கிருஷ்ணன் பிறந்தபோதே அவனுக்கு எதிராக - அவனுடைய தொப்புள்கொடியை அறுக்கு முன்பே - உயிர்க் கொடியை அறுக்கத் திட்டங்கள் தீட்டிய கம்சனை எதிர்கொண்ட கிருஷ்ண பரமாத்வைப் போல்... தனிமனித வெறுப்புப் பிரசாரத்துக்கும், துவேஷப் பிரசாரத்துக்கும் ஆளான "சித்தாந்தக் கருத்தியல் கம்சர்களால்" சூழப்பட்ட தலைவன்... அர்பன் நக்சல்கள், பிரிவினை வாதிகள், பிரதேச வெறியர்கள்.... எவர் எதிர்த்தாலும் என் மக்களைக் காத்தே தீருவேன் என்ற கற்பாறை போன்ற மன உறுதியுடன் 100 கோடி மக்களுக்கு மேல் தடுப்பூசி போட்டுக் காத்து சாதனை படைத்த தலைவன்...
ஒரு பிரதமர், ஒரு முன்னாள் பிரதமர் ஆகிய இருவரைத் தீவிரவாதத்துக்கு பலி கொடுத்த பாரத நாட்டில்... கண்மூடித்தனமான ஊடகப் பிரசாரத்தாலும், வெறித்தனமான எதிர்க்கட்சிகளின் துவேஷப் பிரசாரத்தாலும் வெறியூட்டப்பட்ட சமூகத்தின் சில பகுதிகளில்... சகஜமாக வளையவரும் பாரதத்தின் பிரதமருக்கு இத்தகைய வலுவான பாதுகாப்பு தேவைதான்! இந்த பாரத நாட்டில் வேறு எந்தப் பிரதமருக்கு எதிராகவும் சில பகுதிகளில் - சில சமூகத்தினர் மத்தியில் - இவ்வளவு வன்மமும், துவேஷமும் கொண்ட வெறிப் பிரசாரம் செய்யப்பட்டதில்லை! அந்த வெறிப் பிரசாரம் பலவும் வெறுப்பையும் பொய்களையும் அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டவை! 50 வருடங்களுக்கும் மேலான - அதற்கும் முந்தைய காலப் பகுதி! தமிழகத்திலேயே 16 வயதானால் - SSLC முடித்தால் - பெண்களுக்கு 'வரன்' தேட ஆரம்பித்துவிடுவார்கள்! இந்த சமூகம் என்றில்லை பல சாதிகளிலும் கல்லூரிப் படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு - "நல்ல மாப்பிள்ளை" அமைந்தால் பெண்களை மணமுடித்துக் கொடுத்துவிடுவார்கள்! வட இந்தியாவில் 50 - 60 வருடங்கள் முன்பு சகஜமாகவும் -ஏன் இன்றும் சில பகுதிகளில் "பால்ய விவாஹம்" ...