திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூண் குறித்து சில தகவல்கள். இந்த தூண் சுமார் 12 அடி உயரமும், ஒரு மீட்டார் சுற்றளவும், சுமார் 3 லிட்டர் நெய் மற்றும் 2 கிலோ காடா துணி பிடிக்கும் அளவுக்கான குழி அமைப்பு தூணின் உச்சியில் உள்ள மய்யப் பகுதியில் கொண்டும் உள்ளது. தூணில் கல் வெட்டு ஒன்றும் உள்ளது. அதில், உலகாண்ட (முருகப்) பெருமான் குடி கொண்டு இருக்கும் மலை உச்சியில், (உ ) ஆண்டவற் சிற உச்சி மலையில்) தீப கம்பம் நாட்டியதன் பெயரில் (வ) கம்பம் தீ நாட்டியதன் பெயரில்) சகல புண்ணியவான்களும் தீபம் போடலாம். சகலமும் சிவ மயம் (சா சிவமயம்) என்று எழுதப்பட்டு உள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூண் குறித்து சில தகவல்கள். இந்த தூண் சுமார் 12 அடி உயரமும், ஒரு மீட்டார் சுற்றளவும், சுமார் 3 லிட்டர் நெய் மற்றும் 2 கிலோ காடா துணி பிடிக்கும் அளவுக்கான குழி அமைப்பு தூணின் உச்சியில் உள்ள மய்யப் பகுதியில் கொண்டும் உள்ளது. தூணில் கல் வெட்டு ஒன்றும் உள்ளது. அதில், உலகாண்ட (முருகப்) பெருமான் குடி கொண்டு இருக்கும் மலை உச்சியில், (உ ) ஆண்டவற் சிற உச்சி மலையில்) தீப கம்பம் நாட்டியதன் பெயரில் (வ) கம்பம் தீ நாட்டியதன் பெயரில்) சகல புண்ணியவான்களும் தீபம் போடலாம். சகலமும் சிவ மயம் (சா சிவமயம்) என்று எழுதப்பட்டு உள்ளது. இந்த தூணை எல்லைக் கல் என்று துவேசம் செய்யும் கனி மொழி MP உள்ளிட்ட திமுக பொய் கும்பலுக்கு இந்த தகவல் நல்ல புத்தியை கொடுக்கட்டும்.
மேல் குறிபிட்ட தீபத் தூணில் மரபுப்படி தீபம் ஏற்றக்கூடாது என்று இஸ்லாமியர் யாரும் நீதிமன்றம் செல்லவில்லை. அவர்கள் சார்பாக, அரசு சார்பில் உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாட வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு ஏற்பாட்டு உள்ளதன் உள் நோக்கம் சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியல் என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆகி உள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை, டிசம்பர் 3,மற்றும் 4 ஆகிய இரு தினங்கள் தமிழக அரசு அமல்படுத்த மறுத்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் தொடரப்பட்டுள்ளது.
05.12.2025 அன்றும், திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நடைபெற்றது. தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு காரணங்களால் காவல்துறை தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததாகவும் கூறப்பட்டது. அதனால், இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மேலும், அங்கே ஏதாவது சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டதா என்பதை அறிய CISF படையினரின் அறிக்கையையும் நீதிபதி கோரியுள்ளார்.
முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் முதல்வீடான, திருப்பரங்குன்றம் மலையின் அடிவாரத்தில் முருகப்பெருமானுக்கு ஒரு சன்னதியும், மலை மீது காசி விஸ்வநாதர் கோவிலும் மலை உச்சியில் கார்த்திகை தீப ஸ்தம்பமும் உள்ளது. இந்த கோவில் 8 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதன் இடையில் அங்கே ஒரு இஸ்லாமிய படை எடுப்பில் கொல்லப்பட்ட சிக்கந்தர் என்பவரது நினைவாக 1905 ம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு தர்கா உள்ளது. இந்த தர்க்கா மலை உச்சியில் இருக்கும் தீபத் தூணுக்கு சுமார் 50 மீட்டார் தொலைவில் கட்டப்பட்டுள்ளது.
அங்கே தார்கா கட்டப்பட்டது முறையா என்பது குறித்த விவாதம் பல காலமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக இந்து முன்னணி வெளியிட்டு உள்ள திருமுறைகள் முதல் தீர்ப்புவரை என்ற நூலில் இருந்து எடுக்கப் பட்ட விளக்கம்.
“பொ.ஆ. 1310இல் தான் அலாவுதீன் கில்ஜி எனும் ஆக்கிரமிப்பாளனின் கையாளாக மாலிக்காப்பூர் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்து இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது.
இவற்றை எல்லாம் மறைத்து எந்த வரலாற்று ஆதாரமும் இல்லாமல், திருப்பரங்குன்றம் மலையை இஸ்லாமியர்கள் `சிக்கந்தர் மலை’ என வேண்டுமென்றே மாற்ற, சில இஸ்லாமிய பிரிவினைவாத அமைப்புகள் பல காலமாக சதி செய்து வருகின்றன.
யார் அந்த சிக்கந்தர்?
