நம் உள்நாட்டு நிறுவனங்கள் வளரவது பல பண்ணாட்டு நிறுவனங்கள் இங்கு காலூன்ற தடையாக இருப்பதால், Hindenburg போன்ற கலக நிறுவனங்கள் நம் நாட்டிக் பொய் செய்திகளை பரப்புகின்றன. பரபரப்பு செய்திகளை வைத்து அரசியல் செய்யும் அந்நிய கைக்கூலி அரசியல் கட்சிகள் அந்த செய்திகளை வேகமாக பரப்புகின்றனர். நம் ஊடகவியலாளர்களும் இதற்கு துணை நிற்கின்றனர். நல்லவேளை நம் தமிழ்நாட்டை தாண்டி யாரும் இதை பெரிதாக நம்பவில்லை.
ஒரு காலத்தில், நமது நாடு உலக அளவில் ஒரு டெண்டர் கோரினால் அதில் பங்கேற்க நமது நாட்டு நிறுவனங்கள் முன் வராது. காரணம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் நம் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு கிடைக்காது.
உதாரணத்திற்கு 2007 முதல் 2014 வரை தமிழ்நாட்டில் நிலவிய கடுமையான மின்வெட்டில் உயர் மின் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்திய நம் உள்நாட்டு தொழிற்சாலைகளுக்கு 16 மணிநேரம் மின்வெட்டு. அனுமதிக்கப்பட்ட MD (maximum demand) இல் 70% மட்டுமே உபயோகிக்க அனுமதிக்கப்பட்டது. அதில் ஒரு சதவிகிதம் அதிகமாக போனாலே, உடனே அடுத்த நாள் மின்வாரியம் 48 மணி நேரத்திற்கு மின்சாரத்தை உபயோகிக்க தடைவிதிக்கும்.
அதே சமயம் ஹூண்டாய், நோக்கியா, செயிண்ட் கோபின் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு நமது அரசு அவர்களின் தேவைக்கு அதிகமாக நிலத்தை ஒதுக்கி கொடுத்து, தடையில்லா மின்சாரமும் வழங்கி அவர்களை ஊக்குவித்தார்கள்.
மின்வெட்டு காரணமாக பல உள்நாட்டு நிறுவனங்கள் மூடப்பட, அதற்கு பதிலாக உதிரி பாகங்கள் சப்ளைக்கு பல சிறு நிறுவனங்கள் கொரியாவில் இருந்து வந்தன. அவர்களுக்கு தடையில்லா மின்சாரம் கொடுக்கப்பட்டது.
அதேபோல் நம் துறைமுகத்தை பன்னாட்டு நிறுவனங்களான P&O Ports, Port of Singapore Authorities (PSA), Dubai Ports போன்ற நிறுவனங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு வெறும் 100 கோடி ரூபாய் முதலீடு செய்வார்கள் என்றும், நம் துறைமுக பொறுப்பு கழகத்திற்கு, இந்திய நிறுவனங்களை காட்டிலும் அதிக ராயல்டி கொடுப்பார்கள் என்றும் சொல்லி அவரகளுக்கு லீசுக்கு கொடுத்தார்கள்.
வந்த சிலமாதங்களிலேயே அவர்கள் துறைமுகம் tariff ஐ பலமடங்கு உயர்த்தி துறைமுகத்திற்கு கொடுக்கும் ராயல்டியை நம்மிடமிருந்தே பிடுங்கி கொடுத்ததுடன், தங்கள் லாபத்தையும் பன்மடங்கு உயர்த்தி கொண்டார்கள். இந்த புத்திசாலித்தனம் நம் இந்திய நிறுவனங்களுக்கு இல்லாமல் இல்லை. ஆனால் நம் உள்நாட்டு நிறுவனங்கள் இதை செய்திருந்தால், TAMP (Tariff Authority of Major Ports) நிறுவனம் ஒப்புதல் அளித்திருக்காது. உண்மையில் அன்றைய TAMP Chairman அந்த பண்ணாட்டு நிறுவனங்களுக்கு tariff ஐ உயர்த்த ஒப்புதல் அளிக்காதப்போது, நமது அன்றைய காங்கிரஸ் அரசு அவரை அந்த பதவியில் இருந்து நீக்கி அடுத்து வந்த சேர்மன் அதற்கு ஒப்புதல் அளிக்க வைத்தது.
ஆக பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை அளித்தால் அது நம் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு முதலீடு. அதே சமயம் உள்நாட்டில் இருக்கும் TATA, BIRLA, AMBANI, ADHANI போன்ற நிறுவனங்களுக்கு இந்த சலுகைகள் அளித்தால், பாஜக அரசு தனியாருக்கு சாமரம் வீசுகிறது என்பார்கள், நாட்டை தனியாருக்கு விற்கிறது என்பார்கள். தன்னை புத்திசாலி என்று நினைத்து கொண்டிருக்கும் ஒரு அரசியல் விமர்சகர் ஒரு முறை சொன்னார்,
*நம் நாட்டை ரெண்டு பேர் விற்கிறார்கள், ரெண்டு பேர் வாங்குகிறார்கள்* என்று. இத்தனைக்கும் நம் நாட்டில் அதிகபட்ச வேலைவாய்ப்பை வழங்குவது மேலே சொன்ன உள்நாட்டு நிறுவனங்கள்தான்.
மேலும் இந்த நிறுவனங்களில் எந்தவித வேலைநிறுத்த போராட்டமும் நடைபெறுவதில்லை.
அதே சமயம் மேற்சொன்ன பண்ணாட்டு நிறுவனங்கள் கொடுக்கும் வேலைவாய்ப்பு அதிகபட்சம் 10000 பேருக்கு, அது மொத்தத்தில் 10% கூட இருக்காது.
நம் உள்நாட்டு நிறுவனங்கள் வளரவது பல பண்ணாட்டு நிறுவனங்கள் இங்கு காலூன்ற தடையாக இருப்பதால், Hindenburg போன்ற கலக நிறுவனங்கள் நம் நாட்டிக் பொய் செய்திகளை பரப்புகின்றன. பரபரப்பு செய்திகளை வைத்து அரசியல் செய்யும் அந்நிய கைக்கூலி அரசியல் கட்சிகள் அந்த செய்திகளை வேகமாக பரப்புகின்றனர். நம் ஊடகவியலாளர்களும் இதற்கு துணை நிற்கின்றனர். நல்லவேளை நம் தமிழ்நாட்டை தாண்டி யாரும் இதை பெரிதாக நம்பவில்லை.
இதில் மேலும் ஒரு வேடிக்கை என்னவென்றால், நம் பிரதமர் உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவித்து Make in India என்கிறார். நம் தமிழக முதல்வரோ வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று அடிக்கடி குடும்பத்தோடு வெளிநாடிற்கு சுற்றுலா போகிறார், போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார்.
பிரதமர் கோட் சூட் போட்டால் அது மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது.
அதே ஸ்டாலின் போட்டால், அது அவர் மக்களுக்காக உழைப்பது என்றும், ஒய்வறியா சூரியன் என்றும் அர்த்தம்.
பிரதமருக்கு ஆங்கிலம் பேச வராதே என்பவர்கள், ஸ்டாலின் எப்படி எந்த மொழியில் பேசுகிறார் என்று கேட்பதில்லை.
தமிழக மக்களும் அதை நம்புகின்றனர்.
அன்புடன்
சுந்தர்ராஜன்
Comments
Post a Comment