மாவீரன் 'உத்தம் சிங்' நுாலிலிருந்து

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋 *💗படித்ததில் பிடித்தது...* *மாவீரன் 'உத்தம் சிங்' நுாலிலிருந்து...* ஜாலியன் வாலாபாக்கில், ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த, ஆங்கிலேய அதிகாரி, ஜெனரல் டயரை நமக்கு தெரியும். இந்திய வரலாற்றின் மறக்க முடியாத, ஜாலியன் வாலாபாக் கோர சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது. 1,000க்கும் மேற்பட்டோர், ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர். 2,000க்கும் அதிகமானோர், குற்றுயிரும் குலை உயிருமாக துடித்தனர். ஒவ்வொரு துப்பாக்கி வீரனும், 33 ரவுண்டு சுட்டிருந்தான். மொத்தம், 1,650 ரவுண்டு சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள், ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பி பிழைத்தவர்கள், நடக்க முடியாமல், வீதியில் விழுந்து கிடந்தனர். 'என்னை மதிக்காத இந்தியர்களுக்கு, நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக, இந்த செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம், இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்...' என்று, வெளிப்படையாக தெரிவித்தான், ஜெனரல் டயர். ஜெனரல் டயரை பற்றி, இங்கிலாந்திலிருந்து வெளியாகும், 'மார்னிங் போஸ்ட்' என்ற பத்த...