கோடிகளில் கொழித்து ஒழுக்கத்தை மறந்து கண்ட பெண்களோடும் காமக்கூத்தாடிய ஒரு கூத்தாடி மாசற்ற ஊழலற்ற ஒழுக்க சீலரான மாண்பு.மிகு பிரதமரை பார்த்து கேள்விக் கேட்கிறான்... பாசிச பாஜக என்கிறான் கோடிகளில் கொழித்துக் கொண்டு காருக்கு வரிக்கட்டத் துப்பில்லாத கூத்தாடி .
எங்கே போகிறது தமிழகம் ????
மக்கள் தொண்டே மகேசன் சேவை என வாழ்ந்த
காமராஜரை எப்போது தமிழ்நாடு தோற்கடித்ததோ அப்போதே தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது ...
மக்களுக்காக துணிந்து திமுகவை தட்டிக் கேட்ட அண்ணாமலையையும் இரண்டு தடவை தோற்கடித்தீர்களோ அப்போதே இனி தமிழகம் தேறாது என முடிவாகி விட்டது .
நிமிரவே முடியாதளவு திராவிட முழுத் திருடன் பெரியார் அண்ணா ஆணினு
தமிழகம் அதளபாதாளத்தில் விழுந்து விட்டது .
குடி கூத்தியாள் கொள்ளை இது தான் பெரியார் மண் கொள்கை
திராவிட போர்வையில் ஊழலில் கொழுத்த பனங்காட்டு நரிகள்....
ஒரு திருட்டு ரெயிலேரியால் அவன் குடும்பம் மாமன் மச்சான் என ஏகமும் தமிழக மக்கள் வரிப்பணத்தை வாயில் போட்டு கோடிகளில் கொழிக்கின்றனர் .மதசார்பற்ற நாடென பேசிப் பேசியே
ஹிந்துக்களை பழிக்கின்றனர்.
மதவெறி வந்தேறிகளோடு தேசத்தை சிதைக்கின்றனர்.
வெள்ளையன் அடிமைப் படுத்திய
தேச சுதந்திரத்தை மீட்டெடுக்க போராடிய முண்டாசு கவிஞன் பாரதியார் ..
சொத்தை இழந்து தேசத்திற்காக சிறையிலே செக்கிழுத்த வ.உ.சி ,
பகத்சிங் , தேசியக் கொடி மண்ணில் விழுந்து விடக் கூடாது என பிரம்படி பட்ட போதும்
உயிருக்கும் மேலான தேசியக் கொடியை மார்பிலே தாங்கி குருதி வழிய கீழே சாய்ந்த கொடிகாத்த குமரன் ...
வேலுநாச்சியார் ஜான்சிராணி
ராணி மங்கம்மா
தியாகங்கள் அனைத்துமே
இந்த வீணாய் போன திராவிட மடக்கூட்டங்களும் கூத்தாடிகளும் தமிழகத்தை சிதைப்பதற்கா ???
கூத்தாடிகள் கூட்டத்திற்கு குழந்தைகளோடு போய் உயிரை இழந்து விட்டு
இது திமுக சதி எனக் கூவி நிற்பதால்
அரசியலே அறியாத உலகமே புரியாத பத்து மாசம் சுமந்து பெற்றெடுத்த பிஞ்சுகளின் உயிர்கள் திரும்ப வருமா ???
புருசனை விட எனக்கு நடிகன் மீது தான் பயித்தியம் காதல் என
தாலி கட்டிய கணவனை பக்கத்தில் வைத்துக் கொண்டு பல்லிளித்த பத்தினிகள் ,
ஓங்கி செவிட்டில் அறையாமல்
அதை கூடவே நின்று வேடிக்கை பார்த்த கைலாகாத கணவன் .
ஐய்யோ ! நம்பவே முடியலை
விஜயை பக்கத்தில் பார்த்துட்டேன்
என ஆனந்தக் கண்ணீர் விட்ட
வயசு கோளாறு பைத்தியங்கள் ,
எட்டி மிதித்து ஏண்டி படிக்கத் துப்பில்லை..
கண்டவனுக்கு ஆனந்தக் கண்ணீர் விடறியோ எனக் கண்டிக்காத பெற்றோர்கள் ,
வயசான அப்பன் ஆத்தா சம்பாதிப்பதில் தின்று கொழுத்து விட்டு தலைவா வா !
