எங்களது HONC Gas Pvt. Ltd. நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை விஞ்ஞானியுமான திரு. பேளூர் ராமலிங்கம் கார்த்திக் பேசும்போது, "இந்த புரட்சிகர தொழில்நுட்பம் ஒரு மாற்று எரிசக்தி மட்டுமல்ல, எரிபொருள் துறையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. வெறுமனே ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் மிகக் குறைவான மின்சாரத்தைக் கொண்டு, தொழிற்சாலைகளுக்கும், வீடுகளுக்கும் முற்றிலும் மாசற்ற தூய்மையான எரிபொருளை நம்மால் உற்பத்தி செய்ய முடியும். HONC Gas பயன்பாடு என்பது வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளைக் கடந்து பல தரப்பட்ட இடங்களில் பயன் தரக் கூடியது. steam turbine generators மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், வாகனங்களுக்கான பாதுகாப்பு நிறைந்த, செயல்திறன் மிக்க, மாசற்ற எரிபொருள்களை வழங்கி ஆட்டோமொபைல் துறையில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய திறன் HONC Gas ஜெனரேட்டர்களுக்கு உண்டு. ஆக, வெவ்வேறு துறைகளில் பயன்படுத்தக் கூடிய எல்லாவற்றுக்கும் பொருத்தமான எரிபொருளை HONC Gas மூலமாக உற்பத்தி செய்ய இயலும்.


இந்தப் புதிய கண்டுபிடிப்பை இந்தியாவில் இருந்து உலகிற்கு அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். சமையல் எரிவாயு, தொழிற்சாலைகளுக்கான பாய்லர்கள், பெரிய அளவிலான எரிசக்தி உற்பத்தி கூடங்களிலும் கூட பயன்படுத்தப்படுவதற்கான செயல்திறன் HONC Gas ஜெனரேட்டர்களில் உண்டு. நிலையான எரிசக்தி துறையில் இந்தியாவை உலகை வழிநடத்தும் நாடாக நிலைநிறுத்த வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்" என்றார்.


எங்களது HONC Gas நிறுவனம் அளித்த இந்த செயல்விளக்கம் குறித்து HONC Gas நிறுவனரும், தலைமை விஞ்ஞானியுமான திரு. பேளூர் ராமலிங்கம் கார்த்திக், முதன்மை செயல் அதிகாரி திரு. முத்துக்குமாரசாமி முத்துரத்னம், மேலாண் இயக்குநர் திரு. செந்தில் குமார், நிறுவனத்தின் முதன்மை இயக்குநரும், அரசியல் தலைவர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகருமான திரு. R. சரத்குமார், நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் திருமதி. பூரணசங்கீதா செந்தில் குமார் பிச்சை ஆகியோர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்.


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவர் திரு. S.R.நாகராஜன், வனம் இந்தியா பவுண்டேஷன் செயலாளர் திரு. S.K.Y.சுந்தர்ராஜன், ஹீரோ பேஷன் நிறுவனத்தின் திரு. S.சுந்தரமூர்த்தி, HONC Gas நிறுவனர் திரு. பேளூர் ராமலிங்கம் கார்த்திக் அவர்களின் மனைவி திருமதி. கவிதா கார்த்திக் மற்றும் தொழில்துறை நிபுணர்கள், எரிசக்தி தொழில்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நம் நாட்டின் புதைவடிவ எரிபொருள்களின் இறக்குமதிக்கான தேவைகளை குறைக்கும் விதமாகவும், பாதுகாப்பானதாகவும், மேம்படுத்தக் கூடியதாகவும் இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது என்று விருந்தினர்கள் பாராட்டு தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.


தற்போது உற்பத்தியை பெருக்கவும், அரசு அமைப்புகள், தொழிற்சாலைகள், ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து எல்லோருக்கும் பலன் தரக் கூடிய பாதுகாப்பான, பசுமை எரிபொருள் உற்பத்தியை மேற்கொள்ளவும் எங்களது HONC Gas Pvt. Ltd. தற்போது தயாராகி வருகின்றது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றோம்!!்கும்

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.