சுந்தர் பிச்சையே தேடி வந்து பேசிய 8 வயது இந்திய சிறுவன்!! ஏஐ மாநாட்டை கலக்கிய ரன்வீர் சச்தேவா!!

 



சுந்தர் பிச்சையே தேடி வந்து பேசிய 8 வயது இந்திய சிறுவன்!! ஏஐ மாநாட்டை கலக்கிய ரன்வீர் சச்தேவா!!


டில்லியில் நடைபெறும் இந்தியா ஏஐ இம்பேக்ட் மாநாடு உலகம் முழுவதுமே உற்றுநோக்கக் கூடிய ஒரு மாநாடாக இருக்கிறது.


கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, சாட் ஜிபிடியின் தலைமை அதிகாரி சாம் ஆல்ட்மேன் என உலகின் முன்னணி டெக் நிறுவனங்களின் தலைவர்கள் அனைவரும் இந்தியாவிற்கு வருகை தந்த இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.இந்த மாநாட்டில் இந்தியாவை சேர்ந்த ஒரு எட்டு வயது சிறுவனை சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன் உள்ளிட்டோர் தேடி வந்து பேசி சென்றிருப்பது ஆச்சரியத்தை தருகிறது. 


யார் அந்த சிறுவன் எட்டு வயதிலேயே அவன் அப்படி என்ன சாதித்தான் என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம். ரன்வீர் சச்தேவா 2017ஆம் ஆண்டு பிறந்த சிறுவன். 3 வயது முதலே கோடிங் கற்க தொடங்கிவிட்டாராம்.இவரை Child prodigy அதாவது அதிமேதாவி என அழைக்கின்றனர்.


5வயதிலேயே டெக் எக்ஸ் பேச்சாளாராகிய இந்த சிறுவன் தன்னுடைய டெக் திறமைகளால் உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். இந்திய ஏஐ உச்சி மாநாட்டின் மிக இளம் வயது பேச்சாளராக ரன்வீர் சச்தேவா பங்கேற்ற போது அங்கிருந்த சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன் ஆகியோர் ஆச்சர்யப்பட்டனர். இந்த சிறுவன் ஆற்றிய உரை உலக நாடுகளின் டெக் நிறுவனங்களின் தலைவர்களை எல்லாம் வியப்பில் ஆழ்த்தியது.எட்டு வயது ரன்வீர் சச்தேவா புதிதாக ஒரு ஏஐ மாடலை உருவாக்கி இருக்கிறார். இந்தியாவின் பண்டைய தத்துவங்களை நவீன தொழில்நுட்பதோடு இணைப்பது தொடர்பாக தன்னுடைய மாடலையும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தார்.


அப்போது இந்த தொழில்நுட்பம் நாட்டின் பொருளாதாரத்திற்கே பெருமளவில் பங்களிக்க போகிறது என கூறினார். எட்டு வயது சிறுவன் ஏஐ மாடல்களை உருவாக்கியதோடு மட்டுமில்லாமல் அதனால் ஏற்படும் பொருளாதார தாக்கங்களை குறிப்பிட்டு பேசியது குறிப்பாக உலகின் பெரும் டெக் தலைவர்கள் முன்னிலையில் நின்று தன்னுடைய தயாரிப்பை அறிமுகப்படுத்தியது அங்கிருந்து அனைவரையுமே ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ரன்வீர் சச்தேவா 2025 ஆம் ஆண்டு தன்னுடைய ஏழு வயதிலேயே ஜெனிவாவில் நடைபெற்ற ஐநாவின் அனைவருக்கும் ஏஐ என்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது ஏஐ-இன் தந்தை என அழைக்கப்படும் ஜெப் ஹிண்டனோடு இந்த சிறுவன் மேடையை பகிர்ந்து கொண்டு உலக கவனம் பெற்றார்.


2023 ஆம் ஆண்டு ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிக் குக் இந்தியா வந்த போது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த சிறுவனின் கோடிங் திறமையை கண்டு வியந்து கலிபோர்னியாவின் ஆப்பிள் தலைமையகத்திற்கு நேரடியாக வருகை தரும்படி அழைப்பு விடுத்தார். Are you born with AI என்ற புத்தகத்தையும் இந்த சிறுவன எழுதி இருப்பது மேலும் ஒரு ஆச்சர்யம்.இந்த சிறுவன் ரோபோடிக்ஸ் மற்றும் ஏஐ பிரிவுகளில் இளம் வயதிலிருந்து பல்வேறு சாதனைகளை படைத்த பெருமைக்கு உரியவர். உலகம் முழுவதும் ஏஐ சம்பந்தப்பட்ட மாநாடுகளில் முக்கிய பேச்சாளராகவும் கலந்து கொண்டு இந்தியாவுக்கே பெருமை சேர்த்து வருகிறார்.


சொந்தமான பல்வேறு ஏஐ மாடல்களை உருவாக்கி இந்த சிறுவன் சாதனை படைத்திருக்கிறார்.

Courtesy 

Devika Manivannan 

Goodreturns

Comments

Popular posts from this blog

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...