போர் என்றுமே மக்களுக்கானதில்லை #SayNOtoWar ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது அங்கு சென்றிருந்த ஒரு அமெரிக்க வீரன் பின்னர் எழுதியது இது:
#படித்ததில்_வலித்தது....😢😢😢 போர் என்றுமே மக்களுக்கானதில்லை #SayNOtoWar ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது அங்கு சென்றிருந்த ஒரு அமெரிக்க வீரன் பின்னர் எழுதியது இது: “ஒரு எதிர்பாராத திருப்பத்தில் அந்த ஈராக்கிய வீரன் என் முன்னே நின்றிருந்தான். முன்பின் பார்த்திராத அவனது கைகளிலும் துப்பாக்கி இருந்தது எனது உயிர் அவன் விரல்களிலும், அவன் உயிர் என் விரல்களிலும் இருந்தது. அவன் சுண்டுவதற்கு சில வினாடிகளுக்கு முன் நான் சுட்டிருக்க வேண்டும். வீழ்ந்து அடங்கினான். கொஞ்சம் தாமதித்து இருந்தால் நான் அவன் போல் அங்கு வீழ்ந்து கிடந்திருப்பேன். அருகில் போய் ஆராய்ந்தேன். அவனது பாக்கெட்டில் ஒரு கசங்கிய கடிதமும், ஒரு பெண்ணின் படமும், ஒரு குழந்தையின் படமும் இருந்தன. கடல் கடந்து எங்கோ உலகின் மூலையில் இருந்து என் குழந்தையின் குரல் ஏக்கத்துடன் கேட்டது. அழுகையை எனக்கு அடக்க முடியவில்லை. அது ஈராக்கிற்கும் கேட்டிருக்காது. அமெரிக்காவுக்கும் கேட்டிருக்காது.” #SayNOToWar...🙏🏻🙏🏻🙏🏻