12ம் நூற்றாண்டில் ஜித்தா என்ற நகரின் ஆளுநராக சிக்கந்தர் பாதுஷா என்பவர் இருந்ததாவும், அவர் அசரத்து செய்யது இப்ராஹிம் பாதூஷாவுடன் பாண்டிய நாட்டின் ஏர்வாடி பகுதிக்கு வந்ததாவும் அவர்கள் இருவரும் திருப்பாண்டியன் மன்னனுடன் போரிட்டு மதுரையை வென்று மதுரையைக் கைப்பற்றியதாகவும், பின் மீண்டும் திருப்பாண்டியன் போர் தொடுத்து திருப்பரங்குன்றம் மலையில் வைத்து சிக்கந்தரைக் கொன்றதாகவும் கதை சொல்லப்படுகிறது.
கோரிப்பாளையம் சிக்கந்தர் தர்கா:
திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் பாதுஷா கொல்லப்பட்டு புதைக்கப்பட்டு அவர் தர்கா உள்ளதாக சில இஸ்லாமியர்கள் கதை சொல்லி வரும் நிலையில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சுற்றுலாத் துறையின் குறிப்பில், மதுரை – கோரிப்பாளையத்தில் ‘சுல்தான் சிக்கந்தர் பாதுஷா சமாதி’ உள்ளது என குறிப்பிடப்பிடுவது தெரியவருகிறது.
அப்படி என்றால் ஒரு மனிதனின் உடல் எப்படி இரண்டு இடத்தில் புதைக்கப்பட்டிருக்க முடியும்? அதுவும் தமிழக நிலத்தை ஆக்கிரமிக்க வந்தவன் எப்படி புனிதனாக இருக்க முடியும்?”
சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னர் வரை தீப தூணில் ஊர் மக்கள் ஒன்று கூடி கார்த்திகை தீபம் ஏற்றுவது மரபாக இருந்து வந்து உள்ளது. அதன் பின்னர் இஸ்லாமியர் தங்களது தர்கா இருக்கும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது ஹரம் என்று தகராறு செய்ய ஆரம்பித்து உள்ளனர். ஆங்கில ஆட்சி காலத்தில் தீபம் ஏற்றும் பழக்கம் எதோ காரணத்துக்காக இடை நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இஸ்லாமியர் தீபம் ஏற்ற சென்ற இந்துக்களை மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டனர், அதில் சிலர் உயிர் இழந்தனர், அதன் பின் மலைமீது இருந்த கல்வெட்டுகளை பச்சை வண்ண சாயம் பூசி அழித்து விட்டனர் என்பன போன்ற செய்திகள் உலா வருகின்றன.
மீண்டும் தீப தூணில் தீபம் ஏற்றும் உரிமையை மீட்டு எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கடந்த காலங்களில் முயற்சி செய்து வந்துள்ளனர். 1990 களில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலுவாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர் மதுரையை சார்ந்த ராஜகோபாலன் என்ற வழக்கறிஞர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் 10.10.1994இல் மதுரையில் வழக்கறிஞர் ராஜகோபாலன் அவர்களை அவரது வீட்டின் முன்பே வெட்டி படுகொலை செய்தனர்.
அதன் பின்னர், அரசு வருவாய் துறை அதிகாரிகள் முன்பு, அந்த பகுதியில் உள்ள இந்து மற்றும் இஸ்லாமிய பெரியவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி, தர்க்காவில் இருந்து சுமார் 50 மீட்டார் தொலைவில் உள்ள தீபத் தூண் மீது இந்துக்கள் கார்த்திகை தீபம் ஏற்றுவதில் எதிர்ப்பு ஏதும் இல்லை என்று எழுத்து பூர்வமாக தெரிவித்து உள்ளனர். ஆனால் இந்த உடன்பாட்டுக்கு தமிழகத்தில் உள்ள சில இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்து உள்ளனர். இவர்கள் யார் என்று பார்த்தால், இஸ்லாமியர் ஓட்டு திமுக வுக்குத்தான் என்று வெளிப்படையாக தீர்மானம் இயற்றுபவர்களாக உள்ளனர். இதில் இருந்து என்ன தெரிகிறது? அவர்கள் சார்பாக, அரசு சார்பில் உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாட வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு ஏற்பாட்டு உள்ளதன் உள் நோக்கம் சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியல் என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆகி உள்ளது.
