குஜராத்தில் ரூ.22 ஆயிரம் கோடியில் போர் விமான தொழிற்சாலை - பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்*
*குஜராத்தில் ரூ.22 ஆயிரம் கோடியில் போர் விமான தொழிற்சாலை - பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்* பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற குஜராத் மாநிலத்தில், சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை எந்த நேரத்திலும் தேர்தல் கமிஷன் வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த தருணத்தில், அந்த மாநிலத்தில் வதோதரா நகரத்தில் இந்திய விமானப்படைக்கு தேவையான 'சி-295' ரக போர் விமானங்களை (போக்குவரத்து விமானங்களை) தயாரிக்கும் தொழிற்சாலையை ரூ.21 ஆயிரத்து 935 கோடியில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் விமானங்களை ஐரோப்பாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர்பஸ் நிறுவனமும், டாடா குழுமமும் இணைந்து தயாரிக்க உள்ளன. இங்கு தயாரிக்கப்படுகிற போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு வழங்கப்படுவதோடு ஏற்றுமதியும் செய்யப்படும். ஐரோப்பாவுக்கு வெளியே இந்த 'சி-295' விமானம் தயாரிக்கப்படப்போவது இதுவே முதல் முறை ஆகும். இந்த விமான தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது. ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் முன்னிலையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி இந்...