இந்தியா வசமாகும் டெக்னாலஜி நிறுவனங்கள், அரசுகள், உலக நாடுகள்!?! இப்படி சில வருடங்களுக்கு முன்பு சொன்னபோது பகல் கனவு பலிக்காது, ப்ராஜெக்ட் மீட்டிங்கிற்கு நேரமாச்சு போங்க, போய் பொழப்பை பாருங்க சார் என்று கலாய்த்தார்கள். இன்று அதற்கான கால சூழல்கள் உறுமாறி, வெளியில் வருகிறது, ஆனால் இப்போதும் அதைப்பற்றிய புரிதல்கள், நம்பிக்கைகள் நம்மிடம் இல்லை.

 


இந்தியா வசமாகும் டெக்னாலஜி நிறுவனங்கள், அரசுகள், உலக நாடுகள்!?!


இப்படி சில வருடங்களுக்கு முன்பு சொன்னபோது பகல் கனவு பலிக்காது, ப்ராஜெக்ட் மீட்டிங்கிற்கு நேரமாச்சு போங்க, போய் பொழப்பை பாருங்க சார் என்று கலாய்த்தார்கள். இன்று அதற்கான கால சூழல்கள் உறுமாறி, வெளியில் வருகிறது, ஆனால் இப்போதும் அதைப்பற்றிய புரிதல்கள், நம்பிக்கைகள் நம்மிடம் இல்லை. 


காரணம் இந்தியா இதெல்லாம் செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். ஆனால் பின்லாந்தின் பிரதமர் இந்தியாதான் அடுத்த வல்லரசு, அதனால் இந்தியாவை ரஷ்யா, சீன பக்கம் போகாமல் தடுக்க வேண்டியது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு மிக அவசியம் என்கிறார். 


அதை புரியவைக்க கொஞ்சம் ஆழ்ந்த புரிதல் அவசியம் என்பதால் வல்லரசான அமெரிக்க ஃப்ளாஷ்பேக்குடன் பார்க்கத்தான் வேண்டும். அதுவும் எப்படி வல்லரசு ஆனது அதை எப்படி 50 ஆண்டுகளாக தன்வசம் வைத்திருந்தது என்பது நமக்கு தெரிவது அவசியம்.


அமெரிக்காவின் வெற்றிக்கு காரணம் அதன் இமிக்ரேஷன் பாலிஸி. தாய் தந்தையர் வசதியாக இருந்தால், குழந்தைகள் படிக்காது. காரணம் விட அம்மா அப்பா சேர்த்து வைத்த சொத்துக்கள் இருப்பதால் படிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது. இங்கேயும் அம்மா, அப்பா சம்பாதிக்கும் அளவிற்கு குழந்தைகள் விளங்காது என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? அதனால்தான் நன்றாக வாழ்ந்த ஒரு குடும்பம் மூன்று தலைமுறைகளை தாண்டியதில்லை (விதிவிளக்குகள் உண்டு, எந்த குடும்பம் தனது சொத்துக்களை பொது நலம் சார்ந்து செலவு செய்கிறதோ அது பிழைக்கும், அதை இன்னொரு பதிவில் எழுதுகிறேன்)


இதை மாற்ற அமெரிக்காவில் ஒரு கலாச்சாரம் கொண்டு வந்தார்கள். பள்ளி இறுதி வகுப்பு வரை அப்பா, அம்மா குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். அதன் பின் கல்லூரி படிப்புகளுக்கு அவர்கள் சொந்த காலில் நின்றுதான் படிக்க வேண்டும். 


அதை தாண்டி ஒருவர் பெற்றோரிடம் பணம் வாங்கி படித்தால் அவர்களை ஏளனம் செய்வார்கள். அதற்காக நான் ஓஹாயோ கொலம்பஸில் இருந்தபோது, 70 களில் அமெரிக்காவில் செட்டில் ஆன தமிழ் நண்பர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நேரடியாக பணம் கொடுக்காமல், தனது உறவினர் நிறுவனத்தில் அவரை பகுதி நேர வேலையில் அமர்த்தியதுபோல செய்து,  அந்த நிறுவனம் மூலம் உதவி செய்தார்கள் என்றால் அது எவ்வளவு சீரியஸான விஷயம் என்று புரிந்துகொள்ளுங்கள்.


