மக்களே கவனமாக படியுங்கள். விழித்தெழுங்கள். அரசிடம் கேள்வி எழுப்புங்கள். சென்ற ஆண்டு சாதாரண குடிமக்களையெல்லாம் எல்பிஜி மானியம் விட்டுத்தர சொன்னீர்கள். இப்போது மூத்த குடிமக்களின் ரயில் பயண கட்டண சலுகையை விட்டுத்தர சொல்கிறீர்கள். – நாட்டின் சாதாரண குடிமகன் இதைச் செய்வதற்கு முன் – இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும், அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும், முதலில் தங்கள் மான்யத்தை விட்டுக் கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …? – உங்களில் முக்கால்வாசிப் பேர்கள் தேர்தலில் போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை அறிவித்திருக்கிறீர்கள். அதில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் – தங்களுக்கு சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில் கிடைக்கும் சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …? – சட்டமன்ற, பாராளுமன்ற – கூட்டங்களில் அநேக பிரச்சினைகளில் – எதிரும் புதிருமாக நின்று அடித்துக் கொள்ளும் நீங்கள் அனைவருமே, அதெப்படி உங்களது சம்பளம், படி, சலுகைகளை உயர்த்தி மசோதாக்கள் வரும்போது மட்டும்- ஒருமித்த குரலில் ஒன்றுபட்டு – உடனடியாக விவாதமே இ...