உனக்கு நாங்க இருக்கோம்னு பொறுக்கி மாதரி
கையை காலை ஆட்டி மீடியாவிற்கு பேட்டி தரும் தறுதலை விடலைகள்,
ஏண்டா சினிமா பார்த்தமா
அதோடு நிப்பாட்டி படிக்கிற வயசுல
வேலைக்கு போற வயசுல
உனக்கு என்னடா கூத்தாடி பின்னாடி கும்மாளம் னு விளாசாத அறிவிலிகள்
இதன் விளைவு இந்த மரணங்கள் .
அரசியலே அறியாத உலகமே புரியாத குழந்தைகளை அழைத்துக் கொண்டு
காலையிலிருந்து பசி தாகத்தோடு
கூத்தாடி முகத்தை பேச்சை கேட்கப் போன அறிவு கெட்ட முண்டங்கள் ,
காலையில் வருவதாக இருந்து மாலையில் வந்தவனுக்கு அப்படிக் காத்திருந்து பார்த்து உயிரை விடுமளவு அவனென்ன உலகமகா உத்தமனா ???
கோடிகளுக்கு நடிக்கும் ஒரு சுயநலக் கூத்தாடி அவன் .
மது மாது என கண்ட நடிகைகளோடு சூட்டிங் இல்லாத நேரத்தில் போதை உலகில் வாழும் அயோக்யன் .
அவன் கூட்டத்திற்கு பசி தாகத்தோடு காலையிலிருந்து இவங்க காத்திருக்க
வேண்டிய தலைவனா அவன் ???
கோழைப்பயல் கூத்தாடி மேடையிலே வெள்ளித்திரையில் தான் வீரவசனம் . பலபேர் தனக்காக உயிரை விட்டனர் என்பது தெரிந்தும்
அதில் குழந்தைகளும் கர்ப்பிணிகளும் உண்டு என தெரிந்தும் கண்டும் காணாமல் தனி விமானம் ஏறி
பனையூர் போய் ஒளிந்து கொண்டு சொல்ல முடியாத துயரத்தில் துடிக்கிறேன் எனச் சொல்லி விட்டால் போன உயிர்கள் திரும்ப வருமா ???
இல்லை எதுவுமே தெரியாத , உலகமறியாத குழந்தைகள் சினிமா பையத்தியங்களுக்கு பிறந்த பாவத்திற்காக கூத்தாடி கோழைப்பயல் கூட்டத்திற்கு போய் நசுங்கி செத்து போனது
அவர்கள் செய்த பாவமா ????
களத்திலே தனக்கான மக்களின் துயரத்தில் பங்கேற்க கைலாகாத இவனெல்லாம் நாளைய தமிழகத்தின் முதல்வனா ???
த்தூ !
திரைகடல் தாண்டி திரவியம் தேடிய தமிழன்
டாஸ்மாக்கில் விழுந்து கிடக்கிறான் ..
குடியால் சீரழிந்த தமிழ்நாட்டின் குடும்பங்கள் கூத்தாடி பின்னால் ஓடிய அவலத்தின் கொடுமை தான் கரூர் சம்பவம் .
தேசப்பற்றை வளர்க்க 100 இளைஞர்களை தாருங்கள் தேசத்தின் தலையெழுத்தை மாற்றி காட்டுகிறேன் எனச் சொன்ன விவேகானந்தர் வாழ்ந்த மண்ணில்
கோடிகளில் கொழித்து ஒழுக்கத்தை மறந்து கண்ட பெண்களோடும் காமக்கூத்தாடிய ஒரு கூத்தாடி
மாசற்ற ஊழலற்ற ஒழுக்க சீலரான
மாண்பு.மிகு பிரதமரை பார்த்து
கேள்விக் கேட்கிறான்...
பாசிச பாஜக என்கிறான் கோடிகளில் கொழித்துக் கொண்டு காருக்கு வரிக்கட்டத் துப்பில்லாத கூத்தாடி .
தேசத்தை ராணுவத்தை போற்றாமல்
கூத்தாடிகளை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடிய மின்மினி விட்டில் பூச்சிகள் இவர்கள் .
மாயை உலகமான சினிமா தேசத்தை காக்க முடியாது .
அதுவும் இந்த ஜோசப் விஜயால் ஒருகாலும் இயலாது .
அளவுகடந்த கூட்டம்
காலையிலிருந்து காத்திருக்கும்
அறிவற்ற கூட்டம்
வாழ்வியல் ஒழுக்கத்தை பேணாது வாழும் கூத்தாடிக்காக மாலை வரை
பசி தாகம் மறந்து இவனை பார்க்க அவனென்ன அத்தனை பெரிய அப்பாடக்கரா ???