அதன் காரணமாக அமெரிக்க இளைஞர்கள் தங்கள் அன்றாட செலவை சமாளிக்க பார்ட் டைம் வேலை செய்வார்கள். கேஸ் ஸ்டேஷன் முதல் வீட்டை சுற்றிய புல் தரையை வெட்டி அழகுபடுத்துவது, நாயை வாக்கிங் கூட்டி செல்வது என்று எந்த வேலையை செய்ய தயங்க மாட்டார்கள். அப்படி வேலை செய்கிறவர்களை அமெரிக்கர்கள் உயர்வாக மதிப்பார்கள்.


ஆனாலும் அவர்கள் கல்லூரி படிப்புக்கான செலவுகள் 100 ஆயிரம் டாலர் முதல் பல மடங்குகள் இருக்கும். அதனால் அதற்கு கடன் வாங்குவார்கள். அந்த கடன் தொகையை கட்ட அடுத்த 20 ஆண்டுகள் வேலை பார்ப்பார்கள்.


அதன் மூலம் பெற்றோரிடம் ஒரு ஒற்றுதல் இருக்காது. அதனால் அவர்கள் பெற்றோரை பார்த்துக்கொள்வதில்லை. அதனால் பெற்றோர்கள் தங்களது சொத்துக்களை சர்ச்சுகளுக்கு எழுதி வைத்துவிட்டு இறுதி காலங்களை கழிப்பார்கள். அரசாங்கமும் அவர்களுக்கு உதவுவதால், அவர்கள் குழந்தைகளை சார்ந்திருப்பதில்லை. அதனால் அவர்கள் சர்ச்சுகு கொடுக்கும் சொத்துக்கள் போன்ற பணம்தான் உலகளவில் மதம்மாற்ற அந்த கிறிஸ்தவ மெஷினரிகள் பயன்படுத்தியது. இன்று ஜோசப் விஜய் கட்சிக்கு வருவதும் அதுதான் 


அப்படி இருந்தும் அவர்களுக்கு தேவையான லோன் போன்ற வசதிகளை வங்கிகள் செய்தால், அவர்கள் வேலையில் இல்லாவிட்டால் அரசு உதவி தொகை கொடுக்கும் அதுவே அவர்கள் அன்றாட தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்பதால் அவர்களுக்கு கடினமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை.


அதனால் ஏழை நாடுகளில் உழைத்து பெரிதாக சாதிக்க நினைக்கிற ஐரோப்பிய நாடுகளில் முதலிலும், பின்னர் இந்தியா போன்ற அறிவார்ந்த நாடுகளில் உள்ளவரகளுக்கு வேலை கொடுத்தும், விஞ்ஞானிகள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை ஸ்பான்ஸர் செய்து, அமெரிக்க குடியுரிமை கொடுத்து ஸ்வீகரித்து, உலகின் புதிய கண்டுபிடிப்புகளையும், சாதனைகளையும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக செய்துவந்தது. அதுமட்டுமல்ல, அமெரிக்காவிற்கு உதவாத மற்ற நாடுகளில் இருக்கும் விஞ்ஞானிகளை கொன்றதும்.அமெரிக்காவே. 


இப்போது ட்ரம்பர் அதை தடுத்து வருகிறார். அதனால் அமெரிக்கா பயன்படுத்திய இந்த யுக்தியை ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா மட்டுமல்ல, ஆஃப்ரிக்க  நாடுகளும் அதை பயன்படுத்த முன்வந்துள்ளது. அதன் விளைவாக ஜெர்மனி இந்தியர்களை வரவேற்பதாக கூறியுள்ளது. ஜெர்மனியில் கல்வி கற்க ஜெர்மன் மொழி தெரிந்திருப்பது அவசியம்.


உலகில் அந்த ஜெர்மன் நாடு மட்டுமே கல்லூரி படிப்பபை இலவசமாக கொடுப்பதால் அதன் மூலம் கல்வி தந்து அவர்களை அமெரிக்கா போல ஸ்வீகரித்துக்கொள்ள திட்டமிடுகிறது. 


ஜெர்மனி மட்டுமல்ல, ரஷ்யா அடுத்த சில ஆண்டுகளில் 10 லட்சம் இந்தியர்களை தனது நாட்டில் வேலையில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.


மற்றும் சில ஐரோப்பிய நாடுகளும் அதைச்செய்யும் அதே நேரத்தில் ஆஃப்ரிக்கா இந்தியர்களை டாலரில் நல்ல சம்பளம் கொடுத்து உயர் பதவியில் அமர்த்துகிறது..