ஒரு கால கட்டத்தில், ராமநாதபுரம் தொகுதி திமுக எம்பி நவாஸ் கனி தூண்டுதல் பேரில், தர்காவில் அசைவ சாப்பாடு போட இஸ்லாமியர்களால் ஏற்பாடு நடை பெற்றது. முருகன் மலையில் அசைவ சாப்பாடா, உங்களுக்கு அசைவம் வேண்டும் என்றால் கோரிப்பாளையத்தில் உள்ள சிக்கந்தர் தர்காவில் சென்று சமைத்து சாப்பிடுங்கள் என்று இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தொடர்ந்து சென்ற ஜூன் மாதம் மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு நடப்பதற்கு 144 தடை உத்தரவு உள்ளிட்ட பல தடங்கல் ஏற்படுத்திய ஆட்சியாளர்கள். அதையும் மீறி, நீதி மன்றம் சென்று உத்தரவு வாங்கி, மாநாட்டில் திரண்ட சுமார் 10 லட்சம் இந்துக்கள். இந்த எழுச்சிமிக்க இந்துக்கள் ஓட்டு அப்படியே திமுக எதிர்ப்பு ஓட்டாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ள சூழலில், இஸ்லாமிய ஓட்டுக்காக மீண்டும் இந்துக்களுக்கு எதிராக ஒரு மாபெரும் பிழை செய்து உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு இருப்பினும், சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியல் செய்யும் திராவிட கட்சிகள் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த இந்து அறநிலையத் துறை அங்கே தீபம் ஏற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நீதி மன்ற ஆணைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்று கூறி மதிக்கப்படவில்லை. தீபம் ஏற்றக் கூடாது என்று அந்த பகுதி இஸ்லாமியர் யாரும் தகராறுக்கு வரவில்லை. உண்மையில் அவர்கள் தீபம் ஏறுவதற்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால் திமுக அரசு தான்னுடைய இந்து விரோத போக்கு காரணமாகவும், சில இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை திருப்திப் படுத்தும் வகையிலும், உண்டியல் பணத்தில் நீதிமன்றம் சென்று வாதாடும் அளவுக்கு வன்மம் கொண்டு செயல்படுகிறது.
திராவிடம் என்ற ஒற்றை வார்த்தையை வைத்து பிழைப்பு நடத்தும் இவர்கள், 60 ஆண்டு திராவிடர் ஆட்சி சாதனை என்ன? சங்க காலம் முதல் தமிழன் என்று இருந்த இந்துக்களை, இடையில் வந்த இஸ்லாமிய மற்றும் கிருத்துவர்கள் ஆசீர்வாதத்துடன் திராவிடன் என்று இன மாற்று சாயம் பூசி, இந்து மதத்தை கொசு டெங்கு போல் ஒழிக்கவேண்டும் என்று சபதம் ஏற்றது தவிர?
அரசியலை பிழைப்பாக கொண்டுள்ள மற்றும், பொய் வாக்குறுதிகளை நம்பி, இலவச ஆசையில் காசுக்கு ஓட்டை விற்கும், அறியாமையில் புரளும் ஒரு பகுதி கூமுட்டை இந்துக்கள்தான் இதற்கு எல்லாம் காரணம். ராமர் சிலையை செருப்பால் அடித்த கால கட்டத்தில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. கோவில் இடித்தாலும், இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல மறுத்தாலும், இந்துக்கள் ஓட்டு வாங்குவது எப்படி என்று தெரியும்: எச்சை கை உதறினால் இந்துக்கள் ஓட்டு விழும்: ஆனால் சிறுபான்மை மக்கள் அப்படி அல்ல. அவர்களை குசி படுத்தினால்தான் ஓட்டு பெற முடியும் என்பதை நன்கு அறிந்து அரசியல் செய்கிறார்கள் திராவிடர். இதை திராவிடர் தலைவர் வீரமணி அவர்களே வெளிப்படையாக பேசி உள்ளார்.
திருப்பரங்குன்றம் சம்பவம், இந்து ஆன்மிகத்தின் மீதான மிகப் பெரும் தாக்குதல். இந்த தாக்குதல் உணர்த்தும் செய்தி என்ன? பாரம்பரியத்தை பாதுகாக்க ஹிந்து மக்கள் ஒன்றிணைய வேண்டும். இந்து விரோக சக்திகள் ஆட்சியில் அமர இடம் கொடுக்கக் கூடாது. இல்லையென்றால். கோவிலில் மணியடிக்க, தேர் இழுக்க, மத ஊர்வலம் நடத்தக்கூட வேற்று மத பழமைவாதிகளின் அனுமதிக்கு காத்திருக்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக மத சார்பு அற்ற அரசு இயந்திரம் செயல்படும்.
திருப்பரம் குன்றம் நிகழ்வுக்கு இதுவரைக்கும் எந்த இஸ்லாமிய சகோதரர்களும் எதிர்ப்பு தெரிவித்து கலவரம் செய்யவில்லை. நீதிமன்றம் செல்லவில்லை. இந்து கோவில் திருவிழா என்றால் ரோஸ் மில்க் கொடுத்து, சீர் கொடுத்து மத நல்லிணக்கம் பேணும் அவர்களுக்கு தெரியும். ஆண்டுக்கு ஒருமுறை மலை உச்சியில் தீபம் ஏற்றுவதால் மத நல்லிணக்கம் சிதைந்து போகாது என்று. சில இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளை திருப்திப் படுத்தும் விதமாக, இந்து விரோத திமுக அரசுதான் நீதிமன்றம் சென்று இந்த விஷயத்தில் அரசியல் லாபம் தேடிக்கொண்டிருக்கிறது.
இந்துக்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் 2026 தேர்தல் களம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

.jpg)


Comments
Post a Comment