சமூக சேவகனா ??
தேசத்தை காத்து நின்ற மாவீரனா ???
அட வீணாய் போன அறிவிலிகளா
உங்கள் குழந்தைகள் உங்கள் கனவுகள் எதிர்காலம் எல்லாம் ஒரு கூத்தாடிக்காக அழிந்த உறுத்தல் கூட இல்லாமல் திமுக சதி விஜய் அண்ணா
கவலைப்படாதே நாங்கள் இருக்கிறோம் என மீண்டும் அவனை தூக்கி வைத்து கொண்டாடும்
உங்களை மிதிப்பதா இல்லை செவினியில் அறைவதா ???
எவன் சதியாக வேண்டுமானாலும் இருக்கட்டும் .
திமுக களவாணி ரகசியம் தான் ஊரறிந்த ஒன்றாச்சே .
அத்தனை கூட்டத்தில் உங்கள் குழந்தைகளோடு அவனை பார்க்க வேண்டும் மிதிபட்டு சாக வேண்டும் என்பது உங்களின் விதியாக நீங்களே தான் எழுதிக் கொண்டீர்கள் .
கைலாகாத அரசும் நீங்கள் நம்பி போனக் கூத்தாடியும் எத்தனை லட்சம் வேண்டுமானாலும் உங்கள் திமிருக்கும் அரசின் பாதுகாப்பு அலட்சியத்திற்கும் நிவாரணம் அளிக்கட்டும் .
உங்கள் குழந்தைகள் திரும்பி வருமா உயிரோடு ???
அப்படி என்ன அவசியம் வந்தது விபத்து என்றதும் ஓடிப் போன கூத்தாடியை பார்க்க ????
கூட்டத்தில் குழந்தைகளை அழைத்துச் சென்று சாவதற்கு அப்படியென்ன தலையெழுத்து .
இதில் இழப்பும் வேதனையும்
யாருக்கு என்று யோசித்தீர்களா ???
யார் நல்ல தலைவர் என்று பகுத்துணரும் அறிவில்லை .
உண்மை அறிந்து
தன்னலமற்ற தலைவர்களுக்கு ஓட்டுப் போட வக்கில்லை .
பைசாக்கு கூட
தேசத்தின் மீது பற்றில்லை .
சமுதாய அக்கறையில்லை ...
ஆயிரம் இரண்டாயித்திற்கு
இலவசத்திற்கு அலைந்து கொண்டு
எவன் அதிக காசு தருவான் என பட்டிமன்றம் நடத்தி
சுயநல அரசியல் செய்யும் ஊழல்வாதிகளை தான் தொடர்ந்து தமிழகத்தை ஆள வைத்தீர்கள் .
இப்போது கூத்தாடிக்காக குழந்தைகள் உயிரை விடுமளவு அறிவற்று போனீர்கள் .
நாலு மாசமோ ஒரு வருசமோ
மீண்டும் வேறு ஒருத்தன் வருவான் அரிதாரம் பூசி .
போங்கள் போய் அவனுக்காகவும் செத்து தொலைய தயாராக இருங்கள் .
பாழாய் போனது தமிழ்நாடு ..
வருத்தம் கோபம் உச்சகட்ட வேதனை இருந்தாலும் ஒரு தகுதியில்லாத கூத்தாடிக்காக திமிரெடுத்து இறந்து போன உங்கள் மீது அனுதாபம் எனக்கில்லை .
நீங்கள் இருந்தாலும் பயனில்லை ..
ஆனால் உங்களுக்கு பிறந்த குழந்தைகளை கொன்று விட்டீர்களே ..
அது தான் மிகப்பெரிய வேதனை .
காலையில் நடக்கும் கூட்டத்திற்கு மாலைவரை உங்களை காக்க வைத்த இவனா நாளைய தமிழகத்தை ஆளப் போகிறான் ???
அறிவோடு சிந்தித்து தேசத்தின் நன்மையை கருத்தில் கொண்டு நாளைய தலைமுறையினர் எதிர்காலம் குறித்து அனுதினமும் கவலை படும் எங்களை போன்றோர் உங்களுக்காக வருந்தினால் அது தேசத்திற்கு இழுக்கு .
அதை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன் .
தமிழகமே நீ எங்கே போகிறாய் ???
கரூர் சம்பவத்திற்காக தலைகுனிந்து
நிற்பதை தவிர வேறு வழி .
விஜயலஷ்மி காளிதாஸ்.
Comments
Post a Comment