இப்போது மத்திய கிழக்கு நாடுகள் இந்தியர்களை கம்யூட்டர் துறைகளில் மட்டுமல்ல வேறு துறைகளிலும், அரசு ஆலோசனைகளுக்கும் இந்தியகளை அமர்த்த தொடங்கி இருக்கிறது. உலகள்வில் மருத்துவர்கள் தேவை அதிகரிப்பதால் மோடி அரசு மருத்துவ கல்லூரிகளையும், சீட்களையும் அதிகர்த்துள்ளது. மேலும் அரசில் ஆலோசகர்களாக ஆஃப்ரிக்க நாடுகள் ஏற்கனவே இந்தியர்களை அமர்த்தியுளது.


இதுவல்லாமல் இந்திய நிறுவனங்கள் ஆஃப்ரிக்காவில் பல நாடுகளில் உற்பத்தி சார்ந்த முதலீடுகளை செய்து அதில் பிரதான வேலைகளில் இந்தியர்கள் அமர்த்துகிறார்கள். குறிப்பாக சீன வாகனங்களை பின்னுக்கு தள்ளி இந்திய இரு சக்கர வாகனங்கள் பெருமளவில் அங்கே விற்கப்படுகிறது. இப்போது கார்களின் விற்பனையும், மற்ற வாகன விற்பனையும் அதிகரிக்கிறது.


அதற்காக டாடா Iveco என்ற இத்தாலி நிறுவனதை வாங்கவிருக்கிறது. அது Mercedes க்கு இணையான கமெர்ஷியல் வாகனங்களை 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்கிறது. அதன் மூலம் தனது வாகன விற்பனையை உலகெங்கும் விஸ்தரிக்கும் என்பதற்காக Tata Motors தனது பங்குகளை Tata Commercials என்று பிரித்துள்ளது கவனித்தக்கது.


அதே சமயம் அதானி நிறுவனம் உலகில் பல நாடுகளில் துறைமுகங்களை கட்டி வருகிறது. அதன் மூலம் இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவது மட்டுமல்ல, அங்கே அந்த துறைமுகங்களை கையாள்வதற்கு இந்திய மேலாளர்களை,டெக்னீஷியன்களை வேலைக்கு அமர்த்துகிறது. 


அதனால் இந்தியா மற்ற நாடுகள் மீது கட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது என்பதால், அதை முன்பு கடன் கொடுத்து செய்து வந்த சீனாவும், அமெரிக்காவும் அதானி நிறுவனத்தை வீழ்த்த துடிக்கிறது. அதற்கு இந்திய அரசின் உதவியும் உண்டு.


அமெரிக்கா நிறுவங்களான கோகோ கோலா, பெப்ஸி போன்ற நிறுவனங்கள் எப்படி அமெரிக்க அரசு உதவியுடன் அதை உலக நாடுகளில் காலூன்றி, வேறூன்றியதோ அதுபோல இந்திய அரசு வாகனங்கள் முதல் ஏரோபிளேன் வரை டாடாவும், எண்ணெய் வளத்தை கையாள அம்பானியும், போர்ட் மற்றும் கனிம வளங்களுக்கு அதானியும் அதுவல்லாமல் மஹிந்ரா, பிர்லா என்று பல நிறுவனங்கள் இந்திய அரசின் உதவியுடன் பல நாடுகளில் கால்பதிக்கிறது.


அதே வேலையில் இந்திய வங்கிகள் வரும் ஆண்டுகளில் உலகெங்கும் தனது ஆளுமையை கையில் எடுக்கும் என்பதால் வங்கித்துறைகள் பெரும் வளர்ச்சியை சந்திக்கும். அதுவல்லாமல் சரக்கு கப்பல்களுக்கு இன்சூரன்ஸ் கொடுப்பது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மட்டுமே. இன்று அந்த துறைகளிலும் இந்திய நிறுவனங்கள் காலூன்ற ஆர்ம்பித்துள்ளது. 


எற்கனவே உலகளவில் ஜெனரிக் மருந்து உற்பத்தியில் 40% இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை மேலும் உலகெங்கும் விஸ்தரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவின் அதி முக்கிய கண்டுபிடிப்பான கேன்சர் நோய்க்கு தடுப்பூசியை இந்திய நிறுவனங்கள் மூலமாகத்தான் ரஷ்ய உலகெங்கும் சப்ளை செய்யவிருக்கிறது.


கொரானாவிற்கு இந்தியா தடுப்பூசி கண்டுபிடித்தது போல பல புதிய மருந்துகளும், மருத்துவமும் இந்தியா செய்யவுள்ளது. அதன் மூலம் அமெரிக்க மருத்துவ கருவிகளை, மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் எதேச்சகாரமாக செய்துவந்த சூழல் அமெரிக்க ஆதிக்கம் வீழ்வதால், அது பெரும் வீழ்ச்சியை சந்திக்கும். அப்போது இந்திய நிறுவனங்கள் அதை கைப்பற்றும்.


அதுமட்டுமல்ல அடுத்து வரும் சில வருடங்களில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் முக்கியமான சில நிறுவனங்கள் இதனால் கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும். அப்போது டாடா Jaguar போல பல முக்கிய நிறுவனங்களை விலைக்கு வாங்கி அதன் மூலம் லேட்டஸ்ட்  டெக்னாலஜியை தனதாக்கிக்கொள்ளமுடியும். 


அதில் Boeing விமான நிறுவனமும் Generals Electricals (G&E) ஒன்றாக இருக்கக்கூடும் என்பதை இரண்டு வருடங்களுக்கு முன்பு நாம் எழுதியபோது நல்ல ஜோக் என்றார்கள் (Link in first comment);


எனவே ட்ரம்பர் செய்த, செய்யும் பல விஷயங்களால் அமெரிக்காவின் முண்ணனி நிறுவனங்கள் மூடப்ப்ட்டு வருகிறது. அதில் சுபாரு போன்ற நிறுவனங்களிடம் நல்ல டெக்னாலஜி இருக்கிறது. 


எனvee அடுத்த 10 ஆண்டுகளில் GE, Boeing, Volswagan Mercedes போன்ற பல முக்கிய நிறுவனங்கள் இந்திய வசமாகலாம். அதன் மூலம் அதி முக்கிய டெக்ன்லாஜியயை தன்னிடம் வசப்படுத்தி உலகை ஆளலாம். ஆம் ஜாகுவாரை வாங்கிய பின்னர் டாடா கார்கள் எந்தளவிற்கு உயர்ந்தது என்பதை பார்த்தால் புரியும்.


அதுமட்டுமல்ல, Google, Apple, Oracle, Microsoft போன்ற வலுவான நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை அடுத்த வல்லரசாகப்போகும் இந்தியாவிற்கு மாற்ற திட்டமிடுகிறது.


இன்னும் நிறைய இந்த மோடி அரசு செய்யப்போகிறது என்பதை எழுதுகிறேன். ஆனால் உலகெங்கும் சாதிக்கும் மோடி அரசால் தமிழகத்தில் சாதிக்க முடியவில்லை என்பதால் அதை கூட்டணி மூலம் வசப்படுத்த முயல்கிறது. 


ஏனென்றால் தமிழகம் இந்தியாவின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதால். அதற்கு இன்னொரு காரணம் தமிழகம் கிறிஸ்தவ மெஷினரிகளால் ஆளப்படுகிறது. அதன் பின்னால் இருப்பது டீஃப் ஸ்டேட் ஆஃப் அமெரிக்கா என்றால் அதை உடனே நிறுத்த வேண்டிய சூழல் நமக்குள்ளது. 


எனவேதான் பாஜக தனியாக ஆட்சி அமைக்கும்வரை மோடி அரசுக்கு, அமித்ஷா அரசியலுக்கு கை கொடுங்கள்.

அப்போது நாம் மோடிக்கு மட்டுமல்ல, ட்ரம்ப் பகவானுக்கும்  ஒரு கோயில் கட்டத்தான் வேண்டும்.


இதுபற்றி கல்லூரிகள், பள்ளிகள் போன்ற எதிர்கால இந்திய தலைமுறையினரிடம் பேச தயாராக உள்ளேன். மற்ற அனுபவஸ்தர்களும் அதை செய்ய வேண்டும் என்று அன்புடன், பணிவுடன் கேட்கிறேன், இருகரம் கூப்பி யாசிக்கிறேன்.


நாளை உலகை ஆளப்போகும் பிள்ளைகளே.. அதை நாமறிந்து செயல்படுவோம் தங்கங்களே!!


🐶

#Indhea

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.